தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!

View previous topic View next topic Go down

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!  Empty ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!

Post by முரளிராஜா Thu May 09, 2013 12:51 pm

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!  Smoking-allergy-150-news

ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள் ஒருவரின் இதயத்தை மட்டுமல்ல அவரது மூளையையும் பாதிக்கும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய பாதிப்பு 35 வயது இளைஞர்களுக்குக் கூட ஏற்படக்கூடும் என்றும் இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக, ஆரோக்கியமற்ற அன்றாட பழக்கவழக்கங்கள், ஒருவரின் இதய நோயை அதிகப்படுத்துவதுடன், ஒருவரின் மூளையின் செயற்பாட்டுத் திறனையும் பாதிக்கிறது என்று டொச் நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.


35 வயதுக்கும் 82 வயதுக்கும் இடையிலான 3800 பேரிடம் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் நினைவாற்றல், திட்டமிடும் திறன் மற்றும் வாதத்திறமை ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. இந்த பரிசோதனைகளின் முடிவில், அவர்களின் புகைபிடிக்கும் பழக்கமும், அவர்களிடம் காணப்பட்ட அதிகரித்த கொலெஸ்ட்ரால் கொழுப்பும், அவர்களின் நினைவாற்றல் மற்றும் தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தன்மையை பாதிப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் ஸ்ட்ரோக் என்கிற மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது.

மூளையின் செயற்பாடுகள் 45 வயதாகும்போதே கூட சிலருக்கு மங்கத்துவங்குவதாக ஏற்கெனவே மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்திருந்த நிலையில், 45 வயதுக்கும் முன்பே கூட இத்தகைய பாதிப்புக்கள் ஏற்படுமா என்று இந்த ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் மூளையின் செயற்பாடுகள் பரிசோதிக்கப்பட்டன.

அடுத்தகட்டமாக, பங்கேற்பாளர்களின் இதய நோய்களை அதிகப்படுத்தக்கூடிய பழக்கவழக்கங்களையும் இவர்கள் பட்டியலிட்டனர். புகைபிடிப்பது, அதிகரித்த கொலெஸ்ட்ரால், கூடுதல் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் உடல்பருமன் ஆகியவற்றை கணக்கிட்டனர்.

இதன் மூலம் சோதனையில் பங்கேற்றவர்களில் ஒவ்வொருவரின் அன்றாட பழக்கவழக்கங்களுக்கும், அவர்களின் நோய்களை அதிகப்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளுக்கும் உள்ள தொடர்பை கண்டறிந்ததுடன், இவர்களின் மூளைத்திறனை கண்டறியும் பரிசோதனைகளின் முடிவுகளை பொருத்திப்பார்த்தனர்.

இதன் முடிவில், கடுமையான இதய நோய் தாக்கக்கூடிய சாத்தியம் அதிகம் இருக்கும் ஆட்களின் மூளைத்திறன் மற்றவர்களை விட ஐம்பது சதவீதம் குறைவாக இருப்பதை இவர்கள் கண்டறிந்தனர்.

உதாரணமாக, தொடர்ந்து புகைபிடிக்கும் பழக்கம் இருப்பவர்களின் மூளைத்திறனின் செயற்பாடு, புகை பிடிக்காதவர்களின் மூளைத்திறன் செயற்பாட்டைவிட ஏறக்குறைய சரிபாதி குறைவதாக இந்த பரிசோதனைகளில் தெரியவந்திருக்கிறது.

புகைபிடிக்கும் பழக்கமுடைய இளவயதுக்காரர்கள், அதன் பாதிப்புக்கள் வயதான பிறகு தான் தங்களை தாக்கும் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது சரியல்ல என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் ஹன்னெகெ ஜூஸ்டன்.

இந்த பரிசோதனைகளின் முடிவுகள், இதயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எல்லா காரணிகளுமே மூளையையும் பாதிக்கவல்லன என்பதை காட்டுவதாக, அல்சைமைர் சொசைடி என்கிற அமைப்பு தெரிவித்திருக்கிறது. எனவே, ஒருவரின் அன்றாட பழக்கவழக்கங்கள் அவரது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அவர்களின் அறிவுச் செயற்பாட்டையும் பாதிக்கும் என்பதை இளைய தலைமுறை உணரவேண்டும் என்றும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.

-தமிழோசை-
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!  Empty Re: ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!

Post by ஸ்ரீராம் Thu May 09, 2013 4:29 pm

அவசியமான பகிர்வு... நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!  Empty Re: ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!

Post by செந்தில் Thu May 09, 2013 5:30 pm

நண்பர்கள் உணர்ந்து திருந்தினால் மகிழ்ச்சி நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!  Empty Re: ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களால் - இதயத்தை பாதிக்கும் காரணிகள் மூளையையும் பாதிக்கும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum