தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


புதுக்கவிதை.

View previous topic View next topic Go down

புதுக்கவிதை. Empty புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Wed Jul 06, 2016 6:13 am

அணில் விளையாட்டு…!!


கொய்யா மரக்கிளையில்அமர்ந்து
பழத்தைக் கொறித்து தின்கிறது
அழகான அணில்பிள்ளை.
வேகமாய் விரைந்து வந்து
அணிலை விரட்டுகிறது காகம்.
துள்ளித் துள்ளி அடுத்தடுத்தக்
கிளைக்குத் தாவியது வேகமாய்
உர்ரென்று முறைத்த குரங்கின்
குரல் கேட்டு மீண்டும் தாவியது.
கையிலிருந்தப் பப்பாளிப் பழத்தினை
எறிந்துவிட்டு போட்டிக்கு வந்தத்
தோழனைத் துரத்திய விரட்டியது
தோழமைக் குரங்கு.
திடீரென யாரோ கல்லெறிகிற
சத்தங்கேட்டச் சிட்டுக்கள் பறந்தன.
மரத்தின் கீழ் நின்றிருந்த இரு
சிறுவர்களைக் கண்டதும்
உற்றுப் பார்த்து நக்கல் செய்து
விலகியோடியது
அணில்பிள்ளைக்.கடித்தப்பழம்
கீழே விழுந்தது. தாவி எடுத்து
ஊதித் துடைத்தனர் சிரித்தனர்
அணில் விளையாட்டின் மௌன
அழகை ரசித்தனர் சிறுவர்கள்
சிறிது நெரத்தில் மறைந்தது
அணில்பிள்ளை சிறுவர்கள் கலைந்தனர்
மணித்துளிகளில் நிகழ்ந்தச் சந்தோஷத்
தருணத்தின் இன்பத்தை இழந்தது
தவிக்கின்றது மௌனமாய்
கொய்யா மரம்.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Mon Jul 18, 2016 6:09 am

பார்த்தல்…!!
*
சவ ஊர்வலத்திற்கு
வழிவிட்டுப் போகின்றன
சாலையில் வாகனங்கள்.
உள்ளிருந்தே பார்வையிடுகிறார்கள்
கடைக்காரர்கள்.
விலகி நின்று பார்க்கிறாரகள்
பாதசாரிகள் வியாபாரிகள்.
பாடை முன் செல்ல பின்னே
மலர்கள் பிழ்த்து உதிர்க்கிறார்கள்.
பின்தொடர்பவர்கள்.
மௌனமாக பயணிக்கிறது
பிணவண்டி.
இறந்தவர் எந்தப் பகுதியென்று
எவருக்கும் தெரியாது?
இறந்தவரை இரக்க உணர்வோடு
பார்க்கிறார்கள்
நாளை இறக்கப் போகிறவர்கள்!!
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by முரளிராஜா Sun Jul 24, 2016 9:10 pm

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Wed Jul 27, 2016 6:18 am

அந்தரங்கம்…!!
*
பேசுபவர்கள் யார் என்று தெரியவில்லை?
பேசியதும் என்னவென்று புரியவில்லை.
அவர்களுக்குள் ஏதோவொரு
ஆழந்தப் பிரச்சினையின் அடிவேரின் மூலம்
உள்ளுணர்வில் புதைந்திருக்கிறது.
இருவரும் விட்டுக் கொடுக்காமல்
பேசினார்கள் கோபப்பட்டார்கள்.
யாரும் சமாதானமாகவில்லை
போவோர் வருவோர் வேடிக்கைப்
பார்க்கிறார்கள் என்று கூட
அச்சப்படவில்லை வெட்கப்படவில்லை.
பொதுவிடம் என்ற பொறுப்பின்றி
மறந்துப் போய் சண்டையின்
உச்சத்திற்கு நெருங்கிவிட்டார்கள்.
வாய்சத்தம் பெரும் சத்தமாகியது
யார் விலகிப் போகுவதன்று
தன்முனைப்பு
கூட்டம் அருகில் நெருங்கி நிற்கிறது
மெல்ல அவள் விலகி நடந்தாள்
அவனோ முறைத்து பார்த்தான்.
வெம்மையின் புழுக்கம் முகம் காட்டியது
உள் அரங்கில் நடக்க வேண்டடியது
அம்பலத்தில்
வாழ்க்கையே வேடிக்கைப் பார்த்தலின்
நிகழ்வாக அரங்கேறியது
விரைந்து காற்றின் விசையில்
நகர்கிறது வெயிலை மறைத்த மேகம்
ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by முரளிராஜா Wed Jul 27, 2016 10:19 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Wed Jul 27, 2016 4:15 pm

நன்றி முரளிராஜா...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Thu Sep 22, 2016 6:15 am

உயிர் பறிக்கும் மின்வயர்…!!
*
மின்சார வயரைக் கடித்து
தற்கொலை செய்துக் கொள்ளும்
புதியதொரு உத்தியை
அறிமுகமாக்கியுள்ளார்கள்
உங்கள் வீட்டில்
அவளோ / அவளோ இருந்தால்
பத்திரமான பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் மனப்போக்கை அறிந்து
சற்றே விட்டுக் கொடுத்து
பழகி பாசமாயிருங்கள்.
எதற்கெடுத்தாலும் அவர்கள் மீது
குற்றப் பத்திரிகை வாசிக்காதீர்கள்.
அவளோ / அவனோ எதற்கேனும்
கோபித்து முரண்டு பிடிக்க
இடம் தராதீர்கள்.
அவர்களி்ல் எவரேனும் தற்கொலைக்கு
முயற்சிக்கலாம் உங்களுக்கே தெரியாமல்
வீட்டில் எட்டாத உயரத்தில்
இருக்கும் அறுந்த மின்சாரவயர்களை
உடனே பழுது பாருங்கள்
குடும்பபப் பிரச்னையில் ஏடாகூடமாக
ஏதேனும் நடக்க வாய்ப்பில்லாமல்
உயிர்களைப் பாதுகாக்கலாம்.
ந.க.துறைவன்.

ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by முரளிராஜா Sat Sep 24, 2016 9:11 am

சரிதான்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Sun Sep 25, 2016 6:32 am

நன்றி முரளிராஜா
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Sun Sep 25, 2016 6:32 am

மனதிற்கிசைவாய்…!!

தொடங்கிய வேலைகள் இன்னும்
முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது மனம்
திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே
இயலாத சுமையின் பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!!
ந.க.துறைவன்
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by முரளிராஜா Tue Sep 27, 2016 10:31 am

ரசித்தேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Thu Sep 29, 2016 6:32 am

நன்றி முரளிராஜா....
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Thu Sep 29, 2016 6:33 am

ஒன்றுமில்லை…!!

குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கிறது ஒவ்வொன்றாகக்
காய்ந்த சருகுகள்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ஸ்ரீராம் Thu Sep 29, 2016 9:08 am

கவிதை அருமை அண்ணா.
ஒன்றுமில்லை என்பதில் தொடங்குகிறது மன சுமை.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Mon Nov 07, 2016 9:11 am

மிக்க நன்றி ஸ்ரீராம்...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Mon Nov 07, 2016 9:11 am

இருத்தல்…!!


இருக்கிறேன் என்று சொன்னவர்
எங்கே இருக்கிறார் என்று சொல்லவில்லை.
அருகிலா, தொலைவிலா, வீட்டிற்குள்ளேயா?
எங்கே என்று அனுமானிக்க முடியவில்லை.
இருக்கிறேன் என்பது நிகழ்காலந்தான்
அதுவே
கடந்த காலமாகக் கூட இருக்கலாம்.
இப்பொழுது அவர் தன்னிருப்பை
இருண்மையில் உணர்த்தவே
இருக்கிறேன் என்றாரா?
இருப்பவர்களும்
கடந்துச்செல்பவர்களும் தான்
எப்பொழுதும் இருப்பார்கள்.
இருக்கிறேன் என்பது இருப்பின் நிலை
இருக்கிறவர்களின் முரண் மனநிலை.
இறக்கப் போகிறவர்களின் கனவு நிலை.
ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Fri Nov 25, 2016 6:20 am

ஒன்றுமில்லை…!!

குளிர்க் காற்றின் மென்மையில்
காலை நடைபயிற்சியில் இருக்கும்போது
எதிரே வந்த நெருங்கிய நண்பர்
என்னிடம் பேச்சுக் கொடுத்து
நலம் விசாரித்தார் கவனமாய்
பரிமாற்றலுக்குப் பிறகு
மீண்டும் வேறேன்ன செய்தி என்றேன்.
ஓன்றுமில்லை என்றார்
ஒன்றுமில்லை என்று சொன்னவர்
அரைமணி நேரம் தன் சோகச்
சுமைகளைக் கொட்டித் தீர்த்தார்.
ஒன்றுமில்லை என்பதில் தான்
எத்தனை உருவகங்கள் அவர்
உள்மனதில்
புதைந்திருக்கிறதெனப் புரிந்தது.
வெங்காயத்தின்
உள்ளே ஒன்றுமில்லை தான்
அதன் மேலே அடர்த்தியாக
அடுக்கியிருக்கின்றது ஒவ்வொன்றாகக்
காய்ந்த மனவெம்மைச் சருகுகள்.
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Fri Dec 23, 2016 6:17 am

பொய்களை நம்பாதீர்கள்.
*

பொய்களை நம்பாதீர்கள்
புதிய நோட்டுகள்
தாராளமாக கிடைக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
யாரும் க்யூவில் நிற்பதில்லை
யாரும் மயங்கி சாகவில்லை.
பொய்களை நம்பாதீர்கள்
ஊடகங்கள் தான்
ஊருக்குள் நடப்பதை
தவறாகப் பொய்யுரைக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
ஊழல் கருப்பு பணம்
நிச்சயமாக வெளியே
வந்து விடும்.
யாரும் தப்பவே முடியாது?

பொருளாதாரம் வெகு
ஸ்திரமாக இருக்கிறது.
பொய்களை நம்பாதீர்கள்
மக்கள் ரொம்ப நல்லவர்கள்
பணபரிமாற்றத் திட்டத்தை
மக்கள் பரிபூரணமாக
ஏற்றுக் கொண்டார்கள்.
அரசுக்கு
ஆதரவாக இருக்கிறார்கள்
பொய்களை நம்பாதீர்கள்
எதிர்க்கட்சி நண்பர்கள்
என்னை விமர்சிக்கவில்லை
நான் எல்லோருக்குமே
உற்ற நண்பன்.
பொய்களை நம்புாதீர்கள்
மக்கள் சேவைக்காகவே நான்
எனக்காகவே மக்கள்.
இந்தியா மோ - டிஜிட்டில் நோக்கி
முன்னேற்றட்டும்.
( மோடிஜிக்கு சமர்ப்பணம் )
ந.க.துறைவன்
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Sat Dec 24, 2016 6:23 am

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை..!!
*

நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
சமாளிப்பதற்கான சாத்தியக் கூறுகள்
அத்தனையும் ஆராயப்பட்டுள்ளது.
எப்படியும் சமாளிக்கலாம் என்றுதான்
மையக் குழு முடிவு செய்துள்ளது
நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
விமர்சகர்கள் கரித்துக் கொட்டுகிறார்கள்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கக் கூடிய வகையில் தானிருக்கிறது
எப்படியும் சமாளித்தே தீர வேண்டும் என்பதில்
வைராக்கியமாக இருக்கிறோம் என்பதை மட்டும்
தைரியமாகச் சொல்லிக் கொள்கிறோம்.
சமாளித்து விடுவோம் என்று நம்புங்கள்.
சமாளிப்பது என்பதும் ஒருவகையில்
சர்க்கஸ் வித்தை தான் தெரியுமா?
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் தருணத்தில் கொஞ்சம்
சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும்
அதை தாங்கிக் கொள்ள மனப்பக்குவம் தேவை.
உங்களுக்கும் இருக்கிறது எனக்கும் இருக்கிறது
சங்கடங்களை வென்றுதான் நாம்
சாதனைகளைப் படைக்க வேண்டும்
சமாளிப்பதற்குள் யாருக்கும் எதுவும்
நேர்ந்து விடாது பார்த்துக் கொள்வோம்.
நிலைமை ரொம்ப மோசமாக இல்லை
சமாளிக்கும் வகையில் தானிருக்கிறது
ஆனால், எப்படி சமாளிப்பது என்பதில்
கொஞ்சம் சிக்கல் உருவாகிவிட்டது?
சிக்கலிலிருந்து தான் சிக்கலை
விடுவிக்க வேண்டும்…??

ந.க.துறைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Sat Jan 14, 2017 9:38 am

விடியல் ஒளி பிறந்தது…!!

தைப் பொங்கல் பிறந்தது
மகிழ்ச்சி பொங்கி வழிந்து
புதிய ஆடைகள் வந்தது
குழந்தைகள் குலுங்கி சிரித்தது

போகியில் குப்பை எரிந்தது
மேளம் சத்தம் அதிர்ந்தது
துள்ளித் துள்ளி ஆட்டம் போட்டு
சிறுவர்கள் கூட்டம மகிழ்ந்தது.

உழவர் திருநாள் உதித்தது
உழைப்பின் பெருமை தெரிந்தது
நெல் மணிகள் அசைந்தது – புதிய
பானையில் பொங்கி வழிந்தது.

மாடு கன்று குளித்தது
ஆவாரம் மாலை அணிந்தது
கரும்பு கெடை நின்றது
உள்ளம் களித்து மிதந்தது.

இல்லம் எல்லாம் மணந்தது
பொங்கல் சோறு ருசித்தது
உறவுகள் ஒன்று சேர்ந்தது
உற்சாகம் பொங்கி மலர்ந்தது.

மரம் செடிகொடிகள் பூத்தது
காடு மலைகள் ஜொலித்தது
நாட்டு மக்கள் முகத்திலே - புதிய
விடியல் ஒளி பிறந்தது!!

ந.க.து்றைவன்.
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Wed May 24, 2017 9:30 am

அக்னி நட்சத்திரம்.

மதிய கோடை வெயில் உக்கிர
அனல் முகத்தைத் தீய்த்தது.
பாதையில் நடக்கையில்
கால்கள் தடுமாறின. கண்கள்
கிறங்கின அந்நொடியில் எங்கே
ஒதுங்கி நிற்பதென புரியவில்லை.
இடமும் தென்படவில்லை.
கடந்து செல்லும் பாதசாரிகள்
வியர்வையை வழித்து வழித்து
சூரியனை நோக்கி வீசியெரிகிறார்கள்.
வீதியெங்கும் காய்கிறது
நெரிசல் இரைச்சல் எரிச்சல் உண்டாக்கி
விரைகின்ற புகைக்கக்கிய வாகனங்களின்
பெருநரக வாதை.
தலைக்கு மேலே இருக்கும்
சூரியனைப் பாத்தேன். கண்கள் கூசின.
மேகமில்லாத வெண்மை படர்ந்த
வானவெளியெலாரு காக்கை
குருவிகள் தென்படவில்லை.
எங்கும் வெப்பக் கதிரொளி.
ந.க. துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by ந.கணேசன் Sun May 28, 2017 11:42 am

பருஉடல்…!!
*
நேற்றைய மனச்சோர்வு இன்றும்
நீங்கவில்லையெனினும் உளம்
திடமான தெம்புடன் இருப்பதாகவே
உணர்கிறேன். யாரோ ஒருவரின்
குரலின் தொனி பார்வை என்மீதான
அக்கரையோடு அழைப்பு விடுக்கிறது.
இருப்பினும் அதனை செவியுறுகிறேன்
என்ன சொல்வாரோ என்ற தயக்கம்?
என்ன கேட்பாரோ என்ற வெட்கம்?
எப்படி உணர்வாரோ என்ற அமைதின்மை?
எனக்குள் வெளியேறாத வார்த்தைகள்
உள்ளுக்குள் ஒளிந்துக் கொண்டிருக்கிறது.
என்னறை எங்கும் வெளிச்சம் மறைந்து
இருள் சூழ்கிறது. வேம்புக் காற்றில் அலைகின்றன
இலைகள். மங்கிய ஒளியெங்கும் பரவிய நேரம்
பறவைகள் ரெண்டு கடந்து பறந்து போகின்றன.
திறந்த சன்னல் வழியே கருப்பு இருட்டை
ஊடுருவிப் பார்க்கிறேன். மின்கம்பத்தின் விளக்கின்
கீழ் விளையாடிக் களிக்கின்ற விட்டில்கள்
மரணத் தவிப்பில் உதிர்ந்து உதிர்ந்து வீழ்கின்ற
அந்நொடிப்பொழுது கனத்துரைந்து அதிர்கின்றன
என்புதோல் போர்த்திய என் பருஉடல்…!!
ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

புதுக்கவிதை. Empty Re: புதுக்கவிதை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum