தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar

» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar

» கிச்சு…கிச்சு!!
by rammalar

» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar

» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar

» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar

» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar

» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar

» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar

» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar

» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar

» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar

» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar

» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar

» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar

» சினி துளிகள்!
by rammalar

» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar

» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆபிரகாம் லிங்கன் !!!

View previous topic View next topic Go down

ஆபிரகாம் லிங்கன் !!! Empty ஆபிரகாம் லிங்கன் !!!

Post by ஸ்ரீராம் Tue Feb 12, 2013 2:12 pm

மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது. பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக்கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது.

அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடியவர்கள் உலகில் பலருண்டு. அவர்களில் தலைசிறந்தவர் ஆபிரகாம் லிங்கன். ஏழ்மைக் குடும்பத்தில் 1809 பிப்ரவரி 12-ல் ஆபிரகாம் லிங்கன் பிறந்தார். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார்.

காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார் லிங்கன். அப்போது அவருக்கு வயது ஒன்பது. சிறுவயதிலயே தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார்

பிறருக்கு உதவி செய்தால், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல்; கதை சொல்லுதல்; வேடிக்கையாப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன.

ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அவர் மனம் துடித்தது.

இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே இதுபோன்ற அடிமைத் தனங்களை ஒழிக முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்தார்.

1834இல் முதன் முதலாக சட்ட மன்றத் தேர்தலில் லிங்கன் போட்டியிட்டார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார்.

அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

அமெரிக்க தேசத்தின் வரலாறு; அமெரிக்க அரசியல்; அன்றைய அமெரிக்க நிலைமை; பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம்; வெள்ளையர் - கறுப்பர் என்ற பாகுபாடு; தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார்.

லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்க செனட் உறுப்பினர்களில் லிங்கனின் பணி முற்றிலும் வேறுப்பட்டிருந்தது. மக்களின் அடிப்படை உரிமைகளையும், அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தி லிங்கன் முழங்கினார். கறுப்பர் இன மக்களிடம் லிங்கனின் செயல்பாடுகளும், சொற்பொழிவுகளும் வரவேற்பைப் பெற்றன.

1861-ல் அமெரிக்கக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலிலும் லிங்கன் போட்டியிட்டார்.

மக்களை மட்டுமே லிங்கன் நம்பினார். ஆனால் லிங்கனை எதிர்த்தவர்கள் தங்கள் பணபலத்தாலும், படை பலத்தாலும், பதவியின் துணையாலும் வெற்றி பெற்றுவிடலாம் என எண்ணினார். இறுதியில் ஆபிரகாம் லிங்கனே அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஒரு தேசத்தின் தலைவர் எப்படிப்பட்டவராக இருத்தல் வேண்டும்; அவருடைய செயல்கள் எத்தகைய எளிமை மிக்கதாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஆபிரகாம் லிங்கன் மிகச்சிறந்த சான்று.

லிங்கன் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்த போது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். ஒரு நாள் அமெரிக்க பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆபிரகாம் லிங்கன் காரை ஓட்டிச் சென்றார்.

வழயில் ஒரு பள்ளத்தில் விழுந்த ஒரு பன்றிக்குட்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வழியில் சென்ற எவரும் பள்ளத்தில் தவிக்கும் பன்றிக் குட்டியைப் பார்க்கவில்லை; பார்த்த சிலரும் அதுபற்றிக் கவலையில்லாமல் கடந்த சென்றனர்.

ஆனால் இதைக் கண்ட ஆபிரகாம் லிங்கனால் அந்த இடத்தைக் கடந்து செல்ல இயலவில்லை. தாம் ஓட்டி வந்த காரை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு, பள்ளத்தில் தவித்த பன்றிக் குட்டியைத் தூக்கிக் கரை ஏற்றினார். அதன் பின் பாராளுமன்றக் கூட்டத்திற்கு லிங்கன் பயணம் மேற்கொண்டார்.

ஆபிரகாம் லிங்கன் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது பாராளுமன்றம் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. தாமதமாக வந்ததற்கு அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்” என்று சொல்லியபடி பாராளுமன்றத்திற்குள் ஆபிரகாம் லிங்கன் நுழைந்தார்.

ஆபிரகாம் லிங்கன் ஆடை முழுவதும் சேறும் சகதியும் அப்பியிருந்தன….
அதைக் கண்டு அனைவர் முகத்திலும் அதிர்ச்சி.. அதைப் புரிந்துகொண்ட ஆபிரகாம் லிங்கன் வழியில் நடந்ததை விவரித்தார். அதைக் கேட்ட அனைவரும் ஒரு ஐந்தறிவு ஜீவனான பன்றியைக் காப்பாற்றுவத்றாக ஆபிரகாம் லிங்கன் பாடுபட்டதைச் சொல்லிப் பாராட்டினார்.

அப்போது, ” ஒரு பன்றிக்குட்டியை நான் காப்பாற்றியதற்காக நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள்…. ஆனால் இதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது” என்றார் ஆபிரகாம் லிங்கன்.

“இதில் என்ன சுயநலம் இருக்கிறது?” என்று அனைவரும் விழித்தனர்.
“பள்ளத்தில் தவித்த பன்றியைப் பார்த்து என் மனம் தவித்தது.. அந்தப் பன்றியைக் காப்பாற்றியதன் மூலம் என் மனம் நிம்மதி பெற்றது.. அதனால் என் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது.

அந்த நேரத்தில் அந்தப் பன்றியை நான் காப்பாற்றாமல் வந்திருந்தால், அந்த கவலையால் இந்தப் பாராளுமன்ற விவாதத்தில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாது போயிருக்கும்… அதன் பின் சாலையோரங்களில் எந்தப் பன்றியைப் பார்த்தாலும், பள்ளத்தில் தவித்த பன்றியின் காட்சியே என் கண்ணில் தெரியும்.

தக்க சமயத்தில் அந்தப் பன்றிக்கு உதவாமல் வந்து விட்டோமே என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருக்கும்… அந்த வடு என் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும்… அத்தகைய சூழலிலிருந்து விடுபடுவதற்காகத்தான் அந்தப் பன்றியை நான் காப்பாற்றினேன். இதில் என்னைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை” என்ற சொல்லிச் சிரித்தார்.”.

ஆம்! செய்த உதவிக்காக கிடைக்கின்ற பாராட்டுதலைக்கூட உதறித்தள்ளும் மனப் பக்குவத்தைக் கொண்டிருந்தார் ஆபிரகாம் லிங்கன்!

அடிமைத்தனத்தை எதிர்த்து ஆரம்ப காலத்திலிருந்து முழங்கி வந்த லிங்கன், குடியரசுத் தலைவர் ஆனதும் உள்நாட்டுக் களவரங்கள் ஏற்பட்டன.

‘அடிமைத்தனம் தொடர வேண்டும் அது ஆண்டவனால் தீர்மானிக்கப்பட்டது. அதை அகற்ற ஆபிரகாம் லிங்கன் யார்?’ என்று அடிமைத்தனத்தால் பயன் பெறுபவர்கள் தூண்டிவிட்டனர்.
அமெரிக்காவின் தெற்கில் உள்ள சில சில மாநிலங்கள் தனியே பிரிந்து செல்ல வேண்டும் என விரும்பின.

அடிமைத்தனத்தை கைவிடுவதைவிட, பிரிந்து செல்வதே பெருமை சேர்க்கும் என்று பிற்போக்குவாதிகள் முடிவெடுத்தனர். அதற்குண்டான காரண காரியங்கள விளக்கி, கலவரங்களையும் தூண்டி விட்டனர். உள்நாட்டு போர்மூண்டது.

இவற்றையெல்லாம் லிங்கன் முறியடித்து நாட்டின் ஒற்றுமயைக் காப்பாற்றினார். அடிமைத்தனத்தையும ஒழித்தார்.

‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவதே மக்களாட்சி, என்று மக்களாட்சிக்கு லிங்கன் விளக்கம் கொடுத்தார்.
லிங்கனின் சீர்திருத்தக் கருத்துக்களும், மக்களாட்சித் தத்துவமும், அடிமைத்தன ஒழிப்பும் அடித்தட்டு மக்களிடம் எழுச்சியை உண்டாக்கியது.
ஆனால், தங்கள் சுயநலம் எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.

அடிமைகளின் சூரியன்ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும். தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு.விறகு வெட்டி. படகோட்டி. பலசரக்குக்கடை ஊழியர். வக்கீல். அமெரிக்க ஜனாதிபதி. உலகத் தலைவர். குறைந்தது ஆயிரம் தடைகளைத் தாண்டித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு முக்கியக் காலகட்டத்தையும் கடந்து முன்னேறியிருக்கிறார் ஆபிரஹாம் லிங்கன்.கொஞ்சம் தேங்கியிருந்தாலும் ஒரு தொடர் தோல்வியாளராக மாறியிருக்கவேண்டியவர். திருமண வாழ்வில் தோல்வி. சட்டமன்றத் தேர்தலில் தோல்வி. அத்தனையும் கடந்து ஐம்பது வயதில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறு விநாடியே, அமெரிக்காவை உலுக்கியெடுத்த உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது. தலைக்கு மேலே கத்தி.லிங்கனிடம் தீராத வேட்கையும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் மகத்தான கனவுகளும் இருந்தது. கறுப்பின மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும். மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்தை சிருஷ்டிக்கவேண்டும். அமெரிக்கா துண்டுதுண்டாகச் சிதறாமல் ஒரு வலிமையான தேசமாக உருப்பெறவேண்டும்.லிங்கனின் எளிமையான வாழ்க்கையும்,
அவர் வெற்றிகொண்ட கடினமான தருணங்களும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்ட முக்கிய அத்தியாயங்களாகும்.

அமெரிக்க குடியரசில் அடிமைத்தனத்தை ஒழித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஆபிரகாம் லிங்கனை 1868 - ல் ஒரு பைத்தியக்காரன் சுட்டுக் கொன்றான்.

நன்றி நண்பர் பனித்துளி சங்கர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆபிரகாம் லிங்கன் !!! Empty Re: ஆபிரகாம் லிங்கன் !!!

Post by செந்தில் Tue Feb 12, 2013 2:18 pm

கைதட்டல் பயனுள்ள வரலாட்ட்று பகிர்வுக்கு நன்றி ஜி கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ஆபிரகாம் லிங்கன் !!! Empty Re: ஆபிரகாம் லிங்கன் !!!

Post by ragu Tue Feb 12, 2013 2:46 pm

நன்றி விருப்பம் தெரிவித்தேன்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ஆபிரகாம் லிங்கன் !!! Empty Re: ஆபிரகாம் லிங்கன் !!!

Post by மகா பிரபு Tue Feb 12, 2013 3:22 pm

உன்னத தலைவர்.. கைதட்டல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆபிரகாம் லிங்கன் !!! Empty Re: ஆபிரகாம் லிங்கன் !!!

Post by ரானுஜா Tue Feb 12, 2013 5:51 pm

சிறந்த பகிர்வு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஆபிரகாம் லிங்கன் !!! Empty Re: ஆபிரகாம் லிங்கன் !!!

Post by mohaideen Tue Feb 12, 2013 10:05 pm

அவரின் பிறந்தநாளுக்கு அவரைப்பற்றிய தகவல்கள்[You must be registered and logged in to see this image.]
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஆபிரகாம் லிங்கன் !!! Empty Re: ஆபிரகாம் லிங்கன் !!!

Post by நண்பன் Wed Feb 13, 2013 12:49 pm

சிறப்பான பகிர்வு கைதட்டல்
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

ஆபிரகாம் லிங்கன் !!! Empty Re: ஆபிரகாம் லிங்கன் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum