தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு ஹதீஸ்

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Fri Jun 07, 2013 5:16 am

First topic message reminder :

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:47 am

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்." சொர்க்கம் , நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை . ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? " என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். " மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும் . இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது " என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ( " எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் " என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள். )

அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்)

நூல்: திர்மிதி 2230
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:48 am

“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.

“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:48 am

அல்லாஹ்வின் வேதத்தில் (குர்ஆன்) ஒரு எழுத்தை ஓதினாலும் அதனால் அவருக்கு ஒரு நன்மை இருக்கின்றது. ஒரு நன்மை என்பது அதைப் போல் பத்து மடங்காகும். (ஒரு எழுத்திற்கு பத்து நன்மைகள்). (2:1, 3:1, 29:1, 30:1, 31:1, 32:1 ஆகிய வசனங்களில் உள்ள) “அலிஃப்-லாம்-மீம்” என்பதை ஒரே எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். “அலிஃப்” என்பது ஒரு எழுத்து; “லாம்” என்பது ஒரு எழுத்து; “மீம்” என்பது ஒரு எழுத்து (ஆக, மூன்றெழுத்திற்கு முப்பது நன்மைகள்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: திர்மிதீ 2910
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:49 am

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 5010
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:49 am

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(அடிப்படையில்லாமல் பிறர் மீது சந்தேகம் கொள்வது குறித்து உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இவ்வாறு சந்தேகம் கொள்வது மாபெரும் பொய்யாகும். (மற்றவர்களின் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரின் மீது ஒருவர் கோபம் கொள்ளாதீர்கள்; பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:49 am

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை செய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்,) முழுமையாக வையுங்கள். (பாதி சிரைத்தும், பாதி சிரைக்காமலும் விடாதீர்கள்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: அபூதாவூத் 3666
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:50 am

"நீங்கள் காலணி அணியும்போது முதலில் வலது காலில் அணியுங்கள்; அதைக் கழற்றும்போது முதலில் இடது காலில் இருந்து கழற்றுங்கள். வலது காலே அணிவதில் முதலாவதாகவும், கழற்றுவதில் இறுதியாகவும் இருக்கட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5855

"நீங்கள் ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒன்று, இரண்டு காலணிகளையும் ஒரு சேரக் கழற்றிவிடுங்கள்; அல்லது இரண்டையும் ஒரு சேர அணிந்து கொள்ளுங்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5856
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:50 am

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்."
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்."
அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.

நூல்- புகாரி 1314.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்."
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நூல்- புகாரி 1315.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போது, அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால், என்னை விரைந்து செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறே கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான்."
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நூல்- புகாரி 1316
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:50 am

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6224
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:50 am

அபூ பர்ஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் பயன்பெறும்படியான விஷயங்களை எனக்கு கற்றுத் தாருங்கள்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “முஸ்லிம்கள் நடக்கும் பாதையிலிருந்து இடையூறு தருபவைகளை அகற்றுங்கள்” எனக் கூறினார்கள்.

(ஸஹிஹ் முஸ்லிம்)
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:51 am

அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர்(ஸல்) தூதரே! பெரும் பாவங்கள் எவை?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இறைவனுக்கு இணை கற்பிப்பது' என்றார்கள். அவர், 'பிறகு எது?' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது' என்றார்கள். அவர், 'பிறகு எது?' எனக் கேட்க நபி(ஸல்) அவர்கள், 'பொய்ச் சத்தியம் என்றால் என்ன?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது' என்றார்கள்

நூல்- புகாரி 6920.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Sat Jun 22, 2013 12:52 am

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.

நூல்- புகாரி 2653.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:09 pm

ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

103:1 وَالْعَصْرِ
103:1. காலத்தின் மீது சத்தியமாக.

103:2 إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான்.

103:3 إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:09 pm

நிச்சயமாக வானங்களும் பூமியும் அவை இரண்டும் விலகிவிடாதவாறு நிச்சயமாக அல்லாஹ்வே தடுத்துக் கொண்டிருக்கின்றான்; அவை இரண்டும் விலகுமாயின், அதற்குப் பிறகு வேறெவரும் அவ்விரண்டையும் தடுத்து நிறுத்தமுடியாது. நிச்சயமாக அவன் பொறுமையுடையவன்; மிக மன்னிப்வன். 35:41
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:09 pm

நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் இருந்த போது ஒருவர் கேட்டார்: “அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “மனிதர்களில் சிறந்தவர் அவர்களில் நன்கு குர்ஆன் ஓதுபவர், மிகுந்த இறையச்சம் உடையவர், அவர்களில் மிக அதிகம் நன்மையை ஏவி தீமையை தடுப்பவர், அவர்களில் மிக அதிகமாக இரத்தபந்துக்களோடு இணைந்திருப்பவர்” என்று கூறினார்.

[முஸ்னத் அஹ்மத்]
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:09 pm

இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 2323
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:09 pm

'என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக, உங்களில் ஒருவருக்கு அவரின் தந்தையையும் அவரின் மக்களையும் விட நான் மிக்க அன்பானவராகும் வரை அவர் ஈமான் எனும் இறைநம்பிக்கை உள்ளவராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

ஸஹிஹ் புஹாரி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:10 pm

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் தொடங்கும்போதும், ருகூச் செய்யும் முன்னும், ருகூவிலிருந்து நிமிரும் போதும் தம் இருகைகளையும் தம் இரு தோள்கள் வரை உயர்த்துவதை நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)


நூல் : முஸ்லிம் 586


நபி (ஸல்) அவர்கள் தொழுகையின் இரண்டாம் ரக்அத் முடித்து (மூன்றாம் ரக்அத்திற்கு) எழும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி)

நூல்: புகாரி 739
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:10 pm

ஹலால் எனும் அனுமதிக்கப்பட்டது தெளிவானது; ஹராம் எனும் விலக்கப்பட்டதும் தெளிவானது; அவ்விரண்டிற்குமிடையே சந்தேகத்திற்கிடமான காரியங்கள் உள்ளன. பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைவிட்டு விடுகிறவர் பாவம் என்று தெளிவாகத் தெரிவதை நிச்சயம் விட்டு விடுவார்; பாவம் எனச் சந்தேகப்படுபவற்றைச் செய்யத் துணிகிறவர் தெளிவான பாவங்களிலும் வீழ்ந்து விடக் கூடும்.

பாவங்கள் அல்லாஹ் போட்ட வேலிகளாகும். வேலியைச் சுற்றி மேய்கிறவர் அதற்குள்ளும் சென்று விடக்கூடும்"

என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
நூல்- புகாரி 2051.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:10 pm

விபசாரத்தில் மனிதனுக்குள்ள‌ பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன்
அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட
விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு
செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை
கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது
பொய்யாக்குகிறது"* இறைத்தூதர் ந‌பி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்ப‌வ‌ர் :அபூ ஹுரைரா(ரலி)
நூல் : புகாரி: 6243
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:11 pm

எங்கள் இறைவா...பெரும் பாவமான விபச்சாரத்திலிருந்து எங்களை பாதுகாப்பாயாக.. :];: 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹிஹ் புஹாரி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:11 pm

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள். "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூற...
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:12 pm

"நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?'' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ரியா (முகஸ்துதி)'' என்று பதிலளித்தார்கள். "நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்'' என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)

நூல்: அஹ்மத் 22528
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:12 pm

யா அல்லாஹ் எங்கது அமல்களை பொருந்திக் கொள்வாயாக...

'ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்திற்காகப் போராடுகிறார். (இன்னொருவர்) தம் குலப்பெருமைகளைக் காக்கும் சீற்றத்துடன் போரிடுகிறார். இவற்றில் இறைவழியில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, 'அல்லாஹ்வின் கொள்கை (இவ்வுலகில்) மேலோங்குவதற்காக (மட்டும்) போர் புரிகிறவர் தாம் மகத்துவமும் கண்ணியமுமிக்க இறைவழியில் போரிட்டவராவார்' என்று கூறினார்கள். கேள்வி கேட்டவர் நின்றிருந்தால்தான் நபி(ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள்" என அபூ மூஸா(ரலி) அறிவித்தார்.

ஸஹிஹ் புஹாரி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed Wed Jul 03, 2013 11:12 pm

(49:13 ) மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

தினம் ஒரு ஹதீஸ்  - Page 2 Empty Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum