தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில ஜென் கதைகள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

சில ஜென் கதைகள்  - Page 2 Empty சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 25, 2013 3:25 pm

First topic message reminder :

யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லை..!

ஒரு நள்ளிரவு..!

ஜென் குரு தன் அறையில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தார்.

திடீரென அந்த அறைக் கதவைத்தள்ளிக்கொண்டு திருடன் உள்ளே நுழைந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி இருந்தது. அவன் அதை நீட்டிக்கொண்டே ஜென் குருவை நெருங்கினான்.

நிமிர்ந்து அவனை அமைதி தவழப்பார்த்த ஜென் குரு ”உனக்கு என்ன வேண்டும்? என் உயிரா? அல்லது பணமா?” என்று கேட்டார்.

அதைக்கேட்ட திருடன் திகைத்தான்.

அவரை மிரட்டிப் பணம் பறிக்கலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் ‌‌போய்விட்டதை எண்ணி அவன் சற்று வருந்தினான்.

”சரி போகட்டும்! எனக்குப்பணம்தான் வேண்டும்...!” என்றான் திருடன்.

ஜென் குரு சிறிது கூட சஞ்சலப்படாமல் தன்னிடமிருந்த பணத்தை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டுத் தொடர்ந்து எழுதத்தொடங்கினார்.

அமைதியான அவரது செயல் திருடனின் மனதை என்னவோ செய்தது.

ஆனாலும் அவன் பணத்துடன் வெளியே போவதையே விரும்பினான்.

அவன் அறையின் வாயிலை நோக்கி நடந்தபோது, ”தம்பி..! நீ வெளியே போகும்போது அறைக் கதவை சாத்திவிட்டுப் போ..!” என்றார் ஜென் குரு.


திருடன் ஒரு கணம் நின்று திரும்பி அவரைப் பார்ததான். பிறகு அறைக்கதவைச் சாத்திவிட்டு வெளியேறினான்.

மிக விரைவிவேயே பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற முதுமொழிப்படி அவன் காவலர்களிடம் பிடிப்பட்டான்.

அவன் காவல் அதிகாரிகளிடம், நீண்ட நாள் தன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார்.

”ஐயா...! திருடுவதென் தொழில். கத்தியைப் பார்த்த உடனேயே பலரும் பயத்தால் அலறிப்பார்த்திருக்கிறேன். பலர் மிரட்டலுக்குப் பின்னே பணிந்திருக்கிறார்கள்.

”ஆனால் எதற்குமே பயப்படாத ஒரு குருவை என் வாழ்நாளில் ஒரு முறை பார்த்தேன். அந்த பயங்கரமான சூழ்நிலையிலும் அவர் எப்படி அமைதியைக் கடைப்பிடித்தார். எப்படி பயப்படாமல் இருந்தார் என்பதை இப்போதும் ஆச்சரியத்துடன் எண்ணிப்பார்க்கிறேன். “உயிர் வேண்டுமா? பணம் வேண்டுமா..?” என்று அவர் அன்று கேட்டது என் இதயத்தையே அறுத்துக் கூறு போட்டுவிட்டது.”

”நிச்சயம் அவர் ஒரு மகானாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் என் உடலுக்குத்தான் தண்டனை தரமுடியும். ஆனால் அவர் என் உள்ளத்துக்கே தண்டனை கொடுத்துவிட்டார் என்னை மனிதனாக்கி விட்டார்.”

”நான் விடுதலை பெற்றதும், அவரிடம்தான் சரணாகதி அடைந்து, வாழ்நாள் முழுவதும் அவருக்குச் வேவை செய்யப்போகிறேன்!” என்றான்.

ஒரு சந்தர்ப்பத்தில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ஜென் குரு மிகவும் மகிந்தாராம்.

அச்சத்தில் இருந்தால்தான் எல்லா தவறுகளும், எல்லா துன்பங்களும் வந்துச்சேர்கிறது. அச்சத்தை தவிர்த்து விடுவோம் பிறகு யாருக்கும் பயப்படவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடும்.

ஜென் கதைகள்

நன்றி ;கவிதை வீதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


சில ஜென் கதைகள்  - Page 2 Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Nov 27, 2013 5:47 pm

காரணம் என்ன?
***************************
ஒரு சந்நியாசி காலை நேரத்தில் மலை உச்சி மீது நின்றுகொண்டிருந்தார்,தன்னந்தனியாக,அசையாமல்.காலை உலா வந்த மூன்று பேர் அவரைப் பார்த்தார்கள்.

ஒருவர் சொன்னார்,''காணாமல் போன பசுவை அவர் தேடிக் கொண்டிருக்கிறார் ,''அடுத்தவர் சொன்னார்,'இல்லை,அவர் நிற்கிற விதத்தைப் பார்த்தால் அவர் எதையும் தேடுவதாகத் தெரியவில்லை.அவர் தன் நண்பர்களின் வரவுக்காகக் காத்திருக்கிறார்,

'மூன்றாமவர் சொன்னார்,''நண்பர்களுக்காகக் காத்திருந்தால் அவர் சுற்றிலும் திரும்பிப் பார்க்க வேண்டும்.அவர் அசையவே இல்லை.அவர் தியானம் செய்கிறார்.''

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்,அவரிடமே விவரம் கேட்க,சிரமப்பட்டு மலை உச்சிக்குச் சென்றனர்.

முதலாமவர் கேட்டார்,''காணாமல் போன உங்கள் பசுவைத் தானே தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?''
சந்நியாசி கண்களைத் திறந்தார்.''எனக்கு சொந்தம் என்று எதுவும் இல்லை.அதனால் எதுவும் காணாமல் போகவில்லை.எதையும் நான் தேடவும் இல்லை.''

'அப்படியானால், நண்பர்களுக்காகத் தானே காத்திருக்கிறீர்கள்?'என்று இரண்டாமவர் கேட்டார்.
''நான் தனியன்.எனக்கு நண்பர்களும் இல்லை.பகைவர்களும் இல்லை.அப்படியிருக்க நான் யாருக்காகக் காத்திருக்க வேண்டும்?''என்றார் சந்நியாசி.

''அப்படியானால், நான் நினைத்தது தான் சரி.நீங்கள் தியானம் தானே செய்கிறீர்கள்?''என்று கேட்டார் மூன்றாமவர்.

சந்நியாசி சிரித்தார்.''நீங்கள் மடத்தனமாகப் பேசுகிறீர்கள்.எனக்கு சாதிக்க வேண்டியது எதுவுமில்லை.எதற்காக நான் தியானம் செய்ய வேண்டும்?''என்று கேட்டார்.

அப்புறம் மூவரும்,''பிறகு நீங்கள் என்னதான் செய்து கொண்டிருக்கிறீர்கள்?''என்று கேட்டனர்.

''நான் எதையுமே செய்யவில்லை.நான் சும்மா நின்று கொண்டிருக்கிறேன்.''என்று சொல்லி சிரித்தார் சந்நியாசி.

தியானம் என்பது அது தான்.
******************************************************
எனக்கு நன்றாக பிடித்த கதை இது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  - Page 2 Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Jan 17, 2014 9:35 am

குச்சியால் அடித்து விரட்டு – ஜென் கதை
********************************************
ஒரு சீடன் தன் குரு பாங்கய்யிடம் கேட்டான். “
என்னால் எனது கோப இயல்பைக் கட்டுப்படுத்தவே
இயலவில்லை.”
-
குரு அவனிடம், “ உனது கோபம் எங்கே? எனக்குக்
கொஞ்சம் காட்டு” என்றார். சீடன் ஆச்சரியப்பட்டான்.
“இப்போதைக்கு என்னிடம் கோபம் இல்லை, அதனால்
என்னால் அதைக் காட்ட முடியாது” என்றான்.
-
குரு பாங்கய் பதில் அளித்தார். “பிரச்னை ஒன்றும்
இல்லை. கோபம் வரும்போது என்னிடம் கொண்டு
வந்து காட்டு” என்றார்.
-
சீடன் கடுப்புடன், “கோபம் வந்தவுடன் என்னால்
கொண்டுவந்து உடனடியாகக் காட்ட முடியாதே”
என்றான். அத்துடன், “எதிர்பாராத வேளையில் கோபம்
வரும். அதை நான் உங்களிடம் வந்து காட்டுவதற்குள்
நிச்சயமாக மறைந்தே போய்விடும்” என்றான் சீடன்.

-
“அப்படியானால் கோபம் என்பது உனது உண்மையான
இயல்பாக இருக்க முடியாது” என்றார் குரு.
“கோபம் உனது உண்மையான இயல்பாக இருக்கும்
எனில் எந்தச் சமயத்திலும் என்னிடம் அதைக் கொண்டு
வந்து காட்ட முடியும். நீ பிறக்கும்போது உன்னிடம் அது
இல்லை. உனது பெற்றோரும் உன்னிடம் தரவில்லை.
அதனால் அது வெளியிலிருந்துதான் வந்திருக்க
வேண்டும். எப்போதெல்லாம் கோபம் வருகிறதோ
அதை ஒரு குச்சியால் அடித்து விரட்டு” என்றார் குரு.
-
———————————————–
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  - Page 2 Empty Re: சில ஜென் கதைகள்

Post by முரளிராஜா Sun Feb 16, 2014 10:56 am

ஜென் கதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி இனியவன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சில ஜென் கதைகள்  - Page 2 Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 23, 2016 1:00 pm

அந்தப்பிரதேசம் முழுக்க அந்தபுனிதரின் பெயர் பரவிருந்தது. அவர் ஒரு மலையில் சிறு குடிசையில் வசிக்கிற சேதியும் கூடவே பிரபலமாக இருந்தது.

தூரத்து கிராமத்து மனிதர் ஒருவர் அவரைச்’ சந்தித்துவிடவேண்டுமென்கிற ஏக்கத்தில் நெடு நாள் பயணம் செய்து புனிதரின் இருப்பிடம் அடைந்தார்.

குடிசையின் வாசலில் அவரை ஒரு வயோதிக வேலைலைக்கரன் வரவேற்றான்.’நான் அந்த மகானைப்பார்க்கவேண்டு’மென்று வேலைக்காரனிடம் சொன்னார்.
குடிசைக்குள் அவருக்கு உபசாரம் நடந்தது. அப்போதும் புனிதரைப் பார்க்கமுடியவில்லை.

நேரம் ஆக ஆக பொறுமையிழந்து கிராமவாசி ‘நான் எப்பொழுதுதான் புனிதரைப்பார்க்க முடியும்’ என்று கேட்டார்.’நீங்கள் பார்க்க வந்தவரை ஏற்கனவே பார்த்துவிட்டீர்கள்’ என்று சொன்னார்.

மேலும் ’நீங்கள் வாழ்க்கையில் சந்திக்கிற ஒவ்வொரு சாதாரண, அடித்தட்டு மனிதரையும் விவேகமுள்ள புனிதராக நினைத்தால் உங்கள் வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளையும் மிகச் சுலபமக தீர்த்துவிடலாம்’ என்று வேலைக்காரனாய் வந்த புனிதர் சொன்னார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  - Page 2 Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 23, 2016 1:01 pm

இமய மலையில் ஜென் குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைக் காண ஒரு மடாலயத்தின் தலைவர் சென்றார். அப்போது அவரிடம் "நான் ஒரு புகழ் பெற்ற மடாலயம் ஒன்றை நடத்தி வருகிறேன்" என்று கூறினார்.

குருவும் தன் மௌனத்தை கலைக்காமல் அவர் கூறியதை கேட்டு தலை அசைத்தார். மேலும் அந்த தலைவர் குருவிடம் "என் மனம் தற்போது பெரும் குழப்பத்தில் உள்ளது. அதற்கான விடையை அறியவே உங்களைக் காண வந்தேன்" என்றும் கூறினான்.


குரு அதற்கு "என்ன குழப்பம்?" என்று கேட்டார். தலைவர் குருவிடம் "என் மடாலயம் மிகவும் அமைதியாக, பழைமை நிறைந்த புனிதமான இறை வழிபாட்டை மேற்கொண்டு வந்தது. இதனை அறிந்து உலகின் பல பகுதிகளிலிருந்தும், இளைஞர்கள் வந்து தங்கி, பாடத்தை கற்றுக் கொண்டு செல்வர். ஆனால் இப்போதோ, யாரும் வருவதில்லை. இதற்கு காரணம் என்னவென்று தெரியவில்லை. நீங்கள் தான் அதற்கான காரணத்தை சொல்ல வேண்டும்" என்று கூறினார்.


அவ்வாறு வருத்தத்துடன் சொல்லும் போது, அவர்து குரலில் வேதனை தெரிந்தது. அதன் பின் குரு தலைவரிடம், "இதற்கு அறியாமை தான் காரணம்" என்று சொன்னார். "அறியாமையா?" என்று கேட்டார் தலைவர்.

அதற்கு "ஆம், உங்கள் மத்தியில் தேவதூதர் ஒருவர் உள்ளார். அவரை நீங்கள் உணரவில்லை, அதனால் தான் இந்த குழப்பம்" என்று கூறி அனுப்பி வைத்தார்.

அவரும் யாராக இருக்க முடியும் என்று யோசித்துக் கொண்டே சென்றார். பின் தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களிடம் நடந்ததை சொன்னார். அவர்களும் யாரோ ஒருவர் தான் இங்கு தேவதூதர் என்பதை நினைத்து, ஒருவரை ஒருவர் மிகவும் மரியாதையுடன் நடத்தினார்கள்.


பின் சிறிது மாதங்கள் கழித்து, அவரது மடாலயத்தில் கூட்டம் குவிந்தது. ஏனெனில் அவர்கள் இதுவரை எதையும் விரும்பி செய்யாமல், கடமைக்காக செய்ததால், யாரும் வரவில்லை. இப்போது அவர்கள் அனைவருக்கும் மரியாதைக் கொடுத்து, அனைத்தையும் மரியாதையோடு நடத்தினர்.

இவை அனைத்தையும் கண்டப் பிறகு தான் தலைவருக்கு, துறவி சொன்னது புரிந்தது. அப்போது தான் அவருக்கு தேவ தூதர் வேறு எங்கும் இல்லை, அவரவர் மனதில் தான் இருக்கிறார். அதை நாம் உணர்ந்து, நம்மைப் போல மற்றவரையும் நேசித்தால், இறைவனை உணர முடியும் என்பது நன்கு புரிகிறது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  - Page 2 Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 23, 2016 1:02 pm

ஒருநாள் புத்தர் தன் சீடர்களை அழைத்துக் கொண்டு பயணம் ‌சென்று கொண்டிருந்தார். மாலைவேளை போய், இரவு வந்துவிட்டது. அனைவரும் உறங்கலாம் என்று முடிவெடுத்தனர்...

அப்போது புத்தர் தன் சீடர்களிடம், “யாரோனும் நாம் உறங்குவதற்கு தகுதியான இடம் இருக்கிறதா என்று பார்த்து வாருங்கள்!“ என்று கூறி சில சீடர்களை அனுப்பினார்.

அவர்கள் சிறிது தூரம் சென்றனர். அங்கே ஒரு மயானம் இருந்தது. அதைத் தாண்டி சிறிது தூரம் சென்றனர். அங்கே ஒரு ஊர் இருந்தது. அந்த ஊரில் இரவில் தங்கலாம் என்று சீடர்கள் நினைத்தனர்.

அவர்கள் புத்தரிடம் திரும்பி வந்தனர். தாங்கள் வழியில் கண்ட மயானத்தைப்பற்றியும், அதற்கு அப்பால் ஒரு ஊர் இருப்பதையும் கூறினர்.

உடனே புத்தர் “நாம் இன்று இரவு உறங்குவதற்கு ஏற்ற இடம் அந்த மயானம் தான்!“ என்று கூறி, சீடர்களை மயானத்திற்கு அழைத்துச் சென்றார்.

சீடர்களுக்கோ உள்ளூற உதறல் எடுக்க ஆரம்பித்தது. மயானத்தில் எப்படி இரவு தங்க முடியும்? பேய்களும் ஆவிகளும் உலவுகிற இடமல்லவா அது. என்ன செய்வது? குரு தங்களை மயானத்தில் தங்கிக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாரே.

மறுக்க முடியாமல் அவர்கள் அனைவரும் அன்றிரவு மயானத்திலே தங்கினர். சீடர்கள் யாருமே இரவில் உறங்கவில்லை. ஒரு வழியாக மறுநாள் பொழுது விடிந்தது.

அவர்கள் எல்லோரும் முதல் வேளையாக புத்தரிடம் சென்று, “குருவே! சற்று தொலைவில் அழகான ஊர் இருக்க, எங்கள் எல்லோரையும் இந்த மயானத்தில் தங்கும்படிக் கூறினீர்களே, எதற்காக?“ என்று கேட்டனர்.

அதற்கு புத்தர், “எல்லோரும் இரவு நன்றாக உறங்கினீர்களா?“ என்று திரும்பிக் கேட்டார்.

“ஒரு நொடியும் நாங்கள் கண் மூடவில்லை“ என்று பதில் கூறினர்.

அதைக்கேட்ட புத்தரும், “அதற்காகத்தான் உங்களை இரவில் இங்கே தங்கும்படிக் கூறினேன்“ என்று கூறிவிட்டு நடையைத் தொடர்ந்தார்.

எந்நேரமும் விழித்திருத்தலே ஜென். அமைதியான, பாதுகாப்பான சூழலில் ஒருவன் இறந்த காலத்தில் ஆழ்ந்து விடுகிறான்: அல்லது எதிர்காலத்தில் மிதக்கிறான்: நிகழ்காலத்தில் வாழ மறந்துவிடுகிறான்.

அதனால் எப்போதும் மனதில் பயம் கொண்டு நிகழ்காலத்தில் விழிப்போடு இருப்போம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  - Page 2 Empty Re: சில ஜென் கதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 23, 2016 1:03 pm

ஒரு ஜென்கதை....

இல்லறவாசி ஒருவர் அருகிலுள்ள ஊருக்குப் புறப்பட்டார். அவரால் மறுநாள்தான் திரும்பி வரமுடியும். எனவே, அவரது மனைவி மதியமும் இரவும் சாப்பிடுவதற்காக அவருக்கு ஒரு உணவுப் பொட்டலங்களை ஒரு பையில் போட்டுக் கெர்டுத்தாள். காட்டுவழியே தான அவரது பயணம் அமைந்தது.

அவர் நடுக்காட்டை அடைந்தபோது மதியம் ஆகிவிட்டது. ஒரு மரத்தடியில் அமர்ந்து மதிய உணவை உண்டார். உணவுக்குப் பின் பையை எடுத்துத் தோளில் தொங்க விட்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தார். நினைத்ததைவிட மிக விரைவில் சேர வேண்டிய இடத்தைச் சென்றடைந்த அவர் தனது வேலைகளை விரைவில் முடித்துக் கொண்டார். தனது ஊரை நோக்கிப் புறப்பட்டார். விரைவிலேயே புறப்பட்ட காரணத்தால், வீட்டிற்குச் சென்ற பின் இரவு உணவைச் சாப்பிடலாம் எனத் தீர்மானித்தார்.

திரும்பும் வழியில் அவர் ஒரு ஜென் துறைவி அமர்ந்திருப்பதை கண்டார். அந்த ஜென் துறவி இவரிடம், ”இன்று நீ உன் வீடு திரும்பினால் உன் மனைவி இறந்து விடுவாள், இன்று திரும்பவில்லை என்றால் நீ இறந்து விடுவாய்” என்று கூறினார்.

இதைக்கோட்ட இல்லறவாசி திடுக்கிட்டார். துறவிகளின் வார்த்தைகள் பொய்க்காது என்பதை அறிந்த அவர், தம் மனைவியின் உயிரைக் காக்கும் பொருட்டு அன்று வீடு திரும்புவதில்லை என்று முடிவு செய்தார். காட்டில் விலங்குகள் எந்த நிமிடமும் தன் மீது பாய்ந்து தன்னைக் கொன்று தின்னலாம் என்ற எதிர்பார்ப்புடன் அவர் மிக மெதுவாக, கவனமாக எல்லா திசைகளிலும் கூர்ந்து நோக்கியவாறு நடக்க ஆரம்பித்தார்.

சிறிது தூரம் நடந்தபிறகு, ஒரு மரத்தடியில் சில துறவிகள் அமர்ந்திருக்க தலைமைத் துறவி அருளுரை நிகழ்த்துவதைக் கண்டனர். அந்தத் தலைமைத்துறவி யாரென்று பார்த்தபோது அங்கு புத்தரைக் கண்டார்.

இல்லறவாசி ஆர்வத்துடன் அவரது அருளுரையைக் கேட்டார். உரை நிறைவுற்ற பின்னர், அவர் புத்தரை வணங்கினார். பின்னர் தான் வழியில் ஒருவரைச் சந்தித்ததை விளக்கமாக கூறி, தன்னைக் காக்குமாறு வேண்டினார்.

புன்னகை புரிந்த புத்தர். “எனக்குப் பசியாக இருக்கிறது. ஏதாவது சாப்பிட இருக்கிறதா?” என்று கேட்டார்.

இல்லறவாசி அளவற்ற மகிழ்ச்சியுடன் பையைத் திறக்க முற்பட்டார். ஆனால் புத்தர், அந்தப்பையை அப்படியே தன்னிடம் தருமாறு கேட்டார். இல்லறவாசியும் பையை அப்படியே புத்தரிடம் கொடுத்தார். புத்தர் மெதுவாக பையைத் திறந்து, அதன் உள்ளே இருந்த சிறிய விஷப்பாம்பை வெளியில் எடுத்தார்.

அதைக்கண்ட இல்லறவாசி திடுக்கிட்டான். மதியம் தான் உணவருந்தப் பையைத் திறந்து மரத்தடியில் வைத்திருந்தபோது விஷப்பாம்பு பைக்குள் சென்றிருக்க வேண்டும் என்று இல்லறவாசி புரிந்து கொண்டார். அப்போதுதான் துறவி சொன்னதன் பொருள் அவனுக்குப் புரிந்தது.

(ஒருவர் மரணத்தை எப்போதும் தன்னுடனேயே எடுத்துச் செல்கிறார். சாதுக்கள் தொடர்பு அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்)

மரணத்தை வென்றவர் என்று இதுவரையில் யாரும் இல்லை நல்லவர்களோடு தொடர்பில் இருப்போம். மனித நாகரீகத்தோடு செயல்படுவோம். மரணங்கள் வந்தாலும் நாம் அதை எதிர்த்து நிற்கலாம்...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

சில ஜென் கதைகள்  - Page 2 Empty Re: சில ஜென் கதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum