தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சில சுவராசியமான விஷயங்கள்.

View previous topic View next topic Go down

சில சுவராசியமான விஷயங்கள்.  Empty சில சுவராசியமான விஷயங்கள்.

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 10:22 am

சில சுவராசியமான விஷயங்கள்.  1378208_402299143231521_1760103628_n

விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்.

1)தோமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2)தோமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

நன்றி முகநூல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில சுவராசியமான விஷயங்கள்.  Empty Re: சில சுவராசியமான விஷயங்கள்.

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 10:23 am

சில சுவராசியமான விஷயங்கள்.  1395851_402298949898207_2121911874_n

ஊனத்தை ஊனப்படுத்தியவர் எடிசன்.

டங்ஸ்டன் இழை கொண்ட மின் விளக்குகள் முதல் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்டுபிடிப்புகள் ஏராளம் ஏராளம்.

அவற்றின் முன்னேறிய தொழில்நுட்பங்கள்தான் நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலானவைகள் என்றால் அது மிகையில்லை.

அப்படிப்பட்ட அந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனுக்கு ஒரு குறை இருந்தது.

அவருக்கு லேசாக காது கேட்காது. ஆனால் அந்த ஊனத்தையே ஊனமாக்கியவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

ஒரு முறை அவரிடம், உங்கள் வெற்றிக்குக் காரணம் என்ன? என்று கேட்டதற்கு அவர் அளித்த பதில் வியப்பில் ஆழ்த்தியது.

அதாவது, எனக்கு காது சரியாக கேட்காது. எனவே அடுத்தவர் திட்டினாலும், புகழ்ந்தாலும் எனக்கு கேட்காது. அதனால் நான் எப்போதும் என்னுடைய வேலையை பார்க்க முடிந்தது. அதனால் தான் நான் இவ்வளவு கண்டுபிடிப்புகளை கண்டறிய முடிந்தது என்று கூறினார்.

ஊனத்தையே ஊனமாக்கும் வித்தை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது. அதனை எல்லோரும் கற்றறிவோம்.

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது !

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது.

நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில சுவராசியமான விஷயங்கள்.  Empty Re: சில சுவராசியமான விஷயங்கள்.

Post by ஸ்ரீராம் Wed Oct 30, 2013 10:26 am

சில சுவராசியமான விஷயங்கள்.  1009927_381700525291383_535827896_n

"போலீஸ் உடையில் ஒரு புதுமையான ஆட்டோ டிரைவர்"

போக்குவரத்து நெருக்கடிக்கு பஞ்சமில்லாத சென்னை மாநகரின் அபிபுல்லா சாலையில் ஒரு காலை வேளை.

நான்கு பக்கமும் இருந்து பாய்ந்துவரும் வாகன ஒட்டிகள் முந்திச் செல்வதில் காட்டிய ஒழுக்கமின்மையால், ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்டும், முட்டிக்கொண்டும் இருந்தார்கள்.

போக்குவரத்து சீர்படுவதாகவும் இல்லை, அதுபற்றி யாரும் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.


அந்த நேரம் போலீஸ்காரர் போல சீருடை அணிந்த ஒரு வயதான ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவில் இருந்து இறங்கிவந்து, போக்குவரத்து நெருக்கடிக்கு நடுவில் நின்றுகொண்டு, வாகனங்களை சீர் படுத்தி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்.

அந்த வழியாக சென்ற ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி குழந்தைகளை சுமந்து சென்ற வேன் டிரைவர்கள் உள்பட பலர், " நல்லவேளை பெரியவரே, நீங்க வந்தீங்க, ரொம்ப நன்றி'' என்று சொல்லிவிட்டு சென்றனர்.


கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்று கொண்டு, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், சமூக அக்கறையுடன் செயல்பட்டு, பின் தனது ஆட்டோவை எடுத்துக்கொண்டு சென்ற அந்த பெரியவரின் தோற்றம் மட்டுமல்ல அவரது கதையுமே வித்தியாசமானதுதான்.

இன்றைக்கு 67 வயதாகும் ஆட்டோ டிரைவர் சந்திரன் வெள்ளந்தியாகவும், வெளிப்படையாகவும் தன்னைப்பற்றி சொல்கிறார்.


பசும்பொன் மாவட்டம் கமுதியில் பிறந்தவன் நான், அப்பாவின் கவனிப்பும், வளர்ப்பும் இல்லாததால் மகா மட்டமானவனாக வளர்ந்தேன், யாருக்கும் அடங்காத சேட்டைக்காரனாக விளங்கினேன், இதனால் இரண்டாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை, டான்ஸ் ஆடுவதில் ஆர்வம் ஏற்பட்டது, ரிக்கார்ட் டான்ஸ் குரூப்பில் சேர்ந்து ஊர், ஊராக போய் டான்ஸ் ஆடினேன், டி.ராஜேந்தரின் மனைவியான உஷா ராஜேந்தர் கூட எல்லாம் டான்ஸ் ஆடியிருக்கேன்.

ரிக்கார்ட் டான்ஸ் ஆடுறவன்ங்றதால எனக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை, என்னடாது நம்ம நிலமை இவ்வளவு மோசமாக இருக்கேன்னு நினைச்சு டான்ஸ் ஆடுறதை விட்டுவிட்டு, கார் டிரைவர் ஒருவரை பழக்கம் பிடிச்சு, அவரது காரை கழுவிக் கொடுத்து கார் ஒட்டக் கற்றேன். 35 ரூபாய் செலவழித்து லைசென்ஸ்ம் எடுத்தேன்.


ஆனால் யாரும் கார் ஒட்ட வாய்ப்பு கொடுக்கலை, அப்புறம் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஒட்டுவோம்னு ஆட்டோ ஒட்டத் துவங்கினேன், அப்படி ஆட்டோ ஒட்டத்துவங்கி கிட்டத்தட்ட 37 வருஷமாச்சு, இப்ப சொந்த ஆட்டோ, சொந்த வீடு, மனைவி, மகன், மகள், பேரன், பேத்திகள் என்று நல்லாயிருக்கேன்.

ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சு மனைவியோட நிம்மதியா வாழ்வோம்னு நினைச்ச நேரத்தில எனக்கு மஞ்சள் காமாலை நோய்வந்து பொழப்பேனான்னு ஆகிப்போச்சு, இயேசுவிடம் பிரார்த்தித்ததன் அடிப்படையில் பிழைச்சு எழுந்தேன், சபை சகோதரிகள் , "உங்ககிட்ட இருக்கிற கெட்ட பழக்கங்களை ஒழிச்சிங்கன்னா உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லைன்னாங்க, அன்னைக்கு வரை எனக்கு பழக்கமாகியிருந்த மது, கஞ்சா, பீடி, சிகரெட் போன்ற சகல கெட்ட பழக்கங்களையும், "சீ சனியன்களா'' என்று தூக்கியெறிந்தேன், இன்னைக்கு வரை அதை தொடவில்லை, அதே போல எந்த நோய் நொடியும் அதற்கு பிறகு என்னைத் தொடவில்லை.


சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்யணும்ணு யோசிச்சப்பதான் நான் ஆட்டோவ நிறுத்தற இடமான அபிபுல்லா சாலையில், காலையில் ஏற்படற போக்குவரத்து நெருக்கடியை சரி செய்யலாமேன்னு தோணுச்சு, அதன்படி ரோட்ல நின்னு சரி செய்தேன், எல்லோரும் நன்றி சொல்லி சென்றார்கள். அப்புறம் நான் சவாரி இல்லாம போகும்போது, எங்கே போக்குவரத்து நெருக்கடின்னாலும் உடனே இறங்கி அதை சரி செய்துவிடுவேன்.

இதை அடிக்கடி பார்த்த போக்குவரத்து டிஎஸ்பி ஒருவர், நமக்கு ஒத்தாசையா ஒருத்தன் எப்படி உழைக்கிறான் பாருன்னு சொல்லி ஸ்டேஷனுக்கு கூப்பிட்டனுப்பி பழைய போலீஸ் யூனிபாரம், பூட்ஸ், பெல்ட் போன்றவைகளை கொடுத்துவிட்டாங்க, அதையெல்லாம் போட்டுக்கிட்டதும் ஒரு கம்பீரம் வந்திருச்சு, அப்போதிருந்து என்னோட ட்யூட்டி நேரம் முழுவதும் எப்பவும் இந்த டிரஸ்ஸோடதான் இருப்பேன்.


எனக்குன்னு நிறைய வாடிக்கையாளர் இருக்காங்க, செக்கை கையில கொடுத்து பணமாக்கி கொண்டுவந்து தர்ர அளவிற்கு நான் நம்பிக்கையான ஆளாகிட்டேன், இதுனால ஒருத்தரு மொபைல் போன் கொடுத்தாரு, ஒருத்தரு "ப்ளூ டூத்' கொடுத்தாரு, ஒருத்தரு புதுசாவே காக்கிதுணியில டிரஸ் தைச்சு கொடுத்தாரு. துப்பாக்கி வச்சுக்கிற இடத்துல போன் வச்சுக்குவேன், போலீஸ் ஸ்டார் குத்திக்கிற இடத்துல ஏபிசி என்று சும்மா குத்திக்குவேன். என்னால போலீஸ் உடைக்கு களங்கம் வராம பார்துக்குவேன்.

காலை 8 மணிக்கு ஆட்டோ ஒட்ட ஆரம்பிச்சா மாலை 6 மணிக்கு வீட்டிற்கு போயிடுவேன், வீட்டில் மனைவி பேரன்களுடன் பொழுதை போக்குவேன், ஞாயிறு முழுவதும் சர்ச்சில் இருப்பேன், என் ஏரியாவில எந்த குழந்தை பார்த்தாலும் குட் மார்னிங் தாத்தான்னு சொல்லாம போகாதுங்க, அந்த அளவிற்கு குழந்தைகளிடம் அன்பாக இருப்பேன். பொதுவா எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதும், எல்லவற்றிலும் நல்லபடியாக இருப்பதுமே வாழ்க்கையின் இனிமை என்பதை அனுபவிக்கிறேன் என்ற சந்திரனின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம்.

நன்றி: எல்.முருகராஜ்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சில சுவராசியமான விஷயங்கள்.  Empty Re: சில சுவராசியமான விஷயங்கள்.

Post by kanmani singh Wed Oct 30, 2013 11:32 am

பொதுவா எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதும், எல்லவற்றிலும் நல்லபடியாக இருப்பதுமே வாழ்க்கையின் இனிமை என்பதை அனுபவிக்கிறேன்

அன்பான சந்திரன் தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்!

கண்மணி சிங்
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

சில சுவராசியமான விஷயங்கள்.  Empty Re: சில சுவராசியமான விஷயங்கள்.

Post by sawmya Wed Oct 30, 2013 12:24 pm


 பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்...
ஊனத்தையே ஊனமாக்கும் வித்தை ஒரு சிலருக்கு தெரிந்திருக்கிறது...

சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்யணும்ணு யோசிச்சப்பதான் ...
சூப்பர் சூப்பர் சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

சில சுவராசியமான விஷயங்கள்.  Empty Re: சில சுவராசியமான விஷயங்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum