தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் செல்லினம் பதிவு 2

View previous topic View next topic Go down

மேம்படுத்தப்பட்ட  வசதிகளுடன் செல்லினம் பதிவு 2 Empty மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் செல்லினம் பதிவு 2

Post by முரளிராஜா Tue Nov 26, 2013 2:04 pm

[You must be registered and logged in to see this image.]

ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் போன்களில் தமிழ் உள்ளீடு செய்வதற்கான, பயன்பாட்டு தொகுப்பான, செல்லினம், தற்போது கூடுதல் வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு பதிப்பு 2 ஆகக் கிடைக்கிறது. ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், தமிழில் உள்ளீடு செய்வதற்கென, மலேசியா வினைச் சேர்ந்த முத்து நெடுமாறன், செல்லினம் என்ற பயன்பாட்டு தொகுப்பினை பத்து மாதங்களுக்கு முன்பு, தமிழ் மக்களுக்கு இலவசமாக வழங்கினார். இந்த தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்த்தவர்கள் கொடுத்த பின்னூட்டத்திலும், ஆய்வின் அடிப்படையிலும், இந்த தொகுப்பு மேம்படுத்தப்பட்டு, ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் செல்லினம் பதிப்பு 2 ஆக வெளிவந்துள்ளது. இதனையும் கூகுள் பிளே ஸ்டோரில் சென்று இலவசமாகத் தங்களின் ஆண்ட்ராய்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதற்கெனச் செல்லவேண்டிய இணைய தள முகவரி: [You must be registered and logged in to see this link.]

இந்த புதிய பதிப்பில் கீழ்க்காணும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் கிடைக்கின்றன.
1. சொற் பிழை தவிர்த்தல்: தமிழ்ச் சொற்களை தட்டச்சு செய்திடுகையில், நம்மையும் அறியாமல், நாம் சில பிழைகளை ஏற்படுத்துகிறோம்.

எடுத்துக்காட்டாக, அஞ்சல் கீ போர்ட் மூலம் ""இளமை'' என்ற சொல்லை அமைக்கையில், பிழையாக, ""இலமை'' என அமைக்கலாம். ஷிப்ட் கீ சரியாக அழுத்தப்படாத்தால், இந்த பிழை ஏற்படும். ஆனால், இந்த புதிய பதிப்பில், ""இலமை'' என தட்டச்சு செய்தாலும், அதில் உள்ள பிழையை, செல்லினம் உணர்ந்து கொண்டு ""இளமை'' என்றே அடித்து அமைக்கும்.

2. எண்களை உள்ளிடுதல்: மொபைல் போனில் கிடைக்கும் கீ போர்டில், எண்களை உள்ளிடுகையில், [123] என்ற விசையைத் தட்டி, அதன் பின்னர் கிடைக்கும் அடையாளம் மற்றும் எண்களுக்கான குறியீடு கீ போர்டில் இருந்து எண்களைத் தேர்ந்தெடுத்து உள்ளீடு செய்திடும் பழக்கம் தற்போது உள்ளது. புதிய செல்லினம் பதிப்பில், முதல் வரிசையில் உள்ள கீகளைச் சற்று நேரம் தொடர்ந்து அழுத்தி, எண்களை அமைக்கலாம். இதே போல, அஞ்சல் கீ போர்டினைப் பயன்படுத்துபவர்கள், ல/ள, ர/ற, ந/ன/ண, ஆகிய எழுத்துக்களை, கீகளைத் தொடர்ந்து அழுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கலாம்.

3. பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் விரிவு: சொற்களை உள்ளீடு செய்கையிலேயே, உள்ளிடப்படும் சொல், இவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற வகையில், சில சொற்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் கிடைப்பது வழக்கம். ஆங்கிலத்தில் இதனை Predictive Text என அழைக்கின்றனர். செல்லினம் புதிய பதிப்பில், இந்த பட்டியலை விரித்துத் தெளிவாகப் பார்த்து பயன்படுத்தலாம். பட்டியலின் ஓரத்தில் தரப்படும் கீழ் நோக்கிய அம்புக் குறியினை அழுத்தினால், இது விரிவடையும்.

மேலே காட்டப்பட்ட சிறப்பம்சங்களுடன், மேலும் சில கூடுதல் வசதிகளையும் கொண்டதாக, செல்லினம் பதிப்பு 2 உருவாக்கப்பட்டு கிடைக்கிறது.

தமிழில் சொல் திருத்தியுடன் ஒரு மொபைல் போன் எடிட்டர் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். எச்.டி.சி. மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், தங்கள் மொபைல் சாதனங்களிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடனும் இணைந்தே செல்லினத்தை வழங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. முதல் பதிப்பு வெளியான பத்து மாதங்களில், செல்லினம் தமிழ்ச் செயலியினை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்பது, இது போல தமிழ்ச் சொற் செயலிகள், மொபைல் போன்களில் தேவைப்படுகின்றன என்பதனை உறுதி செய்கின்றன.

மாநில மொழிகளில் தான் இனி இணையப் பயன்பாடும், இணைய வழி வர்த்தகமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கின்ற நேரத்தில், இது போன்ற சொல் செயலிகள் அதற்கான அடித்தளத்தினை அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நன்றி தினமலர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum