தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....

View previous topic View next topic Go down

ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....  Empty ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....

Post by ஸ்ரீராம் Thu Jan 16, 2014 11:04 am

ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....  1422476_670256796358136_1645563689_n

சென்ற ஜனவரி 11ம்‌ தேதி ராகுல் டிராவிட் தன் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடினார்.


அவரைப்பற்றிய பதிவுகள் பதினைந்து :

* ஜனவரி பதினொன்று 1973 இல் இந்தோரில் பிறந்த இவரின் முழுப்பெயர் ராகுல் சரத் டிராவிட். அப்பா ஜாம் உருவாக்கும் கம்பெனியில் வேலை பார்த்ததால் செல்லமாக ஜாமி என அழைக்கப்பட்டார்.

* டிராவிட் முதலில் ஆடிக்கொண்டு இருந்த விளையாட்டு ஹாக்கி. அதில் மாநில அணியில் இடம்பிடித்து இருந்தார். அதற்கு பிறகே கிரிக்கெட் மட்டையை முத்தமிட்டார்.

* ஓயாத பயிற்சிதான் ஒரு சொத்து. இளவயதில் ஒரு குறிப்பிட்ட பந்தில் அவுட் ஆனதும் அதே திசையில் ஆயிரம் பந்துகளை அடித்து ப்ராக்டிஸ் செய்தார் அவர்.

* இவர் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். முதல் எட்டு போட்டிகளில் மொத்தமாக டிராவிட் அடித்த ரன்கள் 63. எனினும் இங்கிலாந்துடன் கங்குலி அறிமுகமான டெஸ்டில் 95 ரன்கள் அடித்தார்.

*டிராவிட் ஒரு தொடர் துவங்குவதற்கு ஒரு மாதம் முன்னர் இருந்தே பயிற்சி செய்ய தொடங்கி விடுவார். வியர்வை சொட்ட சொட்ட பயிற்சி செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமானது.


* முக்கியமான பல இன்னிங்க்சில் டிராவிடின் ஆட்டம் கவனம் பெறாமலேயே போயிருக்கிறது. அன்வர் 194 அடித்த போட்டியில் டிராவிட் 107 ரன்கள் அடித்தார். 2001 லக்‌ஷ்மன் கொல்கத்தாவில் 281 அடித்த பொழுது இவர் அடித்த 180, பாகிஸ்தான் உடன் தொடரில் சேவாக் 309 அடிக்க, ராவல பிண்டியில் இவர் அடித்த 270 மறக்கப்பட்டுவிட்டது.

* ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர்கள் வரிசையில் மிக அதிக பேட்டிங் ஆவரேஜ் – தோனிக்கு அடுத்தபடியாக இவருக்குத்தான். (73 ஆட்டங்களில் இவர் விக்கெட்டின் பின்
இருந்திருக்கிறார்; அந்த ஆட்டங்களில் மொத்தம் 2300 ரன்கள் – சராசரியாக 44.23.) முழுநேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கில்கிரிஸ்ட், சங்ககாராகூட இவருக்குப் பின்தான். இது தவிர இரண்டாவது மற்றும் மூன்றாவது விக்கெட்டிற்கான ஜோடிகள் எடுத்த அதிக ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப்புகள் இவருடையவை.

*டிராவிட் பந்துவீசி விக்கெட்டுகளை கழற்றி இருக்கிறார். ஒரு நாள் போட்டிகளில் மொத்தம் நான்கு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்

* அணியே சொதப்புகிற பொழுதெல்லாம் தடுப்பு சுவர் போல நிற்பார் அடிலேய்ட் மைதானத்தில் 85-4 என இருந்த பொழுது களம் கண்டு 233 ரன்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துப்போனார். இங்கிலாந்துடன் நடந்த டெஸ்ட் தொடரில் அணியே
ஆடாத பொழுது ஒற்றை ஆளாக 3 சதங்கள் அடித்தார் அவர். 1999 உலகக் கோப்பையில் தொடரின் அதிகபட்ச ரன்கள் (461) அவராலேயே அடிக்கப்பட்டது. மற்றவர்களின் மோசமான ஆட்டத்தால் அணி அரையிறுதிக்கு கூட தகுதிபெறவில்லை.


*ஈகோ பார்க்காமல் பாராட்டுகிற குணமும் அவருக்கு உண்டு. அதேபோல இன்னொரு வீரரின் ஆட்ட நுணுக்கம் பிடித்திருந்தால் அவரிடம் கேட்டு கற்றுக்கொள்வார். மைக்கேல் வாகன் சுழல்பந்து வீச்சாளர்களை அற்புதமாக அடித்து நொறுக்கிய பொழுது அவரிடம் போய் பாடம் படித்துவிட்டு வந்தார்

*புத்தகங்கள் மீது எக்கச்சக்க காதல் உண்டு அவருக்கு. கார்டஸ் என்கிற புகழ்பெற்ற கிரிக்கெட் எழுத்தாளரின் புத்தகம் இங்கிலாந்தின் ஒரு தெருவில் கிடைக்கிறது என்கிற செய்தி கேள்விப்பட்டதும் அங்கே போனார் அவர். அத்தனை புத்தகங்களையும் அள்ளிக்கொண்டு வந்துவிட்டார்

* ஒரு தொடரில் அதிகபட்ச சராசரி பெற்ற இந்திய வீரர் டிராவிட்தான். ஜிம்பாப்வே அணியுடனான தொடரில் 432 அவரின் சராசரி. உலகில் எல்லா டெஸ்ட் விளையாடும் நாடுகளுக்கு எதிராகவும் சதம் அடித்திருக்கும் ஒரே வீரர் அவர் தான். டெஸ்டில் அதிகபட்ச கேட்சுகள் அவர் வசமே – 270. அதிகபட்ச பந்துகளை சந்தித்ததும் அவரே – 31,258. அதிக முறை போல்ட் – 55 – மூன்றும் உலக
சாதனைகள்.

* மெக்ராத், ஆஸ்திரேலியா அணிக்குள் நேரடியாக தகுதியுள்ள ஒரே அயல்நாட்டு வீரர் என புகழ்ந்துள்ளார். கவுரவம் மிகுந்த “BRADMAN ORATION” நிகழ்த்திய ஒரே அயல்நாட்டு வீரர் டிராவிட். ஸ்டீவ் வாக் சுயசரிதை எழுதிய பொழுது அதற்கு முன்னுரை எழுத கேட்டுகொண்டது டிராவிடைதான்.

*ஒய்வு பெறுகிற அன்று தங்களை மிகவும் காயப்படுத்தும் விஷயம் எது என்று கேட்ட பொழுது ,"ஆட்டத்தின் பொழுது கேட்ச்சை விடுவது தான் !" என்று சொல்கிற அளவுக்கு விளையாட்டை நேசித்தார் அவர்.

* “எப்போதுமே எல்லாவற்றையும் அணிக்கு தரும் வகையில் விளையாடுவதே எனது கிரிக்கெட் அணுகுமுறையாக இருந்துள்ளது. சில நேரங்களில் தோல்வியை சந்தித்திருந்தாலும், ஒருபோதும் முயற்சிக்காமல் இருந்ததில்லை” என ஓய்வு
பெற்றபொழுது டிராவிட் சொன்னார். எல்லாரும் படிக்க வேண்டிய பாடம் அது!


‘என் தலைமையாசிரியர், என் பெற்றோர்கள் சொன்னதைக்கேட்டு என்னை கிரிக்கெட் ஆடாமல் செய்திருந்தால், நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். ‘நீங்கள் அவனின் கிரிக்கெட்டை பார்த்துக்கொள்ளுங்கள். நாங்கள் அவன்
கல்வியை பார்த்துக்கொள்கிறோம்’ என்றார் அவர். தேர்வுகளுக்கு என்
நண்பர்களின் குறிப்புகள்தான் உதவும். அதை அவசர அவசரமாக படித்துவிட்டு, தேர்வுகளை எழுதினேன்.

தொடர்ந்து ரஞ்சி போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்தேன். டென்னிஸ் பந்தை 15 கஜங்களில் இருந்து வீசச்செய்து பயிற்சி செய்து, வேகப்பந்துகளை சிறப்பாக எதிர்கொள்ள என்னை தயார்படுத்திக்கொண்டேன். அண்டர் 19 இந்திய அணியின்
கேப்டனாக ஆனேன். சிறந்த பந்துவீச்சுகளை சந்தித்து சிறப்பாகவே ஆடினேன். ஆனாலும் இந்திய அணிக்குள் நுழைய முடியவில்லை. ஐந்து வருடங்களாக உள்ளூர் போட்டிகளில்தான் ஆடினேன். என்னுடைய கைனடிக் பைக்கில் இப்படி
எழுதிக்கொண்டேன், ‘கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள்
தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை’ (God's delays are not God's
denials.).

திரும்பிப்பார்க்கிறபோது அந்த ஐந்து வருடங்கள் அப்படி
இருந்திருக்காவிட்டால், இப்போது பெற்றிருக்கும் வெற்றிகளை என்னால் எதிர்கொண்டு இருக்க முடியாது. இதுவே என்னை வார்னே, முரளிதரன் மாதிரியான சுழல்பந்து வீச்சாளர்களை தைரியமாக எதிர்கொள்ள செய்தது. டென்னிஸ் பந்து பயிற்சிதான் அக்ரம், மெக்ராத், டொனால்ட் என எல்லாரையும் கம்பீரமாக சந்திக்க உதவியது. நான் இளைஞர்களுடன் பேசுகிறபோது இந்தக் காத்திருத்தல் பற்றிதான் அழுத்திச் சொல்வேன்.

ஒரு செடியின் கதை... ஒரு சீன மூங்கில் விதையை நிலத்தில் நட்டு ஒரு வருடம் நீர்விட்டு பராமரித்து வளர்த்தாலும் அது முளைக்காது. ஐந்து வருடங்கள் வரை அது நிச்சயம் முளைக்காது. ஒருநாள் சின்னதாக ஒரே ஒரு சின்னஞ்சிறு இலை முளைக்கும். அடுத்த ஆறே வாரத்தில் 90 அடி வளர்ந்து நிற்கும். ஒரே நாளில் 39 அங்குலம்கூட வளரும் அது. நீங்கள் செடி வளர்வதை கண்களால் பார்க்க முடியும். அந்த ஐந்து வருடங்கள் அந்தச் செடி என்ன செய்து கொண்டிருந்தது?

அது தன்னுடைய வேர்களை வளர்த்துக்கொண்டு இருந்தது. ஐந்து வருடங்களாக பெருவளர்ச்சிக்கு அது தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தது. அந்த வேர்களைக்கொண்டு அது தன்னை காப்பாற்றிக்கொண்டு மட்டும் இருக்கவில்லை. ஆறே வாரத்தில் 90 அடிகள் வளர்ந்து நிற்கிறது என்று சிலர் சொல்வார்கள். அது
ஐந்து வருடங்கள், ஆறு வாரங்களில் 90 அடிகள் வளர்ந்திருக்கிறது என்று நான் சொல்கிறேன். அந்த ஐந்து வருடங்கள் என்னுடைய நம்பிக்கை, ஆர்வம், என் திறமையின் மீதான என்னுடைய பிடிப்பு ஆகியவற்றை சோதித்தது என்றே சொல்வேன். கடவுள் தாமதப்படுத்துகிறார் என்பது கடவுள் தரவேமாட்டார் என்று அர்த்தமில்லை! "

நன்றி - பூ.கொ.சரவணன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....  Empty Re: ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....

Post by Muthumohamed Thu Jan 16, 2014 11:44 pm

இந்தியாவின் கிரிக்கெட் தடுப்புசுவர் ராகுல் டிராவிட் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....  Empty Re: ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....

Post by முரளிராஜா Fri Jan 17, 2014 7:53 am

ராகுல் டிராவிட் பற்றிய பதிவுக்கு மிக்க நன்றி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....  Empty Re: ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....

Post by செந்தில் Fri Jan 17, 2014 12:13 pm

கைதட்டல் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர். பகிர்வுக்கு நன்றி ஜி  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....  Empty Re: ராகுல் டிராவிட் பற்றி சில வார்த்தைகள்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum