தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா?

View previous topic View next topic Go down

உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா? Empty உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா?

Post by முரளிராஜா Fri Feb 07, 2014 10:51 am

[You must be registered and logged in to see this image.]

நாம் பயன்படுத்தும் பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு சரியாக உள்ளதா? அதன் திறன் எந்த அளவில் உயர்ந்து உள்ளது என்று எப்படி அறிந்து கொள்வது? ஒரு சாதனத்தின் இயக்கம் அல்லது செயல்பாடு இந்த அளவிற்காவது இருக்க வேண்டும் என்று அறுதியிட்டு சொல்வதையே ஆங்கிலத்தில் Benchmark என்று சொல்கிறோம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் திறன் எப்படி உள்ளது என்று அறிந்து, அதனை மற்ற பெர்சனல் கம்ப்யூட்டர்களின் திறனோடு ஒப்பிட்டுப் பார்த்து அறிந்துகொள்ள நமக்கு உதவும் பெஞ்சமார்க் பயன்பாடு (benchmarking utilities) புரோகிராம்கள் பல நமக்குக் கிடைக் கின்றன. அவற்றில் ஐந்து புரோகிராம்கள் குறித்து இங்கு காணலாம்.

1. எவரெஸ்ட் அல்ட்டிமேட் எடிஷன் (Everest Ultimate Edition): இந்த புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றின் பெஞ்ச்மார்க் திறன் சோதனை நடத்துவது மட்டுமின்றி, கம்ப்யூட்டர் குறித்த வேறு பல பொதுவான தகவல்களையும் தருகிறது. கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம், மதர்போர்ட், ஸ்டோரேஜ் வசதி போன்றவை குறித்தும் நமக்குத் தகவல்களைத் தருகிறது. மெமரி மற்றும் சி.பி.யு.வின் திறன்களையும் தனியே சோதனையிட்டுச் சொல்கிறது. இது தரும் சோதனை அறிக்கையும் பல வடிவில் கிடைக்கிறது. இதனால், நாம் விரும்பும் வகையில், கோணத்தில் ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடு மற்றும் திறன் குறித்து அறிந்து கொள்ள முடியும். இதன் விலை 39.95 டாலர் என்றாலும், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து இலவசமாகச் சில நாட்களுக்குப் பயன்படுத்த முடியும்.

2.சி சாப்ட்வேர் சாண்ட்ரா (SiSoftware Sandra): சி சாண்ட்ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த புரோகிராம், பரவலாக அனைவராலும் விரும்பப்படும் ஒரு பெஞ்ச்மார்க் புரோகிராம். இதனை நெட்வொர்க்குகளில் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கும், தனியே இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கும் பயன்படுத்தலாம். ஹார்ட்வேர், சாப்ட்வேர், செயல்திறன் சோதனை எனப் பலவகையான சோதனைத்தொகுதிகள் கொண்டதாக இந்த புரோகிராம் உள்ளது. மேலும் சில ஆய்வுத் தொகுதிகளை இணைக்கவும் இதில் வசதி உள்ளது. இதன் விலை 50 டாலர் என்றாலும், இலவசமாக இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். தனி நபர் பயன்பாட்டிற்கும், கல்வி நிலையங்கள் பயன்படுத்தவும் இது இலவசமாகவே கிடைக்கிறது.

3. பெர்பார்மன்ஸ் டெஸ்ட் (Performance Test): கம்ப்யூட்டர் சிஸ்டம் குறித்த தகவல்களைப் பெறவும், செயல் திறன் சோதனைக்கும் இதனைப் பயனபடுத்தலாம். சில செயல்பாடுகள் இந்த அளவிலாவது இருக்க வேண்டும் என சில தர வரையறைகளைக் காட்டி, கம்ப்யூட்டர் செயல்பாட்டினை ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியினை இது தருகிறது. சோதனை முடிவுகள் பச்சை வண்ணத்தில் ஒருபுறமும், தர வரையறைகள் இன்னொரு புறமும் அருகருகே காட்டப்படுவது இதன் சிறப்பம்சமாகும். இதன் விலை 26 டாலர். இலவச சோதனையைச் சில காலம் மேற்கொள்ள அனுமதி கிடைக்கிறது.

4. ப்ராப்ஸ் (Fraps): மற்ற பெஞ்ச்மார்க் பயன்பாட்டு புரோகிராம்களிலிருந்து இது வேறுபட்டதாகும். டைரக்ட் எக்ஸ் அப்ளிகேஷன்களின் பிரேம் ரேட் குறித்த தகவல்களை மதிப்பீடு செய்து இது காட்டுகிறது. எடுத்துக்காட்டாக, கேம்ஸ் புரோகிராம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கையில், அப்போதைய பிரேம் ரேட் என்ன என்று, திரையின் இடது மேல் புறத்தில், மஞ்சள் நிறத்தில் காட்டப்படும். கேம்ஸ் பிரேம் இயக்குவதனை மாற்றுகையில், இந்த எண்ணும் மாறும். மேலும் டைரக்ட் எக்ஸ் அப்ளிகேஷன்களின் வீடியோ மற்றும் ஸ்கிரீன் கேப்சர் வேகத்தையும் இது துல்லியமாகக் காட்டும். இதன் விலை 37 டாலர் என்றாலும், இலவசமாக சோதனை செய்திட ஒரு பதிப்பு இணையத்தில் கிடைக்கிறது.

5. ப்ரெஷ் டயக்னோஸ் (Fresh Diagnose): மற்ற பெஞ்ச்மார்க் புரோகிராம்கள் போலவே, இதுவும் செயல்திறன் மற்றும் கம்ப்யூட்டரில் இயங்கும் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டுகிறது. இதன் முக்கிய சிறப்பம்சம், இது மொத்தமாக, இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது. அடுத்ததாக, மற்ற புரோகிராம்கள் தராத, நுண்ணிய செயல்பாடுகளின் திறன் நிலையையும் இது காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, இது உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள எழுத்து வகைகளின் செயல்திறனைக் கூட தரம் பிரித்துச் சொல்கிறது. இதன் தளத்திற்குச் சென்று, அங்கு நம்மைப் பதிவு செய்த பின்னரே, இதனைப் பயன்படுத்த முடியும்.

நன்றி கணினி மலர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா? Empty Re: உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா?

Post by ஸ்ரீராம் Sun Feb 09, 2014 8:45 am

பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா? Empty Re: உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா?

Post by Muthumohamed Sun Feb 09, 2014 2:43 pm

சோதனை செய்து பார்கிறேன் தகவலுக்கு மிக்க நன்றி
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா? Empty Re: உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா?

Post by mohaideen Sun Feb 09, 2014 6:50 pm

தகவலுக்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா? Empty Re: உங்கள் கணினி செயல்பாடு சரியாக உள்ளதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum