தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

View previous topic View next topic Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by நாஞ்சில் குமார் Mon Jun 09, 2014 11:47 pm


நர்மதா நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைந்தவுடன் உட்கார்ந்து கொள்ளுமாறு சைகை காட்டப்பட, உட்கார்கிறாள்.

தேர்வாளர் 1 :

பெர்ஃப்யூம் பிரமாதமா இருக்கு. பாரிஸ்லே வாங்கியதா?

நர்மதா :

(சங்கடத்தை மறைத்தபடி வருவிக்கப்பட்ட புன்னகையுடன்) உருப்படியான கேள்விகளுக்குப் போகலாமா சார்?

தேர்வாளர் 2 :

எங்கள் கேள்வி பற்றிய உங்கள் தீர்ப்பு தேவையி ல்லைன்னு நினைக்கிறோம்.

நர்மதா : சாரி சார்.

தேர்வாளர் 2 : உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க

நர்மதா : உங்க கையிலே இருக்கிற என்னுடைய சி.வி.யிலேயே என்னைப் பற்றிய எல்லா விவரங்களும் இருக்கு சார்.

தேர்வாளர் 1 : உங்க சி.வியிலே அவ்வளவு சிறப்பாக எதுவும் இல்லையே!

நர்மதாவின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கிறது.

நர்மதா : என் ப்ராஜக்டை எங்க கல் லூரி முதல்வர் பாராட்டித் தன் கைப்பட சான்றிதழ் அளித்திருக்கிறார் சார்.

தேர்வாளர் 2 : அது ஒரு பெரிய விஷயமாக எங்களுக்குப் படவில்லை.

நர்மதா : பாட்மிண் டன் விளையாட்டில் நான் மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்றிருக்கிறேன்.

தேர்வாளர் 1 : மாநில அளவில் சாதித்தவர்கள்கூட இந்த நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறார்கள்.

நர்மதா தடுமாறுகிறாள். என்ன சொல்வதென்று அவளுக்குத் தெரியவில்லை.

தேர்வாளர் 2 : (நர்மதாவின் சி.வி.யைப் பார்த்தபடி) உங்க ஃபீச்சர்ஸ் நல்லா இருக்கு.

நர்மதா: (அதிர்ச்சியுடன்) சார், இதுதான் லிமிட். (வேகமாக வெளியேறுகிறாள்)

நேர்முகத் தேர்வில் நர்மதா நடந்து கொண்ட விதம் பற்றிய ஒரு சிறு அலசல் இதோ. இது நர்மதாவுக்கு மட்டுமல்ல, நேர்முகத் தேர்வுக்குச் செல்லும் அனைவருக்குமே - முக்கியமாகப் பெண்களுக்கு - உதவிகரமாக இருக்கும்.

பெர்ஃப்யூம் வாசனை குறித்து ஒரு தேர்வாளர் தன் கருத்தைச் சொன்னதில் தவறு எதுவுமில்லை. ஆமாம் அல்லது இல்லை என்று இந்தக் கேள்விக்கு அவள் பதில் சொல்லியிருக்கலாம். அல்லது நகைச்சு வையாக “என் ஃப்ரண்டுதான் ஜோசியம் சொன்னா சார். இந்த பெர்ஃப்யூம் போட்டுட்டுப் போனா இன்டர்வியூவிலே நிச்சயமா செலக்ட் ஆயிடுவேன்னு” என்று கூறியிருக்கலாம்.

பெர்ஃப்யூம், பாரிஸ் என்று தேர்வாளர் கேள்வியை முதன்முதலாகக் கேட்டதில் ‘நீங்கள் வெளிநாடு போயிருக்கிறீர்களா?’ என்று பேச்சை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நோக்கம் இருக்கலாம். அல்லது நர்மதாவின் டென்‌ஷனைக் குறைப்பதற்காகப் பொதுவான ஒரு கேள்வியிலிருந்து தொடங்குவோமே என்ற நல்ல நோக்கம்கூட காரணமாக இருக்கலாம். எனவே ‘தேர்வாளர் கேட்டது அவசியமற்ற - அதாவது இர்ரெலவன்ட் கேள்வி’ என்று நர்மதா தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கக் கூடாது.

ஒருவேளை தேர்வாளரின் உடல் மொழி நர்மதாவுக்குப் பிடிக்காமல் போய், கேள்வி கேட்கும் சாக்கில் தன் சபல புத்தியை அவர் வெளிப்படுத்துகிறார் என்று நர்மதா கருதினால்கூட, சாமர்த்தியமாகத்தான் நிலைமையைச் சமாளிக்க வேண்டும். அதாவது தேர்வாளர்கள் கூறுவதை நல்லவிதமாகவும் எடுத்துக் கொள்ளலாம், மறைமுக அர்த்தமும் உண்டு என்றும் நினைக்கலாம் எனத் தோன்றினால் சந்தேகத்தின் பலனைத் தேர்வாளருக்குக் கொடுத்துவிடுவது நல்லது.

இந்த நேர்முகத் தேர்வில், குறைந்தது முதல் பாதியில் தேர்வாளர்கள் வழி தவறியதாகத் தெரியவில்லை. “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க” என்ற கேள்வி அரதப் பழசானதுதான். ஆனால் இந்தக் கேள்விக்கு நீங்கள் அளிக்கும் பதிலில் உங்களைப் பற்றிய சிறப்பான இமேஜை உண்டாக்க முடியும். சுமார் இரு பக்கங்களில் அடங்கிவிடக்கூடய சி.வி.யில் உங்களுடைய எல்லா ப்ளஸ்களையும் எழுதிவிட முடியாது. தவிர, தாளில் காணப்படுபவை வெறும் வார்த்தைகள். அதை யே நீங்கள் சொல்லும்போது உச்சரிப்பு மற்றும் உடல் மொழி மூலம் உயிருட்டலாம். எனவே ‘என்னைப் பற்றிய விவரங்கள்தான் சி.வியில் இருக்கிறதே’ என்பதுபோல் நர்மதா அளித்த பதில் முட்டாள்தனமானது. ஒரு நல்ல வாய்ப்பை அவள் இழந்துவிட்டாள். அதுமட்டுமல்ல தேர்வாளர்களை ஏதோ முட்டாள்கள்போல (‘கையில் விவரங்கள் இருக்கும்போது எதற்காக அவற்றைக் கேட்டு நேரத்தை வீணாக்க வேண்டும்?’) சித்திரித்து அவர்களின் கோபத்தையும் சம்பாதித்துவிட்டாள்.

இதன் விளைவாகத்தான் தேர்வாளர்கள் நர்மதா அடுக்கும் சாதனைகளைக்கூடக் கொஞ்சம் அலட்சியமாக விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டத்தில்கூட நர்மதா சுதாரித்துக் கொண்டிருக்கலாம். அவள் மாவட்ட அளவில் சிறப்பு பெற்ற விளையாட்டில் வேறு சிலர் மாநில அளவில் சிறப்புப் பெற்றிருந்தால்தான் என்ன? “இருக்கட்டும் சார். அவங்களுக்கும், எனக்கும் சேர்த்து வேலைவாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு உங்க நிறுவனம் பெரியதுதான்” என்று புன்னகையோடு கூறலாம்.

“பீச்சர்ஸ் என்று தேர்வாளர் கூறுவது சி.வி.யில் காணப்படும் நர்மதாவின் சில தன்மைகள் அல்லது சாதனைகளாகக்கூட இருக்கலாம். எனவே நர்மதா கொஞ்சம் பொறுமை காட்டியிருக்கலாம்.

ஓர் இளம் பெண்ணிடம் தேர்வாளர் ஒருவர் இப்படியொரு கேள்வியைக் கேட்டாராம். “தூங்கி முழித்த உடனே பார்த்தால், நீங்க கர்ப்பமாகி இருக்கீங்க. என்ன செய்வீங்க?’’. இந்தக் கேள்விக்கு அந்த இளம் பெண் முகம் சிவந்து அழவில்லை. எரிச்சலில் வார்த்தைகளைக் கொட்டவில்லை. ஈவ் டீசிங் என்று புகார் கொடுக்கலாமா என்று யோசிக்கவில்லை. புன்னகையுடன் இப்படிப் பதிலளித்தாளாம். “உடனடியாக அந்த நல்ல விஷயத்தை என் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன்”.

இந்த சமயோசிதமான (அதாவது Application of mind எனப்படும்) குணநலன் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும். இந்தக் குணம் உங்களுக்கு எந்த அளவு இருக்கிறது என்பதைச் சோதிப்பதற்காகக்கூடச் சில எதிர்பாராத கேள்விகள் கேட்கப்படலாம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by ஜேக் Tue Jun 10, 2014 2:46 am

சமயோசிதமான (அதாவது Application of mind எனப்படும்) குணநலன் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்களுக்குப் பெரிதும் கைகொடுக்கும்.

நேர்முக தேர்வு மட்டும் அல்ல... அன்றாட வாழ்விற்கும் இது தேவைதான்...

கட்டுரை வெகு அருமை கைதட்டல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by செந்தில் Tue Jun 10, 2014 11:42 am

கைதட்டல் சிறப்பான பகிர்வு.நன்றி  கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by mohaideen Tue Jun 10, 2014 1:51 pm

நல்ல தகவல்கள்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 10, 2014 2:52 pm

யோசிச்சு நடந்தக்குங்க... எனவே எந்த இன்டரியூக்கும் போகக்கூடாதுன்னு முடிவெடுத்தாலும் சரியே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Jun 10, 2014 2:52 pm

யோசிச்சு நடந்தக்குங்க... எனவே எந்த இன்டரியூக்கும் போகக்கூடாதுன்னு முடிவெடுத்தாலும் சரியே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by ஜேக் Tue Jun 10, 2014 6:08 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:யோசிச்சு நடந்தக்குங்க... எனவே எந்த இன்டரியூக்கும் போகக்கூடாதுன்னு முடிவெடுத்தாலும் சரியே...

ஆமா... இனிமே சும்மா இருப்பவர்களுக்கு நம்ம கவியருவி மாதந்தோறும் உதவி தொகை தரப்போகிறார். மனுவை கவியருவிக்கு அனுப்பி வையுங்கள் (வேலை வெட்டிக்கு போகாதவர்கள் மட்டும்)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by முரளிராஜா Wed Jun 11, 2014 10:42 am

ஜேக் wrote:
கவியருவி ம. ரமேஷ் wrote:யோசிச்சு நடந்தக்குங்க... எனவே எந்த இன்டரியூக்கும் போகக்கூடாதுன்னு முடிவெடுத்தாலும் சரியே...

ஆமா... இனிமே சும்மா இருப்பவர்களுக்கு நம்ம கவியருவி மாதந்தோறும் உதவி தொகை தரப்போகிறார். மனுவை கவியருவிக்கு அனுப்பி வையுங்கள் (வேலை வெட்டிக்கு போகாதவர்கள் மட்டும்)
 ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி  ரொம்ப ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by ரானுஜா Wed Jun 11, 2014 5:18 pm

ஓஹோ இப்படி ஒரு சங்கதி இருக்கா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா? Empty Re: நேர்முகம் : இன்டர்வியூக்கு பெர்ஃப்யூம் போட்டுப் போகலாமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum