தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வேடிக்கை விடுத்து உதவிக்கரம் நீட்டுவோம்!

View previous topic View next topic Go down

வேடிக்கை விடுத்து உதவிக்கரம் நீட்டுவோம்! Empty வேடிக்கை விடுத்து உதவிக்கரம் நீட்டுவோம்!

Post by நாஞ்சில் குமார் Wed Nov 19, 2014 9:37 pm




முதல் உதவி

சாலையில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்... வழியில் சலசலப்புடன் மக்கள் கூட்டம் கூடி நின்றிருக்கிறது... விபத்து தான் நடந்திருக்கும் என வாகனத்தை நிறுத்தி விட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடக்கும் விபத்துக்குள்ளானவரை பார்க்கிறோம். பார்த்து விட்டு பக்கத்தில் இருப்பவரிடம், ‘எப்படி நடந்தது’ என்பதை ஆர்வமாகக் கேட்டுத் தெரிந்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறோம். ஒரு விபத்து நிகழ்ந்த நிலையில் ஆண்டாண்டு காலமாக நம்மில் பலர் இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம்?

வேடிக்கை பார்க்கவும் விபத்து நடந்த கதையைக் கேட்கவும் கூடிய மனிதர்கள் நினைத்திருந்தால், ஏராளமான உயிர்கள் காக்கப்பட்டிருக்கும். வேடிக்கை பார்ப்பவர்கள் காப்பாற்ற முன் வராததை, ‘அலட்சியம்’ என்று மட்டும் சொல்ல முடியாது. முதல் உதவி எப்படிச் செய்ய வேண்டும்? உதவி செய்ய முற்படும்போது சட்டப் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வருமோ? இப்படி ஏகப்பட்ட கேள்விகள்... விழிப்புணர்வின்மை... இந்நிலையை களைவதற்கென 2006ம் ஆண்டிலிருந்து, ‘முதல் உதவி’ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பயிற்சியும் அளித்து வருகிறது ‘அலர்ட்’ அறக்கட்டளை. இது குறித்து இதன் நிறுவனர் கலா பாலசுந்தரத்திடம் பேசினோம்.

‘‘உலகிலேயே இந்தியாவில்தான் அதிகபட்சமாக நிமிடத்துக்கு 17 பேர் சாலை விபத்தில் மரணமடையறாங்க. இந்தியாவிலேயே அதிகபட்சமா தமிழ்நாட்டில்தான் நாளொன்றுக்கு சராசரியாக 44 பேர் மரணமடையறாங்க. விபத்து நடந்து முடிஞ்சதுக்கப்புறம் இருக்கிற ஒரு மணி நேரத்தை நிளிலிஞிணிழி பிளிஹிஸினு சொல்றாங்க. இந்த நேரத்துக்குள் முதலுதவி அளிக்கும்போது 75 சதவிகித உயிரிழப்பைத் தடுக்க முடியும்.பழைய மாமல்லபுரம் சாலையில் என்னோட அலுவலகம் இருந்தது. அடிக்கடி ஏதாவது விபத்தைப் பார்த்துட்டே இருக்க முடியும். விபத்தில் சிக்கியவர்களைச் சுத்தி வேடிக்கை பார்ப்பாங்களே தவிர, யாரும் உதவி பண்ண மாட்டாங்க.

இதைப் பார்த்த போதுதான், இந்த நிலை ஏன்னு தோணுச்சு. அதுக்கப்புறம்தான் நான் சில இடங்களில் முதல் உதவிப் பயிற்சி எடுத்துட்டு வந்து, நண்பர்களுக்கும் கத்துக் கொடுத்தேன். இப்படி தொடங்கின முயற்சி நாளடைவுல விரிவடைஞ்சது. இதன் அவசியம் கருதி, பலருக்கும் பயிற்சி கொடுக்கணும்னு நினைச்சோம். அதன் வெளிப்பாடாகத்தான், 2006ல் ‘அலர்ட்’ அறக்கட்டளையை தொடங்கினோம். இந்த 8 ஆண்டுகள்ல 30 ஆயிரம் பேருக்கு முதல் உதவி பயிற்சி கொடுத்திருக்கோம்’’ என்கிற கலாவிடம், முதல் உதவி விழிப்புணர்வு மற்றும் பயிற்சி முறையைப் பற்றிக் கேட்டோம்.

‘‘எந்த நேரத்திலும் ஒரு மனிதருக்கு முதல் உதவி தேவைப்படலாம். சாலை விபத்து மட்டுமல்ல... மாரடைப்பு, கத்தி கிழித்து ஏற்படும் ரத்தக்கசிவுன்னு அவசரத் தேவைகளுக்கெல்லாம் முதல் உதவி பயன்படும். எல்லாத்தரப்பு மக்களும் அவசியம் எடுத்துக்க வேண்டிய பயிற்சி இது. ‘முதல் உதவி பெட்டியோடவே எந்நேரமும் சுத்திக்கிட்டிருக்க முடியுமா’னு சிலருக்கு கேள்வி வரலாம். நாங்க அளிக்கிற பயிற்சியைப் பொறுத்த வரை, முதல் உதவிக்கு எந்த வித உபகரணங்களும் தேவையில்லை. ரெண்டு கைகள் மட்டும் இருந்தால் போதும்கிற அளவு எளிமையான பயிற்சிகள்தான். உதாரணத்துக்கு... விபத்துக்குள்ளானவரை ஒருபக்கமாக ஒருக்களித்து படுக்க வைக்க வேண்டும்.

ஏன்னா, உடல் மட்டத்திலிருந்து தலை சரிவா இருக்கும்போதுதான் மூளைக்கு ரத்த ஓட்டம் பாயும். இப்படியான உடல்ரீதியான பயிற்சிகள்தான் கொடுக்கிறோம். முதல் உதவி பயிற்சியில் இரண்டு நிலைகள் இருக்கு. முதல் நிலை basic life support. ரத்த ஓட்டம், மூச்சு விடுதல், சுவாசித்தல்னு இதுல எது தடைபட்டாலும் மனித உயிருக்கு ஆபத்து. அதனால Cardiopulmonary resuscitation என்கிற நெஞ்சை அழுத்தி இதயத்துக்கு பம்ப்பிங் கொடுக்கிற அடிப்படைப் பயிற்சிகளை கத்துக் கொடுக்கிறோம். Chain of survival - விபத்துக்குள்ளானவரை எப்படி கையாளணும்கிறதுதான் இந்தப் பயிற்சி. விபத்து நடந்ததும் முதல் வேலையா 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் சொல்லிடணும்.

அடுத்த கட்டமா விபத்துக்குள்ளானவர் மயக்கமான நிலையில் இருக்கிறாரான்னு சோதிக்கணும். உதவிக்கு ஆட்களை அழைக்கணும். விபத்துக்குள்ளானவர் ஆபத்தான இடத்தில் இருந்தா, அவரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வரணும்கிறதையெல்லாம் வலியுறுத்துறோம். இரண்டாவது நிலை Common medical emergency. பொதுவான மருத்துவரீதியான அவசரங்களின் போது - உதாரணமா நாய்க்கடி, ரத்தக்கசிவு, மாரடைப்பு ஏற்படும்போது சம்பந்தப்பட்டவரை எப்படி கையாள வேண்டும்கிற பயிற்சிதான். 4 மணிநேர பயிற்சியில் அடிப்படையானவற்றை இலவசமா கத்துக் கொடுக்கிறோம்.

Golden Hour Fellow Program என்கிற 2 நாள் பயிற்சி இருக்கு. இந்தப் பயிற்சி எடுத்துக்கிட்டவங்களுக்கு அடையாள அட்டை தர்றோம். எங்கே விபத்து நடந்தாலும் அடையாள அட்டையைக் காட்டி முதல் உதவி செய்ய முடியும். 2007ல், எங்களோட அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றிக் கேள்விப்பட்ட அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எங்களைப் பாராட்டினதோட, இதை இன்னும் பலரிடம் எடுத்துட்டுப் போகச் சொன்னார். அதற்குப் பிறகு பள்ளிகள்ல 8ம் வகுப்புக்கு மேல் படிக்கிற மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு 4 மணி நேரம் இலவசப் பயிற்சி கொடுக்கிறோம்.

படிச்சவங்க, படிக்காதவங்கங்கிற பாகுபாடில்லாம பயிற்சி முகாம்கள் மூலமா நிறைய மக்களுக்கு இந்தப் பயிற்சி கொடுக்கிறோம். கார்பரேட் நிறுவனங்கள் பயிற்சி கொடுக்கும்படி எங்களைக் கூப்பிடுறாங்க. அவங்ககிட்ட கட்டணம் வசூலிச்சு பயிற்சி கொடுக்கிறோம். மாதந்தோறும் ஐ.ஐ.டி.யில பயிற்சி முகாம் நடத்திட்டு வர்றோம். ‘முதல் உதவி செய்யப்போகும்போது சட்ட ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருமோ’ங்கிற பயம் நிறைய பேருக்கு இருக்கலாம். முதல் உதவி பண்ண நிச்சயம் அனுமதி உண்டு. சாட்சியாக மாறி நீதிமன்றத்துக்கு அலையணும்னு பயப்படவே தேவையில்லை.

நீங்க விருப்பப்பட்டா சாட்சியாகலாம்... இல்லைன்னா சாட்சியாக மறுத்துடலாம். முக்கியமா சாட்சி தேவைப்படுதுங்கிற போது நீங்க எங்கயும் போகணும்னு அவசியம் இல்லை. உங்களைத் தேடி வந்து சாட்சி வாங்கிக்கிறதுக்கான வழியும் நம்ம சட்டத்துல இருக்கு. குறித்த நேரத்துல நாம செய்யுற முதல் உதவி அந்த உயிரைக் காக்க செஞ்ச பேருதவியா இருக்கும்’’ என்கிறார் கலா. தொடர்புக்கு: 9944066002

செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேவை

விபத்துகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக 1992ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இதுவே இந்தியாவில் முதல் உதவி பயிற்சியளிக்கும் முதல் அமைப்பு. மதம் மற்றும் அரசியல் சார்பற்று உயிர்காக்கும் நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, நாளடைவில் பரவலாக்கம் அடைந்து, இப்போது உலகில் 50 நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. மருத்துவருடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை இவர்கள் பிரதானமாக மேற்கொண்டு வருகிறார்கள். பொதுமக்களிடத்தில் முதலுதவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் துவதோடு, முதலுதவிப் பயிற்சிகளும் அளித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் நாளொன்றுக்கு 2 மணி நேரம் என்கிற அடிப்படையில் 8 நாட்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. கட்டணம் வசூலிக்கப்படும் இப்பயிற்சியை முடித்த பிறகு சான்றிதழ் வழங்கப்படுகிறது. சென்னை செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் தொடர்புக்கு: 044-28194630.

- தினகரன்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

வேடிக்கை விடுத்து உதவிக்கரம் நீட்டுவோம்! Empty Re: வேடிக்கை விடுத்து உதவிக்கரம் நீட்டுவோம்!

Post by செந்தில் Thu Nov 20, 2014 10:28 am

மனிதாபிமானம் மிகுந்த சேவை.
கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum