தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

View previous topic View next topic Go down

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Empty தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

Post by ஸ்ரீராம் Wed May 06, 2015 10:21 am

உன்னால் முடியும் தம்பி.

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Screen-shot-2014-12-28-at-5-01-54-pm

ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தார்.

அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு

" ஏன் சோகமாக இருக்கிறீர்கள் " என்று கேட்டார்.

அதற்கு இவர் " எனது தொழில் நஷ்டம் அடைந்து விட்டேன். மிகவும் மனது உடைந்து போய்விட்டேன் " என்றார்.

" எவ்வளவு ரூபாய் நஷ்டம் ? " என்றால் அவர்.

" 50 கோடி ரூபாய் " என்றார் இவர்.

" அப்படியா, நான் யார் தெரியுமா ? " என்று கேட்டு அந்த ஊரின் பிரபல செல்வேந்தரின் பெயரை சொன்னார்.

அசந்து போனார் இவர்...

" சரி 50 கோடி பணம் இருந்தால் நீ சரியாகி விடுவாயா ? " என்று கேட்டார் அவர்.

உடனே முகமலர்ச்சியுடன் இவர் " ஆமாம் எல்லாம் சரியாகி விடும் " என்றார்.

பின் அந்த செல்வேந்தர் ஒரு செக் புத்தகத்தை எடுத்து கையெழுத்திட்டு இவரிடம் நீட்டி " இந்தா இதில் 500 கோடிக்கு செக், நீ கேட்டதைவிட 10 மடங்கு அதிகமாக கொடுத்திருக்கிறேன். எல்லாவற்றையும் சமாளி. ஆனால் ஒருவருடம் கழித்து இந்த பணத்தை எனக்கு திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த வருடம் இதே நாளில் இங்கே நான் காத்திருப்பேன் " என்று சொல்லி விட்டு செக்கை இவர் கைகளில் தினித்து விட்டு சென்றார் அவர்.

பின் அந்த நிறுவனத்தின் தலைவர் வேகமாக அலுவலகத்திற்கு சென்றார். தன் அறைக்குள் சென்று அந்த செக்கை தனது பீரோவில் வைத்து பத்திரமாக பூட்டினார். பின் தனது உதவியாரை அழைத்து அனைத்து ஊழியர்களை நிர்வாக கூட்டத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்ய சொன்னார். ஊழியர்கள் அனைவரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த நிறுவனத்தின் தலைவர் பேச ஆரம்பித்தார். " நண்பர்களே, நமது நிறுவனத்தில் 50 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இப்போது என்னிடம் 500 கோடி ரூபாய் உள்ளது ஆனால் அந்த பணத்தை தொடமாட்டேன். இந்த நஷ்டம் எப்படி ஏற்பட்டது ? எதனால் ஏதற்காக ஏற்பட்டது ? என்று ஆராய்ந்து அதை களைந்து நமது நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டார்.

பின்னர் வேளைகள் வேகமாக நடந்தன. தவறுகள் கண்டுப் பிடிக்கபட்டு களையப்பட்டன. மிக சரியாக அனைத்து ஊழியர்களையும் ஓத்துழைக்க வைத்தார். அவருடைய பேச்சு மூச்ச செயல் சிந்தனை தூக்கம் அனைத்து அவருடைய தொழிலை பற்றியே இருந்தது.

மிக சரியா ஒரு வருடம் கழிந்தது. கணக்குகள் அலசப்பட்டன. மிக சரியா 550 கோடி ரூபாய்கள் லாபம் ஈட்டி இருந்தது இவருடைய நிறுவனம். அடுத்த நாள் விடிய காலை அந்த செல்வேந்த கொடுத்த 500 கோடிக்கான செக்கை எடுத்துக் கொண்டு அந்த பூங்காவிற்கு விரைந்தார். சென்ற வருடம் அமர்ந்த அதே சிமென்ட் பெஞ்சில் அமர்ந்தார். காலை நெரம் ஆதலால் பனி மூட்டத்துடன் காணப்பட்டது. சற்று நேரம் கழித்து தூரத்தில் அந்த செல்வேந்தரும் அவருக்கு அருகில் அவரை கைகளால் பிடித்துக் கொண்டு ஒரு பெண்மணியும் வந்தது பனி மூட்டத்தின் ஊடே தெரிந்தது. சில விநாடிகள் கழித்து பார்த்தால் அந்த பெண்மணி மட்டும் வருகிறார் அந்த செல்வேந்தரை காணவில்லை.

இவர் சென்று அந்த பெண்மணியிடம் " எங்கே அம்மா உங்கள் கூட வந்தவர் ? " என்றார்

அதற்கு அந்த பெண்மணி பதட்டத்துடன் " உங்களுக்கு அவர் ஏதாவது தொந்தரவு கொடுத்து விட்டாரா? " என்றார்

இவர் " இல்லை அம்மா, ஏன் கேட்கிறீர்கள் ?" என்றார்.

அந்த பெண்மணி " இல்லை அய்யா அவர் ஒரு பைத்தியம் அதாவது மனநிலை சரி இல்லாதவர், செக்கு தருகிறேன் என்று சொல்லி இங்கு இருப்பவர்களிடம் தனது பழைய செக்கை கிழித்து கையேழுத்திட்டு கொடுத்து விடுவார் " என்றார்.

ஒரு நிமிடம் அந்த நிறுவன தலைவருக்கு பேசமுடியவில்லை. அப்போ நம்மால் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் முடியும். அதுவே நம்மை காப்பாற்றி இருக்கிறது என்று நினைத்தார்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் எந்த ஒரு விசயமும் நம்மால் முடியும் என்று முதலில் நம் நம்பவேண்டும் அப்போதுதான் நாம் நமது வாழ்வில் முன்னேற முடியும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Empty Re: தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

Post by ஸ்ரீராம் Wed May 06, 2015 10:26 am

எறும்பின் தன்னம்பிக்கை
=======================

இன்றைய மனிதர்களில் அதிகம் பேர் ஏதாவது ஒரு கவலையுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தடையையும் பெரிதாக எண்ணி கவலைப் படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அவர்கள் மேல் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததுதான்.

நமக்கு நண்பனும் நாமே; பகைவனும் நாமே என்று சொல்வதுண்டு.. அதாவது, எவன் ஒருவன் தன் பலவீனங்களை முறியடித்து வெற்றி பெறுகிறானோ, அவன் தனக்குத்தானே நண்பனாவான். யார் ஒருவன் தன் பலவீனங்களை வெற்றி பெற முடியாமல் தவிக்கிறானோ அவன் அவனுக்கு எதிரியாவான் என்று அர்த்தம்.

கவலைப்படுபவர்கள் இந்தியாவில் மட்டுமில்லை. உலகம் முழுவதுமே இருக்கிறார்கள். சமீபத்தில் கவலை குறித்து அமெரிக்காவில் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 40 சதவீதக் கவலைகள் எந்த அடிப்படைக் காரணமும் இல்லாத தேவையற்றவை. 30 சதவீதக் கவலைகள் கடந்த காலம் பற்றியவை. 12 சதவீதக் கவலைகள் பிறர் பற்றியது. 10 சதவீதக் கவலைகள் நம் நோய் நொடிகள் பற்றியவை. அது கூட கவலைப்படும் அளவுக்கு இல்லாமலும் இருக்கலாம். மீதம் உள்ள 8 சதவீதம் மட்டுமே உண்மையான கவலைகள் எனக் கண்டறியப்பட்டது.
பெரும்பாலான சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால், ஒவ்வொரு தடையும் ஒவ்வொரு வெற்றியை மறைத்து வைத்திருக்கிறது என்பது புரியும். அது போன்றுதான் தோல்வியும். தோல்வி என்பது நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய அறிவிப்பு என்று சொல்லலாம். செல்வத்தை இழப்பது ஒன்றையும் இழப்பதாகாது. உடல் நலத்தை இழப்பது சிறிதளவு இழந்ததாகும். ஆனால் நம்பிக்கை இழப்பது எல்லாவற்றையும் இழந்ததற்குச் சமம் என்று சொல்வார்கள்.

தடைகளை வெல்வது எப்படி? இதை எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. எறும்புகளை ஆராயும் உயிரியல் நிபுணர் ஒருவர் எறும்புகளை ஆராய்ந்து கொண்டிருந்தார். ஓர் எறும்பு தன் வாயில் நீளமான உணவுப் பொருளைச் சுமந்து கொண்டு சென்றது. தரை வழியே சென்று கொண்டிருந்த அந்த எறும்பு ஒரு வெடிப்பைப் பார்த்துவிட்டு திடீரென்று நின்றுவிட்டது. மேலே செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் கழித்து, தான் சுமந்து வந்த இரையை வெடிப்பின் மேல் வைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது. பின்பு அந்த இரையைக் கவ்விக் கொண்டு சென்றது. எறும்பின் அறிவு வியப்பை அளிப்பதாக உள்ளது என எழுதியிருக்கிறார் அந்த ஆராய்ச்சியாளர்.

துன்பம் ஏற்பட்டால், அத்துன்பத்தையே பாலமாக வைத்து முன்னேற வேண்டும் என்பதை நாம் எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு மிகச் சிறிய உயிரியான எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தால் கூடப் போதும் எந்தத் தடையையும் வெல்ல முடியும். கவலையும் காணாமல் போய்விடும்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Empty Re: தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

Post by ஸ்ரீராம் Wed May 06, 2015 10:35 am

அந்த ஒரு நிமிடம்
------------------------------------
ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு கணவான் அந்தவழியாகச்
சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகவேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, "அவனது பையிலிருந்த
பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?", என்று கூறிவிட்டு புகைவண்டியில் தனது இருக்கைக்குத் திரும்பினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த கணவான் ஒரு விருந்தில் கலந்துகொள்ளச் சென்றார். அந்த விருந்தில் 6 மாதங்களுக்கு முன்னாலே இரயில்நிலையத்தில் பிச்சையெடுத்துக்கொண்டு இருந்தவனும் அமர்க்களமான கோட் மற்றும் டை சகிதமான உடையில் கனகச்சிதமான கணவானாக விருந்தில் பங்குகொள்ள வந்து இருந்தான். அவன் இந்தக் கணவானை அடையாளம் கண்டுகொண்டு இப்படிக்கூறினான்.

"அன்பரே..நீங்கள் என்னை மறந்தேகூடப் போகியிருக்கலாம். ஆனால் நான் உங்களால்தான் இப்படி நல்ல நிலைமைக்கு வந்து இருக்கிறேன். நான் நல்ல நிலைமைக்கு வருவதற்கு நீங்கதான் காரணம். அந்த கோட் சூட் வாலிபன் - கணவானிடம் பழைய ப்லாஸ் பேக்கை நினைவூட்டினான். கணவான் சொன்னார் : - "எனக்கு நினைவுவந்துவிட்டது. இப்போது என்ன செய்கிறாய். உடைகளிலும் நல்ல மாற்றம் தென்படுகிறது..என்னப்பா?".

கோட் சூட் வாலிபன் சொன்னான் - "நீங்கள்தான் என்னுடைய மாற்றத்துக்கும்
வளர்ச்சிக்கும் காரணம். என்னுடைய வாழ்நாளிலே உங்களை மறக்கமுடியாது. என்
வாழ்க்கையில் என்னை ஒரு மனிதனாக மதித்த முதல் மனிதர் நீங்கள்தான். 5
ரூபாயை எனது திருவோட்டில் இட்டபின் சிறிது நேரத்த்திற்குப் பிறகு
வந்து அந்த ரூபாய்க்குச் சமமான பென்சில்களை என்னிடமிருந்து பெற்றுச்சென்றீர்கள்".

"எனக்குள் ஒளிந்திருந்த வியாபாரி அப்போதுதான் எனக்கே தெரியவந்தான். அதுவரையில் பிச்சையெடுத்துத் திரிந்த நான் அந்த ஒரு நிமிடத்தின் தாக்குதலில் ஒரு வியாபாரியாக உருவெடுத்து உழைக்க ஆரம்பித்தேன்". "அந்த ஒரு நிமிடத்துக்கு முன்னர்வரையில் சோம்பேறியாக அழுக்காக புகைவண்டி நிலையத்தின் பிச்சைக்காரர்களின் வரிசையில் ஒருவனாக யாராலும் மதிக்கப்படாத - உருப்படாதவனாக - இருந்த நான் உங்கள் நடவடிக்கையால் திருந்தினேன். என்னுள்ளே சாக்ரடீஸின் கொள்கைகளைத் தூண்டிவிட்டவர் நீங்கள்தான். பிறகுதான் சிந்திக்க ஆரம்பித்தேன். "நான் யார்? எனது கொள்கை என்ன? எதற்காகவோ பிறந்துவிட்டேன். ஆனால் சாகும்போதாவது
எதையாவது சாதித்துவிட்டு சாகலாமே. என முடிவெடுத்தேன். பிச்சையெடுப்பதை நிறுத்தி எனது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தேன். நான் உங்களுக்கு நன்றி கூறுவதற்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன். நன்றிகள் பலகோடி அய்யா", என்றான்.

எல்லா மனிதர்களிடமும் திறமை இருக்கு அதை சரியான நேரத்தில் வெளிபடுத்த வேண்டும். வெற்றி நிச்சயம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Empty Re: தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

Post by ஸ்ரீராம் Wed May 06, 2015 10:42 am

முயன்றால் உங்களால் முடியும்!

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்தி பயணித்தால் – அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டுபோய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிடாதீர்கள். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கி கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன்தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.

பல்வேறு உலகப் புகழ்பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் என கருதி உழைத்தனர். இறுதியில் ஜெயித்தனர். தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.
வீட்டில் உள்ள நம் (இரு பால்) குழந்தைகள், இளைஞர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்று தான் நாம் அனைவரும் உளமாற விரும்புகிறோம் – ஏன்? அதிகமாகவே ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்துக் கிடக்கும் பேராற்றலை வெளியேக் கொண்டு வருவது தான் ஆசிரியர்கள் பெற்றோர்களின் முக்கிய பணியாகும். பங்காகும்.

பிள்ளைகள் தவறு செய்யும் போது கூட உடனே கடும் மொழியில் பெற்றோர்கள் வசை மாறி பொழிவதை விட, தவறுகளைச் சுட்டிக் காட்டி, நல்ல அறிவுரைகள் சொல்லி, அவர்களின் நல்ல செயல்களை நன்றாக பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். “மொட்டு பூவாக மலர்வதைப் போல இயல்பாக அந்த பாராட்டு இருத்தல் வேண்டும்”.
”அடடா! இன்று உன் கையெழுத்து, நீ வாங்கி வந்த மதிப்பெண், வரைந்த ஓவியம், உடுத்திய உடை – இப்படி எல்லாமே அருமையாக இருக்கிறதே” – என்று பாராட்டிக் கொண்டே இருங்கள். அப்போது அந்த பிஞ்சு உள்ளத்தில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இன்னும் இதை விடச் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற சிந்தனையும் சாதனை எண்ணமும் ஆழமாக வேரூன்றும். “இனிய சொல் இரும்பு கதவைக் கூட திறந்து விடும்”. அது போல நம்முடைய முதல் பாராட்டு நாளை நம் பிள்ளைகளை இந்த சமுதாயமே பாராட்டும் படி அமைக்கும். எனவே பாராட்டை வீட்டிலிருந்தே தொடங்குங்கள் அதை தொடருங்கள்.

ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ஒர் அற்புத ஆற்றல் ஓசையில்லாமல் மனதில் மறைந்திருக்கிறது. அதை உரிய முறையில் வெளிக்கொண்டு வருவது ஆசிரியர்களின் தலையாய கடமை. மாணவர்களை நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் வாழ்ந்துக் காட்டும் திறமையை முதுகில் தட்டிக் கொடுத்து மேலோங்கச் செய்வது அவர்களின் அறப்பணி மட்டுமல்ல அரும்பணியும் கூட.

உன்னதமான ஆசிரியர்கள் உள்ளத்தில் ஒளிப் பாய்ச்சுவார். பள்ளி பாடங்களைச் சொல்லிவிட்டு மட்டும் செல்பவராக இருந்து விடக் கூடாது. கற்பித்த பாடம், சொல்லிய கருத்து மாணவர்களிடம் சென்றடைந்ததா? என்பதை ஆசிரியர்கள் கவனிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால் வகுப்பறைகள் வெறும் “கண்ணுக்கு விருந்தாக செவிக்கு உணவாக மட்டுமே காட்சி தரும். இறுதித் தேர்வு எனும் இரைப்பையை அது ஆட்சி செய்யாமல் போய்விடும்”. ஆசிரிய பெருதகைகள் மாணவர்களின் அறியாமை இருளை அகற்றும் வெளிச்ச தீபங்கள். இளைஞர்களை இலட்சிய பாதையில் நடைபயில செய்யும் எழுச்சி தீபங்கள்.

“முகம் - வீட்டு முகவரியை காட்டும், செயல்கள் - வாழ்க்கைக்கு முகவரி காட்டும்”. ஒருவன் உயர்ந்தால் அது அவனுடைய பெற்றோருக்கு மட்டும் பெருமை அல்ல; அந்த அளவிற்கு உயர, கல்வி எனும் அறிவு கண்ணை திறந்து வைத்த ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இளமைப்பருவம் வாழ்வின் வசந்த காலம். எதிர்கால வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த பருவம் தான்.
உழைப்பால் வெற்றியை உருவாக்கு.
முயற்சியை அதற்கு எருவாக்கு.
வாழ்க்கை ஒரு கணிதம்.

“கணிதம் ஒரு புதிர் – வாழ்க்கையும் ஒரு புதிர்”. சிலருக்கு விடை கிடைத்து விடுகிறது. சிலருக்கு விடை கிடைக்காமலேயே போகிறது. அதற்காக ஒரு போதும் சோர்ந்து விடாதீர்கள். கீழ்கண்ட குறியீட்டை பயன்படுத்திப் பாருங்கள்.

நல்லனவற்றைக் கூட்டிக் கொள் --------> +
தீயவற்றைக் கழித்துக் கொள் ----------> -
அறிவைப் பெருக்கிக் கொள் -----------> x
நேரத்தை வகுத்துக் கொள் ------------> /
வெற்றி, தோல்வியை சமமாக கொள் --> =


வெற்றியை எவ்வாறு சாதனையாக்குவது? தோல்வியை எப்படி தோற்கடிப்பது என்பதை நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்தால் ஆயிரக்கணக்கான நுட்பம் நிறைந்த வழிகள் புதையலாக புதைந்திருக்கின்றன. நல்ல புத்தகங்களை நேசித்து வாசிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, அதை யோசித்து தேர்ந்தெடுப்பதற்கு ஆகும் நேரத்தை நீட்டிக் கொள்ளுங்கள். “எட்டு மணி நேரத்தில் ஒரு மரத்தை வெட்ட வேண்டும் என எனக்கு கட்டளையிடப்பட்டால், அதில், ஆறு மணி நேரத்தை கோடாரியை கூராக்குவதிலேயே செலவிடுவேன்” என்றார் சரித்திர நாயகன் ஆபிரகாம் லிங்கன்.

கண்கள் தூக்கத்திற்கு சொந்தமானவை..
கனவுகள் நம் வாழ்க்கைக்கு சொர்க்கமானவை...
ஒரு பவுண்ட் தேனை சேகரிக்க, தேனீ இருபது லட்சம் மலர்களைத் தேடிச்செல்கிறது”. அது போல காலத்தால் அழிக்க முடியாத கனவு சுவடுகளைப் பதிக்க நினைக்கின்ற எனதருமை இளைஞர்களே! நம் நாட்டில் சுமார் இருபது கோடி இளைஞர்கள் இருக்கின்றீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஓராயிரம் கனவு தொழிற்சாலைகள். இந்த கனவுகளுக்கெல்லாம் காரணம் டாக்டர் அப்துல் கலாம் அவர்களே! உங்கள் மீது கடலளவு நம்பிக்கை வைத்திருக்கிறார். இந்த கலாமின் நம்பிக்கைக்கு ஒரு சலாம் சொல்லுங்கள்.

வாழ்க்கையை நேசிப்பவர்கள், நேரத்தை நிச்சயமாக நேசிப்பார்கள். ஏனெனில் வாழ்க்கை நேரத்தால் ஆனது. நேரத்தின் மதிப்பு தெரியுமா? அப்படியானால் வாழ்க்கையின் மதிப்பும் தெரியும். இதோ! நேரத்தின் மதிப்பு என்னவென்று தெரிய ஒன்பது வழிகள்...

• ஒரு மில்லி செகண்டின் மதிப்பு என்னவென்று
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவரைக் கேளுங்கள்.
• ஒரு வினாடியின் மதிப்பு என்னவென்று
விபத்தில் உயிர் தப்பியவரைக் கேளுங்கள்.
• ஒரு நிமிடத்தின் மதிப்பு என்னவென்று
தூக்கிலிடப்படும் கைதியிடம் கேளுங்கள்.
• ஒரு மணி நேரத்தின் மதிப்பு என்னவென்று
உயிர் காக்க போராடும் மருத்துவரிடம் கேளுங்கள்.
• ஒரு நாளின் மதிப்பு என்னவென்று - அன்று வேலை
கிடைக்காமல் போன தின கூலி தொழிலாளரைக் கேளுங்கள்.
• ஒரு வாரத்தின் மதிப்பை அறிய ஒரு வார
பத்திரிக்கையின் ஆசிரியரைக் கேளுங்கள்.
• ஒரு மாதத்தின் மதிப்பு என்னவென்று
குறை பிரசவமான ஒரு தாயைக் கேளுங்கள்.
• ஒரு வருடத்தின் மதிப்பு என்னவென்று
தேர்வில் தோல்வியடைந்த மாணவனைக் கேளுங்கள்.
• ஒரு வாழ்வின் மதிப்பு என்னவென்று
உலக சாதனையாளரிடம் கேளுங்கள்.


தனது அறியாமை என்னவென்று ஒரு மனிதன் அறிந்துக் கொள்வதிலும், புரிந்துக் கொள்வதிலும் தானே அவனது அறிவு பளிச்சிடுகிறது. விடா முயற்சி + கடின உழைப்பு + நுண்ணறிவு + தன்னம்பிக்கை = ஐ. எ. எஸ். , ஐ. பி. எஸ். எனும் வெற்றிக் கனியை ஒருவருக்கு கொடுக்கும். சாதிப்பதற்கு உங்களுக்கு தூண்டுகோலாக, ஊன்றுகோலாக இருக்கும் இந்த பழமொழி, பழுத்த மொழி.
என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?

இப்போது முடியாதெனில் வேறு எப்போது முடியும்?

சாதனையின் ஊற்றுக்கண் - இவ்வாக்கியத்தில் அடங்கியுள்ளது. இதை படிக்கும் போது உங்களுக்குள் ஒரு அபார ஆற்றல் கொண்ட சக்தி பிறந்திருக்குமே! “இது சிந்தனை துளி மட்டுமல்ல. உங்கள் வாழ்க்கையை செதுக்கும் உளியும் கூட”.

துயரங்களைத் தாங்கிக் கொண்டுதான் உயரங்களை எட்டி பிடிக்க முடியும். எல்லையற்ற வானமே எனது எல்லை என்று வாழ்க்கைக் கூட்டைக் கட்டுங்கள். உயர் சிந்தனைகளை சிந்தைக்குள் செலுத்தினால், வாழ்க்கை வளப்படும். உங்கள் வசப்படும்.
தீபந்தத்தைத் தலைகீழாக கவிழ்த்தாலும், மேல் நோக்கி தான் சுடர் விட்டு பிரகாசிக்கும். அதுபோல மேலே மேலே முன்னேறி சென்றால் தான் வாழ்க்கையும் பிரகாசிக்கும்.

]  படுத்து கிடப்பவனுக்கு பகல் கூட இரவு தான். எழுந்து நடப்பவனுக்கு திரும்பும் திசையெங்கும் கிழக்கு தான்” – என்று எண்ணி எண்ணி ஏறுங்கள் மேலே… சிகரம் பிறகு சின்னதாகி விடும் உங்களுக்கு...
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Empty Re: தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

Post by முரளிராஜா Mon Aug 24, 2015 3:07 pm

கதை  அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Empty Re: தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

Post by ஸ்ரீராம் Tue Aug 25, 2015 10:29 am

நல்லது பிடிங்க நன்றியை
இந்த கதையை நினைவு படுத்தி விட்டீர்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Empty Re: தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

Post by செந்தில் Tue Aug 25, 2015 11:26 am


அருமையான கதைக்கு நன்றி ஜி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4 Empty Re: தன்னம்பிக்கை கதைகள் - பகுதி: 4

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum