தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Mon Jun 29, 2015 9:31 pm

First topic message reminder :

 "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"


வழக்கமான மாலை ஓய்வு நேரம்...


விவசாயவேலைக்கு சென்றவர்கள், அலுவலகம் விட்டு வந்தவர்கள், பள்ளிசாலை சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள், வயதானோர் அனைவரும் கதைகேட்கும் மரத்தடியில் ஒன்றுகூடி ஜக்குவின் வருகைக்காக காத்திருந்தனர்.


தொங்கிப்போன முகத்தோடு மிக சோகமாக தளர்ந்த நடையில் அங்கு வந்து சேர்ந்தான் ஜக்கு.


அவனைப் பார்த்த அனைவரும் "என்னடா இந்த ஜக்கிற்கு வந்த சோதனை?" என கேள்விக்குறியோடு அவனை பார்த்தனர்.


ஜம்பு ஆறுதலாக பேசினான். "என்ன ஜக்கு? ஏனிந்த வருத்தம்?"


கூட்டத்திலிருந்த பெரியவர் முரளி, "என்ன ஜக்கு... எங்களுக்கெல்லாம் கதை சொல்லி சிரிக்க வைக்கிற  நீ... உனக்கே சோகமா?" என்றார்.


ஜக்கு பேசத் தொடங்கினான்...


"அனைவருக்கும் வணக்கம். அன்பான விசாரிப்புகளுக்கு நன்றி. இன்றைக்கு நான் சொல்லப்போகிற கதைக்கு ஏற்றார்போல என் முகத்தை சற்று தொங்கலாக... வாடலாக வைத்துக் கொண்டேன். வேறொன்றுமில்லை" என்றான்.


"அப்போ இன்றைக்கு சோககதை தானா?!" என்றான் பொடியன் ஒருவன்.


"தலைப்பு பார்த்தாக்கா விஞ்ஞானக் கதை போல தெரிந்ததே" என்றார் ஒருவர்.


"சஸ்பென்ஸ் தாங்கலை தம்பி ஜக்கு... சீக்கிரம் ரீலு விடுப்பா" என்றார் முரளி தாத்தா.


ஜக்கு சொல்ல ஆரம்பித்தான்...


தொடரும்...


ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down


"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Fri Jul 03, 2015 2:27 pm

அதிர்ச்சி - 1


இரத்தினபுரி நுழைவு வாயிலில் சந்தோஷமாக மன்னர் நுழைந்தார். அரண்மனை படியில் தலைவிரிகோலமாக மகாராணி கிட்டத்தட்ட பத்ரகாளிபோல மாறியிருந்தாள். அக்காட்சியைக் கண்ட உடனே... அனைவருக்கும் சப்தநாடியும் ஒடுங்கி போயிருந்தது. மன்னருக்கோ... சொல்லவே வேண்டாம்... வேர்த்து வியர்த்து நடுநடுங்கி மெதுவாக அருகில் சென்று (அருகில் என்றால்... சுமார் 10 அடி தூரம் மட்டுமே)...


"மகாராணி ... தங்களுக்கு என்னவாயிற்று" என அன்போடு மிக பதமாக விசாரித்தார். அவ்ளோதான்... ராணியின் வாயிலிருந்து துப்பாக்கி தோட்டாபோல வார்த்தைகள் சீறிப் பாய்ந்தன.


"வாய்யா புருசோத்தமா... உமக்கு கொஞ்சமாவது மண்டயில மசாலா இருக்குதா... என்னமோ நீதான் பெரிய வீரன் பெருசா வாயடிச்சியே... இப்ப என்ன ஆச்சு தெரியுமா?"


ஈனஸ்வரத்தில், "என்னாச்சும்மா?"


"என்ன ஆச்சா...?... யோவ்... தூதுவனே... கொடுய்யா அதை மன்னரிடம்"


அதை வாங்கி வாசித்து கொண்டிருக்கையிலேயே, "ஏய்யா... நீ தான் வீராதி வீரன், சூராதி சூரன்னு வசனமெல்லாம் பேசினியே... இப்ப என்னாச்சு பாத்தியா... நாடு இருக்கிற நிலைமையிலே... யுத்தம் வந்தா தாங்குமா? நம்மகிட்ட வேங்கை நாட்டு மன்னனை எதிர்க்கற அளவுக்கு படைபலம், பணபலம் உண்டா? திடீர்னு ஒண்ணு கெடந்து ஒண்ணாச்சுன்னா... பச்சக்குழந்தைய வச்சிக்கிட்டு நான் காட்டுக்கு ஓடியா பிழைக்க முடியும்?" என கூச்சலிட்டாள் மகாராணி.


"தப்புத்தான்.... தப்புத்தான்... மன்னிச்சுக்கா... "


எங்கிட்ட மன்னிப்பு கேட்டு என்னய்யா பண்ண... அவருகிட்ட இல்ல கேட்டு நாட்டையும் வீட்டையும் காப்பத்தனும்"


"காப்பாத்தறேன்... காப்பாத்தறேன்" என கூறி உடனடி நடவடிக்கையில் இறங்கினார் மன்னர்.

பின்னனி இசையமைப்பு நடக்கிறது... வரும்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Fri Jul 03, 2015 2:54 pm

அதிர்ச்சி - 2


விஞ்ஞானி முகேஷ் வீட்டிற்குள் நுழைந்ததும்தான் தாமதம். உள்ளே ஒரே கூச்சலும் கூக்குரலும்தான்.


"இந்த சென்னைக்கு போன மனுஷன் அங்கேயாவா கெடப்பாரு... மனைவி என்ன ஆனா... சாப்பிட்டாளா... உண்டா .... இல்லையா னு கேக்க ஒரு நாதியில் இந்த வீட்ல... நானே மாமனார் மாமியாருக்கு நாத்தானருக்கு கொழுந்தனுக்கு ஒத்தையில இருந்து வடிச்சி கொட்டறனே... நான் வாழ வந்தேனா... இல்ல வடிச்சி கொட்ட வந்தேனா... பொண்டாட்டியா இருக்கலானு வந்தா... கொத்தடிமையா இருக்கேனே... ஒரு நல்லது கெட்டதுக்கு வெளில போக முடியுதா... பாவி மனுசன கட்டிக்கிட்டு என்ன சுகத்த கண்டேன்... யோவ் முகேசு... வாய்யா... வா... அரசாங்கத்துல விருது கொடுத்தா போதுமா... கட்டிக்கிட்டவ கொடுக்கிறேன் விருது... வா... வா..." என சாமியாடினாள் மனைவி. 


வந்த சுவடு தெரியாமல் சத்தமில்லாமல் லக்கேஜை வைத்து விட்டு கோயில் பக்கம் ஓட்டமெடுத்தார் விஞ்ஞானி முகேஷ்.


அதிர்ச்சி - 3


 ஹைடெக் வீடு அவருடையது. பங்களா முழுவதும் மின்னனு கணிப்பொறி சாதனங்கள் மற்றும் ரோபோக்கள் தான். அனைத்தும் தானியங்கி மயம்.


பங்களாவிற்குள் நுழைந்து ஹாலுக்கு வந்தார்.

தானியங்கி கணிணி தானாக இயங்கி தன்னில் இருந்த செய்தியை விஷீவலாக பார்க்கவும், பேசவும் தொடங்கியது.

"ஹலோ மிஸ்டர் செந்தில்..."

"எஸ்"

"உங்களுக்கு ஒரு பேட் நியுஸ்"

"என்ன"

"உங்கள் மனைவி வீட்டை விட்டு சென்று விட்டாள்."

அதிர்ச்சியுடன், "எங்கே? ஏன்?"

"அவரது தாய்வீட்டிற்கு போய்விட்டார்"

"ஏன்?"

"உங்களோடு வாழப்பிடிக்கலையாம்"

"காரணம்"

"இரவும் பகலும் வேலை பிசினஸ் என ஊர்ஊராக நாடுநாடாக சுற்றி கொண்டு அவர்களை சரியாக கவனிப்பதில்லையாம். அப்படியே தங்கும் ஓரிரு நாட்களில் லாப் டாப்பிலும், தூங்கும் நேரத்தில் மிகப் பெரிய குறட்டை யும் விடுகிறீர்களாம்"

"அடக்கடவுளே"

"அதோடு உங்களை அரை மணி நேரம் திட்டுவதற்கு நான் புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறேன். இப்போது திட்டவா... அப்புறமாக திட்டவா"

"வேண்டாம் என்றால்?"

"சமையலறை கரவிகளில் ஒன்றால் உங்களை நாலு மொத்து மொத்தச் சொல்லி புரோக்கிராம் செய்யப்பட்டிருக்கிறேன். இப்போது சொல்லுங்கள்... திட்டவா... மொத்தவா..."

"உன்னுடைய சார்ஜ் இன்னும் எவ்வள நெரம் இருக்கு?"

"உங்களை மொத்துகிற அளவிற்கு இருக்கிறது"

"ரிமோட் எங்கே?"

"இப்படியெல்லாம் நீங்கள் செய்வீர்கள் என அவர்கள் நினைத்து... "

"நினைத்து..."

"ரிமோட்டை எடுத்தக் கொண்டு போய் விட்டார்கள். போகும்போது ஒரு கால் மணி நேரம்..."

"கால் மணி நேரம்"

"கால் மணி நேரம் வெண்சாமரத்தால் விளாசு விளாசென விளாசு சொன்னார்... இந்தா வாங்கிக் கொள்..."

"வெகுதூரம் கேட்க வேண்டிய அவரின் கதறல் ஒலி ஹைடெக் வீட்டால் ஹாலுக்குள்ளேயே முடங்கிப்போனது... பாவமில்ல..."






ரீலு  அறுந்து போயிடுச்சி... பிலிம் சரியில்ல ..ஒட்ட வச்சிட்டு வர்றேன்...


ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Fri Jul 03, 2015 8:22 pm

அதிர்ச்சி - 4


தன் கணவனுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்த மந்தாரை தன் கணவன் சுடலையை கண்டதும் ஆவலோடு எழுந்து ஓடி வந்தாள்.


வந்தவள் கேட்டாள். "புலிப்பால் கொண்டு வந்தீங்களா?"

தலையை தொங்கப் போட்டபடியே, "இல்ல மந்தாரை... கெடைக்கல"

"என்னது... கெடைக்கலியா...? ஹீம்... இந்த லட்சணத்தில இந்த காட்டுவாசிகளுக்கு தலைவன் நீங்க... ஒரு புலிப்பால கொண்டு வர துப்பில்ல... நல்ல தலைவர்" 

"காடெல்லாம் தேடினேன் மந்தாரை... என்ன செய்ய கெடைக்கலியே"

"சரி... வெறுங்கையோட எதுக்கு வந்தீங்க..."

"உன்ன விட்டு பிரிஞ்சி மூணு நாளாச்சு மந்தாரை. ஹி... ஹி... ஹி... மந்தாரை... மந்தாரை... வந்து... ஹி...ஹி..."

"ஆமா... இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல... போங்க தூர..." என்றவள் சற்று முறைத்துப் பார்த்து விட்டு... "போறீங்களா இல்லியா...?" என குரலை சற்று உயர்த்தவே, இதற்கு மேல் இங்கிருந்தால் நிலைமை மோசமாகி விடும்  என்பதை உணர்ந்து மெதுவாக சுடலை நகர்ந்து தன் தன்மானத்தை காத்துக் கொண்டான்.

தொடரும்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Fri Jul 03, 2015 8:41 pm

"அப்புறம் என்னாச்சி ஜக்கு" வினவினார் முரளி தாத்தா.

"கதை முடிஞ்சி போச்சு தாத்தா" என்றான் ஜம்பு.

"என்னப்பா அதுக்குள்ள பொசுக்குன்னு முடிச்சிட்டியே" என தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் பெரியவர்.

"சரி போய்த் தொலையட்டும். இதனால் தாங்கள் சொல்லவரும் கருத்து என்னவோ?"  கேட்டவன் ஜம்பு.

கூட்டத்தினரை ஒருமுறை பார்த்து விட்டு ஜக்கு தொடர்ந்தான்.

"நான்கு காலகட்டங்களில், நான்கு சம்பவங்களை சொன்னேனில்ல..."

கூட்டத்தினர் "ஆமா"
"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 2dOe6FWLSiOikmjC5nia+சிங்கம்


"கதையின் நீதி இதாங்க: 

காட்டுக்கே அரசனானாலும்... மனைவிகிட்ட அசிங்கப்பட்டுத்தான் ஆகணுமாம். இதுதான் நான்கு சம்பவங்களின் கருத்து" என முத்தாய்ப்பாக முடித்தான் ஜக்கு.

"ஜக்கு... இது உன் சொந்த அனுபவத்தை வச்சித்தானே ரீலு உட்ட" என்றான் ஜம்பு.

"அட போப்பா... இது எல்லார் வாழ்விலும் நடக்கிற வீட்டுக்குவீடு சமாச்சாரம்"

"சரி ஜக்கு... இதுல நியுட்டன் விதி எங்கப்ப இருக்கு?" என்றான் ஜம்பு.

"இப்பத்தாண்டா நீ பாய்ண்ட்ட புடிச்ச" என்றார் தாத்தா.

"விஞ்ஞானி நியுட்டன் இருக்காரே"

"ஆமா..."

"அவரு அறிவியல்ல, வேதியியல்ல, இயற்பியல்ல, உயிரியல்ல எல்லா விதிகளையும் கண்டு பிடிச்சாரே"

"ஆமா..."

"இந்த மனைவிகள சமாளிக்க ஒரு விதிய கண்டு பிடிச்சாரா? அதனாலதான் இந்த தலைப்பு. எப்பிடி?" என ஜக்கு சொல்ல...

கூட்டத்தினர் அனைவரும் கீழே எதையோ தேடினர்... அதன் ரகசியத்தை கண்டு கொண்ட ஜக்கு... தான் தப்பித்துக் கொள்ள ஒரு முடிவெடுத்தார்.

"டேய் ஜம்பு... என் மனைவி வராடா... " என்றதும்... ஒரு நொடியில் திசைக்கொரு புறம் சிதறி தெறித்து ஓடியது கதை கேட்ட கூட்டம். பயந்து ஓடு

லொள்ளு நகைப்பு நகைப்பு நகைப்பு நக்கல்

முற்றும்

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Fri Jul 03, 2015 8:45 pm

கதைக்கான கேள்வி:

ஜக்குவின் மனைவி கையில் இருந்த சமையலறை கருவி எது?

அ) புரிக்கட்டை (சப்பாத்தி உருட்டும் கட்டை)
ஆ) மத்து
இ) கரண்டி
ஈ) வெண்சாமரம்

பதில் கண்டு பிடித்தவர்கள் உடனே சொல்லவும் நக்கல் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by முரளிராஜா Sat Jul 04, 2015 10:07 am

பூரி கட்டை புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Sat Jul 04, 2015 4:44 pm

கதைக்கேற்ற கருத்துரைகள் வரவேற்கப்படுகின்றன...

கதைக்கேற்ற விமர்சனங்களும் (எதுவாயிருந்தாலும்) மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளப்படும். laugh

தகவல்தள உறவுகள் கருத்து ஏதும் கூறாவிடின்... மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி  என கருதி... எற்றுக்கொள்கிறேன் குறுந்தொடர், நெடுந்தொடராகி... ரொம்ப ஜாலி தினமும் கதையெனும் பெயரில் தினமும் வந்து அனைவரையும் கழுத்தறுப்போம் பயமா இருக்கு என ஜக்கு, ஜம்பு  சார்பாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நகைப்பு நக்கல்

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஜேக் Sat Jul 04, 2015 4:46 pm

முரளிராஜா wrote:பூரி கட்டை புன்முறுவல்

உங்களுக்கு தெரியாத புதிரா? பதிலா?

(தாங்கள் தினமும் சந்தித்து வரும் ஆயதம்தானே) லொள்ளு பயந்து ஓடு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by ஸ்ரீராம் Sat Jul 04, 2015 5:09 pm

"அவரு அறிவியல்ல, வேதியியல்ல, இயற்பியல்ல, உயிரியல்ல எல்லா விதிகளையும் கண்டு பிடிச்சாரே"

"ஆமா..."

"இந்த மனைவிகள சமாளிக்க ஒரு விதிய கண்டு பிடிச்சாரா? அதனாலதான் இந்த தலைப்பு. எப்பிடி?" என ஜக்கு சொல்ல...

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்

வாவ் இவ்வளவு பெரிய தத்துவத்தை இப்படி எளிதாக சொல்லிவிட்டீர்களே ஜேக்.

எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன் எற்றுக்கொள்கிறேன்

உண்மையிலேயே நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி குறுந்தொடர் சூப்பர் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

"நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!" - Page 2 Empty Re: "நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி!"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum