தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடைசி தோட்டா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கடைசி தோட்டா - Page 2 Empty கடைசி தோட்டா

Post by ஜேக் Tue Jul 07, 2015 8:33 am

First topic message reminder :

அனைவருக்கும் வணக்கம்.

கதையை படித்து மகிழ்ந்த அன்பர்களுக்கு பின்னூட்டமிட்ட உறவுகளுக்கு, பின்னூட்டமிடாவிட்டாலும் படித்து ரசித்த வாசக பெருமக்களுக்கு எனது நன்றிகள். என்னையும் ஒரு கதாசிரியராக ஏற்றுக் கொண்டமைக்கு நன்றி.

எனது முந்தைய இரண்டு கதைகளை படித்த வாசகர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி. 

2வது கதையை எழுதி சோர்ந்து போயிருந்த நேரம்...

திடீரென 778 ஆம் எண் கொண்ட கற்பனை குதிரை விழித்துக் கொண்டது. இந்தமுறை என்மேல்தான் தாங்கள் பிரயாணம் செய்ய வேண்டும் என வருந்தி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டமையால் வேறுவழியின்றி எழுதலாமென நினைத்தேன். வந்து விட்டேன்.

கதையின் தலைப்பு: "கடைசி தோட்டா"

(இக்கதையில் வரும் பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல. பொழுதுபோக்கிற்காக நகைச்சுவைக்காக மட்டுமே)
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down


கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by ஸ்ரீராம் Mon Jul 13, 2015 1:42 pm

அதுதான் நட்பின் இலக்கணம். இதெல்லாம் தங்களுக்கெங்கே தெரியப் போகிறது....

அப்படி சொல்லுங்க ஜேக். நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by ஜேக் Mon Jul 13, 2015 1:43 pm

முரளிராஜா wrote:ஆமாம் இவர் கோபெருஞ்சோழன் அவர் பிசிராந்தையார்

ஆம் இவர்களிருவரும் எங்கள் இனம்தானே...

அவர்களிருவரும் புலவர்கள். நாங்களோ கதாசிரியர்கள்

எப்பிடி? நகைப்பு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by செந்தில் Mon Jul 13, 2015 7:03 pm

ஆம் இவர்களிருவரும் எங்கள் இனம்தானே...

அவர்களிருவரும் புலவர்கள். நாங்களோ கதாசிரியர்கள்

எப்பிடி?
நக்கல் நக்கல் நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by ஜேக் Sat Jul 25, 2015 4:14 am

தோட்டா - 5


நைஜீரியாவின் அடர்ந்த வனப்பகுதி...


"பொக்கோ ஹராம்" முஸ்லீம் தீவிரவாத முகாம். நைஜீரியாவில் இருக்கும் மக்களை முஸ்லீம்மாக மாறு... இல்லையேல் சாவு என்ற கொள்கையோடு நாசகாரச் செயல்களை துணிகரமாக செய்யும் தீவிரவாத கும்பல். தேவாலயங்களை விட்டு வெளியே வருபவர்களை பெண்கள் என்றும் பாராமல், குழந்தைகள் என்றும் பாராமல் சிறியோர் முதல் முதியோர் வரை உயிரோடு தீ வைத்து கொளுத்தி எரித்து தங்கள் மத வெறியை வெளிப்படுத்தும் இயக்கம்தான் பொக்கோ ஹராம்.

நைஜீரியாவின் அடர்ந்த காட்டில் சிலுசிலுவென சாரல் அடித்துக் கொண்டிருக்கும் மாலை மயங்கும் நேரம்...

தீவிரவாத கூடாரத்தில் அனைவரும் கூடியிருக்க... அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

"நமக்கு கிடைத்த தகவல்படி... இந்தியாவில் கடத்தப்பட்ட ஏவுகணையை வாங்க சீன அரசு இரகசியமாக செயல்படுவதாக தெரிகிறது. அவர்கள் கைக்கு அது போகாததற்கு முன்பு நாம் அதை வாங்கி விட வேண்டும் தலைவரே" என்றான் ஒருவன்.

"கடத்திய கும்பல் நமக்கு தர முன்வருவார்களா?" என்றான் இன்னொருவன்.

"ஏன் தர மாட்டார்கள்? கடத்தி வைத்துள்ளவர்கள் ஒன்றும் தேசபக்தியாளர்களல்ல... அவர்களுக்கு தேவை பணம் மட்டுமே ஒரே நோக்கம். அதை அதிக விலைக்கு வாங்க யார் முன் வருகிறார்களோ அவர்களுக்கு அதை விற்றுவிடுவார்கள்.  கடத்திய கும்பல் பணஆசையுள்ளவர்கள். பணத்திற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். வேண்டியதை கொடுத்தால் தந்துவிடப் போகிறார்கள்" என்றான் முதலாமவன்.

"அந்த ஏவுகணை அவ்வளவு மதிப்புள்ளதா?" என வினவினான் தலைவன்.

"ஆம் தலைவரே. அதை கொண்டு செல்வதோ, ஏவுவதோ மிக எளிது. அதன் விளைவோ படுபயங்கரமானது. தோளிருக்க சுளை விழுங்கின்னு சொல்வார்களே... அதுபோல. அதாவது பில்டிங்கிற்கு எதுவும் ஆகாது. உயிர்களை மட்டும் காவு வாங்கும். அதுதானே நமது நோக்கம்" என்றான் மற்றொருவன்.

"இன்னும் அதன் சிறப்பம்சம் ஏதாவது தெரியுமா?" - என்றான் தலைவன்.

"தெரியும் தலைவரே. மொத்தத்தில் நமது நாச வேலைகளுக்கு அது பொருத்தமாக இருக்கும்" என்றான் முதலாமவன்.

அதை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ள... 

"சரி... அதற்கான நடவடிக்கையில் தாமதமில்லாமல் செயல்படுங்கள்" என பொறுப்பாளர்களிடம் உத்தரவிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

ஒரு குழு இந்தியாவை நோக்கி புறப்படத் தயாரானது.

***

அதே சமயம் ... உயர்ந்தவன், தாழ்ந்தவன் என வித்தியாசம் பார்த்து, தன் இனத்தை தானே அழிக்க நினைத்து அழித்துக் கொண்டிருக்கும் ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐ என்கிற நாசகார தீவிரவாத குழுவும் தங்களது இந்தியாவில் இருக்கும் ஏஜெண்ட்கள் மூலம் அதை வாங்க ஒரு குழுவை இரகசியமாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது.

இதுபோல உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு தீவிரவாத கும்பல்களும் தங்களது நாசவேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள போட்டிபோட்டிக் கொண்டு திருட்டுத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய தங்களது குழுவினரை அனுப்ப ஆரம்பிக்க...

வான்வெளி, கடல் வழி, தரைவழி என இந்தியாவிற்குள் நுழைய கிடைக்கும் அனைத்து வழிகளிலும் உள்ளே நுழைய தீவிரவாதக்குழுக்கள் ஆரம்பமாக...

இனி... என்ன ஆகுமோ... ஏதாகுமோ... என ஒன்றுமறியாமல் எப்போதும்போல அமைதிப்புங்காவாக இந்தியா காட்சியளித்துக் கொண்டிருந்ததுதான் அதன் இயற்கை குணம்.


தோட்டா சீறும்... 

#jack_stories
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by செந்தில் Sat Jul 25, 2015 10:53 am

சூப்பர் சூப்பர் சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by முரளிராஜா Mon Jul 27, 2015 10:49 am

வாவ் கதை தொடரட்டும்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by ஜேக் Wed Jul 29, 2015 8:12 pm

தோட்டா - 6

மத்திய புலனாய்வுத்துறை அலுவலகம்.

சல்யுட் அடித்து நின்ற சந்திரமௌலியைப் பார்த்து புன்னகைத்த உளவுத்துறை உயர் அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சர் பக்கமாய் திரும்பி, "சார்... இவர்தான் மிஸ்டர்.சந்திரமௌலி" என அறிமுகப்படுத்தினார்.

ம.உ.து.அமைச்சர் பேசத் தொடங்கினார். "தம்பி... மௌலி... உன்னப்பத்தி எல்லாரும் ஒருமாதிரி சொல்றாங்க. பட்... எனக்கு உம்மேல நல்ல நம்பிக்கையிருக்கு. நீங்கதான் இதை கண்டுபிடிச்சி இந்தியாவோட பெயரை காப்பத்தனும்... செய்வீங்களா?"

"நிச்சயமாக... சார்"

"அப்புறம் என்னய்யா? அதப்பத்தின டீடெயல தம்பிகிட்ட கொடுங்க... எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.... அவ்ளோ சீக்கிரம் முடிச்சா சரி. இதுசம்பந்தமா... உனக்கு என்ன உதவி வேணுமோ எங்கிட்ட கேளு... என்ன  சரியா..." என்று உளவுதுறை உயர் அதிகாரியை மற்றும் சந்திரமௌலியைப் பார்த்து கூறினார்.

அனைவரும் "ஓ.கே.சார்" என அவர் கிளம்ப ஆரம்பித்தார். அனைவரும் அவரவர் அலுவலக அறைக்கு சென்றனர்.

"மௌலி" என அழைத்தார் உளவுதுறை உயர் அதிகாரி.

"சார்"

"என் அறைக்கு வா"

"ஒ.கே.சார்"

அறைக்குள் சென்று இருக்கையில் இருவரும் அமர்ந்தனர். சிறிது நேர அமைதிக்குப்பின்னர்...

"மௌலி... இந்த வேலை கொஞ்சம் அதிகமாவே ரிஸ்க்கானது"

"நம்வேலையே அப்படித்தானே சார்"

"அதனால உனக்கு சில ஸ்பெஷல் பர்மிஷன் கொடுக்கப்பட்டிருக்கு. அதுல ஒண்ணு... நமது இந்திய உளவுதுறையில் "டபுள் எக்ஸ் டிரிபிள் செவன்" பொறுப்பு உனக்கு தரப்படுகிறது. சந்தோசந்தானே"

"வேலையை முடிச்சிட்டு அதை வாங்கிக்கிறேனே"

"ஏற்கெனவே நீ முடிச்ச வேலைக்குதான் அது"

"ஓஹோ"

"சரி... எந்த விபரமும் நம் கையிலே இல்லாம... எப்படி ஆரம்பிக்கப்போறே"

"பொறுப்ப எங்கிட்ட கொடுத்திட்டீங்கில்ல"

"ஆமா"

"அப்படின்னா... அவங்களே என்ன தேடி வருவாங்வாங்க"

"சரி ... அது உன் பிரச்சினை. ஓ.கே. பெஸ்ட் ஆஃப் லக்"

இருவரும் விடைபெற்றுக் கொண்டனர்.

ஆனால்... பிரச்சினைதான் தீரவில்லை...

***


விஞ்ஞானி சதீஷின் வீடு....

முன்புற மெயின் கேட் அருகே மௌலியின் கார் வந்து நின்றது. 

வாசிலில் நின்றிருந்த காவலர் கதவை திறக்குமுன் விசாரித்தார். பின்பு இண்டர்காம் எடுத்து தகவல் சொல்லி அனுமதி பெற்று கதவை திறந்து காருக்கு வழி விட்டான்.

போர்டிகோவில் கார்நிற்க...

சதிஷ் கேள்வியோடு வரவேற்றார். "என்ன விஷயம்? இங்கேயே வந்து விட்டீர்கள்?"

"விசாரணைக்குத்தான்"

"அப்படியா... உள்ளே வாங்க"

நான் விசாரிக்க வேண்டியது உங்கள இல்ல"

"பிறகு... உங்க வீட்டுல உள்ள உதவியாளர்கள், வேலைக்காரர்கள்..."

"அவங்க எல்லாம் எனக்கு நம்பிக்கையானவங்க..."

"இருக்கட்டும்.... ஆனா... என் விசாரணைக்குரியவங்களாச்செ... ஒத்துழைப்புக் கொடுத்தால் நன்றாக இருக்கும்"

"ஒ.கே."

"தேங்க்ஸ் சார்... அவங்களப்பத்தின  ஃபுல் டீடெயில கொடுத்தால்..."

"தர்றேன்... மொதல்ல உள்ள வாங்க... ஏதாவது சாப்பிட்டுட்டே... பேசுவோம்"

உள்ளே செல்ல... எத்தனிக்கையில்...

இருகண்கள் இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்ததை மௌலி கவனிக்கத்தவறவில்லை. ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தார்.


 தோட்டா சீறும்... 

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by முரளிராஜா Sat Aug 01, 2015 1:36 pm

அருமை ஜேக்  தொடருங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by செந்தில் Sat Aug 01, 2015 8:10 pm

அருமை ஜேக் தொடருங்கள்....
கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by முரளிராஜா Wed Aug 12, 2015 3:06 pm

ஐயோ நம்ம ஜேக் என்ன ஆனார்ன்னு தெரியலையே கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கடைசி தோட்டா - Page 2 Empty Re: கடைசி தோட்டா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum