தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

View previous topic View next topic Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:09 pm

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Sup

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் முடிய)

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்படச் செயல்பட்டு வெற்றி பெறக்கூடிய ஆற்றல்கொண்ட மேஷ ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியாதிபதி செவ்வாய்க்கு நட்புகிரகமான பொன்னவன் என போற்றக்கூடிய குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக உயர்வான நிலை இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். இதுமட்டுமின்றி 08-01-2016 முதல் கேது பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும் என்றாலும் இந்த ஆண்டுமுழுவதிலும் சனி பகவான் 8-ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச் சனி நடைபெறுவது சற்று சாதகமற்ற அமைப்பாகும். ஆண்டின் தொடக்கத்தில் நற்பலன்களை வாரிவழங்கும் குரு பகவான் வரும் 02-08-2016 முதல் ருண ரோக ஸ்தானமான 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது அனுகூலமற்ற அமைப்பாகும். இதனால் அலைச்சல், டென்ஷன், தொழில், உத்தியோகரீதியாக நெருக்கடிகள் போன்றவை ஏற்படும்.  எனவே 2016-ஆம் ஆண்டின் முற்பாதியில் சாதகமான பலன்களை அடைந்தாலும் பிற்பாதியில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பண வரவிலும் நெருக்கடிகள் நிலவும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் கவனம் தேவை.



உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி சிறுசிறு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமாகும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். உற்றார்- உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பயணங்க ளாலும் அலைச்சல், டென்ஷன், உடல்சோர்வு உண்டாகும்.



குடும்பம், பொருளாதார நிலை

பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் வெகுசிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நிலவும். சுப காரியங்கள் கைகூடும். புத்திரர்களால் சில கவலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. உற்றார்- உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே வாழ்வில் நற்பலனை அடையமுடியும்.



உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் தடைப்பட்ட ஊதிய உயர்வு, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறும். சற்றே அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். உயரதிகாரிகளிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப் பளுவை சற்றுக் குறைத்துக்கொள்ளலாம். ஆகஸ்ட் மாதம் முதல் பணியில் அதிக கவனமுடன் நடந்துகொண்டால் வீண் பழிச் சொல்லை தவிர்க்கலாம்.



தொழில், வியாபாரம்

இந்த ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு நல்ல லாபத்தினை ஏற்படுத்தும். எடுக்கும் புதிய முயற்சிகளிலும் வெற்றிகளைப் பெறமுடியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் லாபங்கள் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவதே நல்லது. நிறைய போட்டி பொறாமைகளாலும் தொழிலாளர்களின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளாலும் லாபங்கள் குறைந்து மந்த நிலை உண்டாகும். கடன் அதிகரிக்கும்.



கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் தொடக்கத்தில் நல்ல மேன்மைகள் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் பிறரை நம்பி பணவிஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதாலும் வீண் விரயங்கள் உண்டாகும். கொடுத்த கடனை வசூலிக்கமுடியாது.



அரசியல்

மக்களின் ஆதரவுகளைப் பெற அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளைச் சந்தித்தாலும் இறுதியில் வெற்றிபெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் கவனமுடன் செயல்பட்டால் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். மேடைப் பேச்சுகளில் கவனமுடன் நடப்பதும், உடனிருப்பவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பதும் நல்லது. கட்சிக்காக நிறைய வீண் செலவுகளும் செய்ய வேண்டியிருக்கும்.



கலைஞர்கள்

நல்ல வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். பயணங்களாலும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதார நிலையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆகஸ்ட் மாதம் முதல் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் தடையும் பொருளாதாரரீதியாக நெருக்கடிகளையும் சந்திக்கநேரிடும். ஆரோக்கிய பாதிப்புகளால் படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைகளும் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.



விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகவும் சிறப்பாக இருக்கும். போட்ட முதலீட்டிற்கு மேல் லாபத்தினைப் பெறமுடியும். நவீன முறைகளைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெருக்குவீர்கள். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்களும் கைகூடும். சொந்த பூமி, மனை போன்றவற்றையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும்.



பெண்கள்

ஆண்டின் முற்பாதியில் திருமண சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடன்கள் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. ஆகஸ்ட் மாதம் முதல் பண விஷயங்களில் கவனமுடன் இருப்பது நல்லது.



மாணவ- மாணவியர்

மாணவர்களுக்கு கல்வியில் சற்று ஈடுபாடு குறைந்தாலும், முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிபெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பயணங்களின்போது கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதங்களுக்கு பின் தான் கிடைக்கும்.





மாதப்பலன்






ஜனவரி உங்கள் ராசியாதிபதி செவ்வாய் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு அதிசாரமாக 6-ல் சஞ்சாரம் செய்வதாலும் குடும்பத்திலுள்ளவர்களிடம் சற்று விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற பிரச்சினைகளையும் அலைச்சல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என்றாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளைச் சந்தித்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது முன்னேறிவிடுவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயங்களிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களின் உயர்வுகள் சற்று தாமதப்படும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நல்லது.



சந்திராஷ்டமம்: 05-01-2016 இரவு 12.56 மணி முதல் 08-01-2016 காலை 09.46 மணி வரை



பிப்ரவரி

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 9-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு யாவும் உயரும். அஷ்டமச் சனி நடைபெறுவதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் தாராள தனவரவுகள் உண்டாவதால் எதையும் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் லாபங்கள் பெருகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-02-2016 காலை 09.40 மணி முதல் 04-02-2016 இரவு 07.17 மணி வரை.



மார்ச்

ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நற்பலனை தரும். பொருளாதாரரீதியாக முன்னேற்றங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, சுப காரியங்கள் கைகூடக் கூடிய அமைப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாகக்கூடிய பாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 29-02-2016 மாலை 05.37 மணி முதல் 03-03-2016 காலை 04.19 மணி வரை மற்றும் 27-03-2016 இரவு 12.22 மணி முதல் 30-03-2016 பகல் 11.48 மணி வரை.



ஏப்ரல்

அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, செவ்வாயும் 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பண விஷயத்தில் யாருக்கும் முன்ஜாமீன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 24-04-2016 காலை 06.24 மணி முதல் 26-04-2016 மாலை 05.53 மணி வரை.



மே



ஜென்ம ராசியில் சூரியனும் 8-ல் சனி செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் பயணங்களில் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். எதிலும் கடினமான முயற்சிகள் மேற்கொண்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற டென்ஷன்களை ஏற்படுத்துவார்கள். திருமணம்போன்ற சுபகாரியங் களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் நிலவும். எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. துர்க்கை வழிபாடு, விநாயகர் வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 21-05-2016 மதியம் 12.30 மணி முதல் 23-05-2016 இரவு 11.36 மணி வரை.



ஜூன்



குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். புத்திர வழியில் பூரிப்பு, குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு, வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் போன்ற யாவும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பூர்வீக சொத்து வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 17-06-2016 இரவு 07.18 மணி முதல் 20-06-2016 மாலை 06.04 மணி வரை.



ஜூலை

ஜென்ம ராசிக்கு 3-ல்  சூரியனும், 5-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 15-07-2016 அதிகாலை 02.56 மணி முதல் 17-07-2016 மதியம் 01.44 மணி வரை.



ஆகஸ்ட்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பு என்றாலும் 11-ல் கேது சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மேன்மைகள் ஏற்படும். பயணங்களில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த நேரிடும். பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமணம் போன்ற மங்களகரமான சுப காரியங்களும் கைகூடும்.  உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் அதிகரித்து வேலைப் பளு கூடும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 11-08-2016 மதியம் 11.01 மணி முதல் 13-08-2016 இரவு 10.18 மணி வரை.



செப்டம்பர்

லாப ஸ்தானமான 11-ல் கேதுவும், மாதபிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது நல்ல அமைப்பு என்றாலும் 8-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.  ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல் உண்டாகும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 07-09-2016 மாலை 06.52 மணி முதல் 10-09-2016 காலை 06.51 மணி வரை.



அக்டோபர்

சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். பண வரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எந்தவொரு புதிய முயற்சிகளிலும் சிந்தித்துச் செயல்பட்டால் சாதகப் பலனை பெறமுடியும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-10-2016 அதிகாலை 01.57 மணி முதல் 07-10-2016 மதியம் 02.24 மணி வரை



நவம்பர்

அஷ்டமச் சனி நடைபெறுவதும் 7-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். நெருங்கியவர்களிடையே கருத்துவேறுபாடுகள் அதிகரிக்கும். எடுக்கும் காரியங்களில் அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். பண விஷயங்களில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும். மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், வியாபாரம் சிறப்பாக நடைபெறும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-11-2016 காலை 08.15 மணி முதல் 03-11-2016 இரவு 08.45 மணி வரை மற்றும் 28-11-2016 மதியம் 02.19 மணி முதல் 01-12-2016 அதிகாலை 02.36 மணி வரை.



டிசம்பர்

அட்டம ஸ்தானத்தில் சூரியன், சனி சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றாலும் ராசியாதிபதி செவ்வாய் பலமாக சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும்.  பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். மருத்துவச் செலவுகள் ஏற்படும். முருகப் பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-12-2016 இரவு 08.52 மணி முதல் 28-12-2016 காலை 09.00 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

 

எண் : 1, 2, 3, 9.நிறம் : ஆழ்சிவப்பு.

கிழமை : செவ்வாய்.

கல் : பவளம்.

திசை : தெற்கு.

தெய்வம் : முருகன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:10 pm

ரிஷபம்
(கிருத்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

ஆடம்பர வாழ்க்கையில் ஆர்வமும் சமூக சேவைகளில் நாட்டமும் கொண்ட ரிஷப ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கம் ஏற்ற இறக்கமாக இருக்கும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. களத்திர ஸ்தானமான 7-ல் சனி சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமுடியாமல் போகும். 08-1-2016-ல் ஏற்படும் ராகு- கேது மாற்றத்தின் மூலம் ராகு 4-லும், கேது 10-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சுமாரான அமைப்பே ஆகும். வரும் 02-08-2016 முதல் குரு பகவான் பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார ரீதியாக உயர்வுகள், கடன்கள் படிப்படியாக குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய அமைப்பு உண்டாகும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். உத்தியோகரீதியாக எதிர்பாராத உயர்வுகளை அடைவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்

ஆண்டின் முற்பாதிவரை உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமாகும். ஆகஸ்ட் மாதம் முதல் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறைந்து உங்களின் பலம் அதிகரிக்கும். எதிர்பாராத பயணங்களால் பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயின்றி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் முற்பாதிவரை எந்தவொரு காரியத்திலும் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த உறவினர்கள் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் சுபிட்சமான நிலை இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு வீடுமனை வாங்கும் யோகமும் உண்டாகும். எதிர்பாராத மகிழ்ச்சிதரும் சுபச்செய்திகள் வந்துசேரும்.

உத்தியோகம்

ஆண்டின் முற்பாதியில் உத்தியோகத்தில் வேலைப் பளு அதிகரித்தாலும் ஆகஸ்ட் மாதம் முதல் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் உங்களுக்கு மேலும் ஊக்கத்தை ஏற்படுத்தும். எடுக்கும் பணிகளை சிறப்பாகச் செய்துமுடித்து அனைவரின் அபிமானியாக மாறுவீர்கள். உத்தியோகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

தொழில், வியாபாரம்

ஆண்டின் முற்பாதிவரை எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் நிலவினாலும் ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்திலும் லாபங்களைப் பெறமுடியும். தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் மேலும் முன்னேற்றமான நிலை அமையும். கூட்டாக தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது நல்லது. அரசு வழியிலும் ஆதரவு கிடைக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

ஆண்டின் முற்பாதியில் லாபங்கள் தடைப்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் காண்ட்ராக்ட், கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் சிறப்பான லாபம் அமையும். போட்ட முதலீடுகளுக்கு மேலாக லாபத்தைப் பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருப்பதால் பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் நட்பும் நற்பலனை உண்டாக்கும்.

அரசியல்

ஆண்டின் முற்பாதியில் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் எடுக்கும் காரியங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிர்பாராத கௌரவப் பதவிகள் தேடிவரும். கட்சிப் பணிகளுக்காக வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். மக்களின் ஆதரவைப் பெற புதுப்புது முயற்சிகளை கையாள்வீர்கள்

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கத்தில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் தாமதநிலை ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் தொழில்ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து உங்களுக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கும். வரவேண்டிய சம்பள பாக்கிகள் தடையின்றி வந்துசேரும். நடிப்புத் துறையில் உள்ளவர்கள் மட்டுமின்றி இசை, நடனம் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் ஓரளவுக்குச் சிறப்பாக இருக்கும் என்றாலும் புழு பூச்சிகளின் தொல்லைகளால் பயிரைக் காப்பாற்ற அதிக செலவுகளை செய்யவேண்டியிருக்கும். ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கப்பெற்று அனைத்தையும் சரி செய்யமுடியும். புதிய பூமி, மனை வாங்கும் வாய்ப்பும் ஏற்படும். வேலையாட்களின் உதவியும் கிடைக்கும்.

பெண்கள்

ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் சிறுசிறு நிம்மதிக் குறைவுகள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் பூரிப்பினைப் பெறுவீர்கள். பணவரவுகள் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பதால் சேமிக்கமுடியும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் நல்ல ஈடுபாட்டுடன் செயல்பட்டு அதிக மதிப்பினைப் பெறுவீர்கள். உடன்பயிலும் மாணவர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிகளை தட்டிச்செல்ல முடியும். அரசு வழியில் எதிர்பாராத உயர்வுகள் கிடைக்கும். நினைத்த கல்வியினை தேர்ந்தெடுத்து படிக்கமுடியும்.

மாதப்பலன்

ஜனவரிஉங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் மாத முற்பாதியில் சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொண்டால் மருத்துவச் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும். நெருங்கியவர்கள் ஓரளவுக்கு சாதகமாக அமைவார்கள். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் ஓரளவுக்கு குறைந்து லாபங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதி நிலவும். எடுக்கும் காரியங்களிலும் சிறப்பான வெற்றிகளைப் பெறமுடியும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வதால் நற்பலனை அடைய முடியும்.
சந்திராஷ்டமம்: 08-01-2016 காலை 09.46 மணி முதல் 10-01-2016 மதியம் 03.32 மணி வரை

பிப்ரவரி
ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடிய யோகம் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதாரரீதியாக உயர்வு உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-02-2016 இரவு 07.17 மணி முதல் 07-02-2016 அதிகாலை 01.12 மணி வரை.

மார்ச்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 4-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதும் ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். பணவரவுகள் தேவைக்கேற்ப அமையும். அசையா சொத்துகளாலும் வண்டி வாகனங்களாலும் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது மூலம் மருத்துவச் செலவுகள் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் மிகவும் கவனம் தேவை. சனிக்கு பரிகாரம் செய்வது மிகவும் உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-03-2016 காலை 04.19 மணி முதல் 05-03-2016 மதியம் 11.25 மணி வரை. மற்றும் 30-03-2016 பகல் 11.48 மணி முதல் 01-04-2016 இரவு 08.22 மணி வரை.

ஏப்ரல்

ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் தொழில், வியாபாரரீதியாக மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்பாராத வகையில் வெற்றிகளைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்புகளையும் சமாளிக்கக் கூடிய வலிமையும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகளில் எந்த பிரச்சினையும் இருக்காதென்றாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பாராட்டுகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 26-04-2016 மாலை 05.53 மணி முதல் 29-04-2016 அதிகாலை 03.16 மணிவரை.

மே

சமசப்தம ஸ்தானமான 7-ல் சனி செவ்வாயும், விரய ஸ்தானமான 12-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். இம்மாதம் நீங்கள் எதிலும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவுவதால் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடு, மனசஞ்சலங்கள், உடல் சோர்வு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் வீண் பழிகளைச் சுமக்கநேரிடும். முருகப்பெருமானை வழிபாடு செய்வது கெடுதிகளைக் குறைக்கும்.

சந்திராஷ்டமம்: 23-05-2016 இரவு 11.36 மணி முதல் 26-05-2016 காலை 08.52 மணி வரை.

ஜூன்

சூரியன் ஜென்ம ராசியிலும், 7-ல் சனி செவ்வாயும் சஞ்சாரம்செய்வது சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவதும், நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வதும் நற்பலனைத் தரும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் தான் வெற்றிகிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைக்கேற்ற உயர்வு தாமதப்படும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 20-06-2016 மாலை 06.04 மணி முதல் 22-06-2016 மதியம் 02.42 மணி வரை.

ஜூலை

சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய், சனி சஞ்சரித்தாலும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பொருளாதார நிலை குடும்ப தேவைக்கேற்ப அமையும். புத்திர வழியில் சிறு வீண்செலவுகள், மனசஞ்சலங்கள் தோன்றிமறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் லாபங்கள் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடிக்க முடியும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-07-2016 மதியம் 01.44 மணி முதல் 19-07-2016 இரவு 09.53 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 4-ல் புதன் சஞ்சரிப்பதும் இம்மாதம் முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதாலும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறுவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 13-08-2016 இரவு 10.18 மணி முதல் 16-08-2016 காலை 06.38 மணி வரை.

செப்டம்பர்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், ராகு இருந்தாலும் 5-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும் விலகி முன்னேற்றத்தை அடையமுடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தையும் அபிவிருத்தியையும் பெற முடியும். சிலருக்கு எதிர்பாராத பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் வேலைப் பளு குறையும். துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 10-09-2016 காலை 06.51 மணி முதல் 12-09-2016 மாலை 04.06 மணி வரை.

அக்டோபர்

பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் அற்புதமான அமைப்பாகும். உத்தியோகரீதியாக உயர்வுகளைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்களிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றிமறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சரளமான நிலையிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொண்டால் எதிலும் உற்சாகமாக ஈடுபட முடியும். அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடுசெய்வது நற்பலனை உண்டாக்கும்.

சந்திராஷ்டமம்: 07-10-2016 மதியம் 02.24 மணி முதல் 09-10-2016 இரவு 12.53 மணி வரை.

நவம்பர்

பஞ்சம ஸ்தானமான 5-ல் குருவும், 6-ல் சூரியனும் சஞ்சரிப்பதால் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எதிர்பாராத லாபங்கள் தேடிவரும். வாழ்வில் திடீர் உயர்வுகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகளைப் பெறுவீர்கள். உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொண்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். கடன்கள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் தடைகளைத் தாண்டி வெற்றிகளைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-11-2016 இரவு 08.45 மணி முதல் 06-11-2016 காலை 08.00 மணி வரை.

டிசம்பர்

சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், சனி சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். என்றாலும் 5-ல் குரு சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நற்பலனைத் தரும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய முடியும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். சிவனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-12-2016 அதிகாலை 02.36 மணி முதல் 03-12- 2016 மதியம் 01.45 மணி வரை மற்றும் 28-12-2016 காலை 09.00 மணி முதல் 30-12-2016 இரவு 07.37 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 8.

நிறம்: வெண்மை, நீலம்.

கிழமை: வெள்ளி, சனி.

கல்: வைரம்.

திசை: தென்கிழக்கு.

தெய்வம்: விஷ்ணு, லட்சுமி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:12 pm

மிதுனம்
(மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)
மற்றவர்களுக்கு உதவி செய்யும் பண்பும், சமூகப் பணிகளில் ஆர்வமும் கொண்ட மிதுன ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படியிருக்கும் என பார்க்கும்போது, உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி பகவான் ருண, ரோக ஸ்தானமான 6-ம் வீட்டில் பலமாக சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையும் ஓரளவுக்கு மிக சிறப்பாகவே இருக்கும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். ராகு 3-ஆம் வீட்டிலும், கேது 9-ஆம் வீட்டிலும் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் மேன்மைகளைப் பெறுவீர்கள். பொன்னவன் என போற்றக்கூடிய குரு பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகள், உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். 02-08-2016 முதல் குரு ஜென்ம ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பு என்று சொல்லமுடியாது. இதனால் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு பாதிப்படையும். பண விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது, குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் நற்பலன்களை அடையமுடியும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் உடல் ஆரோக்கியமானது அற்புதமாக இருக்கும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் மிகவும் சுறுசுறுப்பாக செய்துமுடிக்க முடியும். எதிர்பாராத வகையில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் நன்மையான பலன்களே அமையும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் உங்களால் சமாளித்துவிட முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு அசையா சொத்து வகையில் சிறுசிறு வீண் செலவுகள் ஏற்படலாம். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடந்துகொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். புத்திரர்களால் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். வீண் செலவுகளைக் குறைப்பது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் திருப்திகரமாக செயல்படலாம். உங்களின் திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களைப் பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகளால் கௌரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்பார்க்கும் ஊதிய உயர்வானது தாமதப்பட்டாலும் மனநிம்மதி குறையாது. எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு அலைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கூட்டாளிகள் சாதகமாக செயல்படுவதால் பல வகையிலும் லாபங்களைப் பெறமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களை சற்று சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. வேலையாட்களின் ஒத்துழைப்பானது சிறப்பாக இருக்கும். அபிவிருத்தியும் பெருகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான பலன்களே உண்டாகும். லாபங்கள் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கலிலும் எந்த பிரச்சினையும் இருக்காது என்றாலும் பிறரை நம்பி பெரிய தொகைகளை கொடுப்பதைத் தவிர்க்கவும். தேவையற்ற வம்பு வழக்குகளால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.

அரசியல்

அரசியல்வாதிகளுக்கு செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் உயரக்கூடும். உடனிருப்பவர்கள் மிகவும் சாதகமாக செயல்படுவார்கள். எதிரணியினரால் வீண் பிரச்சினைகளும் மன சஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. கட்சியின் வளர்ச்சிக்காக நிறைய செலவுகள் செய்ய நேரிடும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். வரவேண்டிய பணவரவுகள் சற்று இழுபறி நிலையில் இருந்தாலும் வரவேண்டிய நேரத்தில் வந்துசேரும். இசை, நாடகம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் மேன்மை ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும் சந்தையில் விளைபொருளுக்கேற்ற விலையினைப்பெற சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். சனி 6-ல் சஞ்சரிப்பதால் பட்டபாட்டிற்கான பலனை தடையின்றிப் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பாராத சில மானிய உதவிகள் கிடைக்கப்பெறும். அசையா சொத்து விஷயங்களில் தேவையற்ற வம்பு வழக்குகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும்.

பெண்கள்

எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றியினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். கணவன்- மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். பிள்ளைகளால் வீண்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு உயர்வுகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிட்டும். கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலை இருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் வெற்றிமேல் வெற்றியினைப் பெற முடியும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்வீர்கள். பழகும் நண்பர்களிடம் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.

மாதப்பலன்

ஜனவரி

உங்கள் ஜென்ம ராசிக்கு 6ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதும் வரும் 8-ஆம் தேதி முதல் 3-ல் ராகு சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பாகும். 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடன் பழகுபவர்களிடம் கவனமுடனிருப்பது நல்லது. பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உறவினர்களிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். பணம் கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைக்கவும். சிவபருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 10-01-2016 மதியம் 03.32 மணி முதல் 12-01-2016 மாலை 07.17 மணி வரை

பிப்ரவரி

ருணரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பு என்றாலும், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. தொழில், உத்தியோகரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவர்களாலும் லாபங்கள் அமையும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் அமையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. மாணவர்களும் நற்பலனை அடைவார்கள். தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். அசையா சொத்துக்களால் வீண்செலவுகள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-02-2016 அதிகாலை 01.12 மணி முதல் 09-02-2016 காலை 04.11 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 10-ல் புதன் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பு அமையும். எதிர்பார்த்துக் காத்திருந்த சுபசெய்தி ஒன்று கிடைக்கப்பெற்று மனநிறைவு தரும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத உயர்வுகளைப் பெறுவார்கள். லாபங்கள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது நற்பலனைத் தரும்.

சந்திராஷ்டமம்: 05-03-2016 மதியம் 11.25 மணி முதல் 07-03-2016 மதியம் 02.15 மணி வரை.

ஏப்ரல்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், 6-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரரீதியாக ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றி கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். பொருளாதார நிலை மேம்படுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு புது வீடு குடிபுகும் யோகம், சிலருக்கு வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 01-04.-2016 இரவு 08.22 மணி முதல் 04-04-2016 அதிகாலை 01.14 மணி வரை மற்றும் 29-04-2016 அதிகாலை 03.16 மணி முதல் 01-05-2016 காலை 09.41 மணி வரை.

மே

ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 11-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளைப் பெறுவீர்கள். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் இல்லை. நெருங்கியவர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கல் ஓரளவுக்கு சரளமான நிலையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பதவி உயர்வுகளைப் பெறமுடியும். விநாயகரை வழிபடுவது நற்பலனைத் தரும்.

சந்திராஷ்டமம்: 26-05-2016 காலை 08.52 மணி முதல் 28-05-2016 மாலை 04.00 மணி வரை.

ஜூன்

சூரியன் 12-ல் சஞ்சரித்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எந்தவிதமான எதிர்ப்புகளையும் சமாளிக்கக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். பணவரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகளும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் பலப்படும். பயணங்களால் சாதகப்பலனை அடைவீர்கள். சுய முயற்சிகளில் வெற்றியுண்டாகும். சிவபெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 22-06-2016 மதியம் 02.42 மணி முதல் 24-06-2016 இரவு 09.24 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசியில் புதன் சுக்கிரன், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில், உத்தியோகரீதியாக இருந்த பிரச்சினைகளனைத்தும் படிப்படியாகக் குறையும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குரு சாதகமற்று இருப்பதால் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் மட்டும் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த கெடுபிடிகள் விலகி பதவி உயர்வுகள் கிடைக்கும். பயணங்களால் சாதகமான பலன்கள் அமையும். கடன்கள் சற்று குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 19-07-2016 இரவு 09.53 மணி முதல் 22-07-2016 அதிகாலை 03.41 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 6-ல் செவ்வாய், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வது ஓரளவுக்கு சாதகமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சியை உண்டாக்கும். இம்மாதம் ஏற்படவுள்ள குருப்பெயர்ச்சியின் மூலம் குரு 4-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் சற்றே ஏற்றமான பலன்களைப் பெறமுடியும். கடந்த கால பிரச்சினைகளனைத்தும் விலகி குடும்பத்திலும் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தேவையற்ற பிரச்சினைகளில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-08-2016 காலை 06.38 மணி முதல் 18-08-2016 பகல்11.51 மணி வரை.

செப்டம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகுவும், 6-ல் செவ்வாய், சனியும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். கடன்கள் யாவும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மகிழ்ச்சி குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு இதுவரை இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள், நெருக்கடிகள் யாவும் குறையும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-09-2016 மாலை 04.06 மணி முதல் 14-09-2016 இரவு 09.42 மணி வரை.

அக்டோபர்

சுகஸ்தானமான 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 6-ல் சனியும் சஞ்சாரம் செய்வதால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு இம்மாதம் தடைவிலகி நற்பலன் அமையும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் பொன் பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உற்றார்- உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தேடிவரும். கொடுக்கல்- வாங்கலிலும் லாபங்கள் அமையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது. புத்திரவழியில் சிறு மனக்கவலை ஏற்படும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-10-2016 இரவு 12.53 மணி முதல் 12-10-2016 காலை 07.50 மணி வரை.

நவம்பர்

உங்கள் ஜென்ம ராசிக்கு 6-ல் சனியும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வது உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. எதிர்பாராத பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதியில்லை. முருகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 06-11-2016 காலை 08.00 மணி முதல் 08-11-2016 மாலை 04.32 மணி வரை.

டிசம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் ராகுவும், 6-ல் சூரியன் சனியும் சஞ்சாரம் செய்வதால் வம்பு வழக்குகளில் வெற்றிகிட்டும். எதையும் சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய ஆற்றல் உண்டாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் நிம்மதிக் குறைவு ஏற்பட்டாலும் அதன் மூலம் பொருளாதார உயர்வுகளை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். முருகப்பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 03-12-2016 மதியம் 01.45 மணி முதல் 05-12-2016 இரவு 11.01 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 8.

நிறம்: பச்சை, வெள்ளை.

கிழமை: புதன், வெள்ளி.

கல்: மரகதம்.

திசை: வடக்கு.

தெய்வம்: விஷ்ணு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:14 pm

கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம் முதல், பூசம், ஆயில்யம் முடிய)

விடாமுயற்சியுடன் செயல்படும் திறனும் உயர்ந்த இலட்சியங்களும் கொண்ட கடக ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டின் தொடக்கமானது உங்களுக்கு அற்புதமான பலன்களை உண்டாக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் சனி பகவான் சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பாகும். ராசியாதிபதி சந்திரனுக்கு நட்பு கிரகமான குரு பகவானும் 02-08-2016 வரை தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரரீதியாகவும் உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். சிலருக்கு அசையா சொத்துகளால் அனுகூலம், வண்டி வாகனச் சேர்க்கை போன்ற யாவும் அமையும். 02-08-2016 முதல் குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பணவிஷயத்தில் சற்று கவனமாக இருப்பது, பெரிய முதலீடுகளை செய்து தொடங்கநினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பது நல்லது. எதிர்பாராத வீண் விரயங்களையும் எதிர்கொள்ள நேரிடும். சர்பகிரகங்களான ராகு 2-லும், கேது 8-லும் 08-01-2016 முதல் சஞ்சாரம் செய்யவிருப்பது சாதகமான அமைப்பு என்று கூறமுடியாது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல்நிலை பாதிப்புகளால் மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தை குறைத்துக்கொள்வது உத்தமம். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வதும் நல்லது.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடையும். அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்கள் ஓரளவுக்கு சுமாராக இருப்பார்கள். ஆகஸ்ட் மாதம் முதல் சில எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டு உடல் நிலை சோர்வடையக்கூடும். தேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் ஆண்டின் முற்பாதியில் அற்புதமாக அமையும். ஆகஸ்ட் மாதம் முதல் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும் என்பதால் முடிந்த வரையில் ஆடம்பரச் செலவுகளை குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

உத்தியோகம்

ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். வேலைப் பளு சற்று அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் சாதகமாக இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் எதிர்பாராத இடமாற்றங்களால் சிலருக்கு அலைச்சல்கள் அதிகரிப்பதால் நேரத்திற்கு உண்ணமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் லாபமும் முன்னேற்றமும் பெருகும். பெரிய அளவில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று அபிவிருத்தி உயர்வடையும் என்றாலும், ஆகஸ்ட் மாதம் முதல் பெரிய முதலீட்டில் செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நன்மை தரும். வேலையாட்களிடமும், கூட்டாளிகளிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது மூலம் வீண் விரயங்கள் குறையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி போன்றவற்றில் ஆண்டின் முற்பாதியில் லாபமும் அனுகூலமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்களில் நல்ல லாபம் கிட்டும். ஆகஸ்ட் மாதம் முதல் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் மட்டுமே பலனடைய முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிக்கல்கள் ஏற்படுமென்பதால் பெரிய தொகைகளை முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

அரசியல்

எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்துமுடித்து ஏற்றம் பெறமுடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் சாதிக்க முடியுமென்றாலும், கட்சிக்காக செய்யும் செலவுகளில் சற்று நிதானத்தை கடைப்பிடித்தல் நன்று. ஆகஸ்ட் மாதம்முதல் உடனிருப்பவர்களின் முகஸ்துதிகளுக்கு மயங்காமல் சிந்தித்துச் செயல்பட்டால் பதவிகளை சிறந்த முறையில் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

கலைஞர்கள்

பணவரவுகள் திருப்தியளிப்பதாக அமையும். வாய்ப்புகள் தேடிவரும். பயணங்களால் மகிழ்ச்சியும் சாதகபலனும் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் முடிந்த வரை தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலன்கள் அமையும். பத்திரிகைகளில் வரும் தேவையற்ற கிசுகிசுக்களால் மனச் சஞ்சலங்கள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். அரசு வழியிலும் பல மானிய உதவிகள் கிடைக்கப்பெறும். உழைப்பிற்கேற்ற பலன்களை அடைவதால் பரம திருப்தி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் நிறைவான லாபம் கிடைக்கும். பொருளாதார மேம்பாடுகளால் புதிய யுக்திகளைக் கையாண்டு மேலும் அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். ஆகஸ்ட் மாதம் முதல் புதிய பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

பெண்கள்

குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் ஆண்டின் முற்பாதியில் கைகூடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். புத்திர வழியில் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியம் சுமாராக இருக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் ஆசிரியர்களையும் பெரியவர்களையும் மதித்து நடப்பது நல்லது. கல்வியில் ஓரளவு சாதகப் பலனை பெறமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனமாக இருப்பது அவசியம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை அவப்பெயரை உண்டாக்கும். மதிப்பெண் குறையும்.

மாதப்பலன்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, மறைமுக எதிர்ப்புகள் விலகக்கூடிய அமைப்பு, உடல் ஆரோக்கியத்தில் பலமும் வலிமையும் கூடக்கூடிய அமைப்பு உண்டாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்ததாலும் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.சந்திராஷ்டமம்: 12-01-2016 மாலை 07.17 மணி முதல் 14-01-2016 இரவு 10.15 மணி வரை

பிப்ரவரி
மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், 4-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் வீண் அலைச்சல், டென்ஷன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். நெருங்கியவர்களிடமும் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் எதிர்பாராத திடீர் செலவுகளால் கடன்கள் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். முடிந்த வரை ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபங்களைப் பெறமுடியும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-02-2016 காலை 04.11 மணி முதல் 11-02-2016 காலை 05.40 மணி வரை.

மார்ச்

குடும்ப ஸ்தானமான 2-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதும், அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும், உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது வீண் விரயங்களை குறைக்க உதவும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சிவ வழிபாடு, துர்க்கை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 07-03-2016 மதியம் 02.15 மணி முதல் 09-03-2016 மதியம் 03.40 மணி வரை

ஏப்ரல்

ஜீவன ஸ்தானமான 10-ல் புதன் சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 10-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதையும் சமாளித்து ஏற்றமான பலனைப் பெறுவீர்கள். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதன் மூலம் எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் அமையும். எதிர்பாராத பயணங்கள் அலைச்சலை ஏற்படுத்தும் என்றாலும் அதன்மூலம் அனுகூலங்களை அடையலாம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-04-2016 அதிகாலை 01.14 மணிமுதல் 06-04-2016அதிகாலை 02.46 மணி வரை.

மே

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், குரு தன ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பாகும். எந்தவொரு காரியத்திலும் துணிந்து செயல்பட்டு வெற்றியினைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான திருமண சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடையமுடியும். கடன்கள் படிப்படியாகக் குறையும். புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வான நிலையினை அடைவார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வதன் மூலம் உங்களது பிரச்சினை குறையும்.

சந்திராஷ்டமம்: 01-05-2016 காலை 09.41மணி மணி முதல் 03-05-2016 மதியம் 12.49 வரை.மற்றும் 28-05-2016 மாலை 04.00 மணி முதல் 30-05-2016 இரவு 08.34மணி வரை.

ஜூன்

தன ஸ்தானமான 2-ல் குருவும், லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்பட முடியும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட முடியும். விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-06-2016 இரவு 09.24 மணி முதல் 27-06-2016 அதிகாலை 02.22 மணி வரை.

ஜூலை

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சாரம்செய்வது வீண் செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் 2-ல் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டால் எதையும் சாதிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களும் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறுவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். துர்க்கையம்மனை வழிபாடுசெய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-07-2016 அதிகாலை 03.41 மணி முதல் 24-07-2016 காலை 07.52 மணி வரை.

ஆகஸ்ட்

மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரித்தாலும், புதன் 2-ல் சஞ்சரிப்பதால் சுபகாரியம் கைகூடும். கடந்த கால பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். 2-ஆம் தேதி முதல் குரு 3-ல் சஞ்சரிக்கவுள்ளதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் அமையும். பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் காரியங்களைத் தள்ளிவைப்பதும் கூட்டாளிகளிடம் கவனமுடன் இருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-08-2016 பகல் 11.51 மணி முதல் 20-08-2016 மதியம் 02.53 மணி வரை.

செப்டம்பர்

இம்மாதம் 9-ஆம் தேதி முதல் ருண ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதால் மருத்துவச் செலவுகளை குறைத்துக்கொள்ள முடியும். நெருங்கியவர்களால் ஓரளவுக்கு சாதகப்பலனை பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி நிலவினாலும் நஷ்டம் ஏற்படாமல் சமாளிக்க முடியும். சுபகாரிய முயற்சிகளை மேற்கொள்வதை சிலகாலம் தள்ளிவைப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைப்பது மூலம் கடன்களைத் தவிர்க்கலாம். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-09-2016 இரவு 09.42 மணி முதல் 16-09-2016 இரவு 12.10 மணி வரை.

அக்டோபர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம்செலுத்துவதும் நெருங்கியவர்களிடையே வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பதும் நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தாமதமாகும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 12-10-2016 காலை 07.50 மணி முதல் 14-10-2016 காலை 10.55 மணி வரை.

நவம்பர்

சுக ஸ்தானமான 4-ல் சூரியனும் சமசப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். எதிலும் நீங்கள் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவதே நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் இருக்கும். முயற்சிகளில் தடைதாமதங்கள் உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதி குறைவுகள் ஏற்படும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடிய நிலை, புத்திர வழியில் நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேக்க நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனநிம்மதி குறையும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 08-11-2016 மாலை 04.32 மணி முதல் 10-11-2016 இரவு 09.16 மணி வரை.

டிசம்பர்

குடும்ப ஸ்தானமான 2-ல் ராகு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பது ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். முன்கோபத்தையும் பேச்சையும் குறைத்துக்கொண்டு நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு நற்பலனைப் பெறமுடியும். குடும்பத்தில் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பதும் நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கெடுபிடிகள் அதிகரிக்கும். வீண் பழிகளை சுமக்கக்கூடிய காலமென்பதால் எதிலும் கவனம் தேவை. முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-12-2016 இரவு 11.01 மணி முதல் 08-12-2016 காலை 05.26 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9.

நிறம்: வெள்ளை, சிவப்பு.

கிழமை: திங்கள், வியாழன்.

கல்: முத்து.

திசை: வடகிழக்கு.

தெய்வம்: வெங்கடாசலபதி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:15 pm

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய)
வாழ்வில் பலமுறை தோல்வியைச் சந்தித்தாலும் துணிந்துநின்று போராடக்கூடிய ஆற்றல்கொண்ட சிம்ம ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டில் சனி பகவான் 4-ல் சஞ்சரிப்பதால் அர்த்தாஷ்டமச் சனி நடைபெறுகிறது. இது சற்று அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்வதால் தொழில், பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். 08-01-2016 முதல் ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சாரம் செய்வதும் குடும்பத்தில் பிரச்சினைகள், நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமலிருப்பது நல்லது. 02-08-2016 முதல் குரு தனஸ்தானமான 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது வாழ்வில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதாரரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்த தடைகள் விலகி அனைத்தும் தடபுடலாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர பாக்கியம் உண்டாகக்கூடிய அமைப்பு கொடுக்கும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு வழக்குகளிலும் நல்லதொரு தீர்வு உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். ஆண்டின் முற்பாதியில் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்பட்டால் பிற்பாதியில் முன்னேற்றங்களை அடையமுடியும்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சில பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு ஓரளவுக்கு மேன்மைகள் உண்டாகும். எடுக்கும் காரியங்களில் சுறுசுறுப்பாக ஈடுபடமுடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து முன்னேறுவீர்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் ஆண்டின் முற்பாதியில் தேவையற்ற மனக்கவலைகள் ஏற்பட்டாலும், ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு மகிழ்ச்சியும் சுபிட்சமும் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பணவரவுகள் தாராளமாக அமைந்து கடன்கள் அனைத்தும் குறையும். உற்றார்- உறவினர்களிடையே நிலவிய கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும்.

உத்தியோகம்

ஆண்டின் முற்பாதியில் எதிலும் தடை தாமதங்களையும் வீண் பழிச் சொற்களையும் சந்தித்தாலும், ஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு அனைத்து பிரச்சினைகளும் பனிபோல் விலகி எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெறும். சிலர் வேண்டிய இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். உத்தியோகரீதியாக சிலருக்கு அலைச்சல்கள் சற்று அதிகரிக்கக்கூடும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடப்பது மிகவும் உத்தமம்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் ஆண்டின் முற்பாதியில் நிறைய போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் நிலவினாலும் ஆகஸ்டு மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்தின்மூலம் மறுமலர்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். தேவையற்ற அலைச்சல்களும் அதிகமாக இருக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

காண்ட்ராக்ட், கமிஷன், ஏஜென்ஸி போன்ற துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் முற்பாதியில் சில பிரச்சினைகளை, பணவரவில் தடைகளை சந்தித்தாலும் ஆகஸ்டு மாதம் முதல் தாராள தனவரவுகள், கொடுக்கல் வாங்கலில் சரள நிலை உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு வழக்குகள் பைசலாகும்.

அரசியல்

இந்த ஆண்டின் முற்பாதிவரை நீங்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவதும், மேலிடத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பதும் நல்லது. மக்களின் ஆதரவைப்பெற கொஞ்சம் அதிக முயற்சிகளை மேற்கொள்வது மிகவும் உத்தமம். ஆகஸ்டு மாதம் முதல் உங்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தேவையற்ற பயணங்களால் உடல் நிலை சற்று சோர்வடையும்.

கலைஞர்கள்

இந்த ஆண்டின் முற்பாதியில் புதிய வாய்ப்புகளில் தடை, தேவையற்ற பிரச்சினைகளில் சிக்கி பத்திரிகைமூலம் அவமானங்கள் உண்டாகக்கூடிய நிலை ஏற்பட்டாலும் ஆகஸ்டு மாதம் முதல் உங்களுக்கிருந்த பிரச்சினைகள் படிப்படியாக விலகி முன்னேற்றம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இசை, நடனத்துறைகளில் உள்ளவர்களுக்கும் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக இருந்தாலும், புழு பூச்சிகளின் தொல்லைகளால் வீண் விரயங்கள் அதிகரிக்கும். எதிர்பாராது ஏற்படக்கூடிய செலவுகளை சமாளிக்க கடன்வாங்க வேண்டிவரும். ஆகஸ்ட் மாதம் முதல் உங்களுக்குள்ள வம்பு, பிரச்சினைகள் யாவும் விலகி லாபம் பெருகும். உழைப்பிற்கேற்ற அனுகூலமான பலன்களை அடையமுடியும். நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களில் ஆண்டின் முற்பாதியில் தடைகள் நிலவினாலும் ஆகஸ்டு மாதம் முதல் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். நெருங்கியவர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேரும். சேமிக்க முடியும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று அதிக ஈடுபாடுடன் செயல்பட்டால் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். உடன் பழகும் மாணவர்களிடம் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தேவையற்ற அலைச்சல்கள், உடல் நலத்தில் சோர்வு ஏற்படும். எதிலும் சற்று கவனம் தேவை.


மாதப்பலன்

ஜனவரி ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகளனைத்தும் விலகி முன்னேற்றமான நிலை ஏற்படும். பணம் பலவழிகளில் தேடிவந்து பாக்கெட்டை நிரப்பும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி முன்னேற்றமான நிலையும் லாபங்களும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். விநாயகரை வழிபடவும்.
சந்திராஷ்டமம்: 14-01-2016 இரவு 10.15 மணி முதல் 17-01-2016 அதிகாலை 01.12 மணி வரை

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதும், பஞ்சம ஸ்தானத்தில் புதன், மாத முற்பாதியில் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொன், பொருள் சேரும். சிலருக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். நெருங்கியவர் களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை அடைவார்கள். சிவ வழிபாடு, சூரிய வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 11-02-2016 காலை 05.40 மணி முதல் 13-02-2016 காலை 07.12 மணி வரை.

மார்ச்

மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களும் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பது மூலம் வீண் பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ள முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். சிவ வழிபாடு, முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-03-2016 மதியம் 03.40 மணி முதல் 11-03-2016 மதியம் 03.41 மணி வரை.

ஏப்ரல்

மாதக்கோளான சூரியன் 8-ல் சாதகமின்றி சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஓரளவுக்கு லாபம் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். சிவபெருமானை வழிபடுவது மூலம் உண்டாகக்கூடிய பிரச்சினைகள் குறையும்.

சந்திராஷ்டமம்: 06-04-2016 அதிகாலை 02.46 மணி முதல் 08-04-2016 அதிகாலை 02.21 மணி வரை.

மே

சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் அமையும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். எதிலும் சிந்தித்துச் செயல் பட்டால் நற்பலன் அமையும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-05-2016 மதியம் 12.49 மணி முதல் 05-05-2016 பகல் 01.17 மணி வரை மற்றும் 30-05-2016 இரவு 08.34 மணி முதல் 01-06-2016 இரவு 10.37 மணி வரை

ஜூன்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் தொழில்ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத பணவரவுகள் உண்டாகி பொருளாதார நிலை உயரும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் தடைகளுக்குப்பின் கைகூடும். கடன்கள் குறைந்து வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் அமையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் அனுகூலங்கள் கிட்டும். சனி பகவானுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 27-06-2016 அதிகாலை 02.22 மணி முதல் 29-06-2016 காலை 05.38 மணி வரை.

ஜூலை

இம்மாத முற்பாதியில் லாப ஸ்தானமான 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். தொழில், உத்தியோகம் செய்பவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் விலகி புதிய வாய்ப்புகள் தேடிவரும். பணவரவுகளும் பஞ்சமின்றி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசு வழியில் அனுகூலங்கள் உண்டாகும். குடும்பத்திலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-07-2016 காலை 07.52 மணி முதல் 26-07-2016 பகல் 11.05 மணி வரை.

ஆகஸ்ட்

சுக ஸ்தானமான 4-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும் 2-ஆம் தேதி முதல் குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொள்ளலாம். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கக்கூடும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு போட்டிகள் ஏற்படும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-08-2016 மதியம் 02.53 மணி முதல் 22-08-2016 மாலை 04.57 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்றாலும், குரு 2-ல் சஞ்சரிப்பதால் சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, பொருளாதாரரீதியாக உயர்வுகள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றிமறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்படமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து லாபம் பெருகும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-09-2016 இரவு 12.10 மணி முதல் 18-09-2016 இரவு 12.54 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது சஞ்சரித்தாலும் மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. குருவும் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்த வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் நிம்மதியுடன் பணிபுரிய முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிட்டும். துர்கையம்மனை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 14-10-2016 காலை 10.55 மணி முதல்16-10-2016 காலை 11.13 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்களது பலமும் வளமும் கூடும். பணவரவுகள் மிகச்சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடிவரும். என்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துவிடுவது நல்லது. சனிக்கு பரிகாரம் செய்யவும்.
சந்திராஷ்டமம்: 10-11-2016 இரவு 09.16 மணி முதல் 12-11-2016 இரவு 10.29 மணி வரை.

டிசம்பர்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரித்தாலும், 2-ல் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன் குறையும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். தாராள தனவரவுகளை உண்டாக்கும். சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியளிக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட உயர்வுகள் கிடைக்கப்பெற்று பெயர், புகழ் உயரும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும் அபிவிருத்தியும் பெருகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். முருகப் பெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-12-2016 காலை 05.26 மணி முதல் 10-12-2016 காலை 08.28 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9.

நிறம்: வெள்ளை, சிவப்பு.

கிழமை: ஞாயிறு, திங்கள்.

கல்: மாணிக்கம்.

திசை: கிழக்கு.

தெய்வம்: சிவன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:16 pm

கன்னி
(உத்திரம் 2-ஆம் பாதம் முதல், ஹஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய)
சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிய மைத்துக் கொள்ளக்கூடிய நற்பண்புகளைக் கொண்ட கன்னி ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி புதனுக்கு நட்பு கிரகமான சனி இந்த 2016-ஆம் ஆண்டில் முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்களுக்கு முன்னேற்றங்கள் தேடிவரும். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். சுபகாரியங்கள் நடைபெற்று மகிழ்ச்சியளிக்கும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். 08-01-2016 முதல் கேது பகவான் ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பாராத உயர்வுகளையும், லாபங்களையும் பெற முடியும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். குரு ஆண்டின் தொடக்கத்தில் 12-ஆம் வீட்டிலும் 02-08-2016 முதல் ஜென்ம ராசியிலும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பண கொடுக்கல்- வாங்கல் போன்ற விஷயங்களில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களையும், உற்றார்- உறவினர்களையும் அனுசரித்து நடந்துகொள்வதும் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவதும் நல்லது. சில நேரங்களில் எல்லாம் இருந்தும் அனுபவிக்கமுடியாத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி பலமாக சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.

உடல் ஆரோக்கியம்

உங்களது உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நேரத்திற்கு உணவு உட்கொள்வதும் அஜீரணக் கோளாறுகள் உண்டாவதை தவிர்க்க உதவும். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறிது மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. பயணங்களால் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

குடும்பம், பொருளாதார நிலை

கணவன்- மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து கடன்கள் சற்று குறையும். புத்திர வழியில் பூரிப்பு, மகிழ்ச்சி உண்டாகும். மங்களகரமான சுபகாரியங்களும் கைகூடும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

உத்தியோகம்

இந்த ஆண்டு உங்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்களைத் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கப்பெறும். சிலர் நினைத்த இடத்திற்கு மாற்றலாகி குடும்பத்தோடு சேருவார்கள். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக அமையும். உடன் பணிபுரிபவர்களை சற்று அனுசரித்து நடப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமும் வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலமும் உண்டாகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளைப் பெறமுடியும். எதிர்பாராத பயணங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களில் மிகவும் கவனமுடன் நடந்துகொள்வது மிகவும் நல்லது.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளில் வெற்றியும் சிறப்பான லாபங்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். உங்களுக்கு இருந்த வம்பு வழக்குகளும் பைசலாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும்போது கவனமுடன் இருப்பது நல்லது.

அரசியல்

உங்களின் பெயர், புகழ் யாவும் உயரக்கூடிய காலம் ஆகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றிவிட முடியும் என்பதால் அவர்களின் அமோக ஆதரவினைப் பெறமுடியும். மேடைப் பேச்சுகளில் சற்று கவனமுடன் பேசுவது நல்லது. சில நேரங்களில் கட்சிப் பணிக்காக நிறைய செலவுகள் செய்யவேண்டிய சூழ்நிலையும் அதனால் வீண் விரயங்களும் ஏற்படும்.

கலைஞர்கள்

சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவும், பாராட்டுதல்களும் கிடைக்கப்பெறும். வெளியூர், வெளிநாடுகளுக்கும் படப்பிடிப்பு விஷயமாக செல்லநேரிடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சிறுசிறு மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்கநேரிடும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய, நிறைய உழைக்க வேண்டியி ருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கும். போட்ட முதலீட்டுக்கு பங்கம் ஏற்படாது. புதிய யுக்திகளைக் கையாண்டு உற்பத்தியைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உடல் நிலையில் சற்று கவனம் எடுத்துக்கொள்வது, பங்காளிகளிடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

பெண்கள்

கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் சில தடைகளுக்குப்பின் சிறப்பாக நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகளால் சற்று மருத்துவச் செலவுகள் உண்டாகும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிமேல் வெற்றி கிட்டும். பள்ளி, கல்லூரி வாயிலாக இன்பச் சுற்றுலா மேற்கொள்ளும் வாய்ப்பும் அதனால் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். புதிய நண்பர்களின் நட்பால் சாதக பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும்.

மாதப்பலன்


ஜனவரி முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும், 8-ஆம் தேதி முதல் கேது 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பது எடுக்கும் முயற்சிகளில் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எந்தவிதமான பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய தைரியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் உடனே சரியாகிவிடும். நெருங்கியவர் களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகளும் குறையும். 4-ல் சூரியன் இருப்பதால் பணவரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் செலவுகள் கட்டுக்கடங்கியே இருக்கும். விஷ்ணுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-01-2016 அதிகாலை 01.12 மணி முதல் 19-01-2016 காலை 04.31 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். உடல் ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய ஆற்றலும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பணவரவுகளில் தேவைக்கேற்றபடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. 2-ல் செவ்வாய் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை குறைத்துக் கொள்ள முடியும். குரு பகவானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 13-02-2016 காலை 07.12 மணி முதல் 15-02-2016 காலை 09.53 மணி வரை.

மார்ச்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். பணவரவுகள் சரளமாக அமைந்து வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் விலகும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூரிப்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் தொடர்பால் நற்பலன் ஏற்படும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 11-03-2016 பகல் 03.41 மணி முதல் 13-03-2016 மாலை 04.39 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 6-ல் சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடந்தகால பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடைகள் விலகி கைகூடும். பணவரவுகளும் சிறப்பாக இருப்பதால் கடன்களும் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் முன்னேற்றமான நிலையினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். நினைத்தது நிறைவேறும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-04-2016 அதிகாலை 02.21 மணி முதல் 10-04-2016 அதிகாலை 01.55 மணி வரை.

மே

அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சுக்கிரனும், 12-ல் குரு, ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. பொருளாதார நிலையில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்தையும் கஷ்டப்பட்டே முடிக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் வீண்பழிகளைச் சுமக்கநேரிடும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது. சிவ வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 05-05-2016 பகல் 01.17 மணி முதல் 07-05-2016 மதியம் 12.41 மணி வரை.

ஜூன்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமான அமைப்பாகும். எல்லா வகையிலும் லாபங்கள் பெருகும். செல்வம், செல்வாக்கு உயரும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன் பொருள் சேரும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருப்பதால் பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்த முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 01-06-2016 இரவு 10.37 மணி முதல் 03-06-2016 இரவு 11.02 மணி வரை மற்றும் 29-06-2016 காலை 05.38 மணி முதல் 01-07-2016 காலை 07.29 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 10-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பிரிந்த உறவினர்களும் வந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். பணவரவுகளிலும் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள னைத்தும் பூர்த்தியாகும். உற்றார்- உறவினர்களும் சாதகமாக செயல் படுவார்கள். சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். நினைத்தது நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். துர்க்கை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் 26-07-2016 பகல் 11.05 மணி முதல் 28-07-2016 மதியம் 01.47 மணி வரை.

ஆகஸ்ட்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். சுபகாரி யங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். எடுக்கும் முயற்சிகளில் திறம்பட செயல்பட்டு வெற்றிபெறுவீர்கள். நெருங்கியவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றம் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ளுதல் நல்லது. சிவபெருமானை வழிபடுதல் உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-08-2016 மாலை 04.57 மணி முதல் 24-08-2016 இரவு 07.10 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல் சனி, 6-ல் கேது சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் பல வழிகளில் தேடிவருவதால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். புத்திர வழியில் பூரிப்பும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். சமுதாயத்தில் உன்னதமான உயர்வு உண்டாகும். உங்கள் பலமும் வலிமையும் கூடும். எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். சிவ வழிபாடு, துர்க்கையம்மன் வழிபாடு உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-09-2016 இரவு 12.54 மணி முதல் 21-09-2016 அதிகாலை 01.38 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசியில் சூரியன், குருவும், 4-ல் செவ்வாயும் சஞ்சரித்தாலும், 3-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தேவை யற்ற அலைச்சல், டென்ஷன், நெருங்கியவர்களிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். பணவரவுகள் ஓரளவுக்கு சுமாராக இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்து பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் வீண் பிரச்சினைகள் குறையும். உற்றார்- உறவினர்களையும், குடும்பத்திலுள்ளவர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-10-2016 காலை 11.13 மணி முதல் 18-10-2016 காலை 10.35 மணி வரை.

நவம்பர்

முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் அமையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றால் லாபமும், பயணங்களால் அனுகூலமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கும் உயர்வுகள் கிட்டும். அரசுவழியில் அனுகூலங்கள் உண்டாகும். சனிக்கு பரிகாரங்கள் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-11-2016 இரவு 10.29 மணி முதல் 14-11-2016 இரவு 09.39 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல், சனி, சூரியன் சஞ்சரிப்பதும் வரும் 7-ஆம் தேதி முதல் 6-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் உங்கள் பலத்தை அதிகரிக்கும் அமைப்பாகும். பணவரவுகள் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவில் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் ஒற்றுமையும் சுபிட்சமும் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்ற முடியும். உத்தியோகஸ்தர்களுக்குச் சிறுசிறு அலைச்சல், டென்ஷன் அதிகரித்தாலும் அடையவேண்டிய முன்னேற்றங்களை அடைந்துவிடுவீர்கள். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகை களை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 10-12-2016 காலை 08.28 மணி முதல் 12-12-2016 காலை 08.50 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 4, 5, 6, 7, 8.

நிறம்: பச்சை, நீலம்.

கிழமை: புதன், சனி.

கல்: மரகதப் பச்சை.

திசை: வடக்கு.

தெய்வம்: ஸ்ரீவிஷ்ணு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:17 pm

துலாம்
(சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய)
மகிழ்ச்சியையோ துக்கத்தையோ பெரிதுபடுத்தாமல் அனைத்தையும் சமமாக பாவிக்கும் பண்புகொண்ட துலா ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டில் 02-8-2016 வரை பொன்னவனான குரு லாப ஸ்தான மான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்யவிருப்பது மூலம் எல்லா வகையிலும் நற்பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றியினை அடைவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உங்களுக்கு ஏழரைச் சனியில் பாதச் சனி தொடருவதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. சனி பகவான் உங்கள் ராசிக்கு கேந்திர திரிகோணதிபதியாகி யோககாரகன் என்பதால் பெரிய அளவில் கெடுதிகளைச் செய்யமாட்டார். குரு பகவான் ஆண்டின் பிற்பாதியில் விரய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யவிருப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், கடன்கள் உண்டாகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் நிம்மதிக் குறைவு, அதிக மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். 08-01-2016 முதல் ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும், சில மருத்துவச் செலவுகளுக்குப்பின் குணமடையும். புத்திர வழியில் எதிர்பாராத செலவும் வீண் விரயமும் அதனால் மன அமைதிக் குறைவும் உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் வீண் அலைச்சல், டென்ஷன் குறையும்.

குடும்பம், பொருளாதார நிலை

இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். நெருங்கியவர்களின் ஆதரவு மனநிம்மதியை உண்டாக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் சாதகப் பலனைப் பெறுவீர்கள்

உத்தியோகம்

ஆண்டின் தொடக்கத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறைந்து எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெறமுடியும். உடன் பணிபுரிபவர்களி டையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து வேலைப் பளுவும் குறையும் என்றாலும் ஏழரைச் சனி தொடருவதால் உங்களுக்கு பணியில் தேவையற்ற பிரச்சினைகளும் நெருக்கடிகளும் அவப்பெயர்களும் உண்டாகும். தேவையற்ற இடமாற்றங்களும் ஏற்படும்.

தொழில், வியாபாரம்

இந்த ஆண்டின் முற்பாதியில் தொழில், வியாபாரரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு புதிய முயற்சிகளிலும் நல்ல லாபம் கிட்டும். பயணங்களாலும் ஓரளவுக்கு நற்பலனைப் பெறமுடியும். எதிர்பாராத புதிய வாய்ப்புகள் தேடிவந்து லாபம் தரும். ஆகஸ்ட் மாதத்திற்குப்பிறகு முடிந்த வரை கூட்டாளிகளையும் உடனிருக்கும் தொழிலாளர்களையும் அனு சரித்து நடந்துகொள்வது நல்லது. போட்டி பொறாமைகள் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். பெரிய அளவில் லாபத்தைப் பெறமுடியாவிட்டாலும் போட்ட முதலீடுகளுக்கு நஷ்டம் ஏற்படாது. ஆகஸ்டு மாதம் முதல் சற்று நெருக்கடிகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாது. மற்றவர்களிடம் அவப்பெயர் ஏற்படும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். பிறரின் ஏச்சுப்பேச்சுகளுக்கு செவிசாய்க்காமல், தங்கள் காரியங்களில் கருத்துடன் செயல்படுவது நல்லது. ஆகஸ்டு மாதம் முதல் நீங்கள் அவசியம் மேடைப் பேச்சுகளிலும் மற்றவர்களிடம் பேசும்போதும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. பத்திரிகைகளில் வரும் தவறான செய்திகளால் மனநிம்மதிக் குறைவு ஏற்படும்.

கலைஞர்கள்

கையில் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. அனைவரையும் அனுசரித்து நடப்பது, நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவது நல்லது. எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டி யிருப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். எதிர்பாராத பயணங்களால், சற்று அலைச்சல், உடல்சோர்வு உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெறுவதால் உழைப்பிற்கேற்ற பலனைப் பெறுவீர்கள். புதிய நவீன கருவிகள் வாங்கும் யோகம், பூமி, மனை போன்றவற்றால் அதிர்ஷ்டம் உண்டாகும். குடும்பத்திலும் சுபிட்சமான நிலையிருக்கும். சுப காரியங்களும் நடைபெறும். ஆண்டின் பிற்பாதியில் பண விஷயங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

பெண்கள்

கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால், விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. நெருங்கியவர்களாலும் தேவையற்ற மனச் சஞ்சலங்கள் உண்டாகும். ஆண்டின் தொடக்கத்தில் பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆகஸ்ட் மாதத்திற்குப்பின் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். புத்திரர்களால் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மாணவ- மாணவியர்

கல்வி பயிலுபவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவேண்டியிருக்கும். ஞாபக மறதி, கவனக்குறைவு போன்றவற்றால் மதிப்பெண்கள் குறையும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு மனநிம்மதி அளிப்பதாக அமையும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையானது உங்களுக்கு அவப்பெயரை உண்டாக்கும். நல்ல நண்பர்களாக தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது.

மாதப்பலன்


ஜனவரி மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும், 8-ஆம் தேதி முதல் ராகு லாப ஸ்தானமான 11-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் தாராளமாக அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தடைப்பட்ட சுபகாரியங்களிலும் எளிதில் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும், எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த லாபங்கள் கிடைக்கும். முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 19-01-2015 காலை 04.31 மணி முதல் 21-01-2016 காலை 08.33 மணி வரை.

பிப்ரவரி

ஜென்ம ராசியில் செவ்வாயும், 2-ல் சனியும் 4-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாத நிலை உண்டாகும். பணவரவுகள் சரளமாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்படுவது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். முருகப் பெருமானை வழிபாடுசெய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-02-2016 காலை 09.53 மணி முதல் 17-02-2016 மதியம் 02.19 மணி வரை.

மார்ச்

லாப ஸ்தானமான 11-ல் குரு, ராகு சஞ்சாரம்செய்வதும் மாத பிற் பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். பல்வேறு வகையில் முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். நெருங்கி யவர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பணம் பல வழிகளில் தேடிவரும். கூட்டுத் தொழில் செய்பவர்களும் முன்னேற்றமான பலனைப் பெறுவார்கள். சேமிப்புகள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். ராகு பகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 13-03-2016 மாலை 04.39 மணி முதல் 15-03-2016 இரவு 07.58 மணி வரை.

ஏப்ரல்

ருண ரோக ஸ்தானமான 6-ல் சூரியனும் லாப ஸ்தானமான 7-ல் புதன், 11-ல் குரு ராகுவும் சஞ்சாரம் செய்வதால் உங்களின் பலமும் வளமும் அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எதிர்பாராத பணவரவுகளால் பிரச்சினைகள் குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உத்தியோகஸ்தர் களுக்கு கௌரவமான பதவிகள் கிடைக்கப்பெறும். பண விஷயங்களில் பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றி நல்ல பெயரை எடுப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மகிழ்ச்சியளிக்கும். சனிக்குப் பரிகாரங்கள் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 10-04-2016 அதிகாலை 01.55மணி முதல் 12-04-2016 காலை 03.28 மணி வரை.

மே

குடும்ப ஸ்தானமான 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதும் 7-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் சாதகமற்ற அமைப்பாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும் என்றாலும் குருவின் சாதகமான சஞ்சாரத்தால் எதையும் சமாளிக்கமுடியும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் அதிக கவனம் தேவை. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தி யாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளி களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 07-05-2016 மதியம் 12.41 மணி முதல் 09-05-2016 மதியம் 01.04 மணி வரை.

ஜூன்

லாப ஸ்தானமான 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து நடப்பது உத்தமம். உற்றார்- உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் சற்றே மந்த நிலை உண்டாகும். விநாயகரை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 03-06-2016 இரவு 11.02 மணி முதல் 05-06-2016 இரவு 11.28 மணி வரை.

ஜூலை

மாதக்கோளான சூரியன், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்கள் கிட்டும். கடன்கள் படிப்படியாகக் குறையும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-07-2016 காலை 07.29 மணி முதல் 03-07-2016 காலை 08.59 மணி வரை மற்றும் 28-07-2016 மதியம் 01.47 மணி முதல் 30-07-2016 மாலை 6.33 மணி வரை.

ஆகஸ்ட்

மாதக்கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், 11-ல் குரு, ராகு சஞ்சாரம் செய்வதும் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்களையும் பொருளாதாரரீதியாக உயர்வுகளையும் ஏற்படுத்தும் அமைப்பாகும். அரசுவழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும். பணவரவுகள் தாராளமாக இருக்குமென்றாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றிமறையும். கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-08-2016 இரவு 07.10 மணி முதல் 26-08-2016 இரவு 10.21 மணி வரை.

செப்டம்பர்

லாப ஸ்தானமான 11-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதும் 9-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. எடுக்கும் காரியங் களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றிகளைப் பெற்றுவிடுவீர்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாகும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-09-2016 அதிகாலை 01.38 மணி முதல் 23-09-2016 அதிகாலை 03.53 மணி வரை.

அக்டோபர்

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், குரு சஞ்சாரம்செய்வது வீண் செலவுகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடும் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற இட மாற்றங்கள் ஏற்படும். சிவவழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-10-2016 காலை 10.35 மணி முதல் 20-10-2016 காலை 11.07 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் சனி, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் சுகவாழ்வு சொகுசு வாழ்வு பாதிப்படையும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் கஷ்டப்படவேண்டியிருக்கும். வரவுக்குமீறிய செலவுகளால் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடனிருப்பது உத்தமம். ஆஞ்சநேயரை வழிபடுவது மூலம் நற்பலன் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: 14-11-2016 இரவு 09.39 மணி முதல் 16-11-2016 இரவு 08.56 மணி வரை.

டிசம்பர்

குடும்ப ஸ்தானமான 2-ல் சனி, சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் வீண் குழப்பங்கள் உண்டாகும். ஒற்றுமைக் குறைவு, நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பண வரவுகளிலும் தடைகள் ஏற்படுவதால் நெருக்கடிகள் அதிகரிக்கும். சுப காரிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உத்தியோ கத்திலிருப்பவர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நற்பலனை அடையமுடியாது. உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் மனநிம்மதி குறையும். மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்கவுள்ளதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். முருக வழிபாடு, சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-12-2016 காலை 08.50 மணி முதல் 14-12-.2016 காலை 08.14 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 4, 5, 6, 7, 8.

நிறம்: வெள்ளை, பச்சை.

கிழமை: வெள்ளி, புதன்.

திசை: தென்கிழக்கு.

கல்: வைரம்.

தெய்வம்: லட்சுமி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:18 pm

விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய)
பார்ப்பதற்கு வெகுளிபோல் இருந்தாலும் எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்துமுடிக்கும் ஆற்றல்கொண்ட விருச்சிக ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டு முழுவதும் ஏழரைச் சனியில் ஜென்மச் சனி தொடருவதால் உங்களுக்கு ஆரோக்கியரீதியாக பிரச்சினைகள், எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகக் கூடும் என்பதால் எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. 08-1-2016 முதல் ஜென்ம ராசிக்கு 4-ல் கேது 10-ல் ராகு சஞ்சாரம் செய்யவிருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களையும் உற்றார்- உறவினர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். அசையும்- அசையா சொத்துக்களால் வீண்செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்நீச்சல் போட்டால்தான் ஏற்றம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களும் படிப்படியான முன்னேற்றத்தை அடைவார்கள். ஆண்டின் முற்பாதியில் 10-ஆம் வீட்டில் சஞ்சரித்து பொருளாதாரரீதியாக நெருக்கடிகளை ஏற்படுத்தும் குரு பகவான் 02-08-2016 முதல் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பது அனுகூலமான அமைப்பாகும். இதனால் ஆகஸ்ட் மாதத்திற்கு பணவரவுகள் சிறப்பாக அமையும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் ஆகஸ்ட் மாதம் ஏற்படவிருக்கும் குருப்பெயர்ச்சியால் ஓரளவுக்கு சாதகமான பலன்களை அடையமுடியும். குடும்பத்தில் இருக்கக்கூடிய மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள், பிரச்சினைகள் தோன்றி னாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் ஆண்டின் தொடக்கத்தில் சுமாராக இருந்தாலும் ஆகஸ்ட் மாதம்முதல் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சியளிக்கும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது, தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது.

உத்தியோகம்

பணியில் சுமாரான நிலை இருக்கும். சிறுசிறு தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் பிற்பாதியில் அனுகூலப் பலனை பெறமுடியும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வேலைப் பளு குறையும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. வரவுக்குமீறிய செலவுகளும் வேலையாட்களால் பிரச்சினைகளும் ஏற்படும். போட்டிகளை சமாளிக்கவேண்டியிருக்கும். ஆகஸ்ட் மாதம்முதல் எதிலும் ஓரளவுக்கு மேன்மைகள் உண்டாகும். நிறைய போட்டிகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும். பயணங்களால் சாதகப்பலன்கள் அமையும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன் ஏஜென்ஸி, காண்டிராக்ட் போன்றவற்றில் ஆண்டின் தொடக்கத்தில் வீண் விரயங்களை எதிர்கொண்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும் என்றாலும் உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும்.

அரசியல்

உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் சோதனைகளும் வேதனைகளும் ஏற்படும். எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் அதன் முழுப்பலனை அடையமுடியாதென்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் ஓரளவுக்கு சாதகப்பலனை பெறமுடியும். சிறுசிறு ஆரோக்கிய பாதிப்புகளும் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து நடப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் மிகவும் நற்பலனை உண்டாக்கும்.

கலைஞர்கள்

தேவையற்ற அலைச்சல்கள், பிரச்சினைகள், பெயர், புகழ் மங்கக்கூடிய சூழ்நிலைகள் யாவும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தாலும் பிற்பாதியில் ஓரளவுக்கு வாய்ப்புகளைப் பெறமுடியும். எதிர்பார்க்கும் உதவிகளும் கிடைக்கும். பெரிய அளவில் முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டாலும் பெயரை காப்பாற்றிக்கொள்ள முடியும். பயணங்களால் அலைச்சல்கள், உடல் நலக்குறைவுகள் உண்டாகி மருத்துவச் செலவு ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபடவேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சினைகளால் நீர்வரத்து குறையும். என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர்நீச்சல் போட்டாவது லாபத்தினைப் பெறுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்களும் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.

பெண்கள்

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. பண வரவுகளில் ஆண்டின் தொடக்கத்தில் தடைகள் நிலவினாலும் பிற்பாதியில் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகி கடன்கள் குறையும். திருமண சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை.

மாணவ- மாணவியர்

கல்வியில் சற்று மந்த நிலை நிலவும். கடும் முயற்சியுடன் பாடுபட்டால் தான் நற்பலனை அடையமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். அரசு வழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆண்டின் பிற்பாதியில் கிடைக்கும். உடல் நிலை சற்று பாதிப்படையும்.

மாதப்பலன்

ஜனவரி குரு அதிசாரமாக 11-ல் இருப்பதும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் உண்டாகும். பணவரவுகளும் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். கூட்டாளிகளிடம் ஒற்றுமையாக செயல்பட்டால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி மேன்மைகள் உண்டாகும். பயணங்களால் சாதகமான பலன் அமையும். முருகனை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம்: 21-01-2016 காலை 08.33 மணி முதல் 23-01-2016 மதியம் 02.03 மணி வரை.

பிப்ரவரி

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 3-ல் சூரியன், 10-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். எதிர்பாராத பயணங்களாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்க்கவும். சனிக்கு பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 17-02-2016 மதியம் 02.19 மணி முதல் 19-02-2016 இரவு 08.47 மணி வரை.

மார்ச்

உங்களுக்கு ஏழரைச் சனி நடைபெறுவதும், 4-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் வீண் அலைச்சல்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பணவரவுகள் சுமாராக இருப்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்திசெய்ய கடன்வாங்க நேரிடும். சுகவாழ்வு பாதிப்படையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்கள் உண்டாகும். பண விஷயத்தில் வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்க்கவும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மனநிம்மதி குறையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. சிவபெருமானை வழிபாடு செய்வது, சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 15-03-2016 இரவு 07.58 மணி முதல் 18-03-2016 அதிகாலை 02.20 மணி வரை.

ஏப்ரல்

ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத பிற்பாதியில் சுக்கிரன் சாதகமாக உள்ளதாலும், 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதாலும் உங்கள் பலமும் வலிமையும் கூடும். எடுக்கும் முயற்சிகளில் ஓரளவுக்கு முன்னேற்ற பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பணவரவுகள் சுமாராகத்தான் இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கப் பெறும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-04-2016 காலை 03.28 மணி முதல் 14-04-2016 காலை 08.28 மணி வரை.

மே

ஏழரைச் சனி நடைபெற்றாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த பிரச்சினைகளையும் சமாளித்து ஏற்றம்பெறக்கூடிய ஆற்றலை உண்டாக்கும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து லாபத்தினை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். விஷ்ணு பகவானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 09-05-2016 மதியம் 01.04 மணி முதல் 11-05-2016 மதியம் 04.25 மணி வரை.

ஜூன்

ஏழரைச் சனி நடைபெறுவதும், சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகள் திருப்தியளிப்பதாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடிகள் ஏற்படுவதால் நிம்மதியற்ற நிலை உண்டாகும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-06-2016 இரவு 11.28 மணி முதல் 08-06-2016 அதிகாலை 01.57 மணி வரை.

ஜூலை

ஏழரைச் சனி நடைபெறுவதும் அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதும் அனுகூலமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு அதனால் மன நிம்மதிக் குறைவு ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சினைகளை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தாமதப்படும். வீண்செலவுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் இருப்பது உத்தமம். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 03-07-2016 காலை 08.59 மணி முதல் 05-07-2016 பகல் 11.42 மணி வரை மற்றும் 30-07-2016 மாலை 16.33 மணி முதல் 01-08-2016 இரவு 08.17 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். 2-ஆம் தேதி முதல் குரு 11-ல் சஞ்சரிக்கவுள்ளதால் பணவரவுகள் சரளமாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் அனுகூலம் ஏற்படும். முன்கோபத்தைக் குறைப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 26-08-2016 இரவு 10.21 மணி முதல் 29-08-2016 காலை 03.04 மணி வரை.

செப்டம்பர்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ல் குரு, சுக்கிரன் சஞ்சாரம் செய்வதும் பொருளாதாரரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். திருமணம் தடைப்பட்டவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். கடன்கள் குறையும். குடும்பத்தில் அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமான நிலையில் இருக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-09-2016 அதிகாலை 03.53 மணி முதல் 25-09-2016 காலை 08.36 மணி வரை.

அக்டோபர்

லாப ஸ்தானமான 11-ல் குரு, புதன், சூரியன் சஞ்சாரிப்பதால் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் திருமணம் போன்ற மங்களகர மான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் தோன்றிமறையும். கொடுக்கல்- வாங்கல் லாபம் தரும். உடல் ஆரோக்கியத்திலிருந்த பிரச்சினைகள் குறையும். எடுக்கும் முயற்சி களில் வெற்றிகிட்டும். பொன், பொருள் சேரும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். முருகப்பெருமானை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 20-10-2016 காலை 11.07 மணி முதல் 22-10-2016 மதியம் 14.31 மணி வரை.

நவம்பர்

ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் குரு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தொழில்ரீதியாக புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகளும் மேன்மைகளும் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகளால் ஏற்றமிகு பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்துடன் செயல்படுவது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-11-2016 இரவு 08.56 மணி முதல் 18-11-2016 இரவு 10.33 மணி வரை.

டிசம்பர்

ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பது உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அமைப்பென்றாலும் 11-ல் குரு சஞ்சரிப்பதால் பொருளாதாரம் மேம்படும். கடன்கள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உற்றார்- உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வுகளை அடைவார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சல்கள் குறையும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 14-12-2016 காலை 08.14 மணி முதல் 16-12-2016 காலை 08.51 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9.

நிறம்: ஆழ்சிவப்பு, மஞ்சள்.

கிழமை: செவ்வாய், வியாழன்.

திசை: தெற்கு.

கல்: பவளம்.

தெய்வம்: முருகன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:19 pm

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)
எதையும் சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து அறியும் திறமைகொண்ட தனுசு ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி குரு பகவான் வரும் 02-08-2016 வரை பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் பலமாகச் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையானது சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களும் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அசையும்- அசையா சொத்துகளாலும் அனுகூலம் உண்டாகும். 08-01-2016 முதல் கேது 3-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். தொழில், வியாபாரரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் லாபம் கிட்டும். ஆகஸ்ட் மாதம் முதல் குரு பகவான் ஜீவன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், இந்த ஆண்டு முழுவதும் ஏழரைச் சனியில் விரயச் சனி தொடருவதாலும், எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், குடும்பத்தில் நிம்மதிக் குறைவுகள், எடுக்கும் முயற்சிகளில் தடைபோன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். எதிர்பாராத வீண் விரயங்கள், பணவரவுகள் தடை உண்டாகும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் சிந்தித்துச் செயல்படுத்துவதே நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் வீண் பிரச்சினைகளையும் பழிச்சொற்களையும் சந்திக்கநேரிடும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்.

உடல் ஆரோக்கியத்தில் ஓரளவுக்கு சிறப்பான நிலை இருக்கும் என்றாலும் அடிக்கடி ஏதாவது சிறுசிறு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். மனைவி பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் ஏற்பட்டு சேமிப்பு குறையும். ஆண்டின் தொடக்கத்தில் ஓரளவுக்கு அனுகூலப் பலன்கள் உண்டாகும். பிற்பாதியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.

குடும்பம், பொருளாதார நிலை

பணவரவுகள் ஆகஸ்ட் மாதம் வரை திருப்தியளிப்பதாக இருக்கும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். பிற்பாதியில் பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கநேரிடும். குடும்பத்தில் அமைதி குறையும். நெருங்கியவர்களை இழக்கக்கூடிய சூழ்நிலைகளும் ஏற்படலாம். முடிந்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்வதும் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.

உத்தியோகம்

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை பணியில் நிம்மதியான நிலையிருக்கும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். நியாயமாகக் கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்கள் பொறுப்பேற்க வேண்டிவரும். பணியில் நிம்மதிக் குறைவு உண்டாகும். தேவையற்ற பழிச்சொற்களுக்கும் ஆளாக நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பு தாமதப்படும்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். எந்த வொரு புதிய முயற்சிகளிலும் வீண் இழப்புகளை சந்திக்கநேரிடும். ஆண்டின் முற்பாதி வரை லாபங்களைத் தந்த தொழில்கள்கூட பிற் பாதியில் நெருக்கடி நிலையை சந்திக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யும் நோக்கங்களை சற்று தள்ளிவைப்பது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும்.

கொடுக்கல்- வாங்கல்

எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவதில் இடையூறுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் ஆகஸ்டு மாதம் வரை சரளமான நிலை இருந்தாலும் பின்பு ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது, நிலையற்ற விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

அரசியல்

வரும் ஆகஸட் மாதம் வரை செல்வம், செல்வாக்கு உயரும். எதிர்பார்க்கும் பதவிகள் கிடைக்கும். பின்பு எந்தவொரு பணியையும் சிறப்பாகச் செய்துமுடிக்க முடியாமல் மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். பத்திரிகைகளால் உங்களுக்கு அவப்பெயர்கள் உண்டாகும். நீங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து வைப்பது நல்லது. உடனிருப்பவர்களிடம் கவனம் தேவை.

கலைஞர்கள்

ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அனுகூலப் பலனைத் தந்தாலும், பிற்பாதியில் சிக்கல்கள் அதிகரிக்கும். வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படும். மற்ற கலைஞர்களுடன் ஏற்படும் போட்டிகளால் வாய்ப்புகள் கைநழுவிப் போகும். வரவேண்டிய பணத்தொகைகளிலும் இழுபறி நிலையே இருக்கும். நடிப்புத் துறை மட்டுமின்றி பாடல், இசை துறைகளில் உள்ளவர்களுக்கும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமையும். புழு பூச்சிகளின் தொல்லைகள் சற்று இருந்தாலும் எதையும் சமாளிப்பீர்கள். பங்காளிகள் மற்றும் உறவினர்களின் ஆதரவுகள் மனமகிழ்ச்சியைத் தரும். எல்லா வகையிலும் லாபங்களையும் முன்னேற்றங்களையும் பெறமுடியும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

பெண்கள்

குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய கால மாகும். புத்திர வழியில் மனசஞ்சலங்களும் வீண் விரயங்களும் ஏற்படும். ஆண்டின் தொடக்கம் சாதகமாக இருந்தாலும் பிற்பாதியில் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. பணவரவுகளிலும் நெருக்கடிகள், கொடுக் கல்- வாங்கல்களிலும் பிரச்சினைகள் ஏற்படும். கடன்கள் அதிகரிக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் அதிக ஈடுபாடு எடுத்துக்கொண்டால் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றப் பலனை அடையமுடியும். சிலருக்கு அடிக்கடி ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு பள்ளிக்கு விடுப்பு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்கள் நீங்கள் அவப்பெயரை சந்திக்கநேரிடும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.


மாதப்பலன்


ஜனவரி லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய் சஞ்சாரம்செய்வதும் 8-ஆம் தேதி முதல் 3-ல் கேது சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பு என்றாலும், ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. சிறுசிறு மருத்துவச் செலவுகளும் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 23-01-2016 மதியம் 02.03 மணி முதல் 25-01-2016 இரவு 09.54 மணி வரை.

பிப்ரவரி

முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும், லாப ஸ்தானமான 11-ல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். இதனால் தொட்டதெல்லாம் துலங்கும். அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறக்கூடிய வாய்ப்பு, புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். உறவினர் வருகை மகிழ்ச்சிதரும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பெயர், புகழ் உயரும். துர்க்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 19-02-2016 இரவு 08.47 மணி முதல் 22-02-2016 காலை 05.27 மணி வரை.

மார்ச்

முயற்சி ஸ்தானமான 3-ல் கேதுவும் சூரியனும் சஞ்சரிப்பதும், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். பொருளாதார மேன்மை, நினைத்தது நிறைவேறக்கூடிய வாய்ப்பு ஏற்படும். 12-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்பதால் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருங்கியவர்களை சற்று அனுசரித்து நடந்துகொள்வதால் அனுகூலப் பலனை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடுசெய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-03-2016 அதிகாலை 02.20 முதல் 20-03-2016 பகல் 11.35 மணி மணி வரை.

ஏப்ரல்

சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதும் விரய ஸ்தானமான, 12-ல் சனி, செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் தேவையற்ற அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டாகும். குரு 9-ல் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளித்து ஏற்றம் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சனிக்கு பரிகாரம் செய்வது, சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 14-04-2016 காலை 08.28 மணி முதல் 16-04-2016 மாலை 05.17 மணி வரை.

மே

ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 9-ல் குரு சஞ்சரிப்பதும், மாதபிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். வெளிவட்டாரத் தொடர்புகளில் சாதகப்பலன் ஏற்படும். கொடுத்த கடன்கள் திருப்திகரமாக வசூலாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் முழு வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். சிவபெருமானை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 11-05-2016 மதியம் 04.25 மணி முதல் 13-05-2016 இரவு 11.57 மணி வரை.

ஜூன்

9-ல் குரு சஞ்சரிப்பதும் மாதமுற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும், உணவு விஷயங்களில் கட்டுப்பாட்டுடன் இருப்பதும் நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்களையும் தவிர்த்துவிட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைப் பளு அதிகரிப்பதால் உடல்நிலை சோர்வடையும். முருகனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 08-06-2016 அதிகாலை 01.57 முதல் 10-06-2016 காலை 08.06 மணி வரை.

ஜூலை

சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன், புதனும், 9-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். கடந்த காலத்தி லிருந்த பொருளாதார நெருக்கடிகள், அனைத்தும் விலகி முன்னேற்றமான நிலையைக் கொடுக்கும். பணவரவுகள் சரளமாக நடைபெறும். தடைப் பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். உற்றார்- உறவினர் களால் ஓரளவுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் லாபமளிக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-07-2016 பகல் 11.42 மணி முதல் 07-07-2016 மாலை 05.12 மணி வரை.

ஆகஸ்ட்

ஏழரைச் சனி நடைபெறுவதும் 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். இம்மாதம் ஏற்படவுள்ள குரு மாற்றத்தால் குரு 10-ஆம் வீட்டுக்கு செல்லவிருப்பதால் பண விவகாரங்களில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான நிலை உண்டாகும். நெருங்கியவர்களை அனுசரித்துச் செலவும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. சனி, குருவுக்கு பரிகாரம் செய்வது மூலம் நற்பலன்களை அடையமுடியும்.

சந்திராஷ்டமம்: 01-08-2016 இரவு 08.17 மணி முதல் 04-08-2016 அதிகாலை 02.07 மணி வரை மற்றும் 29-08-2016 காலை 03.04 மணி முதல் 31-08-2016 காலை 09.49 மணி வரை.

செப்டம்பர்

ஏழரைச் சனி நடைபெறுவதும், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் தேவையற்ற அலைச்சல், டென்ஷனை உண்டாக்கும் அமைப்பென்றாலும், 9-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பதும், உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. பிறர் விஷயங்களில் தலையீடு செய்தால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். பணவரவுகளிலும் சிறுசிறு நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்றே தாமதப்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது உத்தமம். முருக வழிபாடு, சிவவழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 25-09-2016 காலை 08.36 மணி முதல் 27-09-2016 மாலை 16.00 மணி வரை.

அக்டோபர்

ஜென்ம ராசிக்கு 3-ல் கேதுவும், 11-ல் சுக்கிரனும் மாத பிற்பாதியில் 11-ல் சூரியனும் சஞ்சாரம் செய்வதால் லாபங்கள் பெருகும். நெருங்கியவர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும், ஒற்றுமை குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுகள் கிடைக்கப் பெற்றாலும் வேலையில் பளு சற்று கூடுதலாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சமாளிக்கமுடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 22-10-2016 மதியம் 02.31 மணி முதல் 24-10-2016 இரவு 09.32 மணி வரை.

நவம்பர்

ஏழரைச் சனி நடைபெற்றாலும் லாப ஸ்தானமான 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சி நிலவும். புதிய பொருள் சேர்க்கைகளும் ஆடை ஆபரணங்களும் சேரும். வெளியூர் பயணங்களால் சாதகப் பலன்களை அடையமுடியும். கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடுவது நற்பலனைத் தரும்.

சந்திராஷ்டமம்: 18-11-2016 இரவு 10.33 மணி முதல் 21-11-2016 காலை 04.02 மணி வரை.

டிசம்பர்

விரய ஸ்தானமான 12-ல் சூரியன், சனி சஞ்சாரம் செய்வது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 7-ஆம் தேதி முதல் 3-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்யவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் ஓரளவுக்கு லாபத்தினைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவதும், பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும் நல்லது. சுபகாரிய முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-12-2016 காலை 08.51 மணி முதல் 18-12-2016 மதியம் 12.41 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9.

கிழமை: வியாழன், திங்கள்.

திசை: வடகிழக்கு.

நிறம்: மஞ்சள், சிகப்பு.

கல்: புஷ்பராகம்.

தெய்வம்: தட்சிணாமூர்த்தி.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:20 pm

மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)
எவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய லட்சியங்களைத் தவறாமல் நிறைவேற்றக்கூடிய ஆற்றல்கொண்ட, மகர ராசி நேயர்களே. இந்த ஆண்டு முழுவதும் உங்கள் ராசியாதிபதி சனி பகவான் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக மேன்மை, எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, செய்யும் தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலப் பலனை அடையமுடியும். உத்தியோகம் செய்பவர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த உயர்வுகளை பெறமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் 08-01-2016 முதல் கேது 2-லும் ராகு 8-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது, பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இதுமட்டுமின்றி 02-08-2016 வரை பொன்னவனான குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவிஷயங்களில் ஆண்டின் தொடக்கத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்ளலாம். 02-08-2016 முதல் குரு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்களும் தடைகள்விலகி கைகூடும். உடல் ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். நெருங்கியவர்களின் ஆதரவுகளால் மனமகிழ்ச்சியும், குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரக நிலைகளின் சாதகமற்ற சஞ்சாரத்தால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கை துணைக்கும் அனுகூலமற்ற பலன்களே உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் குடும்பத்தில் படிப்படியாக முன்னேற்றங்கள் உண்டாகும். நெருங்கியவர்களிடம் ஏற்படக்கூடிய தேவையற்ற பிரச்சினைகளால் மன சஞ்சலங்கள் ஏற்படும். பேச்சைக் குறைப்பது நல்லது.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதார நிலையில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் சனி லாப ஸ்தானத்திலிருப்பதாலும் ஆகஸ்ட் மாதம் முதல் குரு 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. தடைப்பட்ட சுப காரியங்களும் கைகூடும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி களைப் பெறுவீர்கள். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நற்பலன்களைப் பெறமுடியும். எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது.

உத்தியோகம்

உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியும் எதிர்பாராத பதவி உயர்வுகளையும் இடமாற்றங்களையும் பெறமுடியும் என்றாலும் ஆகஸ்ட் மாதம் வரை எதிலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உங்கள் ராசியாதிபதி சனி 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து பொறுப்புடன் பதிலளிப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரிங்களில் சிந்தித்துச் செயல் பட்டால் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பான முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றிகிட்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தொழிலாளர்களை சற்று அனுசரித்துச் செல்வதால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் துறைகளில் உள்ளவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் நிதானத்தைக் கடைப்பிடித்தால் ஆகஸ்ட் மாதம் முதல் நல்ல லாபமான நிலையினைப் பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடைபெறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் சற்றே இழுபறி நிலையில் இருந்தாலும் தீர்ப்பு சாதகமாகவே இருக்கும்.

அரசியல்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தக்க சமயத்தில் நிறைவேற்றுவதால் மக்களின் ஆதரவு உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவு செய்யவேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் சில திருப்புமுனைகள் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் வெற்றியும், பொருளாதாரரீதியாக மேன்மைகளும் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக அமையும். மாண்புமிகு பதவிகளும் தேடிவரும்.

கலைஞர்கள்

கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். எதிர்பார்த்த பெயர் புகழைப் பெறமுடியும். வரவேண்டிய பாக்கி பணத்தொகைகள் கிடைக்கப் பெற்று பொருளாதார நிலையானது உயரும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் போட்டி பொறாமைகள் குறையும். நடனம், இசைபோன்ற துறைகளில் உள்ளவர்களும் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி இருக்கும். பட்ட பாட்டிற்கான முழுப்பலனையும் தடையின்றி அடையமுடியும். புதிய யுக்திகளையும் கையாண்டு அபிவிருத்தியைப் பெருக்குவீர்கள். புதிய பூமி, மனை போன்றவற்றையும் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். பங்காளிகளிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.

பெண்கள்

உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொண்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். பணவரவுகள் ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பாக அமையும். திருமண சுப காரியங்கள் கைகூடும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியமும் அமையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். பணிபுரிபவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும்.

மாணவ- மாணவியர்

கல்வியில் சிறப்பான முன்னேற்றங்களை அடையமுடியும். உடன் பழகும் நண்பர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும். விளையாட்டுத் துறைகளில் பாராட்டுதல்களையும் பரிசுகளையும் தட்டிச்செல்வீர்கள். கல்விக்காக சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மாதப்பலன்

ஜனவரி

ஜென்ம ராசிக்கு 10-ல் செவ்வாயும், 11-ல் சுக்கிரனும் சனியும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு என்றாலும் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பயணங்களும் அதன் மூலம் சாதகமான பலன்களும் அமையும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் நடந்துகொள்வது உத்தமம். சிவபெருமானை வழிபடவும்.சந்திராஷ்டமம்: 25-01-2016 இரவு 09.54 மணி முதல் 28-01-2016 காலை 08.37 மணி வரை.
பிப்ரவரி

ஜீவன ஸ்தானத்தில் செவ்வாயும் லாப ஸ்தானத்தில் சனியும் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பாராத முன்னேற்றங்களும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். சுபகாரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திருப்திகரமான நிலை உண்டாகும். எதிர்பார்க்கும் இட மாற்றங்கள் கிடைக்கும். பிரதோஷ கால விரதம் மேற்கொள்ளவும்.

சந்திராஷ்டமம்: 22-02-2016 காலை 05.27 மணி முதல் 24-02-2016 மதியம் 04.20 மணி வரை.

மார்ச்

லாப ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். இதனால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பதும், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் அனைவரின் ஆதரவையும் பெறமுடியும். பணவரவுகளும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் நடந்துகொண்டால் மட்டுமே லாபத்தினைப் பெற முடியும். வியாபாரத்தில் லாபகரமான நிலை நிலவும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-03-2016 பகல் 11.35 மணி முதல் 22-03-2016 இரவு 10.59 மணி மணி வரை.

ஏப்ரல்

லாப ஸ்தானத்தில் சனியும் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதும் மாத முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் சாதகமான அமைப்பாகும். 8-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியிலிருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடந்த கால பிரச்சினைகள் விலகி முன்னேற்றமும், எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் சற்றே அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் நிம்மதி ஏற்படும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 16-04-2016 மாலை 05.17 மணி முதல் 19-04-2016 அதிகாலை 04.56 மணி வரை.

மே

சுக ஸ்தானமான 4-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது வீண் அலைச்சலை ஏற்படுத்துமென்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அசையா சொத்துக்களாலும் வண்டி வாகனங்களாலும் சிறுசிறு வீண் விரயங்கள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பண விஷயங்களில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். எதிலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேறவேண்டியிருக்கும். லஷ்மி தேவியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 13-05-2016 இரவு 11.57 மணி முதல் 16-05-2016 பகல் 11.06 மணி வரை.

ஜூன்

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் எல்லா வகையிலும் மேன்மைகளை ஏற்படுத்தும் அமைப்பாகும். இதனால் கடந்த காலங் களிலிருந்த பொருளாதார பிரச்சினைகள் அனைத்தும் விலகி முன்னேற்ற மான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமைக் கரம் நீட்டுவார்கள். பொன், பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உயர்வுகள் தேடி வரும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 10-06-2016 காலை 08.06 மணி முதல் 12-06-2016 மாலை 06.13 மணி வரை.

ஜூலை

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பதாலும் மாத முற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதாலும் பொருளாதார உயர்வுகளும் அரசுவழியில் அனுகூலங்களும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். பணவரவுகளுக்கு பஞ்சமிருக்காது. சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. துர்க்கையம்மனை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 07-07-2016 மாலை 05.12 மணி முதல் 10-07-2016 அதிகாலை 02.23 மணி வரை.

ஆகஸ்ட்

லாப ஸ்தானத்தில் செவ்வாய், சனி சஞ்சரிப்பது சாதகமான அமைப்பு என்றாலும் 7, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களால் தேவையற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. 2-ஆம் தேதி முதல் குரு 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்த முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 04-08-2016 அதிகாலை 02.07 மணி முதல் 06-08-2016 காலை 10.54 மணி வரை.

செப்டம்பர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்றாலும், 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும், குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவச் செலவுகளும் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 31-08-2016 காலை 09.49 மணி முதல் 02-09-2016 மாலை 06.53 மணி வரை. மற்றும் 27-09-2016 மாலை 16.00 மணி முதல் 30-09-2016 அதிகாலை 01.46 மணி வரை.

அக்டோபர்

பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியனும், குருவும், 10-ல் சுக்கிரனும் சஞ்சாரம் செய்வதால் நினைத்தது நிறைவேறும். எல்லா வகையிலும் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். பணவரவுகளில் தேவைக்கேற்றபடி அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தினை அடையமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். துர்க்கையம்மன், விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-10-2016 இரவு 09.32 மணி முதல் 27-10-2016 காலை 07.38 மணி வரை.

நவம்பர்

மாதக்கோளான சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதும் 9-ல் குரு, 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். பணவரவு தாராளமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சொந்த வீடு, மனை வாங்கக்கூடிய வாய்ப்பும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் தேடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-11-2016 காலை 04.02 மணி முதல் 23-11-2016 மதியம் 01.31 மணி வரை.

டிசம்பர்

குரு, சூரியன் சாதகமாக சஞ்சரிப்பதாலும், 11-ல் ராசியாதிபதி சனி சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி சற்று விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிப்பதால் உடல் நிலை சற்று சோர்வடையும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைக்கவும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். எடுக்கும் காரியங்களில் சிறுசிறு தடைகள் நிலவினாலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவீர்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்யவும்.

சந்திராஷ்டமம்: 18-12-2016 மதியம் 12.41 மணி முதல் 20-12-2016 இரவு 08.41 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 4, 5, 6, 7.

கிழமை: சனி, புதன்.

திசை: மேற்கு.

நிறம்: நீலம், பச்சை.

கல்: நீலக்கல்,

தெய்வம்: ஐயப்பன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:21 pm

கும்பம்
(அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)
பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாத உயர்ந்த பண்புகொண்ட கும்ப ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டில் 02-08-2016 வரை குரு பகவான் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியான முன்னேற்றங்கள், எதிலும் லாபங்களை அடையக்கூடிய யோகம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகளும் அமையும். 08-01-2016 முதல் கேது ஜென்ம ராசியிலும், ராகு 7-லும் சஞ்சாரம் செய்யவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமெடுத்துக் கொள்வது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்வதன் மூலம் அனுகூலமான பலனைப் பெறலாம். சற்று சிந்தித்து கவனமுடன் நடந்துகொண்டால் நற்பலன்களைப் பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதைத் தவிர்த்து விடுவது நல்லது. சனி ஜீவன ஸ்தானமான 10-ல் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தாலும் சனி உங்கள் ராசியாதிபதி என்பதால் அடைய வேண்டிய இலக்கை அடைந்துவிடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழி லாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். ஆகஸ்ட் மாதம் முதல் குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் வயிறுசம்பந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களும் தேவையற்ற பிரச்சினை களை ஏற்படுத்துவார்கள். கணவன்- மனைவியிடையே கருத்து வேறு பாடுகள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளும், முன்னேற்றத் திற்கு இடையூறுகளும் ஏற்படும்.

உடல் ஆரோக்கியம்

உங்களின் தேக ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். தேவையற்ற அலைச்சல்களால் உடல் நிலை சற்றே சோர்வடையும். எடுக்கும் காரியங்களில் தடையும் தாமத நிலையும் ஏற்படுவதால் மனநிம்மதி குறையும் என்றாலும் எந்த எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றமடைவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

குடும்பம், பொருளாதார நிலை

ஆண்டின் முற்பாதி வரை குடும்ப ஒற்றுமை மகிழ்ச்சியளிப்பதாகவே இருக்கும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனை அடையமுடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். ஆகஸ்ட் மாதத்திற்கு பின் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பதும் உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் நல்லது.

உத்தியோகம்

நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவேண்டிய காலமாகும். எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். உயரதிகாரி களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். எந்தவொரு பணியில் ஈடுபட்டாலும் கடின முயற்சிகளை மேற்கொள்ள நேரிடும். நீங்கள் நிறைய பிரச்சினைகளைச் சந்திக்க நேர்ந்தாலும் உடனிருப்பவர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்பட்டாலும் தேக்கமடையாமல் சமாளிக்கமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யநினைக்கும் காரியங்களையும் புதிய முயற்சிகளையும் சிந்தித்துச் செயல்படுத்துவது நல்லது. தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் ஓரளவுக்கு அனுகூலம் உண்டாகும்.

கொடுக்கல்- வாங்கல்

கமிஷன், ஏஜென்ஸி, காண்ட்ராக்ட் போன்ற துறைகளில் இருப்பவர் களுக்கு ஆகஸ்ட் மாதம் வரை லாபம் சிறப்பாக இருக்கும். பெரிய அளவி லான முன்னேற்றங்கள் தடைகளுக்குப்பின் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதையும் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. வம்பு வழக்குகளும் இழுபறி நிலையில் இருக்கும்.

அரசியல்

ஆண்டின் முற்பாதிவரை எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் பதவி உயர்வுகள் கிடைக்கும் என்றாலும் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய காலமாகும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகிகளாக மாறுவார்கள். பணவிரயங்கள் ஏற்படும். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்துச் செயல்பட்டால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிவிட முடியும். மக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

கலைஞர்கள்

கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புக்கள் தடையின்றிக் கிடைக்கும் என்றாலும் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. பத்திரிகைகளில் வரக்கூடிய கிசுகிசுக்களால் சற்று மன நிம்மதி குறையக்கூடும். பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

விவசாயிகள்

பயிர்விளைச்சல் சிறப்பாகவே இருக்கும். புழு பூச்சிகளின் தொல்லைகளால் நிறைய வீண் செலவுகள் ஏற்படுவதால் அறுவடையில் தாமதம் உண்டாகும். விளைபொருளுக்கேற்ற விலை சந்தையில் கிடைக்கப்பெற்று லாபம் பெருகும். அரசு வழியில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கப்பெறுவதால் எல்லா வகையிலும் முன்னேற்றத்தினை அடைய முடியும்.

பெண்கள்

குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். அசையா சொத்துக்கள் வகையில் சில செலவுகள் ஏற்படும். சுபகாரிய முயற்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்செலுத்துவது நல்லது. உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ- மாணவியர்

மாணவர்கள் முழு முயற்சியுடன் பாடுபட்டால் நினைத்ததை சாதிக்க முடியுமென்றாலும் மனது அலைபாயக்கூடிய காலமென்பதால் தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்க்கலாம். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவுகள் உங்களுக்கு எப்பொழுதும் உண்டு. சுற்றுலா போன்ற உல்லாசப் பயணங்களில் கவனமுடன் நடந்துகொள்வது நன்மை அளிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெறமுடியும்.


மாதப்பலன்


ஜனவரி ஜென்ம ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் சூரியன் 11-ல் சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பும் அமையும். கொடுக்கல்- வாங்கல் சரள நிலையில் நடக்கும். எதிர்பாராத திடீர் உயர்வுகளும் உண்டாகும். பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் யாவும் அமையும். சிலருக்கு வீடு, மனை வாங்க வேண்டுமென்ற கனவும் நனவாகும். தொழில், உத்தியோகம் செய்பவர் எதிலும் சிந்தித்துச் செயல்பட்டால் லாபங்களைப் பெறமுடியும். விநாயகப் பெருமானை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 01-01-2016 அதிகாலை 00.13 மணி முதல் 03-01-2016 மதியம் 01.06 மணி வரை மற்றும் 28-01-2016 காலை 08.37 மணி முதல் 30-01-2016 இரவு 09.18 மணி வரை.

பிப்ரவரி

ஜீவன ஸ்தானமான 10-ல் சனியும் விரய ஸ்தானமான 12-ல் சூரியனும் சஞ்சாரம்செய்வது தொழில், வியாபாரரீதியாக வீண் விரயங்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். தேவையற்ற அலைச்சல்கள், டென்ஷன்கள் உண்டாகும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குறையும். உற்றார்- உறவினர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 24-02-2016 மதியம் 04.20 மணி முதல் 27-02-2016 அதிகாலை 04.54 மணி வரை.

மார்ச்

ஜீவன ஸ்தானமான 10-ல் சனி செவ்வாய் சஞ்சரிப்பதும், 7-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதும் எடுக்கும் காரியங்களிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய அமைப்பாகும். பணவரவுகளிலும் நெருக்கடிகள் நிலவுவதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வதில் சிக்கல்கள் உண்டாகும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்கவேண்டியிருக்கும். ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

சந்திராஷ்டமம்: 22-03-2016 இரவு 10.59 மணி மணி முதல் 25-03-2016 பகல் 11.37 மணி வரை.

ஏப்ரல்

ஜீவன ஸ்தானமான 10-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாத பிற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிக்க விருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். எந்த எதிர்ப்பு களையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். குரு 7-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப்பெறும். பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக அமைந்து குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்திலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மந்த நிலைகள் விலகி லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியிலிருந்து கெடுபிடிகள் விலகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 19-04-2016 அதிகாலை 04.56 மணி முதல் 21-04-2016 மாலை 05.46 மணி வரை.

மே

மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 7-ல் குரு 18-ஆம் தேதி முதல் வக்ரநிவர்த்தி அடைவதும் அற்புதமான அமைப்பாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்தும் விலகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி பெறமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் நற்பலனைப் பெறமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சுமாரான லாபத்தினை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 16-05-2016 பகல் 11.06 மணி முதல் 18-05-2016 இரவு 11.58 மணி வரை.

ஜூன்

சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரனும் சமசப்தம ஸ்தானமான 7-ல் குருவும் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். உங்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு குறைந்து முன்னேற்றமான நிலைகள் ஏற்படும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எடுக்கும் காரியங்களில் முழு முயற்சியுடன் பாடுபட்டால் வெற்றிகளைப் பெறமுடியும். பணவிஷயத்தில் பிறருக்கு முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். விநாயகரை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 12-06-2016 மாலை 06.13 மணி முதல் 15-06-2016 காலை 06.47 மணி வரை.

ஜூலை

சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும் மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்யவிருப்பதும் அனுகூலமான அமைப்பாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயர்வது மட்டுமின்றி எதிலும் முன்னேற்றங்களும் உயர்வுகளும் உண்டாகும். கடன்களும் பைசலாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறையும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். உடல் நிலையும் மிக சிறப்பாக இருப்பதால் எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படமுடியும். சனிக்கு பரிகாரம் செய்வது நல்லது.

சந்திராஷ்டமம்: 10-07-2016 அதிகாலை 02.23 மணி முதல் 12-07-2016 மதியம் 02.23 மணி வரை.

ஆகஸ்ட்

மாத முற்பாதியில் 6-ல் சூரியனும், 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். எடுக்கும் காரியங்களில் தடைகளுக்குப்பின் வெற்றிகிட்டும். பொருளாதார நிலையானது ஓரளவுக்கு சிறப்பாக இருந்தாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயங்களில் சற்று கவனமுடன் நடப்பது நல்லது. முடிந்தவரை பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடக்க பழகிக்கொண்டால் நற்பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரித்தாலும் லாபங்கள் தடைப்படாது. தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

சந்திராஷ்டமம்: 06-08-2016 காலை 10.54 மணி முதல் 08-08-2016 இரவு 10.25 மணி வரை.

செப்டம்பர்

மாதக்கோளான சூரியன் 7, 8-ல் சஞ்சரிப்பதும், அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் காரியங்களில் தடை, தாமதங்கள் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நிலை ஏற்படும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் உயரதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 02-09-2016 மாலை 06.53 மணி முதல் 05-09-2016 காலை 06.14 மணி வரை.

அக்டோபர்

அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு, சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது. நெருங்கியவர்களிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமை குறைவடையும். பணவரவுகளில் நெருக்கடிகள் நிலவும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது மூலம் வீண்விரயங்களை தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படுவதோடு வேலைப் பளுவும் அதிகரிக்கும். செவ்வாய் 11-ல் இருப்பதால் பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். எதையும் சமாளிப்பீர்கள். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 30-09-2016 அதிகாலை 01.46 மணி முதல் 02-10-2016 மதியம் 01.19 மணி வரை மற்றும் 27-10-2016 காலை 07.38 மணி முதல் 29-10-2016 இரவு 07.35 மணி வரை.

நவம்பர்

மாதக்கோளான சூரியன் 9-ல் சஞ்சரிப்பதும், விரய ஸ்தானமான 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பாகும். நீங்கள் எதிலும் கவனமுடன் நடந்துகொள்வது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகி மனநிம்மதி குறையும். எதிர்பாராத வீண் விரயங்களும் அதிகரிக்கும். பணவரவுகளிலும் பற்றாக்குறை ஏற்படும். எந்த காரியத்தை செய்வதென்றாலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-11-2016 மதியம் 01.31 மணி முதல் 26-11-2016 அதிகாலை 01.33 மணி வரை.

டிசம்பர்

அஷ்டம ஸ்தானமான 8-ல் குரு சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும், மாதக்கோளான சூரியன் சாதகமாக 10, 11-ல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வரவேண்டிய வாய்ப்புகளில் தடையிருக்காது. போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 20-12-2016 இரவு 08.41 மணி முதல் 23-12-2016 காலை 08.06 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 5, 6, 8.

கிழமை: வெள்ளி, சனி.

திசை: மேற்கு.

நிறம்: வெள்ளை, நீலம்.

கல்: நீலக்கல்.

தெய்வம்: ஐயப்பன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முழுமுதலோன் Fri Dec 25, 2015 5:23 pm

மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)
கம்பீரமான தோற்றமும் பிறரை வசீகரிக்கக்கூடிய அழகும்கொண்ட மீன ராசி நேயர்களே! இந்த 2016-ஆம் ஆண்டு சனி பகவான் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம்செய்வதும் 08-01-2016 முதல் ராகு 6-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யவிருப்பதும் ஓரளவுக்கு சாதகப்பலனை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். உங்களுக்கிருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி உங்கள் பலமும் வலிமையும் கூடும். 02-08-2016 வரை உங்கள் ராசியாதிபதி குரு ருண ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் அதன் பின்னர் சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டிற்கு செல்லவிருப்பது அற்புதமான அமைப்பாகும். இதனால் பொருளாதாரரீதியாக இருந்த முடக்கங்கள் விலகி தாராள தனவரவுகள் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் உண்டாகும். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் அமையும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த பிரச்சினைகள் விலகி சரளமான நிலை இருக்கும். நெருங்கியவர்களிடையே இருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் நிலவினாலும் வேலைப் பளு குறைவாகவே இருக்கும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அமையும்.

உடல் ஆரோக்கியம்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபடக் கூடிய ஆற்றலுண்டாகும். அவ்வப்போது சிறுசிறு பாதிப்புகள் தோன்றி னாலும் சிறிது மருத்துவச் செலவுகளுக்குப்பின் உடனே குணமடையும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஓரளவுக்கு ஆரோக்கியமாக இருப்பார்கள்.

குடும்பம், பொருளாதார நிலை

நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் பிரச்சினை, பொருளாதாரத் தடைகள் என ஆண்டின் தொடக்கத்தில் அவதிப்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் நினைத்தது நிறைவேறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் அனைத்தும் சிறப்பாக கைகூடி மகிழ்ச்சி யளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் தொடரும். சேமிப்பு பெருகும்.

உத்தியோகம்

மேலதிகாரிகளின் கெடுபிடிகள், வேலைப்பளு போன்றவைகளால் ஆண்டின் தொடக்கத்தில் பல சங்கடங்களை சந்தித்தாலும், ஆகஸ்ட் மாதம் முதல் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றங்கள், ஊதிய உயர்வுகள் யாவும் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதலைப் பெறுவீர்கள்.

தொழில், வியாபாரம்

தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நிறைய போட்டி பொறா மைகள், தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல், டென்ஷன் போன்ற யாவும் உண்டாகும். என்றாலும் ஆகஸ்ட் மாதம் முதல் தொட்டதெல்லாம் பொன்னாகும். புதிய முயற்சிகள் யாவும் வெற்றியினை உண்டாக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கிப்போட்டு தொழிலை விரிவுசெய்வீர்கள். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை தொழிலை அபிவிருத்தி செய்ய உதவும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வற்றால் லாபம் குவியும்.

கொடுக்கல்- வாங்கல்

உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கொடுக்கல்- வாங்கலில் ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு சரளமான நிலை ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த வம்பு வழக்குகள் பைசலாகும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சி யளிக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் பிரச்சினை இருக்காது.

அரசியல்

ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு விரயங்கள் அலைச்சல், டென்ஷன் ஏற்பட்டாலும் ஆகஸ்ட் மாதம் முதல் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியையும் பொருளாதார உயர்வுகளையும் அடைவீர்கள். மக்களின் ஆதரவும் சிறப்பாக அமையும். கட்சிப் பணிக்காக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு அமையும். மாண்புமிகு பதவிகள் தேடிவரக்கூடிய யோகம் உண்டாகும்.

கலைஞர்கள்

உங்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். ஆண்டின் தொடக்கத்தில் தொழில்ரீதியாக நிறைய பிரச்சினைகளை சந்தித்தாலும் ஆகஸ்ட் மாதம் முதல் உங்கள் திறமைகளுக்கு தீனிபோடும் வகையில் நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய வாய்ப்பும் அதன்மூலம் உயர்வுகளும் உண்டாகும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் சிறப்பாக அமையும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் ஆகஸ்ட் மாதத்தில் கிடைக்கப்பெறும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் பூமி, மனை வாங்கும் யோகமும் உண்டாகும். முடிந்தவரை தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாதிருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகிட்டும்.

பெண்கள்

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஆண்டின் தொடக்கத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் எதையும் சமாளித்து ஏற்றம்பெறுவீர்கள். பணவரவுகளும் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். பொன் பொருள் சேரும். கடன்கள் குறையும்.

மாணவ- மாணவியர்

ஆண்டின் தொடக்கத்தில் கல்வி பயிலுபவர்கள் அனுகூலமற்ற பலன் களை சந்தித்தாலும் கல்வியில் சாதனை பல செய்வார்கள். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கும். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடமுடியும். நண்பர்களால் நற்பலன்கள் அமையும்.


மாதப்பலன்


ஜனவரி

மாதக்கோளான சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதும், அதிசாரமாக 7-ல் குரு சஞ்சாரம் செய்வதும் எல்லாவகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். எடுக்கும் முயற்சி அனைத்திலும் வெற்றிகிட்டும். பணவரவுகளும் தாராளமாகவே இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றமுடியும். சிலருக்கு அசையும்- அசையா சொத்துக்கள் வாங்கக் கூடிய யோகமும் உண்டாகும். செய்யும் தொழில், உத்தியோக நிலையில் முன்னேற்றங்களும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறும். நெருங்கியவர் களின் ஆதரவுகள் சிலநேரங்களில் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவும். துர்க்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 03-01-2016 மதியம் 01.06 மணி முதல் 05-01-2016 இரவு 12.56 மணி வரை மற்றும் 30-01-2016 இரவு 09.18 மணி முதல் 02-02-2016 காலை 09.40 மணி வரை.

பிப்ரவரி

ஜீவன ஸ்தானமான 10-ல் சுக்கிரன், புதன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். பொருளாதார நிலையில் உயர்வான நிலைகள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். பயணங்களால் சாதகமான பலன்களை அடைய முடியும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். கடன்களனைத்தும் குறையும். சனிக்குப் பரிகாரம் செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 27-02-2016 அதிகாலை 04.54 மணி முதல் 29-02-2016 மாலை 05.37 மணி வரை.

மார்ச்

ஜென்ம ராசிக்கு 6-ல் குருவும் 12-ல் சூரியனும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க முடியும். நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வதும் முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் நல்லது. நல்லதாக நினைத்துச் செய்யும் காரியங்களும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். சுபகாரி யங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளிவைப்பது நல்லது. உத்தியோ கஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். 6-ல் ராகு இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். சிவ வழிபாடு, தட்சிணாமூர்த்தி வழிபாடு நல்லது.

சந்திராஷ்டமம்: 25-03-2016 பகல் 11.37 மணி முதல் 27-03-2016 இரவு 12.22 மணி வரை.

ஏப்ரல்

ஜென்ம ராசியில் சூரியனும், 6-ல் குருவும் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந் தப்பட்ட பாதிப்புகள் தோன்றிமறையும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது, தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் நல்ல பெயரை எடுக்கமுடியாது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கும் போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். சிவ வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 21-04-2016 மாலை 05.46 மணி முதல் 24-04-2016 காலை 06.24 மணி வரை.

மே

ருண ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம்செய்வதும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகளை ஏற்படுத்துமென்பதால் ஓரளவுக்கு எதையும் சமாளித்துவிட முடியும். எதிர் பாராத உதவிகள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் சிறுசிறு மருத்துவச் செலவுகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். பணவிஷயத்தில் பிறரை நம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும். முருகனை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 18-05-2016 இரவு 11.58 மணி முதல் 21-05-2016 மதியம் 12.30 மணி வரை.

ஜூன்

பாக்கிய ஸ்தானமான 9-ல் செவ்வாய், சனி சஞ்சரிப்பதும் மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு முன்னேற் றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரம் செய்பவர் களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி முன்னேற்றமும் அபிவி ருத்தியும் பெருகும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். உற்றார்- உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். நினைத்ததெல்லாம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 15-06-2016 காலை 06.47 மணி முதல் 17-06-2016 இரவு 07.18 மணி வரை.

ஜூலை

ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியனும், 6-ல் குருவும் சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். நெருங்கியவர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்திலும் சிறுசிறு பாதிப்புக்கள் தோன்றிமறையும். கொடுத்த வாக்குறுதிகளை ஓரளவுக்கு காப்பாற்றிவிட முடியும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நிலவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமதநிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அசையா சொத்துகளால் வீண்செலவுகள் ஏற்படும். சிவபெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 12-07-2016 மதியம் 02.23 மணி முதல் 15-7-2016 அதிகாலை 02.56 மணி வரை.

ஆகஸ்ட்

ஜென்ம ராசிக்கு 2-ஆம் தேதி முதல் 7-ல் குரு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 6-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதும் ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங் களை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சற்று திருப்தியான நிலை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை ஓரளவுக்கு சுமாராக இருக்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித் தாலும் அதன்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கடன்கள் படிப்படியாகக் குறையும். முருகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 08-08-2016 இரவு 10.25 மணி முதல் 11-08-2016 மதியம் 11.01 மணி வரை.

செப்டம்பர்

ஜென்ம ராசிக்கு 7-ல் குரு சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பாகும். எதிர்பாராத வகையில் பணவரவுகள் ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். நெருக்கடிகள் குறையும். எடுக்கும் காரியங்களில் வெற்றிகிட்டும். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல்களில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபம் காணமுடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிலும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நல்லது. ஆடம்பரமான செலவுகளைக் குறைப்பது உத்தமம். விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 05-09-2016 காலை 06.14 மணி முதல் 07-09-2016 மாலை 06.52 மணி வரை.

அக்டோபர்

மாதக்கோளான சூரியன் சாதகமின்றி சஞ்சரித்தாலும் 7-ல் குரு, 10-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு மகிழ்ச்சியளிக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். சனிக்கு பரிகாரம் செய்யவும்.

சந்திராஷ்டமம்: 02-10-2016 மதியம் 01.19 மணி முதல் 05-10-2016 அதிகாலை 01.57 மணி வரை மற்றும் 29-10-2016 இரவு 07.35 மணி முதல் 01-11-2016 காலை 08.15 மணி வரை.

நவம்பர்

மாதக்கோளான சூரியன் 8-ல் சஞ்சரித்தாலும் 7-ல் குரு, 11-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் தொழில், வியாபாரரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவை யற்ற அலைச்சல்களால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை நிலவும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமைவ தால் குடும்பத் தேவைகளனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம் 26-11-2016 அதிகாலை 01.33 மணி முதல் 28-11-2016 மதியம் 02.19 மணி வரை.

டிசம்பர்

மாதக்கோளான சூரியன் 9, 10-ல் சஞ்சரிப்பதும் 7-ல் குரு, 10-ல் சுக்கிரன் சஞ்சாரம்செய்வதும் பொருளாதாரரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், உத்தியோக ரீதியாகவும் புதிய வாய்ப்புகள் தேடிவரும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம்செலுத்துவது நல்லது. நெருங்கியவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். பெரிய மனிதர்களின் தொடர்புகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட் டாரத் தொடர்புகள் விரிவடையும். விநாயகரை வழிபடுவது உத்தமம்.

சந்திராஷ்டமம்: 23-12-2016 காலை 08.06 மணி முதல் 25-12-2016 இரவு 08.52 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 1, 2, 3, 9.

கிழமை: வியாழன், ஞாயிறு.

திசை: வடகிழக்கு.

நிறம்: மஞ்சள், சிவப்பு.

கல்: புஷ்பராகம்.

தெய்வம்: தட்சிணாமூர்த்தி

நன்றி ......http://worldkovil.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 25, 2015 6:16 pm

எனக்கு இவற்றில் நம்பிக்கை உண்டு
எனது ராசிக்கு பரவாயில்லை
அனைவரும் தியானம் செயுங்கள் தினமும் 10 நிமிடம்
வரும் துன்பம் விலகும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by முரளிராஜா Sun Dec 27, 2015 5:30 pm

விரிவான ராசிபலனை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !! Empty Re: 2016 ராசி பலன்கள்! உங்க ராசிக்கு என்ன யோகம்ன்னு பாருங்க !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum