தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 Empty என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Post by முழுமுதலோன் Sun Feb 07, 2016 2:48 pm

First topic message reminder :

“உலகத்திலேயே மிகச்சிறிய, மிகவும் பயனுள்ள பார்மஸி எது தெரியுமா? நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டிதான். குறிப்பாக, மழைக்காலத்தில் நம்மைப் பாடாய்ப்படுத்தும் ஜலதோஷம், இருமல், ஜுரம், உடல்வலி போன்ற பல்வேறு சங்கடங்களுக்கு… மிளகு, சீரகம், சுக்கு, தனியா போன்றவற்றின் மூலம் நிவாரணம் கிடைப்பதோடு, வரும் முன் காக்கவும் செய்யலாம்” என்று கூறுகிறார் சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா. அஞ்சறைப்பெட்டி பொருட்களுடன் வேப்பம்பூ, பூண்டு, இஞ்சி, வெற்றிலை, காய்கறி போன்றவற்றையும் பயன்படுத்தி, மழை  குளிர் சீஸனில் ஏற்படும் உடல் அசௌகரியங்களைத் தவிர்க்க உதவுவதோடு, ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கைகொடுக்கும் ’30 வகை பத்திய சமையல்’ ரெசிப்பிக்களை இங்கே வழங்கியிருக்கும் பத்மா,என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 P101
”இந்த ரெசிப்பிக்கள் நாவுக்கு ருசியாக இப்பதோடு… மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடத் தூண்டும் என்பது கூடுதல் சிறப்பு’ என்று உற்சாகம் பொங்க கூறுகிறார்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down


என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 Empty Re: என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Post by முழுமுதலோன் Sun Feb 07, 2016 3:08 pm

அகத்திக்கீரை பொரியல்
தேவையானவை: அகத்திக்கீரை  ஒரு சிறிய கட்டு, பாசிப்பருப்பு  ஒரு சிறிய கிண்ணம், பெரிய வெங்காயம்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), உளுத்தம்பருப்பு  அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  ஒன்று, கடுகு  அரை டீஸ்பூன், தேங்காய் துருவல்  2 டீஸ்பூன்,  எண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 25
செய்முறை: அகத்திக்கீரையையும், பாசிப்பருப்பையும் சேர்த்து, குறைவாக தண்ணீர் விட்டு வேகவிடவும். சிறிது வெந்ததும் உப்பு சேர்க்கவும். நன்கு வெந்த உடன்  பிழிந்து தண்ணீரை வடிகட்ட வும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து… உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய் சேர்த்துக் கிளறி, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, வேகவைத்த அகத்திக்கீரை  பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய்த் துருவல் தூவிக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: அகத்திக்கீரை, குடல்புண்ணுக்கு சிறந்த மருந்து.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 Empty Re: என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Post by முழுமுதலோன் Sun Feb 07, 2016 3:09 pm

தானிய உருண்டை மோர்க்குழம்பு
தேவையானவை: கொள்ளு, சோயா, துவரம்பருப்பு, சோளம்  தலா 25 கிராம், மிளகு  10, இஞ்சி  ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய்  ஒன்று,  தயிர்  300 மில்லி, தேங்காய்த் துருவல்  4 டீஸ்பூன், வெந்தயம், தனியா, சீரகம், கடுகு, உளுத்தம்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, நல்லெண்ணெய், உப்பு  தேவையான அளவு.
என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 26
செய்முறை: கொள்ளு, சோயா, துவரம்பருப்பு, சோளம் ஆகியவற்றை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு தண்ணீர் வடித்து இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு அரைத்த பருப்பைப் போட்டு உருட்டும் பதத்தில் கிளறி, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு தனியா, வெந்தயம், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்து அரைத்து, தயிரில் கலக்கவும். வேகவைத்த பருப்பு உருண்டைகளை அதில் போட்டு… எண்ணெயில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, லேசாக சூடாக்கி இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. சூடான சாதத்தில் குழம்பு விட்டு உருண்டையை தொட்டுக்கொண்டும்… உருண்டைகளை சாதத்தில் போட்டு  பிசைந்து, குழம்பு தொட்டுக்கொண்டும் விருப்பப்படி சாப்பிடலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 Empty Re: என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Post by முழுமுதலோன் Sun Feb 07, 2016 3:09 pm

கத்திரிக்காய் – முருங்கைக்காய் பொரியல்
தேவையானவை: பெரிய வெங்காயம்  இரண்டு, பிஞ்சுக் கத்திரிக்காய்  கால் கிலோ, முருங்கைக்காய், தக்காளி  தலா 2, தனியா, கடலைப்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய்  2, மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, கெட்டியான தேங்காய்ப்பால்  அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்  சிறிதளவு, உப்பு  தேவையான அளவு.
என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 27
செய்முறை: முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கத்திரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை வறுத்துப் பொடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மஞ்சள்தூள் சேர்த்து… நறுக்கிய தக்காளி, கத்திரிக்காய், முருங்கைக்காய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வறுத்துப் பொடித்த பொடி, தேவையான உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். கெட்டியானதும் தேங்காய்ப்பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 Empty Re: என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Post by முழுமுதலோன் Sun Feb 07, 2016 3:10 pm

அங்காயப் பொடி
தேவையானவை: கடுகு  25 கிராம், வேப்பம்பூ  ஒரு கைப்பிடி அளவு, சுக்கு  ஒரு சிறிய துண்டு, சுண்டைக்காய் வற்றல்  15, உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன், சீரகம்  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  இரண்டு கைப்பிடி அளவு, மிளகு  ஒரு டீஸ்பூன், பெருங்காயம்  சிறிதளவு, எண்ணெய், உப்பு  தேவையான அளவு,
என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 28
செய்முறை: கடுகு, வேப்பம்பூ, சுண்டைக்காய் வற்றல், சுக்கு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை தனித்தனியாக வெறும் வாணலியில் வறுக்கவும். பெருங்காயத்தை எண்ணெ யில் பொரிக்கவும். ஆறிய உடன் எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.
குறிப்பு: பிரசவித்த பெண்களுக்கு, இந்தப் பொடியை சூடான சாதத் தில் சேர்த்து, நெய் விட்டு கலந்து சாப்பிடக் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் காக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 Empty Re: என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Post by முழுமுதலோன் Sun Feb 07, 2016 3:11 pm

சுண்டைக்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: சுண்டைக் காய் வற்றல்  20, புளி  ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய்  2, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு  தலா கால் டீஸ்பூன், சாம்பார் பொடி  2 டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, நல்லெண்ணெய்  4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 29
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, சுண்டைக்காய் வற்றல் சேர்த்து வறுத்து, சாம்பார் பொடி சேர்த்துக் கிளறி, கறிவேப்பிலையை சேர்க்கவும். பிறகு புளியைக் கரைத்து விட்டு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இதற்கு தயிர் பச்சடி, சுட்ட அப்பளம் சிறந்த காம்பி னேஷன். சுண்டைக்காய் வற்றல் குழம்பு பித்தத்தைத் தணிக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 Empty Re: என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Post by முழுமுதலோன் Sun Feb 07, 2016 3:12 pm

மாங்காய் வற்றல் குழம்பு
தேவையானவை: உப்பு சேர்த்து காயவைத்த மாங்காய் வற்றல்  6 துண்டுகள், புளி   நெல்லிக்காய் அளவு, மிளகு  2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய்  2, தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன், கடுகு  அரை டீஸ்பூன், எண்ணெய்  25 மில்லி, உப்பு  தேவையான அளவு.
என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 30
செய்முறை: மாங்காய் வற்றலை ஊறவைக்கவும், வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகு, காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பை போட்டு வறுத்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மாங்காய் வற்றலையும் அரைக்கவும். எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து தேவையான உப்பு, புளிக் கரைசல் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இந்தக் குழம்பு, வயிற்றுப் புரட்டலில் இருந்து நிவாரணம் அளிக்கும்.
தொகுப்பு: பத்மினி
http://www.nermai-endrum.com/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

என் சமையல் அறையில் - பத்திய சமையல் - Page 2 Empty Re: என் சமையல் அறையில் - பத்திய சமையல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum