Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யானையிடம் மோதவந்த காளை!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
யானையிடம் மோதவந்த காளை!
வெகு காலத்திற்கு முன்பு வணிகன் ஒருவன் கடலையும்
எள்ளும் விதைத்து, அதன் மூலம் கடலை எண்ணெயும்,
நல்லெண்ணெயும் விற்றுப் பிழைத்து வந்தான்.
அவனது வேலைக்கு உதவியாக ஒற்றைக் கொம்பு கொண்ட
காளைமாடு ஒன்று அவனிடமிருந்தது. அதன் பெயர் துண்டா.
சில ஆண்டுகள் அந்த வணிகனுக்கு வியாபாரம் சிறப்பாக
நடந்தது. வரவர வியாபாரம் குறைந்தது. வறுமையில் வாடினான்.
பிழைப்புக்கே வழி இல்லாமல் திண்டாடினார்.
ஒருநாள் அவன் வெறுப்புடன் உட்கார்ந்திருந்தான்.
தன் தலைவிதியை நொந்தபடி ‘எங்கே போயிற்று என்
பசுமையான வாழ்வு’ இப்படி நான் எத்தனை நாள் வறுமையில்
வாடுவது என்று புலம்பினான் அழுதான்.
எதற்காய் அழுகிறாய்? என்று எங்கிருந்தோ சத்தம் கேட்டது.
நாளைக்கு மகாராஜாவிடம் போய், ‘என் காளைக்கும் உங்களுடைய
யானைக்கும் சண்டை போட்டி வையுங்கள் என்று கேட்டுக் கொள்.’
இதைக் கேட்ட வணிகனுக்கு வியப்பாக இருந்தது. அக்கம் பக்கத்தில்
யாரும் இல்லையே! எங்கிருந்து பேச்சு சத்தம் வருகிறது? மாட்டுக்
கொட்டிலிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு, அங்கே போய் நின்று
கவனித்தான். கொட்டிலில் அவன் காளை மாடான துண்டாவைத்
தவிர வேறு யாரும் இல்லை. மறுபடியும் அதே மாதிரி சொல்வதைக்
கேட்டான். பேசினது வேறு யாரும் இல்லை அவன் காளைமாடே!
அந்த மாட்டிடம் அவன் கேட்டான் ‘அடேய் மிகப் பலம் பொருந்திய
யானை எங்கே? ஒடிந்த கொம்புடைய நீ எங்கே?’
பதில் வந்தது, ‘நீங்கள் மகாராஜாவிடம் போய் முதலில் சொல்லுங்கள்.
அவர் கேட்டு, இது மிகவும் விநோதமாக இருக்கிறது என்பதற்காக
உடனே ஒப்புக் கொள்வார்.’
வணிகன் மகாராஜாவிடம் போய் விஷயத்தை சொன்னான்.
மகாராஜா இந்தப் புதிய சண்டையைப் பற்றி கேட்டு விநோதமாக
இருக்கிறதே! இருந்தாலும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று
காளை மாட்டுக்கும் தன் பட்டத்து யானைக்கும் சண்டைப் போட்டி
நடத்த ஒப்புக் கொண்டார்.
அதன் படி நகரம் முழுவதும் இந்தச் சண்டையைப் பார்க்க வரும்படி
தண்டோராப் போட்டுச் சொல்லச் சொன்னார்.
குறிப்பிட்ட நாளன்று வணிகன் தன் காளை மாட்டை அழைத்துக்
கொண்டு பந்தய மைதானத்திற்குச் சென்றான். அங்கே பட்டத்து
யானையும் வந்தது. கணக்கற்ற கூட்டம் கூடி விட்டது. கடைசியில்
மகாராஜா வந்ததும் போட்டி தொடங்கியது!

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: யானையிடம் மோதவந்த காளை!
யானையும் காளைமாடும் மெதுவாக நேருக்கு நேர் முட்டி மோதும்
பாவனையில் வந்தன. மக்கள் ‘என்ன நேருமோ?’ என்று மிக ஆவலுடன்
பார்த்துக் கொண்டே இருந்தார்கள். யானைக்கும், காளை மாட்டுக்கும்
தூரம் குறைந்தது. அவை நேருக்கு நேர் நெருங்கி வர வரக் கண்
கொட்டாமல் பார்த்தார்கள்.
எல்லோர் முகத்திலும் ஆவல். நிசப்தம் நிலவியது. யானையும் காளை
மாடும் இதோ மிக அருகில் வந்து விட்டன. இப்போது ஒரே மோதல்…
அதற்குள்…
என்ன நேர்ந்தது என்று யாரும் அறிவதற்கு முன்வே யானை, காளை
மாட்டைக் கண்டு பயந்து ஓடி போய்விட்டது. ஜனங்கள் வியப்புடம்
வாயடைத்து நின்று விட்டார்கள். கொம்பைப் பிடித்து ஒரே அடியில்
காளைமாட்டைச் சட்டினியாக்கும் என்று பார்த்தால் இப்படி பயந்து
ஓடிவிட்டதே என்று பேசிக் கொண்டார்கள்.
காளைமாடு வெற்றி பெற்றதால், அதற்கு உரிமையாளனான
வணிகனுக்கு இரண்டாயிரம் பொன் கொடுத்தார் மகாராஜா.
வீடு திரும்பியதும் காளைமாடு வணிகனைப் பார்த்து, ‘எஜமான்,
நான் போகிறேன்’ என்றது.
‘போகிறாயா’ என்று கேட்டான்.
‘இப்பொழுது நீ லட்சுமியை வீட்டுக்குக் கொண்டு வந்தாய். நாம்
மறுபடியுமு் எண்ணெய்த் தொழிலைத் தொடங்குவேம்.
உன் திறமையினால் தான் நான் மறுவாழ்வு பெற்றேன். என்னை விட்டு
போகாதே’ என்றான்.
‘இந்த உலகத்துக்கு ராம் ராம் சொல்லிவிட்டுப் போகிறேன்.
என்னுடைய பிறவித் தொடர் முடிகிறது’
‘நீ ஏன் இப்படிப் பேசுகிறாய்? பிறவிக் கடன் ஒவ்வொரு பிறவியிலும்
தொடர்கிறது’ என்றான்.
‘வணிகனே! போன பிறவியில் நான் உன்னிடமிருந்து இரண்டாயிரம்
பொன் கடன் வாங்கி இருந்தேன். அதை அடைப்பதற்காக இந்தப் பிறவியில்
உன்னிடம் வேலை செய்யும்படி ஆயிற்று.
மகாராஜாவின் யானைதான் போன பிறவியில் என்னிடம் பணம் கடன்
வாங்கி இருந்தான்.
அதை அவன் தீர்க்கவில்லை. இந்த பிறவியில் யானையாகப் பிறந்து
மகாராஜாவிடம் வேலை பார்க்கிறான் என்று எனக்குத் தெரிந்தது.
சண்டைப் போட்டியில் நேருக்கு நேர் நெருங்கி வந்து என்னைப் பார்த்ததும்
போன பிறவியில் நான் பணம் கொடுத்தவன் என்று தெரிய வந்ததும்
பயந்து ஓடி விட்டான்.
இன்னொரு வேடிக்கையை கேள். இந்த அரசனுக்கு யானைக்கும் போன
பிறவியில் கொடுக்கல் வாங்கல் இருந்திருக்கிறது. அதனால்தான், அவன்
உனக்கு இரண்டாயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான்.
இப்படிப் பிறவிதோறும் பட்ட கடனைத் தீர்க்கவே மறு பிறவியை நாம்
அடைகிறோம். என் பிறவிக் கடன் முடிந்தது. வருகிறேன்.
அன்றைய இரவே காளை மாடு வேறோர் இடத்தில் உயிர் நீர்த்தது.’
அதே மாதிரி யானையும் உயிரை விட்டது.
–
—————————————
வீரசிகாமணி ஆதினமிளகி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|