தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரையை வெல்லலாம்

View previous topic View next topic Go down

சர்க்கரையை வெல்லலாம் Empty சர்க்கரையை வெல்லலாம்

Post by rammalar Fri Apr 21, 2017 11:23 am

[You must be registered and logged in to see this link.]
-
டயாபடீஸ் டயட் – 4 கட்டளைகள்
---
இந்தக் காலத்தில் சரியான உணவைத் தேர்வுசெய்வதுதான் மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கிறது. `ஆரோக்கியமான உணவு இதுதான்’ என்று மிகத் தெளிவாக ஒரே ஓர் உணவைப் பரிந்துரைக்க முடியாது. அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, உணவுப்பழக்கம் திட்டமிடப்பட வேண்டும்.
-
நாம் சாப்பிடும் எந்த ஓர் உணவும் ஆற்றலாக மாற்றப்படுகிறது. நம் ஆற்றலின் முக்கிய ஆதாரமாக இருப்பது, குளுக்கோஸ். இது ஒருவகையான சர்க்கரை. கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை தேவைக்கு ஏற்ப நம் உடலில் குளுக்கோஸாக மாற்றப்படுகின்றன.
-
இதில், கார்போஹைட்ரேட் உணவுகள் ரத்தத்தில் சர்க்கரை அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நம்முடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க நாம் சாப்பிடும் உணவின் தரம் மற்றும் அளவு மிக முக்கியம்.

இதைத் தெரிந்துகொள்வதன் மூலமே ஒருவரால் ஆரோக்கியமான உணவுப்பழக்க வழக்கத்துக்குத் தன்னை மாற்றிக்கொள்ள முடியும்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சர்க்கரையை வெல்லலாம் Empty Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by rammalar Fri Apr 21, 2017 11:24 am

1.சிறிய அளவில், அவ்வப்போது தொடர்ந்து உணவு உட்கொள்ளுதல்
நாம் இப்போது மூன்றுவேளை உணவு உட்கொள்கிறோம். வயிற்றை நிரப்பும் அளவுக்கு உணவு எடுத்துக்கொள்கிறோம். இதற்குப் பதில், உணவைப் பிரித்து ஆறு முறை எடுத்துக்கொள்ளும்போது, திடீரென ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் நிலை தடுக்கப்படுகிறது. இதற்காக, உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும் கூடாது.
-
2.கார்போஹைட்ரேட்டை கட்டுக்குள்வைத்தல்
எவ்வளவு கார்போஹைட்ரேட் உணவு உட்கொள்கிறோம் என்ற விழிப்புடன் இருக்க வேண்டும். கார்போஹைட்ரேட் என்றால் வெறும் சர்க்கரை மட்டும் அல்ல, அதிகப்படியான அரிசி, மைதா உணவுகளில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சர்க்கரையை வெல்லலாம் Empty Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by rammalar Fri Apr 21, 2017 11:25 am

[You must be registered and logged in to see this image.]
-
3.விதவிதமாகச் சாப்பிடுதல்

முழு தானியம், பழங்கள், காய்கறிகள் என அனைத்து
விதமான உணவுகளும் இருக்கும்படியாக நம்முடைய
உணவுப் பழக்கத்தைத் திட்டமிட வேண்டும்.

ஒரே வகை உணவில் இருந்து எல்லா சத்துக்களும்
கிடைக்காது. எல்லா வகை உணவும் எடுக்கும்போது,
வைட்டமின், தாதுஉப்புக்கள், நார்ச்சத்து நிறைவாக
உள்ளன. மிகக் குறைவான கலோரி இருக்கிறது.
கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை; மிகக் குறைந்த
அளவில் கொழுப்புச்சத்தும் கிடைக்கிறது.

4.கொழுப்பு உணவைக் குறைத்தல்

எந்த ஓர் ஆரோக்கியமான நபரும் கொழுப்பில் இருந்து
பெறும் கலோரி, 30 சதவிகிதத்தைத் தாண்டாத
வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும்.

என்னுடைய தட்டை எப்படி உருவாக்குவது?

சமச்சீரான உணவு என்பதுதான் இதன் சிறப்பு.
இது மிகவும் எளிமையானது. இதை நம் தினசரி வாழ்வில்
பின்பற்றினால், ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.

இதற்கு உங்கள் தட்டில் பாதியை, கார்போஹைட்ரேட்
இல்லாத (Non starchy) பழங்கள், காய்கறிகளால் நிரப்புங்கள்.
மீதி இருக்கும் அரைத் தட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.

ஒரு பகுதியில் கார்போ ஹைட்ரேட் உணவையும் இன்னொரு
பகுதியில் புரதச்சத்து உள்ள உணவையும் வைக்க வேண்டும்.

ஒரு கிளாஸ் குறைந்த கொழுப்பு உள்ள பால் அல்லது பால்
பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். இதைத் தொடர்ந்து
பின்பற்றினால், அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும்
நிறைவாகக் கிடைக்கும்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சர்க்கரையை வெல்லலாம் Empty Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by rammalar Fri Apr 21, 2017 11:26 am

காய்கறி, பழங்கள்

சர்க்கரை நோயாளிகள் பழங்கள் எடுத்துக்கொள்ளக்
கூடாது என்ற தவறான கருத்து உள்ளது.
சில பழங்க ளை மட்டும் தவிர்த்தால் போதும்.
மற்றபடி, காய்கறி, பழங்கள்தான் சர்க்கரை
நோயாளிகளுக்குத் தேவையான வைட்டமின்,
தாதுஉப்புக்கள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்களைக்
கொண்டு உள்ளன.

சிப்ஸ், இனிப்புகளுக்குப் பதில் காய்கறி, பழங்களால்
ஆன சாலட் எடுத்துக்கொள்ளலாம்.

பழச்சாறு, பாட்டிலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளுக்குப்
பதில் பழங்களாகக் கடித்துச் சாப்பிடுவது நல்லது.

பச்சை, மஞ்சள், ஆரஞ்சு நிறக் காய்கறிகள் ப
ரிந்துரைக்கப்படுகின்றன.

முழு தானியங்கள்,
ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டை அளிக்கிறது.
ஒரே வகையான தானியத்தைஎடுப்பதைத் தவிர்த்து,
கேழ்வரகு, கம்பு, தினை என விதவிதமாக எடுத்துக்கொள்ளலாம்.


மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள ஆலிவ், கனோலா,
கடலை எண்ணெய், மிகக் குறைந்த அளவில் பாலி
சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள கார்ன், எள், சூரியகாந்தி
எண்ணெய் எடுத்துக்கொள்ளலாம். சாச்சுரேட்டட் ஃபேட்
உள்ள கொழுப்பு நிறைந்த இறைச்சி, பால் பொருட்கள்,
தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவற்றை எடுத்து
கொள்வதை மிகக் குறைந்த அளவாக மாற்றிக்கொள்ளலாம்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சர்க்கரையை வெல்லலாம் Empty Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by rammalar Fri Apr 21, 2017 11:26 am

ஸ்வீட்டர்: நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்றால்,
நேரடியாக பாக்கெட்டில் இருந்து எடுத்துச் சாப்பிடுவதைத்
தவிர்க்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிறிது கொட்டி,
மீதியை மூடி வைத்துவிட்டுச் சாப்பிடுவது நல்லது.

டயாபடீஸ் டவுட்

“சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ எடுத்துக்கொள்ளலாம்
என்று சொல்கிறார்களே. எனக்குச் சர்க்கரை நோய் உள்ளது.
நான் போதுமான அளவு சுகர் ஃப்ரீ உணவுகளை
எடுத்துக்கொள்ளலாமா?”

“சுகர் ஃப்ரீ என்றால், அது கார்போஹைட்ரேட், கலோரி, கொழுப்பு
இல்லாத உணவு என அர்த்தம் இல்லை.
சில சுகர் ஃப்ரீ உணவுகளில், மற்ற உணவுகளில் உள்ளது
போலவே கலோரி, கார்போஹைட்ரேட் உள்ளன. எனவே,
இதை `சுகர் ஃப்ரீ’ என்று சொல்ல முடியாது.

இத்தகைய உணவுகளை உட்கொள்ளும் முன் அதன்
லேபிளைப் பார்க்க வேண்டியது அவசியம். சந்தேகம்
இருந்தால், டாக்டர் மற்றும் டயட்டீஷியனின்
ஆலோசனையைப் பெற வேண்டும்.”
0
நன்றி-விகடன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

சர்க்கரையை வெல்லலாம் Empty Re: சர்க்கரையை வெல்லலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum