தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.

View previous topic View next topic Go down

எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.  Empty எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.

Post by செந்தில் Sat Feb 09, 2013 6:52 pm

எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.  537280_331994343581645_877977295_n
எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும். . . .

எலும்பு அடர்த்தித் தேய்வு அதாவது எலும்பில் உள்ள மினரல் அடர்த்தி குறைந்து எலும்புகள் பலவீனமடைந்து சிறு விபத்தானாலும் எலும்பு முறிவு ஏற்படும் சாத்தியங்கள் அதிகரிப்பதே எலும்பு தேய்மானம் எனும் ஆஸ்டியோபொரோசிஸ் எனும் நோய்.

நோயற்றவர்களுடைய எலும்பின் உட்பகுதி தேன் நிறைந்த தேன் கூடு போலவும், நோய் உள்ளவர்களின் எலும்பின் உட்பகுதி தேன் இல்லாத தேன் கூடு போலவும் தோற்றமளிக்கும். உண்மையிலே இது ஒரு நோயல்ல சக்தி குறைபாடே.

பலவீனமடையும் எலும்புகள். . .

ஆண்களில் வயதானவர்களையும், பெண்களுக்கு மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலத்திலும் எலும்பு தேய்மான நோய் பாதிக்கிறது. பொதுவாக 45 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகளில் மூவரில் ஒருவருக்கு எலும்புத் தேய்மான நோய் இருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகின்றது.

இந்த நோய் ஏற்பட்டால் எலும்பு கிட்டத்தட்ட பஞ்சு போல் ஆகிவிடும் என்று எலும்பு நோய் சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உடலில் கால்சியம் சத்து குறைவதும், வைட்டமின் "D" குறைபாடும் பெரும்பாலும் இந்த நோய்க்குக் காரணமாவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்களைப் பொறுத்தவரை புகைப்பழக்கம், மேலதிகமான குடிப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, கால்சியம் குறைவான உணவுப் பழக்க முறை ஆகியவை ஆஸ்டியோபொரோசிஸ் நோய்க்கு முக்கிய காரணமாக அமைகின்றது.

மெனோபாஸ் பருவம். . .

மாதவிடாய் காலம் முடிந்த பிறகு ஈஸ்ட்ரோஜென் உடலில் குறைந்து விடுவதால் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. முக்கியமாக பெண்களில் "மெனோபாஸ்" எனும் மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் காலகட்டங்களில் உடலில் ஏற்படும் ஹோர்மோன் மாறுபாடுகளால் எலும்புகளில் கல்சியம் உப்பை சேகரித்து வைக்கும் பண்புகள் வலுவிழந்து இந்த குறைபாடு ஏற்படுகிறது.

அதிலும் குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பலர் கர்ப்பப்பையை அகற்றுவதும் ஆஸ்டியோபொரோசிஸ் ஏற்பட காரணமாகிறது.

வைட்டமின் "D" குறைபாடு. . .

கிராமப்புறங்களில் குழந்தைப்பருவம் முதலே கால்சியம் சத்தில்லாத உணவு பழக்க வழக்கம் இருந்து வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு பால் சத்து குறைவதும் ஆஸ்டியோபொரோசிஸிற்கு ஒரு முக்கியக் காரணம்.

கல்சியம் சத்து குறைவு மட்டுமல்ல வைட்டமின் டி குறைவு, ஊட்டச்சத்தில்லாத உணவு, சூரிய ஒளியிருந்து தப்பித்து வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது, வேலைப்பளு இல்லாமல் உட்கார்ந்தபடியே இருப்பது ஆகியவை மற்றும் மரபுக்காரணங்களாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

வருமுன் காப்போம். . .

குறிப்பாக குந்தைகள் இன்று குளிர்பானங்களை அதிகம் விரும்புகின்றனர். பாட்டில்களில், டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பொஸ்பேட் சத்து அதிகம். பொஸ்பேட்டுகள் அதிகமானால் எலும்புகளுக்குச் செல்லும் கல்சியம் சத்து கடுமையாக குறையும். எனவே குழந்தைகள் இந்த குளிப்பானங்களை குடிப்பதை ஊக்குவிக்கக் கூடாது. சிறுவயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் கால்சியம் அளவைத் தக்கவைக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த எலும்புத் தேய்மானம் ஏற்படுவதற்கான முன் அறிகுறிகள் என்று குறிப்பிடும்படியாக எதுவும் இல்லை என்பதே இதனை கணிக்க முடியாமல் போவதோடு, தவறான கணிப்புகளுக்கும் இடமளிக்கும் அபாயமும் இதில் உள்ளது. மேலும் எலும்பு தேய்மானம் துவங்கிவிட்டால் அதனை மீண்டும் பலம்பெறச் செய்வது கடினம். எனவே வரும் முன் காப்பதே சிறந்தது என்று அறிவுறுத்துகின்றனர்.

மனிதன் முதுமை அடையும் போது உடல் உறுப்புகளின் ஏற்படும் செயல் மாற்றங்களினால் எலும்புகளும் சேதமடைய ஆரம்பிக்கின்றன. இதனை நாம் எமக்கு ஏற்படும் பக்க வீளைவுகளில் இருந்து உணர முடியும். வயது செல்லச் செல்ல தேய்வுகள் அதிகமாக நோயின் தீவிரம் ஆளைக் முடக்கும் அளவிற்கு வலிமை பெறுகின்றது. நோய்க்கான காரணங்களை அறிந்து அவற்றிக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்வதன் மூலம் முதுமையிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.

எலும்பு தேய்யமானம் என்னும் நோய் பொதுவாக பெண்களை அதிகமாக அவதிக்குள்ளாக்கிவிடுகிறது. பெண்களை 45 வயது முதல் இந்த நோயின் தாக்கம் ஆரம்பிக்கத் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க நோயின் தீவிரம் அதிகரித்து மிக பாரதூரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

எலும்புகள் உறுதியானதாக அமைய முக்கியமாக கல்சியம் என்ற தாது உப்பு.அவசியமாகின்றது. இந்த தாது உப்பை நாம் உண்ணும் உணவில் இருந்து எலும்புகள் எடுத்துக்கொள்ளுகின்றன. நாம் முதுமையை நெருங்க நெருங்க இத் தன்மை மெதுவாக குறைந்து மறைந்து போய்விடுவதால் எலும்புகளில் கல்சியக் குறைபாடு ஏற்படுவதால் தேய்மானம் ஏற்படுகின்றது..

எலும்புகள் வலுவிழப்பதால் ஏற்படும் முக்கிய சில பக்கவிளைவுகள் வருமாறு. . .

1 . எலும்பு முறிவு
2 . மூட்டு வலி
3 . மூட்டு வாதம்
4 . கழுத்து எலும்பு தேய்மானம்
5 . முதுகு எலும்பு தேய்மானம்
6 . முதுகு வலி
7 . உடல் சோர்வு
8. அசதி
9 . முதுகு எலும்பு வளைந்து கூன் விழுதல்
10 . நடையில் தளர்வு இதுபோன்ற பக்க விளைவுகளால் பலரும் தமது சிரமத்திற்குள்ளாகிறார்கள்

எலும்பு என்பது மனிதனின் உடலில் காணப்படும் விறைப்பான, கடினத்தன்மை கொண்ட உறுப்பாகும். உடல் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக அமைந்து உடலைத் தாங்கும் உறுப்புகள்தான் எலும்புகள்.

மனிதனின் உடலமைப்பை நிர்ணயம் செய்வதும் எலும்புகளே. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அதன் நீட்டம், ஒடுக்கமே ஒருவரின் உயரம், பருமன் என்பனவற்றை நிர்ணயிக்கின்றது. ஒருவரை நகர வைப்பதும், செயல்பெறச் செய்வதும், உறுதியான தோற்றத்தைக் கொடுப்பதும் எலும்புகள்தான். இவைகள் பாதிக்கப்பட்டால் மனிதன் அலங்கோலமான ஜந்துவாக மாறிவிடுவான்.

எலும்புகள் இரத்த சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், குருதிச் சிறுதட்டுகள் போன்ற முக்கிய இரத்த உறுப்புகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் அமைந்துள்ளன. மேலும் கனிமங்களை சேகரித்து வைக்கும் சேமிப்பு கூடமாகவும் எலும்புகள் உள்ளன.

பொதுவாக எலும்புகள் பலவகையான வடிவங்களில் அமைந்துள்ளன. இவற்றில் சில சிறியனவாகவும், பெரியனவாகவும் காணப்படும். அது போல் மிகவும் உறுதியான எலும்புகளும் உறுதி குறைந்த எலும்புகளும் உள்ளன. இவை மனிதனின் அனைத்து உறுப்புகளையும் பாதுகாப்பதற்கு தகுந்தவாறு அமைந்துள்ளன.

எலும்பை உருவாக்கும் திசுக்களில் ஒருவகை கனிமங்கள் நிறைந் துள்ளன. இவை தேன் கூட்டு அமைப்பை ஒத்துக்காணப்படும் முப்பரிமாண உள்ளமைப்புகளைக் கொண்டு எலும்புகளுக்கு விறைப்புத் தன்மையை கொடுப்பது எலும்புத் திசுக்கள்தான்.

மேலும் எலும்புகளில் எலும்பு மஜ்ஜை, எண் புழை, நரம்பு, இரத்த அணுக்கள், குருத்தெலும்பு போன்றவை அடங்கும். எலும்புகள் உடலுக்கு ஆதாரமாக இருப்பதுடன் தசை நரம்புகளுக்கு பற்றுக் கோளாகவும் அமைந்துள்ளது

மூளை, கண், இதயம், நுரையீரல் போன்ற மென்மையான உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்றவாறு எலும்புகள் அமைந்துள்ளன. இந்த எலும்புகளில் 50 சதவீதம் நீரும், 33 சதவீதம் உப்புக்களும் 17 சதவீதம் மற்ற பொருட்களும் அடங்கியுள்ளன.

எலும்பில் கல்சியம், பொஸ்பேட் போன்ற அமிலத்தில் கரையக் கூடிய தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன. நமது உடல் நலத்திற்குத் தேவையான கல்சியம் சத்துக்கள் அனைத்தும் எலும்புகளில் தான் சேமித்து வைக்கப்பெறுகின்றன. இந்த கல்சியம் சத்துக் குறைந்தால் எலும்புகள் பலமிழந்து எளிதில் உடைந்துவிடும்.

எலும்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தால்தான் சீரான முறையில் அவைகள் செயல்பட முடியும். அவ்வாறு பொருந்தும் இடங்களுக்கு "மூட்டுகள்" என்று பெயர். அசையும் மூட்டு, அசையா மூட்டு என இரு வகை மூட்டுகள் உள்ளன. தலையிலும், இடுப்பிலும் காணப்படும் எலும்புகள் அசையாமூட்டுகள் ஆகும்.

அசையும் மூட்டுகள் நான்கு வகைப்படும். . .

* பந்துக்கிண்ண மூட்டு
* கீழ் மூட்டு
* வழுக்கு மூட்டு
* செக்கு மூட்டு

இந்த நால்வகை அசையும் மூட்டுகள் இயங்கும்போது அதிர்ச்சியோ, தேய்மானமோ ஏற்படாமல் இருப்பதற்கு எலும்புகளின் முனையில் குருத்தெலும்புகள் மூடப்பட்டு அதன் உட்புறத்தில் ஒரு மெல்லிய திசுப்படலம் அமைந்து அதில் ஒரு வழு வழுப்பான திரவம் சுரந்து மூட்டுகளின் செயல்பாடுகளை எளிதாக்குகிறது. மேலும் மூட்டுகள் அசையும்போது எலும்புகள் நழுவாமல் இருக்க தசை நார்களால் பின்னப்பட்டுள்ளன.

எலும்புகளில் சின்ன எலும்பு காதில் உள்ள "ஏந்தி" என்ற எலும்பாகும். மிகப் பெரிய எலும்பு "தொடை எலும்பாகும்". மனிதனின் மார்புக் கூட்டில் மார்பெலும்புடன் விலா எலும்புகள் 24 உள்ளன. இவை 12 ஜோடியாக முள்ளந்தண்டுடன் இணைக்கப்பெற்று ஒரு கூடுபோல் காட்சியளிக்கும். இக்கூட்டினுள் இதயம், நுரையீரல், போன்றவற்றை பாதுகாக்கப்பெறுகின்றன.

சாதாரணமாக பிறந்த குழந்தைக்கு 306 எலும்புகள் காணப்படும். பின் குழந்தை வளரும்போது படிப்படியாக பல எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பெரிய வலுவான எலும்பாக மாறும். நன்கு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு 206 எலும்புகள் இருக்கும்.

தலைப்பகுதியில் அதாவது மண்டையோட்டில் 8 எலும்புகள் உள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து கடினமாக உள்ளன.
மண்டையறை எலும்புகள் – 8
முக எலும்பு – 14
காது எலும்புகள் – 6
(மேலஸ், இன்கஸ், ஸ்டேப்பிஸ்)
தொண்டை எலும்பு – 1
தோள்பட்டை எலும்பு – 4
(காறை எலும்பு – 2, தோள் எலும்பு – 2)
மார்புக் கூட்டில் – 25
(மார்பெலும்பு – 1, விலா எலும்பு – 24)
முதுகெலும்புத் தூண் – 24
மேற்கைகளில் – 6
கைகளில் – 54
இடுப்புக்கூடு – 4
கால்களில் – 8
கால்களின் கீழ் பகுதியில் – 52

இவ் நோய் வராது தடுப்பது ஒன்றே சரியான தீர்வு, அதை எப்படி செய்வது. . .?

1 . எலும்புகளின் தன்மையை அதன் உறுதியைப் பாதுகாக்க தினமும் உடற்பயற்சி செய்வது மிக முக்கிய தடுப்பு முறையாகும்.

2 . வலி வந்து விடுமே என்ற பயத்தில் சிலர் நடப்பதை முற்றிலும் தவிர்ப்பார்கள். இது மிகவும் தவறானது. இது நோயின் வீரியத்தை இன்னும் அதிகப்படுத்தும். அதாவது குறைந்தது ஒரு மணி நேரம் நடைப்பயற்சி செய்வது மிக முக்கியம்.

3 . நடைப்பயற்சி செய்வதை முறையாக செய்வது நல்லது, அதாவது சரியான காலணிகள் அணிவதால் முழங்காலில் ஏற்படும் வலி வாதம் இவற்றைத் தவிர்க்கலாம்.

4 . மிகவும் வயது முதிர்ந்தவர்கள் குறைந்தது இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை படுக்கையில் இருந்து எழுந்து நிற்க வேண்டும்.

5 . குறைந்தது பதினைந்து நிமிடமாவது சூரிய ஒளி உடலில் படுவது அவசியம். அதாவது இதன் மூலம் எலும்புகளுக்குத் தேவையான வைட்டமின் டி தோல் மூலம் உறிஞ்சப்படும்.

6 . கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், கீரை, தானியங்கள் போன்றவற்றை தினமும் உணவில் சேர்ப்பது மிக முக்கியம். இது எலும்புகளை வலுப்படுத்த உதவும்.

7 . பச்சை காய்கறிகளில் கால்சியம் அதிகமாக உள்ளதால் காய்கறிகளை விரும்பி உண்ணுங்கள்.
8 . சோயா தானியத்தில் மிக அதிகம் கால்சியம் உள்ளதால் இதை உணவில் சேர்த்துக்கொள்ள பழகுங்கள்.

9 . காபி அதிகம் பருகுவதைத் தவிர்ப்பது நல்லது, இது உடலில் இருந்து கால்சியம் வெளியேறுவதை அதிகப்படுத்தும்.

10 . மீன் உணவுகளை தினம்தோறும் சேர்த்துக் கொள்வது நல்லது.

11 . புகைபிடிப்பது, மது அருந்துவது உடலில் உள்ள கால்சியம் அளவை குறைக்க வாய்ப்புள்ளதால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

12 . பால் இரவில் அதிகம் எடுப்பதை விட மாலை அல்லது காலை வேளைகளில் எடுத்துக் கொள்வதால் தூக்கம் தடைபடுவதைத் தவிர்க்கலாம்.

13. கால்சியம் இப்பொழுது மாத்திரை வடிவில் கிடைக்கிறது, இதனை உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.

முதுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் தவிர்க்க முடியாத ஒன்று. இதனை நாம் சரி செய்து கொள்ள மேலே கூறப்பெற்ற அறிவுரைகளைப் பின்பற்றுவதன் மூலம் மூலம் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இது போன்ற பக்கவிளைவுகளை தவிர்த்து மகிழ்வாக வாழலாம். —
நன்றி -முகநூல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum