Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை
Page 1 of 1 • Share
பெங்களூர்: பட்டதாரி பெண்ணை 4 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்த கொடுமை
பெங்களூர், ஜூன்.5-
'ஹை-டெக் சிட்டி', 'சிலிக்கான் நகரம்', 'தகவல் தொழில்நுட்ப நகரம்', 'பூங்கா நகரம்' என்று பல்வேறு சிறப்பு பெயர்களை பெற்றுள்ள பெங்களூர் நகரில் சமீப காலமாக குற்ற செயல்களும் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
இந்த நிலையில், இளம்பெண் ஒருவரை 4 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்து சித்ரவதை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. பரிதாபத்துக்கு உரிய அந்த அபலைப் பெண்ணின் பெயர் ஹேமாவதி (வயது 30). பெங்களூர் மல்லேசுவரம் 16-வது கிராஸ் பகுதியை சேர்ந்த ரேணுகப்பா, புட்ட கவுரம்மா தம்பதிகளின் மகள். பி.காம். பட்டதாரி.
ஹேமாவதியை வீட்டில் பூட்டி சிறை வைத்து இருப்பதாக அந்தப் பகுதியை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே, வாலிபர்கள் சிலர் அந்த வீட்டுக்கு சென்று பார்க்க முயன்றனர். ஆனால், அவர்களை ஹேமாவதியின் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
வீட்டில் யாரும் சிறை வைக்கப்படவில்லை என்று கூறி அவர்களை வெளியே செல்லும்படி திட்டி அனுப்பினார்கள். அப்போது, அந்த வீட்டுக்குள் இருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் வாலிபர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் உடனடியாக மல்லேசுவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் சுகாதாரத்துறை மந்திரி யு.டி.காதருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக மந்திரி யு.டி.காதரும், போலீசாரும், மருத்துவ குழுவினருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். வீட்டுக்குள் சென்ற அவர்கள், அங்கு இளம்பெண் ஹேமாவதி கிடந்த நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மந்திரி யு.டி.காதர் கண் கலங்கினார்.
ஹேமாவதி ஒரு மூலையில் முடங்கிப்போய் கிடந்தார். அவரது தலை முடி சிக்கல், சிக்கலாக காணப்பட்டது. உடல் வலுவிழந்த நிலையில் சுருண்டு போய் படுத்து இருந்தார். கை, கால்களில் நகங்கள் வெட்டப்படாமல் தாறுமாறாக வளர்ந்து கோரமாக காட்சி அளித்தது. சரியான உடைகூட கொடுக்கப்படாமல், அரைகுறை ஆடையுடன் அலங்கோலமாகக் கிடந்தார்.
ஒரு பட்டதாரி பெண்ணுக்கா இப்படி ஒரு நிலை என்று கூறும் அளவுக்கு ஹேமாவதியின் நிலை பரிதாபமாக இருந்தது. அவரை 4 ஆண்டுக்கும் மேலாக அவரது பெற்றோர் வீட்டில் சிறை வைத்திருக்கலாம் என்று தெரிகிறது. இருளிலேயே பல ஆண்டுகளை கழித்ததால் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிகிறது.
ஹேமாவதியின் நிலைமையை பார்த்து மனம் உடைந்து போன மந்திரி யு.டி.காதர் கனத்த இதயத்துடன் அவரிடம் பேச முயன்றார். ஆனால், மந்திரியின் பேச்சை உணரக்கூடிய நிலையில் ஹேமாவதியின் உடல் வலிமையும், மனநலமும் இல்லை. இதனால் ஹேமாவதியின் தந்தை ரேணுகப்பாவிடம் மந்திரி சில விவரங்களை கேட்டு அறிந்தார்.
அதன்பிறகு ஹேமாவதிக்கு வீட்டில் வைத்தே மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஹேமாவதியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கும்படி மந்திரி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று, ஹேமாவதியை தேசிய மனநல ஆஸ்பத்திரிக்கு (நிமான்ஸ்) கொண்டு சென்று சேர்த்தனர்.
அங்கு அவருக்கு முதலில் ரத்த பரிசோதனை செய்து, பின்னர் மனநலம் தொடர்பான சிகிச்சையை டாக்டர் குழுவினர் அளித்து வருகிறார்கள். ஹேமாவதியின் சோக வாழ்க்கை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹேமாவதி படிப்பில் கெட்டிக்காரர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 'ரேங்க்' பெற்றவர்.
பி.யூ.சி. பரீட்சையிலும் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த அவர், 'பி.காம்.' பட்டப் படிப்பிலும் சிறப்பான தேர்ச்சி பெற்றவர். ஹேமாவதியின் திறமையை பார்த்த 'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்' ஒருவர், அவரை தன்னிடம் வேலைக்கு சேர்த்து பயிற்சி அளித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், அதில் ஹேமாவதியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், அவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அவர்கள் நிறுத்தியதாக தெரிகிறது. ஹேமாவதி வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், அதில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், அந்தக் காதலை கைவிடும்படி அவர்கள் கூறியதை ஹேமாவதி கேட்கவில்லை என்றும், இதனால் அவரை வீட்டில் சிறை வைத்ததாகவும் அக்கம், பக்கத்தினர் கூறுகிறார்கள்.
ஆனால், ஹேமாவதியை தான் வீட்டில் சிறை வைக்கவில்லை என்று தந்தை ரேணுகப்பா மறுத்தார். ''எங்கள் மகளை நாங்கள் சிறை வைக்கவில்லை. அவளுக்கு உடல் நலம் சரியில்லை. அவளது கை, கால்களில் உணர்வு இல்லை. இதற்கு வேறு அர்த்தம் எதுவும் கற்பிக்க வேண்டாம்'' என்று அவரது தந்தை கூறினார்.
ஹேமாவதியின் தம்பி சோமசேகர் கூறும்போது, ''எனது அக்காள் நன்றாக இருந்தார். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளித்தோம். இதனால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தோம்'' என்றார்.
ஹேமாவதி அவரது பெற்றோரால் சிறை வைக்கப்பட்டாரா? அல்லது அவரது தந்தை கூறுவது போல் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளாரா? என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவில்லை.
ஆனால், பள்ளி, கல்லூரி வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவித்த அவர் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிச்சத்தையே பார்க்காமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்து, அதனால் மனம் பாதித்த சம்பவம் அந்த பகுதியில் மட்டும் அல்லாமல் கர்நாடகம் முழுவதும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்துக்கு இந்திய மனித உரிமைகள் ஆணையமும், இந்திய மகளிர் ஆணையமும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த கொடூர சித்ரவதை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள்.
தகவல் தளம்
Similar topics
» மான் வேட்டையாடிய வழக்கு : நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை
» கொடுமையிலும் கொடுமை ..!
» தனிமை கொடுமையிலும் கொடுமை ...
» ஒரு பெண்ணை பழிவாங்குவது எப்படி?
» பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
» கொடுமையிலும் கொடுமை ..!
» தனிமை கொடுமையிலும் கொடுமை ...
» ஒரு பெண்ணை பழிவாங்குவது எப்படி?
» பெங்களூர் விமானநிலையத்தில் இளையராஜாவுக்கு நேர்ந்தது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum