தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சேக்கிழார்

View previous topic View next topic Go down

சேக்கிழார் Empty சேக்கிழார்

Post by மகா பிரபு Mon Jun 10, 2013 11:09 am

பெரிய புராணம் என்னும் அற்புத காவியத்தை ஆன்மிக உலகிற்கு அளித்தவர் சேக்கிழார். இவர் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் அருண்மொழி தேவர்.
சேக்கிழாரின் தந்தை, அநபாய சோழ மன்னனின் அமைச்சராக இருந்தார். அரண் மனைக்கு செல்லும் போதெல்லாம், மகனையும் உடன் அழைத்து செல்வார். அங்கு நடக்கும் அரசியல் நடவடிக்கை களை சேக்கிழார் கவனித்து வந்ததால், அரசு நிர்வாக காரியங்களில் கை தேர்ந்தவர் ஆனார். அதனால், தந்தைக்குப் பின் சேக்கிழாருக்கு, முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

சேக்கிழாரின் நிர்வாகத் திறனைப் பாராட்டிய மன்னன், அவருக்கு "உத்தம சோழ பல்லவன்' என்ற பட்டத்தை வழங்கினார்.

ஒருமுறை, சேக்கிழார் கும்ப கோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதர் கோவிலுக்கு சென்றார். அங்குள்ள இறைவனைக் கண்டதும், அவருக்கு தன்னையறியாமல் கண்ணீர் வழிந்தது. உடலை இறைசக்தி ஆட்டுவித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அக்கணமே அரசபதவியை துறந்து,

இறைப்பணிக்கு சென்று விட எண்ணினார். ஆனால், அதற்கான நேரம் இது வல்ல என்பதை உணர்ந்தார். காரணம், மன்னன் அநபாயன் சமண மத இலக்கியமான சீவக சிந்தாமணியைப் படித்து, சிற்றின்பத்தில் மூழ்கிக் கிடந்தான்.

மன்னனின் சமண மத ஈடுபாட்டை கண்டு கவலையடைந்த சேக்கிழார், இதை இப்படியே விட்டு விட்டால், சைவ சமயத்திற்கு ஆபத்து வந்துவிடும் எனக் கருதி, சைவ சமய நூல்களின் சிறப்பை விளக்கி, அவற்றை படிக்குமாறு மன்னனைத் தூண்டினார்.

சேக்கிழாரின் தூண்டுதலினால், சைவ மத நூல்களைப் படித்த மன்னன், சைவ சமயத்தின் அருமையை உணர்ந்து கொண்டான். மேலும் அந்நூல்களைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினார்.

"அமைச்சரே... சிவக்கதைகளை உருவாக்கியது யார், அவை பழங்கால கதைகளா, இடைக் காலத்தில் உருவானதா, அந்தக் கதைகள் குறித்த நூல்கள் இருக்கிறதா?' எனக் கேட்டான். சேக்கிழார் அதற்குரிய விளக்கத்தை எடுத்துக் கூறி, "மன்னா... நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை, ராஜராஜசோழன் செப்பேடு செய்து, சைவ சமயத்தின் <<உண்மை நெறியை மக்களுக்கு கொண்டு சென்றார். அவர் பரம்பரையில் வந்த நீங்களும், சைவம் தழைக்க ஏதாவது செய்ய வேண்டும்...' என்றார்.

மன்னனின் மனம் மாறியது. சிவபெருமானுக்கு சேவை செய்த திருத்தொண்டர்களின் கதையைத் தொகுக்கும் பொறுப்பை, சேக்கிழாரிடம் ஒப்படைத்தான்.

சேக்கிழார் சிதம்பரம் சென்று நடராஜரை வணங்கி, "தில்லையம்பலத்தானே! உன் அடியவர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும்...' என்று வேண்டினார். அப்போது, "உலகெலாம்' என்று குரல் கேட்டது. அவ்வார்த்தையை முதல் வார்த்தை யாகக் கொண்டு, திருத்தொண்டர் புராணத்தை எழுத ஆரம்பித்தார் சேக்கிழார்.

"உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்' என்று முதல் பாடல் தொடங்கி, 4,253 பாடல்களை எழுதி முடித்தார். மிக நீண்ட புராணம் என்பதாலும், பெரிய நூலாக இருந்தபடியாலும், அதற்கு, "பெரிய புராணம்' என்ற பெயர் வந்தது. நூலை எழுதி முடித்த சேக்கிழார், நடராஜரின் பாதத்தில் அந்நூலை சமர்ப்பித்தார்.

சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று, பெரியபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. மன்னனின் தலைமையில், 63 நாயன்மார்களின் கதையை பாடி முடிக்க, சேக்கிழாருக்கு ஒரு ஆண்டு ஆனது. சொற்பொழிவு சமயத்தில், சேக்கிழாருக்கு வியர்த்துக் கொட்டியது. அநபாய மன்னனே அவருக்கு சாமரம் வீசினான். இது தமிழுக்கு கிடைத்த பெருமை.

இதன் பிறகு, சேக்கிழாரின் சகோதரர் பாலறாவாயர் சோழ நாட்டின் அமைச் சராக்கப்பட்டார். சேக்கிழார் தில்லை நடராஜரின் புகழ்பாடி, அவர் திருவடி சேர்ந்தார். தமிழுக்குப் பெருமை சேர்த்த சேக்கிழாரின் குருபூஜை, வைகாசி பூச நட்சத்திரத்தில் நடைபெறும். அவர் பிறந்த குன்றத்தூர் சேக்கிழார் கோவிலில், இந்த விழா 11 நாட்கள் நடத்தப்படுகிறது.
***

தி. செல்லப்பா
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சேக்கிழார் Empty Re: சேக்கிழார்

Post by செந்தில் Mon Jun 10, 2013 11:36 am

கைதட்டல்சேக்கிழார் பற்றிய பகிர்வுக்கு நன்றி பிரபு கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum