தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கதை - 1

View previous topic View next topic Go down

கதை - 1   Empty கதை - 1

Post by Guest Sat Sep 04, 2010 3:48 pm

"அம்மா! இது என்ன பூ? எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்ற நஜ்மாவுக்கு அம்மா பதிலளிக்கும் முன் "ஏய் நஜ்மா! இந்த மரத்தைப் பார், மஞ்சள் பூக்களும், பச்சை இலைகளுமாகப் பார்க்கப் பார்க்கப் பரவசமாக இருக்கின்றன" என்றான் ஹஸன்.

"ஆமாண்ணா! அங்கே பார். பச்சைக் கம்பளம் விரித்தாற் போன்று எங்கு பார்த்தாலும் பச்சைப்பசேல்" என்றாள் தங்கை.

பக்கத்தில் சலசலத்து ஓடிய நீரோடையிலிருந்து நீரை அள்ளித் தங்கை மீது விசிறி அடித்தான் அண்ணன். "அம்மா பாரம்மா அண்ணனை, குளிர் தாங்கலம்மா" என்றபடி அன்னையோடு ஒட்டிக் கொண்டாள் நஜ்மா.

ஹஸனை மென்மையாக அதட்டிய அன்னை பாத்திமா, அவர்களின் குதூகலத்தைக் குறைக்க விரும்பவில்லை. அவர்களுக்குக் கிடைக்கும் இந்தச் சிறு சிறு மகிழ்ச்சியை மனதார அனுபவித்துவிட்டுப் போகட்டுமே என்று எண்ணினாள்.

கருங்கல் பாறையாக இறுகிப்போன அவள் நெஞ்சிற்கு இதம் தருவது இப்பிஞ்சுகளின் பூஞ்சிரிப்புதானே.

அவர்கள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்க சிறிது தூரத்தில் ஒரு வீட்டின் முன் மக்கள் கூட்டமும், சிலரின் அழுகுரலும் கேட்க, பாத்திமாவின் நெஞ்சில் சம்மட்டி கொண்டு அடித்தது போன்று வலித்தது. தீவிரவாதிகளின் அட்டூழியம் மறுபடியும் தலைவிரித்தாட ஆரம்பித்து விட்டது என்பதை உறுதிபடுத்தியவள் பிள்ளைகளை அணைத்தபடி நடையை எட்டிப்போட்டாள். கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்த பிள்ளைகளைக் கையமர்த்தியபடிக் கூட்டத்தை நெருங்கினாள்.

அவள் நினைத்தது மிகச்சரியே. துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் அந்த வீட்டு இரு இளைஞர்களைக் கடத்த முயல, தடுத்த தாய், தகப்பன் இருவரையும் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றுவிட்டு, இளைஞர்களை இழுத்துச் சென்று விட்டிருந்தனர். எண்ணிப்பார்த்தால் நூறு வீடுகள் கூட இல்லாத குக்கிராமம் அது. அநேகமாக எல்லோரும் உறவினரே. பாசப்பிணைப்பில் வாழ்ந்த அம்மக்களுக்கு இயற்கை அன்னை வஞ்சகமில்லாமல் வாரி வழங்கி இருந்தாள் வளங்களை. ஆனால் இயற்கை இன்பத்தை நிம்மதியாக அனுபவிக்க முடியாமல் அவ்வப்போது தீவிரவாதிகளின் அட்டகாசம் அச்சுறுத்திக் கொண்டேயிருந்தது.

அவ்விடத்தை விட்டு அகன்ற பாத்திமா எப்படித்தான் வீடு வந்து சேர்ந்தாளோ தெரியவில்லை. பழைய நினைவுகள் நினைவில் வர குலுங்கிக் குலுங்கி அழுதாள். பிள்ளைகள் செய்வதறியாது திகைத்தனர். அம்மாவை ஆறுதல் படுத்த முயன்று தோற்றுப்போய் அப்படியே சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து விட்டனர்.

சிறிது தெளிவடைந்த அம்மாவிடம், "அம்மா பக்கத்து வீட்டுப் பாட்டி, தாத்தா இறந்ததற்காக அழுவறியா? அவர்களைச் சுட்டது யார்? ஏன் சுட்டனர்?" எனக் கேள்வி மேல் கேள்வி எழுப்ப, அன்னை, அவர்கள் தீவிரவாதிகள் எனச்சொல்லி அவர்களைப் பற்றிச் சுருக்கமாகப் பிள்ளைகளுக்குப் புரியும்படி கூறலானாள்.

"நம் நாட்டின் ஒற்றுமையை, அமைதியைக் குலைத்து நாட்டைப் பிளவு படுத்த, வேற்று நாட்டினர் சிலரின் முயற்சியால் கூட்டம் கூட்டமாகப் படைப் பயிற்சி எடுத்துக் கொண்டு ஆங்காங்கே கலவரத்தை ஏற்படுத்துகின்றனர். அமைதிப் பூங்காவான நம் நாடு இன்று குழப்பவாதிகளால் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று புகழப்படும் இந்தக் காஷ்மீர், முன்பெல்லாம் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும். ஆனால் இப்போது இடைவிடாது கேட்கும் துப்பாக்கி வெடிச்சத்தத்தினால் அவர்கள் வருவது குறைந்து விட்டது".

"சரிம்மா! பக்கத்து வீட்டு மாமா இருவரையும் தீவிரவாதிகள் கூட்டிச் சென்றுவிட்டதாகப் பேசிக் கொண்டார்களே ஏன்மா?" என ஹஸன் கவலையோடு கேட்க, அன்னை நீண்ட பெருமூச்சை விட்டபடித் தொடர்ந்தாள். "இளைஞர்களை இழுத்துச் சென்று பல வித இன்னல்களுக்குள்ளாக்கி நாட்டின் மேல், அரசியல் தலைவர்கள் மேல் அபாண்டமாகக் குறைகளைச் சொல்லி, வெறுப்பையூட்டி, மூளைச்சலவை செய்து இன, மதத் துவேஷங்களை ஏற்படுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வருவார்கள். பின் பல நாசகாரத் திட்டங்களில் ஈடுபட வைப்பார்கள்"

"அம்மா! இந்தத் தீவிரவாதிகளை அழிக்க முடியாதாம்மா?" என நஜ்மா கேட்க, "முடியாமல் என்ன? நம் அரசாங்கம் ராணுவ உதவியுடன் எவ்வளவோ முயற்சி செய்து வருகிறது. இருந்த போதிலும் இங்கு மட்டுமல்ல, உலகம் முழுவது பல தீவிரவாதக் குழுக்கள் உலகையே அச்சுறுத்திக் கொண்டும் அட்டூழியம் செய்து கொண்டும்தான் இருக்கின்றன. அந்த எல்லாம் வல்ல இறைவன்தான் அவர்களின் கடினமான உள்ளங்களைக் கரைய வைக்கவேண்டும்" என்றாள்.

"அப்புறம் ஏன் கடவுள் அப்படிச் செய்யவில்லை?" என்று அப்பாவியாக நஜ்மா கேட்க, "சிறு பிள்ளைகளாகிய நீங்கள் கடவுளிடம் கேட்டால் கட்டாயம் செய்வார்" என்றாள் அன்னை

நாட்கள் நகர்ந்தன. பக்கத்து வீட்டில் நடந்த வெறிச் செயலின் சுவடுகள் மெல்ல மறைய ஆரம்பித்தன. ஆனால் எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்தில் இறுகிய மனதுடன் வெளிறிய முகங்களுடன் எந்திரத்தனமாக மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர்.

கதிரவன் மறைந்து காரிருள் பரவத் தொடங்கிய நேரம். ஹஸன், நஜ்மா இருவரும் கண்மூடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர். அன்னை அவர்களுக்கு வேண்டிய ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தாள். அப்போது கதவைத் தள்ளிக் கொண்டு புயலெனப் புகுந்து ஒருவன் உள் அறைக்கு ஓடிச் சென்று கதவைச் சாத்த, சப்தம் கேட்ட ஹஸன், நஜ்மா இருவரும் அந்நியனான அவனைப் பார்த்து, அவனது கோலத்தைப் பார்த்து அலறினர். இருவரின் வாயைப் பொத்திய அவன் நிற்க முடியாமல் கீழே சரிந்தான்.

தடதடத்த சப்தத்தையும், பிள்ளைகளின் அலறலையும் கேட்ட பாத்திமா ஓடோடி வந்தாள். திகைத்தாள். வந்தவன் தீவிரவாதி என அவன் தோற்றத்திலேயே தெரிந்தது.

Anonymous
Guest
Guest


Back to top Go down

கதை - 1   Empty Re: கதை - 1

Post by Guest Sat Sep 04, 2010 3:49 pm

கதை 1 தொடர்ச்சி


முகத்தைக் கறுப்புத் துணியால் மூடியிருந்த அவனது உடம்பின் பல இடங்களிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருக்க மூச்சிரைத்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து பிள்ளைகள் பரிதாபப்பட்டு அவனைத் தூக்கி உட்கார வைத்தனர்.

குட்டி நஜ்மா ஓடிச்சென்று பழைய துணியைக் கொண்டு வந்து காயத்தைத் துடைக்க முனைய பாத்திமா வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து அதில் துணியை நனைத்து பிழிந்து காயத்தைத் துடைக்கச் செய்தாள். ஹஸன் அவனது காயங்களில் மருந்து தடவினான்.

சுடச்சுட ரொட்டி, சப்ஜி எடுத்து வந்து அவனைச் சாப்பிடச் சொன்னாள் பாத்திமா. தயங்கித் தயங்கிச் சாப்பிட்டுத் தேநீர் குடித்தான். சிறிது தெம்பு வந்தவனாக பக்கத்துச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்தவன் எதிர்ச்சுவரில் தெரிந்த புகைப்படத்தைப் பார்த்தான். பாத்திமாவைப் பார்த்தான். பிள்ளைகளைப் பார்த்தான். திகைத்தபடி மாறி மாறிப் பார்த்தவன் திடீரென பாத்திமாவின் பாதங்களைப் பற்றியபடி கேவிக் கேவி அழுதான். விழிகள் விரிய அவனையே பார்த்தபடி நின்றனர் பிள்ளைகள். பதறியபடி பாதங்களை இழுத்துக் கொண்டு செய்வதறியாது நின்றாள் பாத்திமா. தன்னை ஆசுவாசப்படுத்தியபடி எதிரிலிருந்த புகைப்படத்தைக் காட்டி, "சகோதரி இது உங்கள் கணவர் புகைப்படம்தானே?" என்று கேட்டதும், "ஆமா, அவர் எங்கள் அப்பாதான்" என்றான் ஹஸன். பாத்திமாவின் கண்களில் கண்ணீர்.

"சகோதரி! உனக்குத் தீங்கு செய்த கூட்டத்தைச் சேர்ந்தவன்தான் நான். உன்னுடைய கணவர் உயிருடன் தானிருக்கிறார்" என்றான்.

நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் பாத்திமா. தீவிரவாதக் கூட்டத்தினர்தானே திடீரென ஒரு நாள் இரவில் வீட்டினுள் நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவள் கணவரை இழுத்துச் சென்றனர் பத்து ஆண்டுகளுக்கு முன். அதன்பின் அவர் என்ன ஆனார் என்று தெரியாமல் பிள்ளைகளுக்காக விட்டேற்றியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

பிள்ளைகளிடம் இன்றுவரை இந்த உண்மையைச் சொல்லாமல் தன் இதயத்தில் பூட்டி வைத்திருந்தாள். ஒரேடியாக அவர் இல்லை என்ற நினைப்பிலேயே பிள்ளைகள் வளரட்டும். அந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் ஏன் பயத்தையும், பாரத்தையும் ஏற்ற வேண்டுமென்று எண்ணி எல்லாப் பாரத்தையும் அவளே சுமந்து கொண்டிருந்தாள்.

பன்னிரண்டு வயது ஹஸன், பத்து வயது நஜ்மா இருவருக்கும் ஓரளவு புரிந்தது. நம் அப்பா உயிரோடு இருப்பதாகச் சொல்கின்றானே இந்த மனிதன் என்ற ஆனந்தத்தில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

"அங்கிள் எங்கள் அப்பா எங்கே இருக்கிறார்? அவரை உடனே பார்க்கணும். ப்ளீஸ் அங்கிள்" என அந்த மனிதனை உலுக்கினர். அவர்களைப் பரிவுடன் தடவிக் கொடுத்தவன் பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததைக் கூறலானான்.

"அம்மா! எங்கள் கூட்டத்தினர் இங்கு வந்து பல இளைஞர்களை இழுத்துச் சென்று பல வழிகளில் முயன்று எங்களுக்கு அடிபணிய வைத்தனர். படைப்பயிற்சி தந்து நாசகார வேலைகளில் ஈடுபடுத்தினோம். ஆனால் உன் கணவர் அரட்டல், மிரட்டல், சித்ரவதை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நாட்டின் மீதுள்ள பற்றினால் எங்களுக்கு அடிபணிய மறுத்துவிட்டார். ஆரம்பத்தில் அவர்மீது ஆத்திரப்பட்டாலும் அவரது பொறுமை, நன்னடத்தை, கடவுள் பக்தி, தன் துன்பத்தையும் கடந்து பிறர்க்கு பணிவிடை செய்யும் பாங்கு இவற்றைப் பார்த்தபின், சித்ரவதை செய்வதை நிறுத்திவிட்டு மற்ற வேலைகளில் அவரை ஈடுபடுத்திக் கொண்டோம்".

ஹஸன் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதி வந்து "அங்கிள்! இந்தக் கடிதத்தை உங்கள் தலைவரிடம் கொடுங்கள். கட்டாயம் அவர் எங்கள் அப்பாவை விட்டு விடுவார்" என்று அவன் கையில் கொடுத்தான்.

"தம்பி, அந்தத் தலைவனே நான்தானப்பா. தீவிரவாதி எனத் தெரிந்தும் எனக்கு உணவு கொடுத்து, உயிர் கொடுத்தவர் நீங்கள். கட்டாயம் உங்கள் அப்பாவை உங்களிடம் திருப்பி விடுகிறேன்" என்றவன் எழுந்து விருட்டென வெளியேறினான்.

தன் கணவரை அந்தத் தீவிரவாதி திருப்பி அனுப்புவான் என்ற நம்பிக்கை பாத்திமாவுக்கு இல்லை. வீட்டுக்குள் வந்த தீவிரவாதியைப் பிடித்துக் கொடுக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தமே அவளுக்கு மிஞ்சியது.

விடிந்தும் விடியாத அந்தக் காலைப் பொழுதில் தடதடவென கேட்ட மனிதர்களின் காலடியோசை அவர்கள் வீட்டினருகே வந்து நின்றது. கதவு தட்டப்பட்டது. நடுங்கியபடிக் கதவைத் திறந்த பாத்திமாவோடு குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர்.

பாத்திமாவுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவளது கணவர் தாடியுடன், சோர்ந்த உடலோடு, ஆவல் நிரம்பிய விழிகளுடன் நின்றிருந்தார். அவருக்குப் பின்னால் தீவிரவாதத் தலைவன் மகிழ்ச்சி ததும்பும் முகத்தோடு நின்றிருந்தான். பாத்திமாவுக்குப் பின்னால் நின்றிருந்த பிள்ளைகளைக் கட்டிப்பிடித்து, முத்தமிட்டார் தந்தை. அந்தக் காட்சியை கண்கள் விரிய பார்த்து நின்ற தலைவனிடம், "நன்றி அண்ணா! நீங்கள் சொன்னபடி நடந்து கொண்டீர்கள்" என்று கரங்களைக் கூப்பினாள் பாத்திமா.

"நான் வணங்கத் தகுதியற்றவன். ஈவிரக்கமில்லாமல் எத்தனை விலை மதிப்பில்லா உயிர்களைப் பறித்திருக்கிறேன்! எத்தனை இளைஞர்களின் வாழ்க்கையைத் தொலைத்திருக்கிறேன்! என்னை மனிதனாக்கியது நீயும், உன் பிள்ளைகளும் தான். நீங்கள்தான் வணங்கப்பட வேண்டியவர்கள்" என்று கைக்கூப்பினான். பின், "சகோதரி, இப்போதே நானும் என் குழுவினரும் சரணடையச் செல்கிறோம்" என்று கூறித் தலைகுனிந்தபடித் திரும்பினான்.

"அங்கிள்! பக்கத்துவீட்டு அங்கிளையும் விட்டுவிடுங்களேன்" என்று பிள்ளைகள் பரிவோடு கேட்க, திரும்பிய அவன் "அவர்கள் மட்டுமல்ல. கைதிகளாக இருக்கும் அனைவருமே விரைவில் திரும்பிவிடுவார்கள்" என்றபடி பிள்ளைகளின் கரங்களில் கனிவாக முத்தமிட்டுச் சென்றான் அவன்.

Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum