தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திருக்குறளும் அதன் விளக்கமும்

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Mon Sep 30, 2013 10:39 am

காலம் மாறிப் போச்சு, காலம் மாறிப் போச்சு என்று அங்கலாய்ந்து கொள்வர் சிலர். காலம் எப்படி ஐயா மாறும்? சித்திரை எப்போதும் சித்திரைதான், அதுபோல் ஜனவரி எப்போதும் ஜனவரிதான். ஐப்பசியில்தான் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும். சித்திரை வைகாசியில்தான் கோடை சுட்டெரிக்கும். அப்படியிருக்க காலம் எங்கு மாறி இருக்கிறது?


மனிதன் தான் தன்னை அவ்வப்போது மாற்றிக் கொள்கிறான். 1960க்கு முன்பெல்லாம் இறைபக்தி, இறையன்பு மிகுந்து காணப்பட்டது. அது அப்போதுள்ள மனிதர்களின் மனநிலை. இப்போது இயந்திர உலகம். ஓட்டம், ஓட்டம். எதெற்கெடுத்தாலும் ஓட்டம். அப்படி ஓடவில்லை என்றால் மற்றொருவன் அதைத் தட்டிப்பறித்துச் சென்றுவிடுவான். ஆகையால் காலம் ஒருபோதும் மாறுவதில்லை. மனிதர்களாகிய நாம் தான் அவ்வப்போது நம்மை மாற்றிக் கொள்கிறோம்.

வள்ளுவர் கூறுகிறார்,


அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்


சவால் விடுகிறார் அந்தக் குறுமுனி.

“நானும் 8 வருஷமா இந்த ஆபீஸ்ல குப்பை கொட்டிக்கிட்டுத்தான் இருக்கேன். அதற்கேற்ற பதவி உயர்வோ, சம்பள உயர்வோ எனக்கு இல்லை” என்று ஒருவன் நொந்து கொள்கிறான். வள்ளுவர் அவனுக்குச் சொல்கிறார், “தம்பி நல்ல சமயமா பார்த்து, உன்னோட “பாஸ்” (அதிகாரி) நல்ல மூடில் (mood) இருக்கும்போது, ‘என்ன சார் சௌக்யமா? எப்படி இருக்கீங்க?’ அப்படி, இப்படி என்று சொல்லி ‘இப்ப எல்லாம் எத்தனை சம்பளம் வந்தாலும் போதுவதில்லை, சார். அதிக சம்பளம் வேணும்னா உங்களாட்டமாதிரி ஒரு ஆபீஸரா இருந்தாத்தான் கட்டுப்பிடியாகும்’ என்று பலவாறு பேசி உங்களுக்கு ஏதாவது செய்யணும்னா சொல்லுங்க சார் உடனே செய்கிறேன் என்று குளிர வைத்து காரியத்தை சாதிச்சுக்கணும் என்று வள்ளுவர் சொல்கிறார்.

இப்பவெல்லாம் சரியான சமயம் பார்த்து செய்வதை “ஒருவர் மூடில் (mood) இருக்கிறாரா என்று பார்த்து செய்ய வேண்டும்” என்றாகிவிட்டது. இதைத்தான் வள்ளுவர் காலம் அறிந்து செயல் அதிகாரத்தில்,
முடியாதது ஒன்றுமே இல்லை ஆனால், அதை தகுந்த காலம் பார்த்து உரிய செயலுடன் செய்தால் கண்டிப்பாய் நிறைவேறும் என்று திருவள்ளுவர் ஆணித்தரமாய்ச் சொல்கிறார்
.


நாம் திருமணம் செய்தால்கூட நல்ல முகூர்த்த நாளாய்ப்பார்த்துதானே செய்கிறோம். ஒரு பூசை செய்யும் முன் “சங்கல்பம்” என்று ஒன்று சொல்வார்கள். அதில் தாம் எந்த இடத்தில் அந்தப் பூசையைச் செய்கிறோம், அன்றைய கால நிலை என்ன என்பதைக் கூறிவிட்டுத்தான் பூசையைத் தொடங்குகிறோம்.
ஆகவே, வள்ளுவர் கூறியதுபோல் எதையும் காலம் அறிந்து செய்வோம், வெற்றிபெறுவோமாக!
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by sawmya Mon Sep 30, 2013 12:13 pm

கைதட்டல் வள்ளுவர் கூறியதுபோல் எதையும் காலம் அறிந்து செய்வோம், வெற்றிபெறுவோம்!
பகிர்வுக்கு மிக்க நன்றி!புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Wed Oct 16, 2013 11:48 am

நினைக்க மறந்த குறள் !

வாழ்க்கையில் கவலை வரலாம். ஆனால் வாழ்க்கையே கவலைக் குறியாகிவிட்டால்? ஒரு வாலிபன் இருக்கிறான். அவனுக்கு நல்லதொரு வாழ்க்கைத் துணைவி கிடைக்க வேண்டுமென்று அவன்மட்டும் கவலைப்படுவதில்லை, அவனுடைய தாய்,தந்தையரும் சேர்ந்து கவலைப் படுகின்றனர். சரி, இப்போது அவனுக்கு நல்ல மனைவி கிடைத்துவிட்டாள். பின் என்ன கவலை? அவனுக்கு இரண்டுவருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லையே, என்ற கவலை அவனது தாய், தந்தையர் படுவர். . ஆனால், மகனோ, இப்போதுள்ள கால கட்டத்தில் ஐந்துவருடங்களுக்குப்பின் குழந்தையைப் பற்றி யோசிக்கலாம் என்று எண்ணி இருப்பான்.

ஆனால், அது தாய், தந்தையருக்கு விளக்கப்படுவதில்லை. அதனால் அவர்களுக்குக் கவலை. குழந்தை பிறந்தவுடன், பள்ளிக்குச் செல்ல வேண்டுமே, அங்கு சககுழந்தைகள் அவனைத் துன்புறுத்தாதிருக்க வேண்டுமே, இப்படி கவலைகள். அவன் பள்ளிப் பருவம் தாண்டிவிட்டான். கல்லூரியில் சேர்க்கவேண்டுமே, அங்கு அவன் ஏதாவது பெண்ணுடன் சுற்றாமல் இருக்க வேண்டுமே என்றெல்லாம் கவலை. இப்போது இந்தக் குழந்தையின் பெற்றோர்கள் முதுமை அடைந்துவிட்டனர். நம்மை நம் குழந்தை கடைசிவரை நன்கு கவனிப்பானோ, இல்லை எங்காவது அனாதைபோல் வாழவேண்டி வருமோ என்ற கவலை அவர்களுக்கு.

இப்படி வாழ்க்கையில் கவலைமேல் கவலையாக அடுக்கிக் கொண்டே போனால், வாழ்க்கையில் நிம்மதி இருக்குமா? நாம் கவலைப்பட்டாலும் அந்தப் பிரச்சனைத் தீரத்தான் போகிறதா? அது நடக்கிறபடி நடந்துகொண்டே போகும். எனவே, வாழ்க்கையில் பிரச்சனை என்று ஒன்று வரும், அப்படி வரும்போது கவலைப்பட்டு பிரயோஜனமில்லை. வாழ்க்கை உடைந்துதான் போகும். ஆகையால் அந்தப் பிரச்சனையை எப்படி சமாளிக்கவேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டுமேயன்றி, வீணாகக் கவலைப் பட்டுக்கொண்டிருந்தால் மட்டும்போதாது. ஆகையால் கவலைப் படுவதை நிறுத்திவிட்டு, சமாளிக்கும் வழியைப் பார்ப்போம்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சாலமிகுத்துப் பெயின்
.


--திருக்குறள்-

கவலை என்பது மயிற்சிறகு போல் வலுவற்றதானாலும், வலுவானதானாலும் வாழ்க்கையில் ஓரளவுதான் அதை ஏற்ற வேண்டும். அந்த வாழ்க்கை என்ற வண்டியில் எவ்வளவு கவலையை ஏற்றமுடியுமோ அவ்வளவுதான் ஏற்றலாம்.

அளவுக்கு மீற் ஏற்றினால் “அச்சிறும்” அந்த வாழ்க்கை எனும் வண்டியின் அச்சாணியே முறிந்து வண்டியே உடைந்துவிடும், அதாவது வாழ்க்கையே ஒடிந்துபோய், நிம்மதி இல்லாமல் போய்விடும் என்றும் இந்தத் திருக்குறளை விளக்கலாம். இந்தக் குறளை இப்படி வாழ்க்கையில் விளக்கிக் கொள்ளாமல் இது நினைக்க மறந்தகுறளாகவே ஆகிவிட்டது.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by முரளிராஜா Wed Oct 16, 2013 3:56 pm

நீண்ட இவைவேளிக்கு பிறகு தங்களது பதிவை காண்பதில் மிக்க மகிழ்ச்சி 
திருக்குறளையும் அதன் விளக்கங்களையும் தொடர்ந்து உங்கள் சிறந்த நடையில் எங்களுக்கு வழங்குங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by ஸ்ரீராம் Wed Oct 16, 2013 6:49 pm

திருக்குறள் மற்றும் கதை மிகவும் அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Wed Oct 16, 2013 7:50 pm

கனம் நிர்வகத்தார் அனைவருக்கும்,
நன்றி ஐயா! என் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நான் தொடர்ந்து பதிவிட இயலவில்லை. இருப்பினும், மீண்டும் பதிவிடத்தொடங்கியதும் தங்களது அன்பு என்னை நெகிழச் செய்தது. மீண்டும் நன்றி. எனக்கு ஆன்மீகத்தில் மிக நாட்டமுண்டு. குறிப்பாக பகவத் கீதையையும் விளக்கமாக எழுத ஆவலுண்டு. இது தவிர திருமூலரின் திருமந்திரம், வடலூர் இராமலிங்க சுவாமிகளின் பாடல்களிலும் நாட்டமுண்டு. எல்லாம் எழுத நினைக்கிறேன். மழலை என்ற தளத்தில் திருமூலர் திருமந்திரம் எழுதத் தொடங்கினேன். அதில் சிலர் அதை என் மனம் புண்படும்படி விமர்சித்ததால் அதை நிறுத்தியதோடல்லாமல், அதற்கு பதிவு செய்வதையும் நிறுத்திவிட்டேன். ஆனால், அதன் ஆசிரியர் திரு ஏ.கே.ராஜகோபாலன் என் எழுத்துநடையை மிக விரும்பி ரசிப்பார். ஆனால், அவரிடம் எதையும் விளக்கமாய் எழுதி அவரது மற்றும், என்னை விமர்சித்தவரின் மனமும் புண்படாவண்ணம் தெரிவிக்காமல் வாளாயிருந்துவிட்டேன். ஆனால், இன்றும் திரு ஏ,கே,.ஆர் என் ரசிகர்மட்டுமல்லாமல், நான் முகநூலிலிடும் சில பதிவுகளுக்கும் அன்பான பல பின்னூட்டங்களைத் தருவார். ஆகையால், தங்கள் தங்களது தளத்தை விரும்பி ஏற்றுக்கொண்டேன். தங்கள் தளத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதில் பதிவிடுவோர் பலர் அவர்களது சொந்தக் கருத்துக்களையும், சொந்த நடையிலும் பதிவிடுவது எனக்கு மனதுக்குத் திருப்தியாயிருந்தது. அதனால் இந்தத் தளத்தை விரும்பினேன், என் பதிவைத் தொடர்ந்தேன். தங்கள் அன்பும் மிகவாகக் கிடைத்தது, கிடைக்கிறது, கிடைத்துக்கொண்டுமிருக்கும் என நம்புகிறேன். நன்றி. மனம் திறந்து இம்மடலைத் தங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by முரளிராஜா Wed Oct 16, 2013 8:03 pm

மட்டற்ற மகிழ்ச்சி  தங்கள் பதில் கண்டு 
நம் தளத்தின் விதிமுறைகள் தாங்கள் அறிந்ததே . அதனால் அந்த விதிமுறைக்கு உட்பட்டு இருக்கும் எந்த பதிவும் பிரச்சனையில் சிக்க வாய்ப்பில்லை .
யார் மனதையும் புண்படுத்தாத பதிவுகளைத்தான் நாங்களும் விரும்புகிறோம்.

அமர்க்களம் விதிமுறைகளை காண 
http://www.amarkkalam.net/t2447-topic

உங்கள் திருக்குறள் விளக்கம் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் உள்ளது எனவே தயக்கமின்றி தொடருங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu Oct 17, 2013 7:11 am

சொந்த நடையிலும் பதிவிடுவது எனக்கு மனதுக்குத் திருப்தியாயிருந்தது. அதனால் இந்தத் தளத்தை விரும்பினேன், என் பதிவைத் தொடர்ந்தேன். தங்கள் அன்பும் மிகவாகக் கிடைத்தது, கிடைக்கிறது, கிடைத்துக்கொண்டுமிருக்கும் என நம்புகிறேன். நன்றி. மனம் திறந்து இம்மடலைத் தங்களுடன் பகிர்ந்துகொண்டேன்.
வாழ்த்துகிறோம்... பாராட்டுகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by நண்பன் Thu Oct 17, 2013 7:34 am

தெளிவான திருக்குறள் விளக்கம்
நன்றி சகோதரரே
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Thu Oct 17, 2013 12:29 pm

நினைக்க மறந்த குறள்-2

ஆசை என்பது நம் மனதில் உருவாவதில்லை. அது உருவாக்கப் படுகிறது. நம்முடைய அன்னையே இவற்றை நாம் பிறந்தவுடன் நம்முள் உருவாக்கிவிட்டுவிடுகிறாள். நமக்குப் பாலூட்டி நாவிற்கு சுவையையும் ஊட்டிவிடுகிறாள். அவள் ஸ்பரிசத்தால் நம் உடலுக்கு ஓர் இதமான ருசியை ஊட்டிவிடுகிறாள். தாலாட்டுப் பாடி நம் செவிகளுக்கு இன்ப ராகங்களை அறியச் செய்துவிடுகிறாள்.

இப்படியாக நம் உடலின் பஞ்ச இந்திரியங்களுக்கும் தீனிபோட்டு நம்மை வளர்த்துவிடுகிறாள். இதையே நாம் மேன்மேலும் பெருக்கிக்கொண்டு எதிலும் ஆசை, எதற்கும் ஆசை என்று மனதை நம் கட்டுக்குள் வைக்காமல் சுதந்திரமாகத் திரியவிட்டுவிடுகிறோம். இந்த சுதந்திரம் நாளடைவில் நம்வாழ்க்கையை, ஏன், இவ்வுலகையேகூட நரகமாக்கி நம் வாழ்வில் நிம்மதி, இன்பம் இல்லாமல் செய்து விடுகிறது.

இறைவன் முதலில் தானே நம்முன் தோன்றி அறிவுபுகட்ட எத்தனிக்கிறான். எவ்வித மாற்றமுமில்லை. மாறாக நம்மிடையே வாழும் அசுரர்களும், அசுர குணங்களும் அவனை மறையச் செய்துவிடுகிறது. பின் அவன் அவதாரமெடுத்து நம்முன் தோன்று கிறான். அப்போதும் அதே அசுரத்தனம். அதன்பிறகு ஆசார்ய பெருமக்களையும், மஹான் களையும் நம்மிடையே தோன்றச் செய்து நம் ஆசைகளைக் கட்டுப்படுத்த நினைக்கிறான். அங்கும் விதண்டாவாதம், நாத்திகம் தோன்றி அதுவும் முறியடிக்கப்பட்டு, நாகரிக மோகம் கொண்டு தாறுமாறாய்த் திரியச் செய்கிறது நம் மனம்.

இந்த நிலை இப்படியே நீடித்தால் என்ன செய்வது? என்பது வள்ளுவரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் இந்தக் குறளைக் கூறுகிறார்,


பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு


...திருக்குறள்

பற்றில்லாதவனாகிய இறைவனின் பற்றைத்தான் நாம் பற்றிக் கொள்ளவேண்டும் அதோடுமட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள பற்றுகளை விட்டு ஒழிப்பதற்காக இறைவனின் பற்றை நாம் பற்ற வேண்டும்.

ஆக, நமக்கு இவ்வுலகில் இருக்கவேண்டிய ஒரே ஆசை அவன் தாளைப் பற்றவேண்டும், அதே நெறியில் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தக் குறளையும் நம் வாழ்க்கையில் நாம் நினைக்க மறந்து விட்டோம். நாகரிக மோகம் கொண்டு தறிகெட்டுத் திரிகிறோம்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by முரளிராஜா Thu Oct 17, 2013 1:14 pm

மறந்த குறளை நினைக்க வைத்தமைக்கும் சிந்திக்க வைத்தமைக்கும் நன்றி நண்பரே

உங்கள் கட்டுரையில் படிக்க எளிமையாக இருக்க வேண்டி சில மாற்றங்களை செய்துள்ளேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Thu Oct 17, 2013 6:21 pm

எனக்கு ஐயா, கணினியில் அவ்வளவு நிபுணத்துவம் கிடையாது. என் வாழ்நாளில் நான் கண்டதெல்லாம் தட்டச்சு இயந்திரம் மட்டும்தான். ஆனால், காலத்தோடு ஒன்றி வாழ வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இந்த கணிணி இயக்கத்தைக் கற்றேன். அவ்வளவுதான். ஆகையால், நான் எழுதுவதை எவ்வளவு சுவைபட வாசகர்களுக்கு அளிக்க இயலுமோ, முடிந்தால் அதை தயவுசெய்து தாங்கள் சுதந்திரமாகச் செய்யலாம். அதற்கு நான் மிக நன்றிக்கடன் பட்டுள்ளேன். நன்றி......
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by முரளிராஜா Fri Oct 18, 2013 7:48 am

உங்கள் அனுமதியோடு சரி செய்துவிட்டேன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Fri Oct 18, 2013 3:06 pm


நினைக்க மறந்த குறள்-3
அருள் நிறைந்தவரென்றால், கோவில்களுக்குத் தான தருமங்களைச் செய்துகொண்டு, ஏழை, எளியவர்களுக்கு அன்னதானங்கள் செய்துகொண்டிருப்பவரை மட்டும் குறிக்க இயலாது. அவர் வில்வண்டியில் போகும்போது வண்டிக் காரரை, “என்னப்பா வண்டி இவ்வளவு மெதுவாப் போகுது. காளையை அடிச்சு விரட்டி, வேகமா வண்டியை ஓட்டு” என்று சொன்னால் போதும்., முன்னருள்ள அருள்நிறை தர்மங்களெல்லாம் இங்கு அடிபட்டுப் போகும். புவியிலிருக்கும் அத்தனை ஜீவராசிகளிடமும் அன்பாயிருந்தால்தான் ஒருவர் “அருளாளர்” என்று அழைக்கப் படும். அவர்கள்தான் வானுலகில் மதிக்கப்படுவார்கள். இதைத்தான் வள்ளுவர்,

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.


என்று கூறுகிறார். பொருளில்லார்க்கு என்று வள்ளுவர் கூறி இருக்கிறாரே, அது பணம், காசை அல்ல. அவர் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் இக்குறளை எழுதியபோது பணமோ, காசோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் குறிப்பிடும் பொருள் வேறு.

ஆங்கிலத்தில் ஒரு சொல் “ட்ரெயின்” (train) என்றுண்டு. இதைச் சொன்னால் எல்லோர் மனதிலும் புகைவண்டிதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், இதற்கு இன்னொரு பொருளுமுண்டு, அதாவது பயிற்பித்தல் என்று. அது உடனே பலபேர் எண்ணத்தில் தோன்றுவதில்லை. அதுபோல் பொருள் என்று சொன்னால் பணம், காசு மட்டுமல்லாமல், ஒரு சொல்லின் பொருள், ஒருவர் சொல்வதன் ‘நோக்கம்’ இவையெல்லாமும் பொருள் என்ற சொல்லுக்குள் அடங்கும். ஆங்கிலத்தில் கூட, “வாட் டு யு மீன்?” (what do you mean) என்று கேட்பதுண்டு. இங்கு “மீனிங்க்” பொருள் என்று கொள்ள இயலாது, நோக்கம் என்றே கொள்ள வேண்டும்.

அதுபோல், வள்ளுவர் இங்கு குறிப்பிடுவது நாம் வாழும் வாழ்க்கை ஒரு நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த நல்ல நோக்கம் ஒருவர் வாழ்வில் இல்லை என்றால், அவரைப் பலர் மதிக்க மாட்டார்காள். “அவனா? அவன் இன்னிக்கு ஒண்ணு சொல்லுவான், நாளைக்கொண்ணு சொல்லுவான். அவனுக்கொரு குறிக்கோளே கிடையாது. அவனை நம்ப இயலாது" என்று ஒதுக்கி விடுவார்கள். ஆகையால், வாழ்வில் ஒரு நோக்கத்தோடு, குறிக்கோளோடு வாழ்ந்தால்தால் நமது இலக்கை, லட்சியத்தை அடைய இயலும்.

அதைத்தான் வள்ளுவர் “பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை” எல்லோரும் ஒதுக்கி விடுவார்கள், என்று கூறுகிறார்.

இதையும் நம் வாழ்வில் நினைக்க மறந்து இன்று ஒரு மாடலில் ஒரு கைப்பேசிவந்தால் உடனே வாங்குகிறோம், சில மாதங்களுக்குப் பின் இன்னும் பல வசதிகளுடன் இன்னொரு கைப்பேசி மாடல் மார்க்கெட்டில் வந்தால் அதை வாங்குகிறோம், கைப்பேசி ஒருவருடன் உரையாடத்தானே என்ற அடிப்படைக் கருத்தை மறந்து, சமூகத்தில் தன்னை தாழ்மையாக மதிப்பார்களோ என்ற அச்சத்தில் கடன் வாங்கியாவது அதை, இதை வாங்கி சமூக அந்தஸ்த்தை மட்டும் பெறுவதற்காக வாழ்ந்து, குறிக்கோளே இல்லாமல் வாழ்க்கை ஓடுகிறது!
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by முரளிராஜா Fri Oct 18, 2013 4:32 pm

இன்று ஒரு மாடலில் ஒரு கைப்பேசிவந்தால் உடனே வாங்குகிறோம், சில மாதங்களுக்குப் பின் இன்னும் பல வசதிகளுடன் இன்னொரு கைப்பேசி மாடல் மார்க்கெட்டில் வந்தால் அதை வாங்குகிறோம், கைப்பேசி ஒருவருடன் உரையாடத்தானே என்ற அடிப்படைக் கருத்தை மறந்து, சமூகத்தில் தன்னை தாழ்மையாக மதிப்பார்களோ என்ற அச்சத்தில் கடன் வாங்கியாவது அதை, இதை வாங்கி சமூக அந்தஸ்த்தை மட்டும் பெறுவதற்காக வாழ்ந்து, குறிக்கோளே இல்லாமல் வாழ்க்கை ஓடுகிறது!
மிக தெளிவாக சொன்னீர்கள்
சிலர் மதிப்புக்காகவே பல ஆயிரம் பணம் கொடுத்து கைபேசி வாங்குவதுண்டு புன்முறுவல் புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by ஸ்ரீராம் Sat Oct 19, 2013 11:07 am

திருக்குறளும் அதன் விளக்கமும் அருமை அருமை
தொடருங்கள். மிக்க நன்றி பகிர்வுக்கு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by sawmya Sat Oct 19, 2013 2:34 pm

அருமை! அருமை ! தொடருங்கள் நன்றி!புன்முறுவல்  
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Sat Oct 19, 2013 3:38 pm

நினைக்க மறந்த குறள்-4

ஒரு குழந்தை பிறந்து அது பள்ளி செல்லும்வரை அதற்கு வேண்டிய அறிவுறைகளைக் கூறி ஆளாக்குபவர்கள் அக்குழந்தையின் தாய்,தந்தையர்மட்டுமே. அதன்பின் அக்குழந்தை பள்ளி சென்று பல குழந்தைகளுடன் பழகி, பெரியவனாகி பலருடன் பழகி தன் திறமையையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள அடித்தளம் போட்டவர்கள் தாய், தந்தையர். ஆனால், இடையில் தானாக வளர்த்துக் கொண்ட அறிவையும், திறமையையும் வைத்துக்கொண்டு, இது நானாகவே வளர்த்துக் கொண்டது, தாய்,தந்தையர் எனக்கு என்ன செய்துவிட்டார்கள் என்று இன்று வளர்ந்த பிள்ளைகள் கேட்பது வெகுவாகிவிட்டது.

அது மட்டுமல்ல, தனக்கு மணமாகி குழந்தைகள் பிறந்து விட்ட பின், தாய்,தந்தையர் முதுமை அடைந்து விட்டதால் அவர்களால் இனி முற்றிலுமே உபயோகமில்லை என்று எண்ணி முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடவும் இக்காலத்து இளைஞர்களுக்குத் துணிவு வந்துவிட்டது. இதனால் முதியோர் இல்லம் மட்டுமல்ல, குழந்தைகள் காப்பகமும் மிகவும் பெருகிவிட்டது. பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, தன் குழந்தைகளையும் “க்ரச்” எனப்படும் குழந்தைகள் காப்பகத்தில் விட்டுவிட்டு, எல்லா சுகங்களையும், பாசத்தையும் இழந்துவிட்டு இவர்கள் யாருக்காக சம்பாதிக்கிறார்கள்? ஒருவேளை, இவர்கள் முதுமை அடைந்ததும் இவர்களது குழந்தைகளும் அவர்களை முதியோரில்லத்தில் விட்டுவிட்டால், இவர்கள் சம்பாதித்த செல்வத்தின் நோக்கம் என்ன? 

இவற்றையெல்லாம் நன்குணர்ந்த குறுமுனி பெரியாரைத் துணைக் கோடல் என்றொரு அதிகாரத்தையே உருவாக்கி, உன் தாய்,தந்தையர் உயிரோடிருக்கும் வரை அவர்களது அறிவுரை கேட்டு நட, அப்படி அவர்கள் மறைந்துபோனாலும் நல்ல அறிவு செறிந்த, ஆதரவான ஒரு பெரியவரை உறவாக்கிக் கொண்டு அவர்களது அறிவுரைப்படி நடந்துகொள், என்று கூறுகிறார்.

இடிக்குந்துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்குந் தகைமையவர்?”
நம்மை இடித்துக் கூறும் உரிமை நம் தாய்,தந்தையருக்கே உண்டு. வயதான நிலையில் அப்படி இடித்துக் கூறும் அறிவுரையை ஏற்கவும் நமக்குப் பக்குவமுண்டு. ஆகையால், அவர் துணை உனக்கு எப்போதும் உண்டென்றால், உன்னை எவராலும் கெடுக்க இயலாது, என்று (யாரே) ‘ஏ’ காரமிட்டு ஆணித்தரமாய்க் கூறுகிறார், திருவள்ளுவர்.

அப்படி அவர்களை வாழ்வில் காலனின் ஆதிக்கத்தில் இழக்கும்படி நேர்ந்தால்,

“அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்”
என்று கூறுகிறார் அந்தத் தெய்வப்புலவர்.

அதாவது, சான்றோரைப் போற்றித் தமது சுற்றத்தவராக்கிக் கொள்ளுதல் என்பது பெறத்தக்க அரிய பேறுகளில் எல்லாம் அரியதாகும், என்று விளக்குகிறார் திருவள்ளுவர்.

இதுபோன்ற அரும்பெரும் திருக்குறள்களையெல்லாம் நம் வாழ்வில் நினைக்க மறந்து, பொருளாதார மேன்மையை மேற்கோள்காட்டி, முதியோரில்லங்களையும், குழந்தைகள் காப்பகங்களையும் பெருக்க வழிவகை செய்து வருகின்றனர் நம்மில் பலர்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by முரளிராஜா Sat Oct 19, 2013 4:27 pm

மிக எளிமையான சிறப்பான விளக்கம்
மிகவும் அருமை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Sat Oct 19, 2013 5:23 pm

எனக்குக் கிடைக்கும் பாராட்டுகளெல்லாம் என்னைத் தமிழில் ஆர்வமூட்டி இந்த அளவுக்கு ஆளாக்கிய (எஸ்.எஸ்.எல்.சி படிக்கும்போது இருந்த) தமிழாசிரியர் திரு பழநிவேல், திரு ராமலிங்கம் இவர்களைத்தான் சாரும். இவர் எனக்கெடுத்த வகுப்புகளில், கலிங்கத்துப் பரணி, கம்பராமாயணம், நாலடியார், திரிகடுகம் எல்லாம் விளக்கியபோது நான் என்னையே மறந்து அக்காவிய உலகிற்கே சென்று அனுபவித்த காலமுண்டு. இப்போது இருக்கும் தமிழின் நிலை வேதனையளிக்கிறது. ஔவை பாடினாளே,"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது" என்று அதை மாற்றி நான் சொல்வேன், "அரிது அரிது தமிழனாய்ப் பிறப்பதரிது" என்று. இதை ஒவ்வொரு தமிழரும் உணரும் காலம் மீண்டும் வரும். தங்களது எல்லோருடைய பாராட்டுகளுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by ஸ்ரீராம் Sat Oct 19, 2013 6:09 pm

மிக அருமையான விளக்கம் ஐயா. மிக்க நன்றி

உங்களை போலவே எனக்கும் வரலாறு ரொம்ப பிடிக்கும், அமரர் கல்கியில் பொன்னியின் செல்வனை ஐந்து முறைக்கும் மேலே படித்திருப்பேன். உங்களை பற்றி அறிய தந்தமைக்கும் நன்றி.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by Kingstar Sat Oct 19, 2013 9:34 pm

மிக அழகாக விளக்கம் அளிக்கும் தங்களுக்கு. நன்றி ந்
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by muthuaiyer Sun Oct 20, 2013 12:30 pm

நினைக்க மறந்த குறள் – 5


திருவள்ளுவர் நீள் மீசையும், தாடியும், ஜடா முடியும்கொண்ட வண்ணம் இருக்கும் உருவைத்தான் நாம் பார்த்திருக்கிறோம். இப்படி உருவம் கொண்டவர்கள் துறவறம் பூண்டவர் என்றும் நாம் கருதுவது மரபு. ஆனால் வள்ளுவர் அப்படி எல்லாவற்றையும் துறந்து தவக்கோலம் கொண்டவர் என்பதை ஏற்க இயலாதபடி நமக்கு தெய்வத் திருமறையாம் திருக்குறளை அளித்துள்ளார்.

திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூன்று தலைப்புகளையும் அலசி ஆராய்ந்து எக்காலத்துகும் பொருந்தும்வகையில் தன் நூலை நமக்கு அளித்துள்ளார். ஆசை, கோபம், வெகுளி, பொறாமை, இன்னா செய்யாமை, சூது, புலால் உண்ணாமை, பற்றியெல்லாம் எழுதியதோடல்லாமல், இன்பம் பற்றியும் சுவைபட எழுதியுள்ளார்.

காந்த்யைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள். ஒருசமயம் ஓர் அன்னை, தன் குழந்தையை அழைத்துக்கொண்டு காந்தியிடம் சென்றார். அக்குழந்தை இனிப்பை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டிருந்தது. அக்குழந்தையின் அன்னை, “தன் மகன் இனிப்பு உண்ணும் பழக்கத்தைக் குறைக்க வழி” கேட்டாள். காந்தியடிகள் அவளை 10 நாட்கள் கழித்து வரச் சொன்னார். அவள் ‘ஏன் அடிகள் பத்து நாள் அவகாசம் கேட்கிறார்’ என்று குழம்பியபடிச் சென்றுவிட்டு, 10 நாட்கள் கழித்து வந்தாள். காந்தியடிகள் குழந்தையிடம், “இனிப்பு தின்னால் இவ்வாறான அசுகங்கள் ஏற்படும். ஆகையால் இனிப்பை அளவோடு தின்ன வேண்டும்” என்று பல மேற்கோள்கள் காட்டி அக்குழந்தைக்கு அறிவுரை கூறி படியச் செய்தார். பின், அந்த அன்னை காந்தியடிகளிடம், “இதை நீங்கள் 10 நாள் முன்பே சொல்லி திருத்தி இருக்கலாமே! ஏன் அந்த அவகாசம்?” என்று கேட்டபோது அவர், “இக் குழந்தை இனிப்பு தின்னாமல் இருக்க வேண்டும் என்றால், அதை அதிகம் உண்ணாத எனக்குக் கிடைக்கும் சுகங்களை நான் முன்பே அறிவேன். ஆனால், இனிப்பு தின்பதால் கிடைக்கும் சுகங்களை நான் முதலில் அனுபவிக்க வேண்டும். பின் அதை இழக்கும்போது படும் துன்பங்களையும் அனுபவித்த பின்னரே அக் குழந்தைக்கு அந்த வேதனையை அல்லது இன்பத்தை நான் கூற தகுதியுள்ளவனாகிறேன்” என்று கூறினாராம்.

எனவே, துறவரம்பூண்ட ஒருவர் இதுபோல் பல விஷயங்களில் ஒரு நூலைப் படைக்கவேண்டுமென்று சொன்னால் அதை அவர் ஒரு காலக்கட்டத்தில், தான் அனுபவித்தால் மட்டுமே அதிலிருக்கும் நிறை, குறைகளை விளக்க இயலும். இதைத்தான் வள்ளுவர்,

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல


என்கிறார். அதாவது,
ஒருவன் துன்பமற்ற நிலையை விரும்பினால், அவனிடம் எல்லப் பொருள்களும் உள்ள போதே துறந்துவிட வேண்டும். துறந்தபின் இங்குப் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.

இந்தக் குறளையும் நம் வாழ்நாளில் நினைக்க மறந்து எல்லா இன்ப சுகங்களையும் தேடித் தேடி அலைகிறோம். ஓரிடத்திற்கு நடந்துபோவதைக் காட்டிலும் காரில்போனால் விரைவாகவும், சுக மாகவும் போகலாமே என்று போய்விடுகிறோம். முதுமையில், இதுபோல் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் சுகப்பட்டு, சுகப்பட்டு பின் அந்த மூட்டில் வலி, இந்த மூட்டில் வலி, நடக்கவே முடிய வில்லை என்று திண்டாடுகிறோம்.  
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by ஸ்ரீராம் Sun Oct 20, 2013 12:37 pm

மகாத்மா காந்தி அவர்களின் கதையும், திருக்குறளும் அதன் விளக்கமும் மிகவும் அருமை
மிக்க நன்றி.... தினம் தினம் உங்கள் பதிவை எதிர்நோக்குகிறோம்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by முரளிராஜா Sun Oct 20, 2013 1:26 pm

ஒருவன் துன்பமற்ற நிலையை விரும்பினால், அவனிடம் எல்லப் பொருள்களும் உள்ள போதே துறந்துவிட வேண்டும். துறந்தபின் இங்குப் பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.
முற்றிலும் உண்மை ஆனால் இந்த மனநிலைக்கு வருவதுதான் சிரமம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

திருக்குறளும் அதன் விளக்கமும் Empty Re: திருக்குறளும் அதன் விளக்கமும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum