தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை

View previous topic View next topic Go down

இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை Empty இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை

Post by முழுமுதலோன் Wed Aug 07, 2013 10:19 am

இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை


எழுத்தாளர்கள்


எழுத்தை காசாக்கும் வியாபாரிகள் எழுத்தாளர்கள் இல்லை
உடலை காசாக்கும் விபச்சாரம் கலைகள் எனப்படுவதில்லை

அறிஞர் எழுதிய எழுத்துக்களும் நல்ல பாடமாகும்
வறிஞர் வாழந்த வாழ்ககையும் நல்லபாடமாகும்

இரும்பில் வடித்த ஆயுதங்கள் துரு பிடிக்கலாம்
எழத்தில் வடிதத் கருத்துக்கள் ஒலி இழப்பதில்லை

செல்வந்தரின் செல்வாக்கு நீரின் குமிழி போல
சொல்வேந்தரின் சொல்வாக்கு கல்லின் எழத்து போல

அங்கங்கள் படைதிரட்டி வந்தால் அரசர்களும் நின்றதில்லை
எழத்துக்கள் படைதிரட்டி வந்தால் சர்வாதிகாரர் வென்றதில்லை

கருத்தில்லாத எழத்துக்கள் உயிரில்லாத காகிதப்பூக்களே
கவனமில்லாத வார்த்தை உப்பில்லாத குப்பைகளே

நல்ல எருவுள்ள இலைகளும் பயிருக்கு உரமாகும்
நல்ல கருவுள்ள எழத்துக்களும் உயிருக்கு உரமாகும்

கருத்துக்கள் என்பவை வெறும் எழுத்துக்கள் அல்ல
கருத்துக்கள் என்பவை கருக்கொண்ட மழை மேகங்கள்

அன்பில்லாத காதல் அலுத்துப் போகும்
அர்த்தமில்லாத எழுத்து உலுத்துப் போகும்


கடிதம் எழதிய பின் மூன்று முறை படித்தபின்னும்
பிடித்திருந்தால் அனுப்புங்கள்
புத்தகம் எழதிய பின் நான்முறை படித்த பின்னும்
பிடித்திருந்தால் வெளியிடுங்கள்.


Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கலைஞர்கள்


காற்றுக்கும் கடலுக்கும் ஒய்வும் உறக்கமும் கிடையாது
கவிதைக்கும் கவிஞனுக்கும் மரணமும் மறைவும் கிடையாது

கலையும் கவிதையும் தேச மொழி கடந்து மணம் வீசும் மலர்கள்
கவிஞரும் கலைஞரும் சாதி மதம் கடந்து ஒளி வீசும் சுடர்கள்

கல்லைப் பார்த்த கலைஞன் அதை கவின் சிலையாய் வடிக்கிறார்
கல்லைப் பேர்த்த வியாபாரி அதை நல்ல விலைக்கு விற்கிறார்

உள்ளத்தை ரசிக்கும் கவிஞனோ அதன் கோபதாபங்களை ருசிக்கிறார்
உடலைரசிக்கும் காமுகனோ அதன் மேடு பள்ளங்களை இரசிக்கிறார்

கலைஞர்கள் என்பவர் மற்றவர் விருப்பப்படி ஆடும் கூத்தாடியல்ல
கவிஞர்கள் என்பவர் மற்றவன் விருப்பப்படி பாடும் காத்தாடியல்ல

கசப்பாக இருந்தாலும் பிஞ்சான காயும் கருத்தும் தள்ளப்படும்
இனிப்பாக இருந்தாலும் நஞ்சான கனியும் கவிதையும் தள்ளப்படும்

காவலர்கள் இன்றைய பண்பாட்டை காக்க காவல் செய்கிறார்
பாவலர்கள் நாளை பண்பாட்டை காக்க கவிதை எழதுகிறார்

பணத்தினால் அடிமைகளை வாங்கலாம்
மரியாதையை வாங்க முடியாது
பணத்தினால் கலைஞர்களை வாங்கலாம்
கலையை வாங்க முடியாது


குருடருக்கு குருடர் வழிகாட்டினால் குழியிலே வீழ்வார்
மூடருக்கு மூடரே தலைவரானால் துயரிலே வீழ்வார்

கலைகள் தேயும் போது நாடு அழியத் தொடங்குகிறது
நாடும் விழும் போது கலைஞர்கள் நலியத் தொடங்குகிறார்ள்.

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

தலைவர்கள்


தலையில் கிரீடம் அணிந்தவர் எல்லாம் தலைவர்களாவதில்லை
தலையில் ஞானம் கொண்டவர்தானே தலைவர்களாகிறார்கள்

பார்வையிலே கனிவும்
பழக்கத்தில் இனிமையும் இருப்பவர் தலைவர்கள்
நேர்மையிலே நிறைவும்
ஒழுக்கத்தில் உறுதியும் இருப்பவர் பெருந்தலைவர்கள்

கற்பென்பது தன்னை நம்பிய கணவனுக்கு மணைவியின் பரிசு
நேர்மையென்பது தன்னை நம்பிய மக்களுக்கு தலைவனின் பரிசு

பஞ்சாங்கம் பார்ப்பவரெல்லாம் தலைவரானால் பஞ்சமே மிஞ்சும்
வஞ்சகம் செய்பவரெல்லாம் தலைவரானால் வறுமையே மிஞ்சும்

தன் தவறை பிறர் மீது சுமத்துபவன் கயவனாவான்
பிறர் தவறையும் தன் மீது ஏற்பவனே தலைவனாவான்

ஒரு அலையின் பின்னே பெரும் சமுத்திரமே இருக்கிறது
நல்ல தலையின் பின்னே ஒரு சமுதாயமே இருக்கிறது

கையே இல்லாதவன் இங்கு காற்றை பிடிக்கத் துடிக்கிறான்
தலையே இல்லாதவன் இங்கு தலைவன் ஆகத் துடிக்கிறான்

தலையின் இடத்தில் கருப்பை வைக்கலாமோ
தலைமையின் இடத்தில் கயவனை வைக்கலாமோ

செருப்பை தைக்கக் கூட தகுதியானவரை தேடி அலைகிறோம்
ஆட்சி அமைக்க தகுதியானவரைத் தேடுகிறோமில்லை

கலைஞன் என்பவன் கற்பனைகளை விற்பவன்
தலைவன் என்பவன் நம்பிக்கைகளை விதைப்பவன்


Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வீரர்கள்


வீரரின் துணிச்சல் அது வேங்கைப்புலி பாய்வது போல‌
வீணரின் துணிச்சல் அது வெட்டுக்கிளி துள்ளுவது போல‌

நீதியுள்ள நெங்சத்தில் வீரம் தீபத்தின் சுடராகும்
நீதியற்ற நெஞ்சத்தின் வீரம் கூரையில் தீயாகும்

கூச்சத்தில் புழுங்கி சாவதை விட வாய் பேசி அழிவதே வீரம்
அச்சத்தில் அழுந்தி சாவதை விட வாள் வீசி அழிவதே வீரம்

எளிமையான தோற்றமுடையோர் திறமையற்றவர் என எடை போடாதே
வலிமையான தோற்றமுடையோர் வீரமுள்ளவர் என ஏமாந்து விடாதே

ஒரு வீரன் பத்துப்பேரை தன் தீரத்தால் வீரனாக்குவான்
ஒரு கோழை நூறு பேரை தன் வார்த்தையால் கோழையாக்குவான்

தலை அற்றதோர் கவசம் பெற்ற அமர்களப் புகழ் போலாகுமா
தோற்றபின் நாணும் மூச்சுவிடும் பிணமாய் நடித்தலும் அழகோ

ஆணி வேருடன் எழுந்து அதிர்ந்து வீழ்ந்தாலும் பேணுவார் மரத்தை
காணுவார் யாரோ காலில்லாத நாணமில்லாத நாணல் புல்லையே

அறிஞரின் அறிவை துயர் வரும் போதே அளவிட முடியும்
வீரரின் வீரத்தை போர் வரும் போதே அளவிடமுடியும்

தேய்வதும் வளர்வதும் நிலவுக்கு வாடிக்கை
தோற்பதுவும் வெல்வதுவும் வீரர்க்கு வேடிக்கை

போர் வரும் போதே உண்மையான வீரனைக்கண்டறிய முடியும்
துயர் வரும் போதே உண்மையான நன்பனைக் கண்டறிய முடியும்


Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

ஆசிரியர்கள்


தான் உற்ங்கும் போது பேசுவது குழந்தைகள் பழக்கம்
பிறர் உறங்கும் போது பேசுவது ஆசிரியர்கள் பழக்கம்

ஒரு மாணவனின் ஒழுக்கக் கேடு ஒரு குடும்பத்தை பாதிக்கும்
ஒரு ஆசிரியரின் ஒழுக்கக் கேடு ஒரு சமூகத்தையே பாதிக்கும்

கல் கல் என்று சொல்பவர் கல்லிலே உன் புகழ் எழுத வைப்பார்
நில் நில் என்று சொல்பவர் அறிவிலே அனுபவத்தை எழுதி வைப்பார்

படி படி என்பவர் புகழ் ஏனியின் படியில் ஏற்றி விடுவார்
படி படி என்பவர் பணிவுப் பாதையின் பாடத்தை பதிய வைப்பார்

மலர் கனிந்து பழுத்ததற்காக பலன் கேட்பதில்லை வேர்கள்
மாணவர் படித்து சிறந்ததற்காக பரிசு கேட்பதில்லை ஆசிரியர்கள்

மங்கையின் இன்பம் கலவியிலே
மலரின் இன்பம் மனத்திலே
கங்கையின் இன்பம் குளிக்கையிலே
கல்வியின் இன்பம் கற்பித்தலிலே

ஆசிரியரின் உடையும் மொழியும் மாணவனின் புத்தகம்
ஆசிரியரின் நடையும் வழியும் மாணவரின் நூலகம்

தொழுது நிற்கும் தொண்டரும் அழுது அரற்றும் தோழியும் பகையாகும்
உழுது கற்ற கல்வியும் பழுது நீக்கும் ஆசிரியரும் பகையாகாது

கல்லென்று சொல்லி கர்வம் திருத்தாத அப்பனும் பகையே
நில்லென்று சொல்லி அனியாயம் திருத்தாத ஆசானும் பகையே

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மாணவர்கள்


அன்றைய மாணவர்கள் தங்க மாணவர்களாக இருந்தார்கள்
இன்றைய மாணவர்கள் சிங்க மாணவர்களாக இருக்கிறார்கள்

உடல் கூட்டத்தில் நாட்டம் கொண்டே
இளைஞர்கள் கல்வியை மறந்தாரே
பதவி கோட்டையில் நாட்டம் கொண்டு
தலைவர்கள் மக்களை மறந்தாரே

மரத்தின் கனி மண்ணில் விழுவது புவி ஈர்ப்பு விசை
மாணவன் கண் பெண்ணில் விழுவது பாலீர்ப்பு விசை

அதிசய மாணவர்கள்
அற்புத மாணவர்கள் எங்கள்
அறிவு மாணவர்கள்
உற்சாக மாணவர்கள்
ஒழுக்க மாணவர்கள் எங்கள்
செல்வ மாணவர்கள்

குடிப்பதற்க்காக நேரம் ஒதுக்கியவன் வாழ்ந்ததில்லை
படிப்பதற்க்காக நேரம் ஒதுக்கியவன் வீழ்ந்ததில்லை

செவி வாசலை திறந்து வாய் வாசலை மூடினால் அறிவு வளரும்
ஆசை வாசலை அடைத்து அன்பு வழி திறந்தால் உலகம் வளரும்

கல்லாதவன் கற்பிக்க வந்தால் மாணவனுக்கு துயரம்
கண் உடையவன் அறிவுரை சொன்னால் காதுக்கு துயரம்

இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை
இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

மக்கள்


இல்லாதவருக்கு நிறம் கருப்பு
இருப்பவருக்கு பணமும் குணமும் கருப்பு
இல்லாதவர் இல்லத்திலே இருள்
இருப்பவருக்கு உள்ளமும் உணர்வும் இருள்


இரு பூனையை மோத விட்டு ஏமாற்றி தின்னும் மந்தி
இரு சாதியை ஏவி விட்டு ஏமாற்றி வாழும் தந்திரி


அணு சக்தி வளர்ந்ததாலே நாம் உலக வல்லரசு ஆகிடலாம்
பசிப்பிணி தீர்ந்தால்தானே நம் ஊரில் நல்லரசு ஆகிடலாம்


வீர விளையாட்டில் பதக்கம் வந்தால் நம் உலகதரம் உயரும்
ஏழை தலைவனுக்கு கூரை வந்தாலே நம் ஊரின் தரம் வாழும்


ஆண்டவனை தரிசிக்கவும் காசு
அதிகாரியை தரிசிக்கவும் காசு
குடிக்கின்ற தண்ணீருக்கும் காசு
கழிக்கின்ற சிறுநீருக்கும் காசு


கட்டணம் இல்லாமல் பட்டணம் மூச்சு கூட விடுவதில்லை
காசு இல்லாமல் தூசுக்கும் கூட பேச்சு வருதில்லை


நகரத்தின் நாளங்களில் பணமும் கருப்பு குணமும் கருப்பு
நரகத்தின் வாசல்களில் காற்றும் நீரும் கருப்பு


நீளக் கார் வாங்கிய தலைவர் சேரிக்குள் வருவது எப்படி
நீளக் கை நீண்ட தலைவர் வறுமையைத் தீர்ப்பது எப்படி


ஒன்றும் ஒன்றும் நான்காகும் என்றால் நம்புவதற்கு நானூறு பேர்
ஒன்றும் ஒன்றும் ஏழாகும் என்றால் ஏங்குவதற்கு எழுநூறு பேர்



Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
Posted by DrBALA SUBRA MANIAN

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை Empty Re: இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை

Post by mohaideen Wed Aug 07, 2013 1:14 pm

நல்ல அருமையான விளக்கங்கள்சூப்பர்
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை Empty Re: இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை

Post by முரளிராஜா Wed Aug 07, 2013 2:01 pm

மிகவும் அருமை அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை Empty Re: இளமையில் எதிர்காலத்தை சிந்திக்க நேரமில்லை இளமையில் சிந்திக்காத மனிதருக்கு எதிர்கால்மேயில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum