தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆவணி அவிட்டம்

View previous topic View next topic Go down

ஆவணி அவிட்டம் Empty ஆவணி அவிட்டம்

Post by முரளிராஜா Mon Aug 19, 2013 7:05 pm

ஆவணி அவிட்டம்
அந்தணர்களாக பிறந்த ஒவ்வொருவரும் எட்டு வயதில் உபநயனம் பூணூல்

சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியாக, மஹா மேதாவியாக

இருந்தால் ஐந்து வயதில் கூட பூணூல் போட்டு விடலாம். பதினாறு வயதிற்கு மேல்

உபநயனம் செய்வது என்பது பேரளவுக்கு மாத்திரமே என்று சாஸ்திரங்கள்

கூறுகின்றன.

உபநயனம் என்பதில் இரண்டு காரியங்கள் இருக்கின்றன. ஒன்று பூணூல்

போட்டது முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல்

சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை

அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்

கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய

அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின்

மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய

நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல்

போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று

சொல்லுகிறோம்.

உப நயனம் என்ற இரண்டு சொற்களின் அர்த்தம் காயத்ரீ மந்திரத்தைக்

கற்றுக் கொள்வதற்கு குருவின் சமீபம் அழைத்துச் செல்லுதல் என்று பொருள்.

இந்த வேதம் படிப்பதற்கு காலங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. தக்ஷிணாயனம்

என்று சொல்லக்கூடிய ஆறு மாதங்கள், வேதம் சொல்லக் கூடிய காலங்கள்.

உத்ராயணத்தில் அந்த வேதத்திற்கு அர்த்தம் தெரிந்து கொள்வதற்கு

சம்ஸ்க்ருதத்தையும், உப அங்கங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்துகொள்ளவேண்டும். தை,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி இந்த

ஆறு மாதங்களும் உத்தராயணம். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை,

மார்கழி இந்த ஆறுமாதங்கள் தக்ஷிணாயனம். ஆவணி மாதத்தில் அவிட்ட

நட்சத்திரத்தில் வரக்கூடியது ஆவணி அவிட்டம். இதையே எல்லோரும்

பொதுவாக ஆவணி அவிட்டம் என்பார்கள். ஆடிமாத அமாவாசைக்கு பிறகு

ச்ராவண மாசம் என்பத சாந்திரமான கணக்குப்படி வரும். ச்ராவண மாசத்தில்

ச்ரவண நட்சத்திரத்தன்று ஒரு தோஷமும் இல்லாமல் இருந்தால் யஜுர் வேதிகள்

ஆவணி அவிட்டம், உபாகர்மா செய்து கொள்வார்கள்.

சாம வேதத்திற்கு ஆவணி ஹஸ்தம் எடுத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு

வேதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் மாறி வந்தாலும் ருக் வேதம்தான்

முதன்மையாக இருப்பதினால் அந்த ஆவணி அவிட்டத்தையே எல்லோரும்

உபாகர்மா என்று பெயர் வைத்து விட்டார்கள். இந்த உபாகர்மா அன்று

தக்ஷிணாயத்தில் ஆறுமாதத்திற்கான வேதபாடங்களை படித்து முடித்து உத்தராயண

ஆரம்பத்தில் அந்த வேதத்திற்கான அர்த்தங்களையும், தர்ம சாஸ்திரத்தையும்

தெரிந்து கொள்ள வேண்டும். இப்படி முடியாதவர்கள் ஆவணி அவிட்டத்தில்

தாங்கள் படித்த வேத பாகத்தை பூர்த்தி செய்து கொண்டு, ஆவணி அவிட்ட

உபாகர்மாக்களைச் செய்து கொண்டு திரும்பவும் அன்று வேத பாடங்களை

ஆரம்பம் செய்ய வேண்டும்.

இதுவரை வேத பாடங்களைப் படித்து வந்ததில் உள்ள குறைகளை

நீக்குவதற்கும், மேலும் நல்ல பலத்துடன் படிப்பதற்கு காயத்ரீ ஜபம் செய்ய

வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

வேத சாஸ்திர பாடங்களை அந்தந்த காலத்தில் ஆரம்பித்து

முடிக்காததற்காகத்தான் பரிகாரமாக "காமோகார்ஷீத்" ஜபம் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் எப்படியோ ஒரு அறியாமை இந்த விஷயத்தில் புகுந்து

விட்டது. 'காமோ கார்ஷீத்' ஜபம் செய்த பிறகு இட்லி, பலகாரம் சாப்பிடுவது என்று

ஒரு பழக்கம். இந்தப் பழக்கம் சரியல்ல.

அதேபோல் பலரும் வீட்டிலேயே வாத்தியாரை வரவழைத்து பூணூலை

மட்டும் புதிதாக மாற்றிக் கொள்கிறார்கள். மற்ற எந்த ஒரு வித வேத கர்மாவுக்கும்

அங்கு இடமில்லாமல் போய் விடுகிறது. ஆவணி அவிட்டத்தில் பூணூல் மாற்றிக்

கொள்வது முக்கியமாக இருந்தாலும், பூணூலை மாற்றிக் கொள்வது

எதற்காகவென்றால் வேதம் படிப்பதற்கு முன்பு புனிதமாக ஆகவேண்டும் என்பதே

முக்கியம். பூணூலை மாற்றிக் கொள்வதற்கு மட்டும் இல்லை. பூணூலை மாற்றிக்

கொண்ட பிறகு சிறிது அளவாவது வேதாரம்பத்தை செய்த கொள்ள வேண்டும்.

ஆகவே அவணி அவிட்டத்தில் வேதாரம்பம் செய்வது முக்கியம். அதை

ஒட்டித்தான் பூணூல் போட்டுக் கொண்டு "காமோர்கார்ஷீத்" ஜபம் செய்வது

போன்றவைகள். அதேபோல் பூணூல் போட்டுக் கொண்ட மறுநாள் காயத்ரீ ஜபம்

வரும். ஆவணி அவிட்டத்தில் வேத மந்திர ஜப சித்தி இருந்தால்தான் வேதாரம்பம்

ஸ்திரமாக இருக்கும். அதற்காகத்தான் காயத்ரீ ஜபத்தை மறுநாள் வைத்து

இருக்கிறார்கள். பலரும் அறியாமையால் பூணூல் போட்ட முதல் வருஷத்தில்தான்

காயத்ரீ ஜபம், காயத்ரீ ஹோமம் முதலியவைகள் என்று எண்ணிக் கொண்டு

இருக்கிறார்கள். தம்முடைய வாழ்க்கையிலேயே தினந்தோறம் சந்தியாவந்தனம்,

காயத்ரி ஜபம் செய்து விட்டுத்தான் வேதத்தை பாராயணம் செய்யச் சொல்லி

இருக்கிறது. ஆகவே ஒவ்வொரவரும் காய்த்ரீ ஜபத்தன்று ஆயிரம் தடவை காயத்ரீ

மந்திரத்தையும் அல்லது ஹோமத்தையும் செய்ய வேண்டும்.

பஞ்சாக்ஷரீ ஜபம், அஷ்டாக்ஷரீ ஜபம் போன்ற பல மந்திர ஜபங்கள் எல்லாம்

இருக்கின்றன. இந்த ஈஸ்வரானுக்ரஹம் சித்திக்க வேண்டும் என்றால் கூட காயத்ரீ

ஜபத்தை அதிக அளவில் செய்தால்தான் சித்திக்கும் என்றும், மற்ற ஜபங்கள் பலன்

அளிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. காயத்ரீ மந்திரம் ஒன்றுதான்

வேதத்திலிருந்து வந்தது. மற்ற எல்லா மந்திரங்களும் அதிகமாக

புராணத்திலிருந்துதான் வந்தவை. பஞ்சாக்ஷரம் போன்ற மந்திரங்களை

ஜபிப்பவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விசேஷ பலன் சொல்லப்பட்டு

இருக்கிறது. ஆனால் காயத்ரீ மந்திரம் ஜபித்த எல்லோருக்கும் ஒரே பலன்

மனத்தூய்மைதான். மனோபலம்தான். மனோபலத்தையும், மனத் தூய்மையும்

வைத்துக் கொண்டு உலகத்தில் எல்லா காரியங்களையும் சாதிக்க முடியும்.

இன்றைக்கு மனோபலமும், மனோ தைரியமும் குறைந்திருப்பதற்கு காரணமே

காயத்ரீ அனுஷ்டாணம் குறைந்து இருப்பதுதான்.

சில சமயம் ஆவணி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதினால்

தோஷமாதலால் அந்த மாதத்தில் உபநயனம், கல்யாணம் போன்ற சடங்குகள்

செய்ய மாட்டார்கள். ஆகையினால்தான் ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே

வந்து விடுகிறது. ச்ராவண சுத்தத்தில் முடிவான பௌர்ணமி அன்று வந்து

விடுகிறது.


நன்றி http://www.kamakoti.org/

ஆவணி அவிட்டம்-ஜபிக்கும் முறை

ஆவணி அவிட்டம்

ஆவணி மாத அவிட்ட நட்சத்திரத்தன்று பூணூல் அணிபவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது. இந்த நாளில் பழைய பூணூலை கழற்றிவிட்டு, புதிய பூணூல் அணிந்து கொள்வர். இதை குருமுகமாகத்தான் செய்ய வேண்டும். வீட்டில் குருக்களை வைத்து காயத்ரி மந்திரம் ஜபித்து பின் பூணூல் போடுவார்கள். இப்போதெல்லாம் சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை குழுக்களாகக் கோவிலுக்குச் சென்று அனைவரும் குருக்கள் உதவியுடன் புதிய பூணூல் அணிந்து கொள்கின்றனர்.

மூன்று வயது முதல் ஐந்து வயதிற்குள் ஆண் குழந்தைகள் குருமுகமாக காயத்ரி மந்திரம் ஓதி, குழந்தையை தந்தை மடிமீது அமர வைத்து முதன் முதலாகப் புதிய பூணூல் போட்டு விடுவார்கள். இதை ஒரு திருமண விழா போலவே கொண்டாடுவார்கள். சிலர் தன் உறவினர் வீட்டுத் திருமண விழாவில் மணமகள் அமர்ந்த மேடையில் அமர்த்தியும் செய்து விடுவார்கள். (செலவும் சிரமமும் குறைவு). இதற்கு உபநயனம் என்று பெயர். உபநயனம் செய்து புதிய பூணூலை அணிந்துகொண்டபின், தினமும் காயத்ரி ஜபத்தை மூன்று முறை தவறாமல் ஓத வேண்டும். வருடம் ஒருமுறை ஆவணி அவிட்டத்தன்று புதிய பூணூல் அணிந்துகொள்ள வேண்டும்.

பூணூல் அணிவிக்கும்போது குரு சொல்லித் தரும் ஜபம் "ஓம், பூர்புவ, சுவஹ, தத், ஸவிதுர், வரோண்யம், பர்கோ, தேவஸ்ய, தீமஹி, தியோ யோந, ப்ரசோதயாத்' என்பதாகும். இம்மந்திரத்தை தினம் மூன்று வேளை கை மேல் துணி போட்டு மூடி, 108 அல்லது 1008 முறை ஜபிக்க பாவம் நிவர்த்தியாகும்.

ஜபிக்கும் முறை

சுண்டு விரல் அடியிலிருந்து ஒவ்வொரு கணுவாக எண்ணி (3), மோதிர விரல் நுனி (1), நடுவிரல் நுனி (1), ஆட்காட்டிவிரல் நுனி (1), கட்டை விரல் இரண்டு கணு (2), ஆள்காட்டி விரலின் கீழ்க்கணு (1), நடுவிரலின் கீழ்க்கணு (1), மோதிர விரல் கீழ்க்கணு (1) என்று மொத்தம் 11 எண்ணிக்கையில் எண்ணி இந்த மந்திரத்தை ஓத வேண்டும். "ஓம், பூர்புவ, சுவஹ' என சொல்லிக் கொண்டே எண்ணினால் 11 சொற்கள் வரும்.

இம்மந்திரம் உள்ளத்தை இதமாக்கும். மந்திரங்களிலேயே மிகவும் உயர்வான மந்திரம் இது. வேதங்களின் தாய் காயத்ரி. இந்த மந்திரம் வேத மந்திரங்களில் சிரேஷ்டமானது. இது பாவங்களைப் போக்கும். நல்ல ஆரோக்கியம், அழகு, பலம், வீர்யம், பிரும்ம தேஜஸ் முதலானவற்றைத் தருகிறது. மனதைப் பரிசுத்தப்படுத்து கிறது. ஜபிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளைக் கொடுக்கிறது. சக்தி மானாகவும் புத்திமானா கவும் ஆக்குகிறது.

கீதையில் கண்ணன், "மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்' என்று கூறியுள்ளார். மஹாவிஷ்ணுவின் திரு முகத்திலிருந்து தோன்றிய மந்திரம் இது! காயத்ரிக்கு மூன்று கண்கள், ஐந்து முகங்கள், பத்து கரங்கள் உண்டு. வாகனம்- அன்னம். சிவன்போல ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத் தல், அருளல் என ஐந்து தொழில்களை காயத்ரியின் ஐந்து முகங்களும் செய்கின்றன. சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, மகேஸ்வரி, மனோன்மணி என்ற ஐந்து சக்திகளின் முகங்களே காயத்ரியின் ஐந்து முகங்கள்.

விசுவாமித்திரரால் இம்மந்திரம் இராம பிரானுக்கு உபதேசிக்கப்பட்டு, அதன் பலனாக இராமன் இராவணனை வென்றார் எனக் கூறப் படுகிறது. காயத்ரி மந்திரத்தை 27 முறை ஜபித் தல் நலம். ஜபிக்கும்போது ஒழுக்க நெறியோடும் உள்ளத் தூய்மையோடும் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் விரும்பிய பலனை அடையலாம்; விரும்பிய லோகம் செல்லலாம் என்கிறது சாஸ்திரம்.

இம்மந்திரத்தை வாயால் உச்சரித்து ஜபித்தால் ஒரு பங்கு பலன் கிடைக்கும். அதிக சப்தமில்லாமல் ஜபித்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். உதடு அசைத்து ஜபித்தால் நூறு மடங்கு பலன் கிட்டும். மனதில் ஜபித்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். அதுபோல் பரிசுத்தமான இடத்தில் அமர்ந்து காயத்ரி மந்திரம் ஜபித்தால் ஒரு பங்கு பலனும், நதிக்கரையில் அமர்ந்து ஜபித்தால் இரு மடங்கு பலனும், பசுவின் கொட்டடியில் அமர்ந்து ஜபித்தால் பத்து மடங்கு பலனும், யாக சாலை யில் ஜபித்தால் நூறு மடங்கு பலனும், பாடல் பெற்ற ஸ்தலங்களில் அமர்ந்து ஜபித்தால் நூறாயிரம் மடங்கு பலனும் கிடைக்கும். பெருமாள் சந்நிதியில் செய்யும் காயத்ரி ஜபப் பலனுக்கு எல்லையே இல்லை!

இம்மந்திரம் ஜபித்த மூடனும் மகா ஞானி ஆவான். தரித்திரன் தனவந்தனாவான். தினமும் உச்சாடனம் செய்தால் வாழ்வில் மேன்மையும் எடுத்த காரியத்தில் வெற்றியும் பெறுவது சர்வ நிச்சயம். காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமாகக் கொண்டது. எனவே சூரியனை வணங் குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சம மாகும். இப்போது விநாயக காயத்ரி, சண்முக காயத்ரி, அனுமன் காயத்ரி என ஒவ்வொரு தெய்வத்தையும் முழு முதலாகக் கொண்ட காயத்ரி மந்திரங்களும் வழிபாட்டில் உள்ளன.

காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.

காயத்ரி மந்திர சக்தி

ஒரு பிராமணர் முறைப்படி காயத்ரி ஜபத் தினை தன் மூன்று வயதிலிருந்து தவறாமல் ஓதி வந்தார். இவருக்கு ஒருசமயம் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அரசனிடம் சென்று தன் பூணூல் எடைக்குத் தங்கம் தர வேண்டுமெனக் கேட்டார். மன்னனும் பூணூலை தராசில் வைத்து மறு தட்டில் தங்கத்தை வைத்தார். எவ்வளவு தங்கம் வைத்தாலும் தராசு சமமாகவில்லை.

மந்திரியிடம் ஆலோசனை கேட்ட மன்னர், அந்தணரை மறுநாள் வந்து சன்மானம் வாங்கிக் கொள்ளுமாறு கூறி அனுப்பி விட்டார். மறுநாள் வந்தவரின் பூணூலை எடை போடச் செய்தனர். என்ன ஆச்சரியம்! உடனே எடை சமமாகி விட்டது. இதற்கான காரணத்தை மந்திரியிடம் கேட்டார் மன்னர்.

""மன்னா... இவர் எப்போதும் காயத்ரி மந்திரத்தை முறைப்படி ஜபிப்பவர். மூன்று வயது முதல் நேற்று வரை ஜபிக்கத் தவறவில்லை. ஆனால் நேற்று அவர் ஜபித்தலை சரியாகச் செய்யவில்லை. அதனால் காயத்ரி மந்திர ஜபத்தின் பலன் குறைந்துவிட்டதால் எடை எளிமையாகச் சமமாகி விட்டது'' என்றார்!

ஒரு கேரள அரசனின் நோயை எவ்வித மருத் துவத்தாலும் குணப்படுத்த முடியவில்லை. அந்த நிலையில் கனவில் ஓர் உருவம் வந்து, "மன்னா, உன் பூர்வ ஜென்ம பாவத்தினால்தான் உன் நோய் குணமாகவில்லை. இதற்கு நீ ஒரு பரிகாரம் செய்' எனக் கூறியது.

"எள்ளினால் உன் போன்ற ஒரு பொம்மை செய்து, அதனுள் தங்கத்தை நிரப்பி தானம் செய்துவிடு. உடனே உன் ரோகம் தீரும்' என்று கூறி மறைந்தது.

மன்னனும் அப்படியே செய்தான். ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அப்போது ஒரு கன்னட பிரம்மச்சாரி வாங்க வந்தார். மன்னரிடம் பொம்மையைப் பெற்றவுடன் அதை உற்றுப் பார்த்தார். பொம்மை முதலில் மூன்று விரலைக் காட்டியது. பின் இரண்டு விரலைக் காட்டியது. எதற்கும் பிரம்மச்சாரி சம்மதிக்கவில்லை. பின் பொம்மை ஒரு விரலைக் காட்ட, பிரம்மச்சாரி சம்மதித்தார். பொம்மையிலிருந்து காலபுருஷன் வெளியேறிய வுடன் மன்னன் குணமடைந்தான்.

இதற்கு என்ன காரணம் என்று கேட்டபோது, "பொம்மையிலிருந்த காலபுருஷன் காயத்ரி மந்திர ஜபப் பலன் மூன்று காலம் கேட்டான். பின் இரண்டு காலம் கேட்டான். நான் சம்மதிக்கவில்லை. பின் ஒரு காலம் கேட்டதும் தந்து விட்டேன். நீங்களும் குணமடைந்தீர்' என்றார் பிரம்மச்சாரி.

இதுதான் காயத்ரி ஜபப் பலனாகும்.

நன்றி aanmikam.blogspot.in/
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆவணி அவிட்டம் Empty Re: ஆவணி அவிட்டம்

Post by முழுமுதலோன் Tue Aug 20, 2013 8:33 am

அருமையான பதிவு சூப்பர் சூப்பர் சூப்பர் 

ஆவணி அவிட்டம் 2Q==ஆவணி அவிட்டம் Images?q=tbn:ANd9GcTfLRjJVbXfkI2d7YwSjMCdmhFug5lUMj3aruJnGrSPGNZh5WIveg
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum