Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இணையம் பயன்படுத்தும் நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றி கொள்வது அவசியம்
Page 1 of 1 • Share
இணையம் பயன்படுத்தும் நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றி கொள்வது அவசியம்
பலமுறை கம்ப்யூட்டரில் இன்று
எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அண்மையில் கம்ப்யூட்டர் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் பாதுகாப்பைக் காட்டிலும் தங்கள் வசதி
களுக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகள், பதற்றமில்லாத அமைதியை வழங்கினாலும், தங்கள் பழக்கங்களுக்கு அவை ஒரு தடையை ஏற்படுத்துவதாகவே கருது கிறார்கள். அப்படிப்பட்ட அபாயம் தரும் மாற்றவேண்டிய சில பழக்கங்களை இங்கு காணலாம்.
1.அளவுக்கதிக தகவல்களைத் தருதல்: பல பயனாளிகள், குறிப்பாக இளைஞர்கள், தங்களைப் பற்றிய தனிநபர் தகவல்கள், உணர்ச்சி பூர்வமான விஷயங்கள், வசிக்கும் இடம் போன்ற அந்தரங்க தகவல்களைத் தேவைக்கு அதிகமாகவே தருகின்றனர். இந்த பழக்கம், கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களை அனுப்பித் தகவல்களைத் திருடுபவர்களுக்கு எளிதாக அமைந்து விடுகிறது. நமக்கு வேதனை தரும் விஷயமாக மாறுகிறது. சீனாவில், ஒருவரின் வீடு, அவர் பேஸ்புக் தளத்தில் இந்த வகையில் நட்பு ஏற்படுத்திக் கொண்ட ஒருவராலேயே கொள்ளையடிக்கப்பட்டது. இதற்குக் காரணம், அவர் தன்னைப் பற்றிய அந்தரங்க தகவல்கள் பலவற்றைத் தந்ததுதான்.
2. நிறுவன தளங்களில் கட்டுப்பாடு: நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள், தங்கள் நிறுவன இணையதளம் மிகவும் பாதுகாப்பானது என்பதால், தங்களைப் பற்றிய அனைத்து விபரங்களையும், தங்களின் பாஸ்வேர்ட், நிதிநிலை போன்ற, பதிந்து வைக்கின்றனர். இந்த தகவல்கள் சம்பந்தப்பட்டவர்களின் தனிச் சொத்து. எனவே நிறுவனத்தின் சர்வர் பாதுகாப்பினை நம்பி தகவல்களைத் தருவது, ஆபத்தை வரவழைக்கும் செயலாகும். ஏனென்றால், எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், அனைத்து இணையதளங்களும் பாதுகாப்பு அற்றவையே. மேலும் நிறுவன தளங்களின் பாதுகாப்பு குறித்து, நாம் தனிப்பட்ட முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
3. ஆபத்தான வெப் லிங்க்: இணைய தளங்களில், மின்னஞ்சல்களில் தரப்படும் இணைய தளங்களுக்கான லிங்க் எனப்படும், சிறிய அளவிலான இணைய முகவரிகள் என்றுமே ஆபத்தானவை. குறிப்பாக, இணைய சமுதாய தளங்களுக்கானவை என்று தரப்படும் சிறிய லிங்க்குகளில் பெரும்பாலானவை ஆபத்தானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் கிளிக் செய்தால், நாம் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்குப் பதிலாக, ஆபத்தைத்தரும் பிற தளங்களுக்கு இழுத்துச் செல்லப்படுவோம். எனவே, இணைய தளங்களில், அல்லது இந்த தளங்கள் அனுப்பியதாகப் பெறப்படும் லிங்க்குகள் குறித்து மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முழுமையான முகவரிகளை டைப் செய்வது சிரமமாக இருந்தாலும், அவ்வாறு டைப் செய்தே அந்த தளங்களுக்குச் செல்ல வேண்டும்.
4. அபாயங்கள் குறித்து கற்றுக் கொள்ளுதல்: இணையத்தில் நம்மைச் சிக்கவைக்கும் அபாய வழிகள் குறித்து பலர் கற்றுக் கொள்ள மறுக்கின்றனர். குறிப்பாக, பாதுகாப்பான சூழ்நிலையில் வாழப் பழகிக் கொண்டவர்கள், தாங்கள் பயன்படுத்தும் இணைய தளங்களும் பாதுகாப்பானவையே என்ற எண்ணத்தில் உள்ளனர். இது தவறான முடிவாகும். இணைய எச்சரிக்கை குறித்து தரப்படும் செய்திகளை அலட்சியம் செய்கின்றனர். இது தவறு. இணையம் என்பது அனைவராலும் பயன்படுத்தப்படும் ஓர் இடம். இங்கு பாதுகாப்பு என்பது ஒரு சமுதாய விஷயமாகிறது. எனவே இது குறித்து நன்கு அறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டுவது நம் கடமையாகிறது.
5. அப்டேட்டிங் சாப்ட்வேர்: இந்தியாவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவபவர்கள், பாதுகாப்பிற்குத் தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களை தங்கள் கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்வதில் சிறிது கூட தாமதப்படுத்துவதில்லை. ஆனால் அதன் பின்னர் அவற்றை அப்டேட் செய்வதில் மிகவும் பின்தங்கி விடுகின்றனர். பலர் அது குறித்து எண்ணுவதே இல்லை. இந்தப் போக்கும் பழக்கமும் மிகவும் மோசமான விளைவுகளைத் தோற்றுவிக்கும்.
6. மால்வேர் எப்போதும் வரும்: பலர், கெடுதல் விளைவிக்கும் வைரஸ் மற்றும் பிற மால்வேர் புரோகிராம்கள், குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே இணையத்தில் வெளியிடப்படும் என்று எண்ணுகின்றனர். இது தவறு. விடுமுறை நாட்களிலும், சில விழா கொண்டாட்டத்தின் போதும், இந்த மால்வேர் புரோகிராம்கள் அதிகமாகத் தென்பட்டாலும், இவை 24 மணி நேரமும் இயங்கும் வகையிலேயே அமைக்கப் படுகின்றன. தொடர்ந்து பெருகி நாசம் விளைவிக்கும் தன்மை கொண்டதாகவே இயக்கத்தினைக் கொண்டுள்ளன. எனவே நாமும் முழு நேரமும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டியுள்ளது.
7. திருட்டு சாப்ட்வேர் தரையிறக்கம்: ஆசிய நாடுகளில், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், இலவச மற்றும் விலை மலிவான சாப்ட்வேர் புரோகிராம்களை டவுண்லோட் செய்வதில் மிக ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய சாப்ட்வேர் தொகுப்புகளைத் தரும் பிரபலமில்லாத இணைய தளங்கள், இந்த சாப்ட்வேர் தொகுப்புகளுடன், தங்களுடைய மால்வேர் புரோகிராம்களையும் இணைத்தே அனுப்புகின்றன. சாப்ட்வேர் பயன்படுத்தத் தொடங்கிய சில நாட்கள் கழித்து, இந்த மால்வேர் புரோகிராம்கள் தங்கள் வேலையைக் காட்டுகின்றன
.
8. ஒரே பாஸ்வேர்ட்: பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொள்வது சிரமம் என்பதால், பலர் ஒரே பாஸ்வேர்டினை அனைத்து தளங்களுக்கும் வைத்துக் கொள்கின்றனர். இது மிகவும் தவறான பழக்கமாகும். இதனால், ஒரு இணையதளத்தில் உங்கள் அக்கவுண்ட் கைப்பற்றப்பட்டாலும், மற்றவற்றையும் கெடுப்பது மால்வேர் அனுப்பியவர்களுக்கு எளிதாகிவிடும். எனவே சிரமம் எடுத்தாவது, ஒவ்வொரு இணையதளத்திற்கும் தனித்தனி பாஸ்வேர்ட் வைத்துக் கொள்வது பாதுகாப்பானதாகும்.
9. அவசரப்படுவது: தங்களுக்குத் தகவல்கள் அவசரமாகத் தேவைப்பட்டு, இணையத்தில் தேடும் போது, பலர், சில இணைய தளம் குறித்து சந்தேகம் அடைந்தாலும், நம் கம்ப்யூட்டரை இவை என்ன செய்து விடும் என்ற இறுமாப்பில், பயன்படுத்தத் தொடங்கி விடு கின்றனர். இவர்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை ஏமாற்றி நாசப்படுத்தும் வைரஸ்களும் உண்டு என இவர்கள் அறிவது இல்லை.
இது போல, பல பழக்கங்களுக்கு நாம் அடிமையாகி, நம் பாதுகாப்பினை மறந்துவிடுகிறோம். இதனால், நம் கம்ப்யூட்டர் முடங்கும் போதுதான், அடடா! அவசரப்பட்டுவிட்டோமே என்று வேதனைப் படுகிறோம். பழக்க வழக்கங்களை மாற்றுங்கள். பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்.

Re: இணையம் பயன்படுத்தும் நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றி கொள்வது அவசியம்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: இணையம் பயன்படுத்தும் நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றி கொள்வது அவசியம்
பயனுள்ள சிறந்த பகிர்வுக்கு நன்றி அண்ணா
Re: இணையம் பயன்படுத்தும் நீங்கள் உங்கள் பழக்கத்தை மாற்றி கொள்வது அவசியம்
பயனுள்ள சிறந்த பகிர்வு
நன்றி அண்ணா!
நன்றி அண்ணா!
சரண்- இளைய தளபதி
- பதிவுகள் : 1042
Similar topics
» நாம் உண்டு முடித்த பிறகு வெந்நீர் (Warm water - இளஞ்சூடு) குடிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்வது நல்லது
» ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம்.
» நீங்கள் பயன்படுத்தும் அன்டிவைரஸ் சாப்ட்வாயர் பாதுகாப்பானதா என்று அறிய
» உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய ஒரு இணையம்!
» உங்கள் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் காலாவதியாகும் தேதி(Expiry date) தெரியுமா?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum