தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களும் சமூகமும்

View previous topic View next topic Go down

பெண்களும் சமூகமும் Empty பெண்களும் சமூகமும்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Sep 03, 2013 3:20 pm

நுழையும் முன்...

ஒரு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் தொடர்பு கொண்டிருந்த ஒரு இடதுசாரி இலக்கிய மாத இதழில், மே மலருக்காகக் கதை கேட்டு, அதற்குச் “சிறகுகள் முளைத்து” என்கிற தலைப்பில் நான் ஒரு குறும்புதினம் எழுதி அனுப்ப, அமைப்பு சார்ந்தவர்கள் அதைக் கையெழுத்துப் பிரதியில் படித்துத் தெரிவித்த கருத்துகளும், பாலுறவு சார்ந்து அவர்கள் கொண்டிருந்த மதிப்பீடுகளும் எனக்கு அதிர்ச்சியூட்டுவதாய் இருந்தன.

இவர்களது புரட்சி, முற்போக்கு என்பதெல்லாம், தொழிற்சங்க அரங்கில் போனஸ், பஞ்சப்படி சார்ந்து சுருங்கிப் போவதே தவிர, மற்றபடி பாலுறவு சார்ந்த, பெண் சார்ந்த சிந்தனைகளில் இவர்களிடம் எந்தவித புரட்சிகர, முற்போக்குக் கருத்துகளும் இல்லை என்பதோடு மட்டுமல்ல, இது சார்ந்த பிரச்சினைகளில் இவர்கள் இன்னும் பழைய மன்னராட்சிக் கால நிலக்கிழமை மதிப்பீடுகளையே கொண்டிருக்கிறார்கள் அல்லது முதலாளித்துவ மதிப்பீடுகளையே தாங்கி நிற்கிறார்கள் என்று தெரிந்தது. அதாவது பொருளியல் தளத்தில் ஆண் பெண் சமத்துவம், பெண்ணுரிமை பேசுவது போலப் பண்பாட்டுத் தளத்தில் இவர்களிடம் போதுமான முற்போக்குக் கருத்துகள் இல்லை என்றே தோன்றியது.

இச்சூழலில் சில ஆண்டுகள் கழித்து 1988இல் நண்பர் ஒருவர் நடத்திவந்த சரவணபாலு பதிப்பகம் அக்குறும்புதினத்தை வெளியிட ஓவியர் வீர சந்தனம் முகப்போவியத்தோடு வெளிவந்த அந்த நூலுக்குப் பின்னுரையாக சுமார் 50 பக்க அளவில் “முக்காட்டு முகங்கள்” என்கிற பெயரில் ஒரு பின்னுரை எழுதியது.

அந்தப் பின்னுரையைப் படித்த பலரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் வெளிப்படுத்திய அதேவேளை, பண்பாட்டுத் தளத்திலும் பெண்ணுரிமைச் சிந்தனைகளிலும் புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டிருந்த தோழர்கள் பலர், 'இவை விவாதிக்கப்பட வேண்டிய செய்திகள் தோழர். எனவே, இதையே இன்னமும் விரிவாக எழுதி ஒரு நூலாகக் கொண்டு வந்து விடலாமே' என்று கருத்து தெரிவித்திருந்தார்கள்.

என்றாலும், உடனடியாக நூலை விரிவாக எழுத நேரம் வாய்க்காமல், வேறு பல நடைமுறைப் பணிகள், எழுதினாலும் உடனடியாக நூலாகும் வாய்ப்புக்கு உத்திரவாதம் இல்லாமை இப்படிப்பட்ட சூழல் காரணமாக இச்சிந்தனை அப்படியே கிடப்பில் இருந்தது.

அதன்பின் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழுவில் இருந்தபோது, அதன் மூன்று இதழ்களில் - ஏப். 94, ஜூன் 95, ஜூலை 95 ஆகியவற்றில் இதுபற்றிய சில செய்திகளை, ‘ஆணாதிக்கக் கருத்தியலும், பெண் விடுதலையும்’ என்கிற தலைப்பில், எழுதி விவாதித்தது. இக் கட்டுரைகள் கருத்தியல், மதம், சாதி, பெண் என்கிற தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளன.

அதற்கடுத்து சில ஆண்டுகள்... எனது நூல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் மங்கை பதிப்பகம் தோழர். மா. அய்யாசாமி, எனது இந்த முயற்சியை அறிய வந்து இது தொடர்பாக விரிவாகவே எழுதுங்கள், நூலைக் கொண்டு வந்து விடலாம் என்று ஊக்கம் அளித்து இதற்காக நான் தேடிய நூல்களையும் வாங்கித் தர அதுவும் சில ஆண்டுகள் கிடப்பில் இருந்து, இந்த ஆண்டு மத்தியில் இதற்கான பணியைத் தொடங்கியது.

என்றாலும், இதையும்கூட தொடர்ச்சியாக எழுதி நிறைவேற்ற முடியாமல் இடையில் அவ்வப்போது ‘மண்மொழி’ இதழ் பணி, பிற பணிகள் எனக் குறுக்கீடுகள் தொடர, வாங்கி வைத்த நூல்களைப் படிப்பதிலும் குறிப்புகள் எடுப்பதிலுமே நாள்கள் ஓடியது.

அவையும் முறையாகத் தொகுக்கப்படாத நிலையில், திசம்பர் மாதம் தற்செயலாக திடீரென்று வந்து தாக்கிய டைபாய்டுக் காய்ச்சல், வெளி நிகழ்வுகள் எதிலும் பங்கேற்க இயலாமல் வீட்டிற்குள்ளேயே முடக்கிப் போட்டு வைக்க, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தியே தற்போது இந்நூல் எழுதி முடிக்கப்பட்டது.

இந்நூல் தயாரிப்புக்கு என வாங்கி வைத்த நூல்களைப் படிக்கப் படிக்க, இதற்கான பல தகவல்களை இணையத்தில் தேடத் தேட, இது சார்ந்து அன்றாடம் நாளேடுகளில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை வாசிக்க வாசிக்க அவை மலைபோல் குவிந்து பிரமிப்பை ஏற்படுத்தின.

இவற்றையொட்டி நான் தெரிந்து கொண்ட முக்கியமான செய்திகள் இரண்டு. ஒன்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பெண்ணிய, மனித உரிமைச் சிந்தனையாளர்கள் கிட்டத்தட்ட என் போலவே இப்பிரச்சினைகளில் அக்கறை கொண்டு சிந்தித்திருக்கிறார்கள். அல்லது அவர்களைப் போலவே நானும் சிந்தித்திருக்கிறேன் என்பது ஒன்று. அடுத்து, இரண்டும் கிட்டத்தட்ட ஒரே ஒத்திசைந்த சிந்தனையாகவே இருக்கிறது என்பது மற்றொன்று. இவையிரண்டுமே எனக்குள் தெம்பையும் நம்பிக்கையையும் ஊட்டுவதாக இருந்தது.

இணையதள வாசகர்களுக்காக அந்த நூலின் பகுதிகள் ஒரு தொடராக வாரவாரம் வெளியிடப்படவிருக்கிறது. முதல் பகுதி இதோ...

பெண் விடுதலை

மார்ச்சு 8ஆம் நாள் உலகப் பெண்கள் தினம். இத்தினத்தையொட்டி பெண்கள் பங்கு கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகள் உலகெங்கும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுவது போலவே தமிழகத்திலும் விழாக்கள், கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப் பெறுகின்றன.

அடுக்கடுக்காகத் தங்கநகைகளைத் தவழவிட்டு, பட்டுப் புடவை சரசரக்க உலா வரும் மேல்தட்டுப் பெண்கள் அமைப்பிலிருந்து, சாதாரண கூலி வேலை செய்து வயிற்றைக் கழுவும் அடித்தட்டுப் பெண்கள் அமைப்பு வரை, கட்சி சார்ந்த அமைப்புகள், கட்சி சாராத அமைப்புகள் என அமைப்பு வேறுபாடுகள், வர்க்க வேறுபாடுகள் இன்றி ஏறக்குறைய எல்லா அமைப்புகளுமே அவரவர் இலட்சியங்கள், நோக்கங்களுக்கேற்ப இந்நாளைக் கொண்டாடி வருகின்றன.

இச்சூழலில் தமிழகத்தில் உள்ள பெண்கள் நிலை குறித்தும் அவர்களின் உண்மையான விடுதலைக்கு வழி வகுக்கும் கருத்து நிலைகள் குறித்தும், திறந்த மனத்தோடு சில சிந்தனைகளை முன்வைத்து அதை நோக்கி நம் கவனத்தைப் பக்குவம் கொள்ளச் செய்வது பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது.

ஒரு ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை நோக்க, இன்று பெண்கள் பல துறைகளிலும் முன்னேறியிருக்கிறார்கள் என்பதும், சமூகத்தின் தேவைகளுக்கான நவீன பொருளுற்பத்திகளில் ஆண்களோடு போட்டியிட்டுத் தாங்களும் பங்காற்றுமளவுக்கு வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள் என்பதும் உண்மை.

எடுத்துக்காட்டாக, கல்வி நிலையங்களில், அரசு அலுவலகங்கள், வங்கிகள், வாழ்நாள் காப்பீட்டுக் கழகங்களில், கனரகத் தொழில் அல்லாத தொழிற்சாலைகளில், சிறுதொழில் நிறுவனங்களில், நவீனத் தொழில் நுட்பத் துறைகளில் பெண்கள் கணிசமான அளவு பணிபுரிந்து வருகிறார்கள். காவல் துறையில் சாதாரண காவலர் பதவியிலிருந்து உயர் பதவி வரையிலும் பெண்கள் பணியாற்றுகிறார்கள். போக்கு வரத்துத் துறையிலும் நடத்துநராக, ஓட்டுநராக அடியெடுத்து வைத்துள்ளார்கள்.

இப்படிப் பல துறைகளிலும் பெண்கள் பணியாற்ற தற்போது தடையேதும் இல்லை என்பதோடு, விதிவிலக்காகச் சில நிறுவனங்கள் நீங்கலாக இதர தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகிய அனைத்திலும் சம வேலைக்குச் சம ஊதியம் என்பது உறுதி செய்யப்பட்டு, ஒரே நிலையில் பணிபுரியும் ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் மற்றும் உரிமைகள், சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

lady_256இருந்தும், இன்றும் சமூகத்தில் பெண்கள் குறித்த கருத்து நிலையில் மட்டும் பெரிய மாற்றம் ஏதும் நிகழ்ந்து விடவில்லை. இன்னமும் மணக் கொடை கொடுமைகள், பெண் சிசுக் கொலைகள், பெண்கள் பால் பாலியல் வன்முறைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. குடும்ப வேலைகள் அனைத்தும் பெண்கள் மீதே சுமத்தப்படுகின்றன. அளவான குடும்பத்துக்குப் பெரும்பாலும் பெண்களே கருத்தடை நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். புதிய கருத்தடை சோதனை முயற்சிகளும் பெரும்பாலும் பெண்கள் மீதே நிகழ்த்தப்படுகின்றன. குடும்பத்தில் ஆணின் அதிகாரமே மேலோங்கி இருக்கிறது. குடும்ப நிர்வாகம் மற்றும் அது சார்ந்த முடிவுகள் அனைத்தும் ஆண்களாலேயே, ஆணை மையப்படுத்தியே தீர்மானிக்கப்படுகின்றன. இவ்வாறு, எந்த ஒரு செயலிலும் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள். பெண்களின் சமூகத் தகுநிலை தாழ்ந்தே கிடக்கிறது. பெண்ணை இரண்டாந்தரக் குடியாகக் கருதும் போக்கே இன்னமும் தொடர்கிறது.

அதாவது, பெண்கள் எல்லா நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பணி புரிந்தும் ஆண்களுக்கு நிகராகப் பொருளீட்டியும் வந்த போதிலும், குடும்பத்தில், சமூக நிலையில், பொது வாழ்வில் இன்னமும் ஆண்களுக்கு நிகரான சமத்துவம், உரிமைகள் வழங்கப்படாத, பெறப்படாத நிலையே நீடித்து வருகிறது.

ஆக, இவற்றிலிருந்து என்ன தெரிகிறது..? பெண்கள் பொருளுற்பத்தியில் பங்கு கொள்வதால் மட்டுமே, அதாவது அனைத்து நிலைகளிலும் ஆண்களுக்கு நிகராகப் பணியாற்றி விடுவதால் மட்டுமே, அவர்களுக்கு விடுதலை கிடைத்து விடாது என்று தெரிகிறது.

தவிர, தமிழ்ச் சமூகத்தில் பண்டைய வேட்டுவ, மீன்பிடி, விவசாய வாழ்க்கை தொடங்கி, பிற சிறுதொழில் உற்பத்தியின் ஊடாக வளர்ந்து வந்த வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பொருளுற்பத்தியில் பெண்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்தே வந்திருக்கின்றனர். என்ற போதிலும், அவர்கள் நிலை ஆண்களுக்கு நிகரான சமத்துவத்தை எட்டாமல் அடிமைப்பட்டதாகவே இருந்து வந்திருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

எனவே, பெண் விடுதலைக்கு, சமூகத்தில் அவர்களுக்கு இதையும் தாண்டிய பங்களிப்பு தேவைப்படுகிறது. இதற்கு இப்பிரச்சினையை வேறொரு கோணத்தில் அணுக வேண்டியிருக்கிறது.

உற்பத்தி என்பது இருவகைப்பட்டு நிலவுகிறது. ஒன்று பொருளுற்பத்தி. மற்றொன்று மனித உற்பத்தி. இதில் பொருளுற்பத்தியில் தங்கள் விருப்பம் சார்ந்து பங்கேற்க பெண்களுக்குப் பெருமளவும் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. ஆனால் மனித உற்பத்தியில் அந்தச் சுதந்திரம் இன்னும் அவர்களுக்குக் கிட்டிய பாடில்லை.

இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அது ஒவ்வொன்றும் தனியே ஆராயப்பட வேண்டிய செய்தி. எனில், இங்கு நாம் வலியுறுத்த விரும்புவது பொருளுற்பத்தியில் ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்கள் ஈடுபடுவது போலவே மனித உற்பத்தியிலும் ஆண்களுக்கு நிகரான அளவில் பெண்களும் ஈடுபடுவதற்கான சுதந்திரம், உரிமை அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதே. இதில், உற்பத்திச் சாதனங்கள் தனியுடைமையாய் இருக்கும் வரை பொருளுற்பத்தியில் ஈடுபடுவதற்கான சுதந்திரமும் எவருக்கும் அவர் விருப்பத்திற்கு முற்றாக இருந்து விடப் போவதில்லை என்ற போதிலும் தற்போதைக்கு, இருக்கிற சுதந்திரம் இருபாலருக்கும் பொதுவாகவே இருக்கிறது என்பது முக்கியம்.

எனில், மனித உற்பத்தியில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் மட்டும் இருபாலருக்கும் சமமான அளவில் இல்லாமல் ஏற்றத் தாழ்வானதாக இருக்கிறது. இதில் ஆண்களுக்குள்ள சுதந்திரம் பெண்களுக்கு இருப்பதில்லை. ஆண்களுக்கு அங்கீகரித்துள்ள உரிமைகளைச் சமூகம் பெண்களுக்கு அங்கீகரிப்பதில்லை. இதன் காரணமாகவும் பெண்ணடிமைத் தனம் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இதற்கான ஒரே வழி பெண்களுக்கும் பாலுறவுச் சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்பதே. அதாவது விரும்பிய வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை, விரும்பாத துணையை விலக்கி வைக்கும் உரிமை, பாலுறவு சார்ந்த பிரச்சினைகளில் சுயேச்சையாக முடிவெடுக்கும் உரிமை ஆகிய உரிமைகள் உறுதி செய்யப்படவேண்டும் என்பதே.

இந்த அடிப்படையில் இது சார்ந்து மூன்று வகையான சுதந்திரத்தை நாம் முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.

1. பெண்களுக்குத் திருமணத்துக்கு முன் காதல் வாழ்க்கையோ, உடலுறவோ இருக்கலாம். அது திருமணத்தில் முடிய வேண்டும் என்பதுதான் பொது நோக்கு என்றாலும், அசாதாரண நிலைமைகளில் அது முடியாமலும் போகலாம். அப்படி முடியாத பட்சத்தில் சமூகம் அதை ஒரு குற்றச் செயலாகப் பார்க்க வேண்டியதில்லை.

2. மண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெண்கள் மணவிலக்கு பெற விரும்பினாலோ, அல்லது பிரிந்து வாழ விரும்பினாலோ அதற்கான முழுச் சுதந்திரமும் அவர்களுக்கு இருக்க வேண்டும். அதற்கான நடைமுறைகளும் எளிதாக்கப்பட்டு அது சமூகத்தாலும் இயல்பாக ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.

3. மண வாழ்க்கையில் இருந்து கொண்டிருக்கையில் ஏதாவது சந்தர்ப்பச் சூழலில் அதைத் தாண்டி வேறு ஏதாவது தொடர்புகள் ஏற்படுமாயின், அத்தொடர்புகளில் அது சார்ந்த பிறருக்கோ, சமூகத்திற்கோ வேறு ஏதும் இடர்ப்பாடுகள் ஏற்படாத நிலையில் அதைப் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை. கண்டு கொள்ளாமல் விட்டு விட வேண்டும். அதாவது, கணவன் மனைவி, இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவரான புரிதலோடு மண வாழ்க்கைக்கு அப்பால் இப்படிக் காதல் வாழ்க்கையோ, உடலுறவோ கொள்வது இழிவாகக் கருதப்படக் கூடாது.

காலம் காலமாக ஆணாதிக்கக் கருத்தியல் வழி நின்று கெட்டி தட்டிப்போன மரபு வழிப்பட்ட ஆசாரப் பார்வையில் நோக்க பலருக்கு இது அனாச்சாரமாகத் தோன்றலாம். அதிர்ச்சியாகவும் இருக்கலாம். எனில், இந்த அனாச்சாரத்தின், அதிர்ச்சியின் மூலமாகவே பெண்களுக்குப் பாலுறவுச் சுதந்திரத்தை உறுதி செய்ய முடியும். இதில் அவர்களுக்குள்ள சனநாயக உரிமையைப் பாதுகாத்து அவர்களது விடுதலைக்குத் துணை நிற்க முடியும்.

இத்துடன், பொதுவில் எந்தச் சுதந்திரமும் முற்று முழுதானது அல்ல. அனைத்தும் சார்ப்புத் தன்மையுடையதே என்கிற அளவில் மேலே கூறப்பட்ட எந்தச் சுதந்திரமும் அடுத்தவர் சுதந்திரத்திற்கு இடையூறு இல்லாமலும், பொதுவான சமூக இயக்கத்திற்குக் குந்தகம் விளைவிக்காமலும் இருக்கும் வரை மட்டுமே இவை ஏற்கப்படும் என்கிற அளவிலேயே மேற்கண்ட உரிமைகளையும் உள்வாங்கிக் கொள்ளவேண்டும்.

இந்த அடிப்படையில் இவை எப்படி என்பதை இனி ஒவ்வொன்றாக நோக்குவோம்.

இளம் பிராயத்தில், வாலிப வயதில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ எதிர்பால் கவர்ச்சி ஏற்படுவதும், அது காதலாக மலர்வதும், அதன் விளைவாக வாய்ப்பைப் பொறுத்து உடலுறவு ஏற்படுவதும் இயற்கையாய் இயல்பாய் நிகழ்கிற ஒன்று. திருமண உறவு ஏற்படுமுன் இருபாலரும் இதைப் போன்ற சங்கதிகளில் எச்சரிக்கையாய் இருந்து கொள்ள வேண்டும் என்பது பொது நியதி, எதிர்பார்ப்பு. என்றாலும், மீறி ஏதோ நிகழ்ந்து விடுகிறது எனக் கொள்வோம். ஆனால், ஒரு ஆணுக்கு இப்படி ஒரு நேர்ச்சி நிகழ்ந்து விட்டால் அதை யாரும் பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்வதில்லை. பார்க்கப் போனால் அதைப் பெருமையாகவேகூட எடுத்துக் கொள்ளும் போக்கும் இருந்து வருகிறது.

எனில், இதே இப்படி ஒரு நேர்ச்சி ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்து விட்டால் அது ஏதோ தீயை மிதித்து விட்டது போலவோ, நடக்கக் கூடாதது நடந்துவிட்டது போலவோ, ஆகாயமே இடிந்து தலைமேல் விழுந்துவிட்டது போல ஏக அமர்க்களம் செய்யப்படுகிறது. அந்தப் பெண் எந்த ஆணோடு உடலுறவு கொண்டாளோ அவனேதான் அவளுக்கு வாழ்க்கை தரவேண்டும், அல்லது அவனுக்கே தான் அவள் வாழ்க்கைப்பட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவளுக்கு எதிர்காலமே இல்லை, அவளது வாழ்க்கையே இருண்டு போனதுதான் என்பது போலவும் ஆக்கப்பட்டு விடுகிறது.

இதிலேயே மனமொத்து மணம் புரிய விழையும் இணைகளை சாதியின் பெயரால், குலப் பெருமையைக் காப்பது என்பதன் பெயரால், பெரியவர்களாகப் பார்த்து பிரித்து வைப்பதோ, யாரையும் தீர்த்துக் கட்டுவதோ தனி. அப்படி ஒரு பிரிவு ஏற்பட்டால் அதை யாரும் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் இயலாமல், வாய்க்காமல் அல்லது விருப்பமின்மையால் தாங்களாகவே பிரிவது மட்டும் பெரிதுபடுத்தப்படுகிறது. எங்கே அடுக்கும் இது என்று நோக்கப்படுகிறது.

இதைத்தான் நியாயமா என்று நாம் சிந்திக்க வேண்டும். எனவேதான் இந்தப் பிரச்சினை ஆணுக்கு எப்படி பார்க்கப்படுகிறதோ அப்படியே பெண்ணுக்கும் பார்க்கப்படவேண்டும், அவளுக்கும் சமமான உரிமை வழங்கப்பட வேண்டும் என்கிறோம்.

அடுத்தது, ஒரு பெண் தான் விரும்பிய ஒருவனை வாழ்க்கைத் துணைவனாக அடைவதற்கோ, விரும்பாத நிலை ஏற்படும் போது அவனை விலக்கி வைத்து மனவிலக்கு பெறுவதற்கோ ஆன உரிமை.

இன்றுள்ள சமூகக் கட்டமைப்பில் ஆணும் சரி, பெண்ணும் சரி தாங்கள் விரும்பியவர்களை வாழ்க்கைத் துணையாக அடைவதில், சட்ட ரீதியில் ஏதும் சிக்கல் இல்லையானாலும் சமுக ரீதியில் கடும் சிக்கல்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதில் சாதி, பொருளாதர ஏற்றத்தாழ்வு, அந்தஸ்து, கல்வித் தகுதி என ஏகப்பட்ட பிரச்சனைகள் குறுக்கிடுகின்றன. மொத்த சமூக அமைப்புகள் மாறும்போதுதான் இந்தப் பிரச்சனையும் தீரும் என்பதனால் இதில் உள்ள சிக்கலை இரு பாலருக்கும் பொதுவானதாகவே தனியே ஒதுக்கி வைப்போம்.

ஆனால், திருமணமாகி இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும்போது ஒரு ஆண் தன் மனைவி தனக்கு உகந்தவளாக இல்லை என்பதால் அவளை விலக்கி வைக்கவோ மணவிலக்கு பெறவோ ஆன நடவடிக்கை பெருமளவும் இயல்பாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், இதே ஒரு பெண் தன் கணவன் தனக்கு உகந்தவனாக இல்லாத பட்சத்தில் அவனை விலக்கி வைக்கவோ அவனிடமிருந்து மணவிலக்கு பெறவோ ஆன செயல்பாட்டைச் சமூகம் இயல்பாய் ஏற்றுக் கொள்வதில்லை.

இத்தனைக்கும் இந்த உரிமை சட்டபூர்வமாய் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும் சமூகம் பெருமளவும் அதற்கு மனமுவந்து அங்கீகாரம் அளிப்பதில்லை. கணவன் குடிகாரனானாலும், சூதாடியானாலும், ஊதாரியானாலும், அனுசரித்துப் போகவேண்டியதுதான். ஆயிரம்தான் இருந்தாலும் தொட்டு தாலி கட்டியவன் இல்லையா என்று ஏதோ அவன் ஒரு பெண்ணுக்கு வாழ்வு கொடுக்கும் புனித காரியத்தைச் செய்துவிட்ட மகான் போல் சித்தரிக்கப்படுவதும், இதற்காக அவன் என்ன சொன்னாலும், செய்தாலும் பொறுத்துக் கொண்டு போக வேண்டும் என்பது போலவும் ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ என்கிற பழமைவாதம் பேசப்படுவதுமே வாடிக்கையாக இருந்து வருகிறது.

இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வேண்டாத கணவனை விலக்கிவைக்கும் சட்ட நடைமுறை எளிதாக்கப்பட்டு சமூகமும் அதை இயல்பாய் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாக்கப்பட வேண்டும். கணவனைப் பிரிந்து வாழும் பெண் இளப்பமானவளமாய்க் கருதப்படுவதோ, தனித்து வாழ விரும்பும் பெண் மலிவாய் நோக்கப்படுவதோ, அல்லது வேறு ஒருவனை மறுமணம் செய்து கொள்ளும் பெண் ஏதோ அதிசயப் பிறவி போல் பார்க்கப்படுவதோ முற்றாக நீக்கப்பட வேண்டும்.

இது எல்லாமுமே ஆணாதிக்கக் கருத்தியலின் விளைவு என்பதை உணர்ந்து அதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, எப்படி நண்பர்கள் ஒத்த கருத்து நிலவியவரை ஒன்றாயிருந்து பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் விலகுகிறார்களோ, அதே போன்ற ஒரு நிகழ்வாய் இயல்பாய் இதை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெற வேண்டும்.

மூன்றாவது, மண வாழ்க்கையில் இருக்கும்போதே இந்த மண உறவுக்கு அப்பால் வேறு ஏதாவது சிக்கல்களுக்குள்ளானால் என்ன செய்வது என்பது பற்றியது. இதில் போலித்தனம் பண்ணாமலும் வறட்டு ‘கெத்து’ பார்க்காமலும் திறந்த மனதுடன் இப்பிரச்சினையை அணுகும் தைரியத்தை முதலில் நாம் பெற வேண்டும். மண வாழ்வில் ஆணுக்கு விசுவாசமாகப் பெண்ணும், பெண்ணுக்கு விசுவாசமாக ஆணும் இருந்து மனமொத்து இனிதே வாழ வேண்டும் என்பது தான் எல்லோரது விருப்பமும்.

என்றாலும் பழகுகிற வட்டாரங்களில், பணிபுரிகிற இடங்களில் ஒரு ஆணுக்குத் தன் மனைவியைத் தாண்டி வேறொரு பெண்ணிடமோ, ஒரு பெண்ணுக்குத் தன் கணவனைத் தாண்டி வேறொரு ஆணிடமோ கவர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. அப்படியெல்லாம் ஏற்படக்கூடாது என்பது நமது விருப்பமாக இருக்கலாமேயன்றி அது யதார்த்தமாகாது. ஏனெனில் யதார்த்தம் என்பது நமது விருப்பத்திற்குட்பட்டது அல்ல. அப்பாற்பட்டது. எனவே ஏற்பட்டு விடுகிறது.

இங்கு மீண்டும் இப்படி ஏற்பட வேண்டும் என்பது நமது நோக்கமல்ல. அப்படி ஏற்பட்டே ஆக வேண்டும் என்பது கட்டாயமும் அல்ல. ஐயா, மீறி ஏற்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். இப்படி ஏற்பட்டு விட்டால் என்ன செய்வது? அது ஆணுக்கானால் ஒரு மாதிரியும், பெண்ணுக்கானால் வேறு ஒரு மாதிரியும் ஏன் பார்க்கப்படுகிறது? என்பது தான் முதல் கேள்வி.

அதாவது ஆணுக்கானால் இலேசான முணுமுணுப்புடனோ, முகச் சுளிப்புடனோ அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், பெண்ணுக்கானால் ஏதோ பூகம்பம் நேர்ந்து பூமியே வெடித்து விட்டது போலவோ, பிரளயமே நேர்ந்து விட்டது போலவோ பார்க்கப்படுகிறது. இப்படி அல்லாமல், பெண்ணுக்கும் இது அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

இதையே இன்னும் கொஞ்சம் துல்லியப்படுத்திப் பார்ப்பதானால் மணமான ஆண், மண உறவைத் தாண்டி தான் தொடர்புக் கொள்ளும் பெண் ஏற்கனவே ஒரு மணவாழ்வில் இருந்தால்தான் அது பெரும் பாவம். அந்தப் பெண் அப்படி மணமானவளாக அல்லாமல் மணமாகாதவளாக இருந்தால் இது அந்த அளவுக்குப் பெரும் பாவமாகப் பார்க்கப்படுவதில்லை. இதற்குச் சில நியாயங்களும் கூட இருப்பதும் உண்மைதான்.

ஆனால் இதேநிலை ஒரு பெண்ணுக்கு நேர்ந்தால், அதாவது மணவாழ்க்கையில் இருக்கும் ஒரு பெண், தன் கணவனைத் தாண்டி தொடர்பு கொள்ளும் ஒரு ஆண் ஏற்கெனவே மணமானவனாக இருந்தாலும் அது பெரும் பாவம், மணமாகாதவனாகவே இருந்தாலும் அது பெரும் பாவம்தான். இந்த வேறுபாடு ஏன் என்பது தான் முதல் கேள்வி.

அப்படியானால் இந்த வேறுபாட்டை நீக்கி ஆணுக்கோ, பெண்ணுக்கோ யாருக்கானாலும் மணஉறவு தாண்டி ஏற்படும் வெளியுறவை இருவருக்கும் சமமாகப் பாவிக்க வேண்டுமா என்கிற கேள்வி எழும். ஆம். சரி, அப்படி இரண்டையும் சமமாகப் பாவிக்க வேண்டும் என்றால் இரண்டையும் தடைசெய்ய வேண்டும் என்று பொருளா அல்லது இரண்டையும் அனுமதிக்க வேண்டும் என்று பொருளா?

மீண்டும் நாம் வலியுறுத்திச் சொல்ல விரும்புவது இப்படி எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதுதான் அனைவரது விருப்பமும். சரி. ஆனால் மீறி நடந்து விடுகிறது. அவரவரது சுயக்கட்டுப்பாட்டையும் மீறி சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அது நிகழ்ந்து விடுகிறது என்றால், அப்படி நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்பது தான் கேள்வி. பெரும்பாலும் இது எப்போதோ ஒரு முறை நிகழ்ந்து யாருக்குமே தெரியாமல் மறைக்கப்பட்டு விடலாம். அல்லது இந்நிகழ்வு தொடர்ந்தோ, தொடாராமலோ வெளியில் தெரிய நேர்ந்து பலராலும் பேசப்படலாம்.

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்பது தான் பிரச்சனை. இதற்கு இரண்டு தீர்வுகளை ஆலோசனைகளாகச் சொல்லலாம். ஒன்று நிகழ்ந்து விட்ட உறவைத் துண்டித்துக் கொண்டு அவரவர், பழைய நிலைக்கே திரும்பக் கோரலாம். இது இயலாத அளவுக்கு உறவின் நெருக்கம் பிடிப்பு இருக்குமானால் தற்போது சம்மந்தப்பட்டவர் இருக்கும் மண வாழ்விலிருந்து விலக்கு அளித்து அல்லது விலக்கு பெற்று புதிய மண வாழ்வைத் தொடங்கச் செய்யலாம். பொதுவாய் பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நிகழ்கிறது.

சரி. ஆனால் இருக்கிற மண உறவையும் துண்டித்துக் கொள்ள விருப்பமில்லை என்கிற ஒரு நிலை - இதுபோன்ற உறவுகளில் பெரும்பாலானோரின் விருப்பம் மனநிலை இவ்வாறே இருக்கிறது - இருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது என்ன செய்வது?

இப்படிப்பட்ட நிலையில் ஆணுக்கு நேர்ந்து விடுகிற உறவைப் பெண் எப்படிச் சகித்து ஏற்றுக் கொள்கிறாளோ, அதே போலப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள உறவை ஆணும் சகித்து ஏற்றுக் கொள்ள வேண்டியது தான் என்கிறோம்.

இப்படிச் சொல்லும் போது பலருக்கும் ரோஷம் பொத்துக் கொண்டு வரலாம். மானமுள்ள மறத்தமிழன் செய்கிற காரியமா இது? எப்படி ஏற்பான்? ஏற்கமுடியும்? என்று பலருக்கு மீசை துடிக்கலாம். தோள்கள் தினவெடுக்கலாம். இதுதான் ஆணாதிக்க உடைமை உணர்ச்சி என்பது. ஒரு பெண் தான் ஆணுடைமை நோக்கில் இருந்தால் அது தவறு. ஆண் செய்யும் அனைத்தையும் அவள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆணால் ஆண் மட்டும் பெண்ணுடைமை நோக்கி இருக்கலாம், பெண் செய்யும் எதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கலாம் என்றால் இது என்ன நியாயம்?

எனவே, பெண்ணை இப்படி வெறும் ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்காமல், இந்த ஆணாதிக்க உணர்வுகளிலிருந்து விடுபட்டு அவளுக்கும் ஒரு சுயம் உண்டு, விருப்பு வெறுப்பு இரசனை உணர்ச்சிகள் உண்டு, எல்லாவற்றிலும் ஆண் சார்ந்து முடிவெடுக்காமல் சுயேச்சையாகத் தீர்மானிக்கிற, செயலாக்குகிற உரிமை உண்டு என்கிற நோக்கில் இதை அணுகவேண்டும்.

இந்த நியாயத்தை உணர்ந்த பலர் அப்படி இதை ஏற்று வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இந்தச் சமூகம் வழங்குகிற பெயர் கையாலாகாதவன், ஆண்மையில்லாதவன், ஒம்போது. இப்படியான இழிவுகள், வசைச்சொற்கள். இதனால் இந்த வசைச்சொற்களிலிருந்து தப்புவதற்காகவே பலர் தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டியிருக்கிறது. காட்டவும் செய்கிறார்கள்.

ஆகவே தான் சொல்கிறோம். இப்படி ஒரு நிலை நேர்ந்தால் பிரிந்து விடுவதானாலும் பிரிந்து விடட்டும். இல்லை, இது ஒன்றும் பெரிய குற்றமில்லை, கிடந்தால் போகிறது என்று மனமொப்பி வாழ்வதானாலும் வாழ்ந்துவிட்டுப் போகட்டும். இது சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுக்க வேண்டிய பிரச்சனைதானேயொழிய மற்றவர்களுக்கு இதில் ஒன்றுமில்லை. வீணாகத் தலையை நுழைக்க வேண்டிய அவசியமுமில்லை என்கிறோம்.

இப்படி ஒரு நிலை உருவாகுமானால் நாட்டில் பாலுறவு சார்ந்து நிகழும் எவ்வளவோ பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு வரும். எவ்வளவோ குற்றங்கள் தடுக்கப்படும். எவ்வளவோ உயிர்கள் கப்பாற்றப்படும்.

ஆனால், இப்படிப்பட்ட அணுகுமுறைக்கோ, மனநிலைக்கோ, புரிதலுக்கோதான் சமூகம் இன்னும் பக்குவப்படவில்லை. இப்படி ஒரு மானங்கெட்ட வாழ்வா என்று ரோஷம் பேசுவதற்குத் தான் ஆட்கள் இருக்கிறார்களே தவிர எதையும் நிதானமாயும், பக்குவமாயும் யோசித்து பிரச்சனையின் தன்மையை உணர்கிறவர்களாய், உணர்த்துபவர்களாய் இல்லை.

ஒழுக்கவியல் கோட்பாடு

சரி. எல்லாம் சரிதான். இப்படியெல்லாம் அனுமதித்தால் சமூகத்தில் ஒழுக்கக்கேடுகள் மலிந்து விடாதா சமூக அமைப்பில் சீரழிவு ஏற்படாதா என்று சிலர் வினவலாம்.

காட்டாக, முதலாவது பிரச்சினையில், அதாவது திருமணத்திற்கு முந்தைய பாலுறவு பிரச்சினையில், இப்படியெல்லாம் அனுமதித்தால், திருமணத்திற்கு முன்பே இப்படிப்பட்ட தவறுகளில் ஈடுபடலாம் என்கிற ஒரு துணிச்சல் ஏற்படாதா? தவறுகள் மலிந்து விடாதா எனலாம். ஆனால், இந்த உரிமை ஆணுக்கு இருந்து கொண்டிருக்கும்போது இப்படி யாரும் கேட்டுக் கொண்டிருப்பதில்லை. பெரும்பாலும் அது இயல்பு, நியாயம் என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. சமூகத்திலும் அது அங்கீகரிக்கப்பட்டு விடுகிறது. ஆனால் அதே உரிமை பெண்ணுக்கும் இருக்கவேண்டும் என்னும் போது மட்டும் தான் கேள்வி எழுகிறது.

இந்தக் கேள்வி எங்கிருந்து எழுகிறது என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு ஆணும் தனக்கு மனைவியாக வாய்ப்பவள், இதற்கு முன் வேறு எந்த ஆணோடும் தொடர்பற்றவளாக அதாவது வேறு எந்த ஆணாலும் கை வைக்கப்படாதவளாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். இந்த அடிப்படையில் இப்படிப்பட்ட ஆணாதிக்கச் சிந்தனையிலிருந்து எழுவதே இக்கேள்வி. எனவே, இந்தப் பிரச்சனையை கீழ்க்காணுமாறு புரிந்து கொள்வதே பொருத்தமாயிருக்கும். அதுவே பெண்ணுக்கும் சம உரிமை கொடுப்பதாகவும் இருக்கும் என்று படுகிறது.

அதாவது திருமணத்துக்கு முன் யாரும் எந்தத் தப்புத் தண்டாவிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பு, பொதுநியதி என்பது சரிதான். இதை இருபாலருக்கும் பொதுவாக்குவோம். ஆனால் சந்தர்ப்பச் சூழ்நிலை தவறி ஏதோ நடந்து விடுகிறது என்று சொன்னால் இந்தத் தவறு ஆணுக்கு எப்படி பார்க்கப்படுகிறதோ அப்படியே பெண்ணுக்கும் பார்க்கப்பட வேண்டும். அதுதான் பெண்ணுரிமைக்கான பார்வை. அதைவிட்டு இது ஆணுக்கானால் பரவாயில்லை. பெண்ணுக்கானால் தான் பெரும்பாவம் என்பது வடிகட்டிய ஆணாதிக்க மனோபாவம். ஆணாதிக்கக் கருத்தியலின் செயல்பாடு. எனவே இதை மாற்றிக் கொள்ள மனிதர்கள், சமூகம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோருகிறோம்.

அதே போலவே, இரண்டாவது பிரச்சினையும். அதாவது, கணவனையோ, மனைவியையோ பிரிந்து வாழ நேரிட்டால், குழந்தைகள் கதி? என்று சிலர் கேட்கலாம். நாம் விலகல் என்று சொல்லும் போது, எந்தப் பெண்ணும் வெறும் அற்பக் காரணங்களுக்காகவெல்லாம் விலக வேண்டும் என்றோ, எப்போதோ ஒருமுறை நேரும் தவறுக்காகவெல்லாம் நிரந்தரமான பிரிவு வேண்டும் என்றோ கோரப்போவதில்லை.

தவிர, பிச்சனை என்றாலே அது ஆண்களால்தான் வரும் என்கிற ஒற்றைக் கோணத்தில் மட்டுமே பார்த்து பெண்ணைத் தவறுகளுக்கே அப்பற்பட்ட புனித பீடத்தில் இருத்தாமல் சில நேர்வுகளில் பெண்ணே தவறு செய்பவளாக இருக்க, அவளாலும் பிரச்சனை வர வாய்ப்புண்டு என்கிற கோணத்திலும் இதை அணுக வேண்டும். இந்த நிலையில் பலமுறை நிதானம் காத்து பொறுத்துப் பார்த்து, சகித்து, வேறு வழியே இல்லை என்கிற நிலையில் தான் பெண் விவாகரத்து கோருகிறாள். இப்படி நேரும்போது குழந்தைகள் யாரோடு இருப்பது என்பதைக் குழந்தைகள் தீர்மானித்துக் கொள்ளும். அதாவது அக்குழந்தைகள் யார்மேல் அதிக அன்பு கொண்டிருக்கின்றனவோ அங்கே தான் இருக்க விரும்பும்.

எனவே, இதில் குழந்தைகள் தந்தையுடனோ, தாயுடனோ யாருடன் இருக்க விரும்புகின்றனவோ அவர்களுடன் இருக்க அனுமதிக்கப்பட வேண்டும். அதோடு அக்குழந்தைகளின் உடல், மன வளர்ச்சியில் பெற்றோர்களின் - அவர்கள் பிரிந்தே வாழ்ந்த போதிலும் கூட - அவரவர் வருமானத்தைப் பொறுத்து இருவரும் பொறுப்பேற்கும் வகையில் சட்ட விதிமுறைகள் இருக்க வேண்டும்.

தொடர்புடைய பிரச்சனை என்கிற வகையில்தான் குழந்தைகள் பிரச்சனை குறித்து இங்கே ஆலோசனை சொல்லப்படுகிறதேயொழிய மற்றபடி அதை இப்படிப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன என்பதைச் சாக்காக வைத்து எந்தப் பெண்ணுக்கும் மேற்குறித்த உரிமையை மறுத்து விட முடியாது. ஆகவே, இவை அனைத்துமே நேர்ந்து விடுகிற பிரச்சனைக்குத் தீர்வாகத்தான் சொல்லப்படுகிறதேயொழிய, மற்றபடி எல்லாருமே இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற பரிந்துரையாக அல்ல.

இப்படிப்பட்ட நிலைக்குள்ளாக நேர்ந்து விட்ட ஒருவரை சபிப்பதனால் அவர் மாறிவிடப் போவதில்லை. இந்நிலைக்கு ஆளாகாமல் இருக்கிற ஒருவர், அவரும் அப்படி ஆனால் தப்பிலை என்பதற்காக அவரும் அப்படி ஒரு உறவைத் தேடிப் போகப்போவதுமில்லை. இது எல்லாமே அவரவர் சுய இருப்பு சார்ந்து, வாழ்வு சார்ந்து நேர்வது. சுய முடிவுகளுக்கு உட்பட்டு இயங்குவது. எனவே சம
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum