Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரின் புதுமைமிக்க கோலாகலத் திருவிழா!
Page 1 of 1 • Share
பதுவைப் பதியரான புனித அந்தோனியாரின் புதுமைமிக்க கோலாகலத் திருவிழா!
நீலக் கடற்கரை ஓரத்திலே கோயில் கொண்டெழுந்தருளிப் பக்த கோடிகளுக்கு நீங்காத அருள்பாலிக்கும் கோடி அற்புதராம் புனித அந்தோனியாருக்கு இன்று விழாவெடுப்பது போல யாழ். நகரிலும் அலை கடலோரத்தில் நவமாக விளங்கும் பாஷையூரம்பதியிலும் இப்பகுதி வாழ் மக்கள் திருவிழாவெடுக்கிறார்கள். இக்கோயிலும் வரலாற்றுப் பழைமையும் பெருமையும் கொண்ட கோயிலாகும்.
சொல்லொணாக் கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், இடர்கள், இடப்பெயர்வுகள், இழப்புக்கள், அழிவுகள் அடுக்கடுக்காக ஏற்பட்ட போதும் இப்பகுதி வாழ் மக்கள் தங்கள் பாதுகாவலராம் புனித அந்தோனியாருக்கு விழாவெடுக்கத் தவறுவதில்லை.
"கோடி அற்புதர் எங்கள் காவலராம். கொண்டாடுவோம் கொண்டாடுவோம்" என்று புகழ் பாடல் பாடிப் பக்திப் பரவசத்துடன் நன்றி உள்ளத்துடன் விழாவெடுத்து மகிழ்கின்றார்கள். இவர்களின் மகிழ்ச்சிக்கும் எல்லையில்லை. அந்தளவுக்கு புனிதராம் அந்தோனியார் எல்லோர் நெஞ்சங்களிலும் வாழ்விலும் எண்ணங்களிலும் இடம்பிடித்துள்ளார் என்று கூறலாம்.
புனித அந்தோனியாருக்கு கோடி அற்புதர், புதுமை வள்ளல், அற்புத போதகர், ஏழைகளின் நண்பன், மறை வல்லுநர், காலத்தின் அறிகுறிகளைத் தெரிந்து திருமறை காத்த இறைவாக்கினர், இறை மகன் இயேசுவின் நற்செய்தியினை தம் சொல்லாலும், செயலாலும் அறிவித்த இறைத் தூதர் எனப் பலவாறாகப் போற்றப்படுபவர். இத்தகைய புனிதரை அறியாதார் எவரும் இலர் என்றே கூறலாம்.
பிறர் பணியே இறை பணி, பிறர் அன்பே இறையன்பின் வெளிப்பாடு என்பதைப் புனித அந்தோனியார் ஆழமாக உணர்ந்து அதற்கேற்ப செயல்பட்டார். அவரின் வாழ்க்கை என்றால் புதுமைகள் மலிந்தது. அவர் ஆற்றிய மறையுரைகள் ஏராளம், ஏராளம். இவைகளைக் கேட்டோர் இவரது அறிவுத் திறனைப், புலமையை வியக்காமலில்லை. இவரது ஆழமான அறிவுரை கேட்டோர் மனங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்த அதிர்வுகள் அவர்கள் உள்ளங்களில் நல்ல உணர்வுகளைத் தூண்டி உணர்வுகள் நல்ல எண்ணங்களாக மாறி எண்ணங்கள் நல்ல செயல்பாடுகளாக உருப்பெற்று மக்களை புனிதரைப் போல பிறர் பணியில் இறை பணியில் நிலைக்க, நினைக்க வைத்துள்ளது. நம் திருச்சபை போற்றும் புனிதர்களுக்குள்ளே அற்புதங்களாலும் அருஞ் செயல்களாலும் மிகப் பெரிய பெயர் பெற்று ஒரு மாணிக்கமாய்த் திகழ்ந்தவர் புனித அந்தோனியார். ஐரோப்பாவிலுள்ள போர்த்துக்கல் நாட்டின் தலைநகராக விளங்கும் லிஸ்பன் மாநகரிலே ஏறக்குறைய 815 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். இவர் 1195 ஆம் ஆண்டு ஆவணித் திங்கள் 15 ஆம் நாள் புனித மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழாவன்று பிறந்தார். இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே புகழோடு அழைக்கப்பட்டார்.
இதனால்தான் கொச்சிக்கடையிலே 'பாதுவா நகரிலே உதித்தீர் முனிவரே...' என்று புகழ் மணக்கப் பாடிப் போற்றுகின்றார்கள். இப்பாடலானது கத்தோலிக்க மக்களல்லாத ஏனைய, பிற சமய மக்களின் வாய்களிலும் பதிவு கொண்டுள்ளது.
இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்து அதிகமான அருஞ்செயல்களையும் புனிதர் புரிந்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அன்போடு அழைக்கப்படுகின்றார்.
இவருக்குத் தாய், தந்தையர் இட்ட பெயர் 'பர்னாந்து'. ஆனால் இவர் அந்தோனியார் என்றே அழைக்கப்படுகின்றார். இவர் புனித பிரான்சீஸ்கு அசிசியாரின் சபையிலே ஒரு துறவியாகச் சேர்ந்த போதுதான் இவருக்கு 'அந்தோனியார்' என்ற பெயர் சூட்டப்பட்டது. அன்றிலிருந்தே இவர் 'அந்தோனியார்' என்று அழைக்கப்படத் தொடங்கினார். புனித அந்தோனியார் நற்குணங்கள் கொண்ட பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்ததின் காரணமாகவே இவரிடத்தில் இறை பக்தியும் பிறர் பக்தியும் விளங்கின. புனித அந்தோனியார் வயதில் வளர வளர பக்தியிலும், ஞானத்திலும் வளர்ந்து வந்தார். அனைத்துச் செல்வமும், குணங்களும் நிறைந்துள்ள தாய், தந்தையரிடம் பிறந்துள்ள குழந்தை அழகும், குணநலன்களும் நிறைந்து விளங்கியதென்றால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
அந்தோனியாருக்குப் பதினைந்து வயது நடக்கும் போது புனிதரின் முதல் புதுமை நடந்தது.
அன்று அவர் வழக்கம் போல ஆலயத்திலே திவ்விய நற்கருணையின் முன்பு மிகுந்த பக்தியுடன் தியானம் செய்து கொண்டிருந்தார். இவருடைய கடும் தியானத்தையும் பக்தியையும் கண்ட அலகை அவருடைய தியானத்தைக் குழப்ப எண்ணியது. இறை மகன் நாற்பது நாள் நோன்பிருந்த போது அவருக்குக் கடுஞ் சோதனை கொடுத்ததல்லவா? எனவே இங்கும் அதே அலகை இவரது தியானத்தைக் குழப்ப எத்தனித்தது.
கரிய நிறத்தில் கோர உருவமுடன் அவருக்கு முன்னால் தோன்றியது. அவரைச் சோதிக்கத் தொடங்கியது. முதலில் சிறிது அச்சம் அவரை ஆட்கொண்டாலும் அவர் இறைவன் மீது கொண்ட நம்பிக்கையைக் கைவிடவில்லை. தான் முழந்தாட்படியிட்டிருந்த சலவைக் கல்லின் மேல் தளராத விசுவாசத்துடன் வெற்றியின் அடையாளமான திருச் சிலுவை அடையாளத்தை தன் கையால் வரைந்தார். அவர் பக்தி விசுவாசத்துடன் வரைந்த இந்தச் சிலுவை அடையாளமானது அந்தச் சலவைக் கல்லில் உளியால் செதுக்கியது போல பதிந்து காணப்பட்டது.
இதனைக் கண்ட அந்த அலகையானது அலறி அடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.
சிலுவை அடையாளத்தின் மகிமையை அந்தோனியார் நன்கு உணர்ந்திருந்தார். அந்தோனியார் வரைந்த அந்தச் சிலுவை அடையாளமானது இன்று வரை காப்பாற்றப்பட்டு வருகிறது. இதனை இன்றும் பல லட்சக்கணக்கானோர் பார்த்து வியந்து புகழ்ந்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த அரும் பெரும் செயல்தான் புனித அந்தோனியாருக்குப் 'புதுமை அந்தோனியார்' எனும் பெயரைப் பெற்றுக் கொடுத்தது. இதுவே அந்தோனியார் இறை வல்லமையால் நிரம்பப் பெற்றவர் என்பதற்கு முதல் அத்தாட்சியாக விளங்கிற்று.
இந்த அற்புத நிகழ்ச்சியானது புனித அந்தோனியாரின் வாழ்விலே ஒரு பெரும் திருப்பு முனையாக அமைந்தது. இதனால் அவர் இந்த உலகையே வெறுத்து ஒறுத்து தான் ஒரு துறவியாக மாற வேண்டும் என்று எண்ணங்கொண்டார். எதனையும் படிமுறையாகச் செய்யக் கற்றுக் கொண்ட அந்தோனியார் தம் பெற்றோரிடம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி அனுமதியும் பெற்றார். லிஸ்பனினுள்ள வின்செந்தே என்ற புனித அகஸ்தினார் குரு மடத்தில் ஒரு துறவியாகச் சேர்ந்தார். இங்கு குருக்கள் இல்லத்தின் ஒழுங்குகளையும் செப தவங்களையும் மிகுந்த கவனத்துடனும் நுணுக்கமாகவும் கடைபிடித்து வந்தார். இத் துறவற மடத்தில் உறவினர், நண்பர்களின் சந்திப்பினால் குழப்பமடைந்த அந்தோனியார் தலைமைத் துறவியின் அனுமதியோடு கோயிம்புரா நகரிலுள்ள திருச்சிலுவை மடத்துக்குச் சென்றார். இங்கு தன் கவனமெல்லாவற்றையும் கல்வியிலும் ஆன்மீக முன்னேற்றத்திலும் செலவிட்டார். கி.பி. 1219 ஆம் ஆண்டு தனது இருபத்தி நான்காவது வயதில் புனித அந்தோனியார் இறைவனின் குருவானார். புனித அந்தோனியார் இயற்கையாகவே இரக்கக் குணமுடையவர். தன்னுடனொத்த சகோதரர்களில் யாராவது நோயுற்றால் அவர்களை நன்கு பராமரிப்பார்.
ஒருநாள் சகோதரர் ஒருவர் நோயால் அவஸ்தைப்படுவதைப் பார்த்து அவர் மேல் மிகவும் இரக்கப்பட்டார். உடனே அவர் தனது தொப்பியை அந்த நோயாளச் சகோதரர் தலையின் மேல் போட்டார். உடனே அந்தச் சகோதரர் முற்று முழுதாகக் குணமடைந்தார்.
துறவற இல்லக் கடமைகளையும், பக்தி முயற்சிகளிலும் ஏனைய துறவிகளை விடச் சிறந்து விளங்கி யாவருக்கும் முன்மாதிரியாய்த் திகழ்ந்தார். அருஞ்செயல்கள் புரிவதிலும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். ஓய்வு நேரம் கிடைத்தாலும் அதனை ஓய்வு நேரமாகக் கருதாது ஏதாவது ஒரு வேலையை விரும்பித் தேடிச் செய்து கொண்டே இருப்பார்.
ஒருநாள் அந்தோனியார் தோட்ட வேலை செய்து கொண்டிருக்கும் போது பக்கத்துக் கோவிலில் திருப்பலி நடந்து கொண்டிருந்தது. நற்கருணை எழுந்தேற்றம் நடக்கும் போது நற்கருணை நாதரை வணங்க பீடத்தை நோக்கி முழந்தாட்படியிட்டார். ஆனால் அவரது பார்வையை கோவிற் சுவர் மறைத்திருந்தது. உடனே மறைத்திருந்த கோவில் சுவர் தானாக விலகி நற்கருணை எழுந்தேற்றத்தை முழுமையாகவே அந்தோனியார் காணும் பொருட்டு விலகி நின்றது. இதனால் அந்தோனியார் நற்கருணை எழுந்தேற்றத்தைத் தோட்டத்திலிருந்தே நேராகப் பார்க்க முடிந்தது.
உடனே தரையில் முகம் குப்புற விழுந்து இறை மகனை வணங்கிப் பேரானந்தம் கொண்டார். இத்தகைய புதுமையின் நாயகனுக்கு விழாக் காணும் நாம், இன்றைய தினம் மட்டுமல்ல என்றும், எந்நாளும், "அற்புத புனிதரே, உம்மைத் தேடி வரும் கோடி பக்தர்களுக்கு உம் திருக்கரத்தில் ஏந்திய பாலக இயேசுவின் அருளால் வரமருளும்..." என இருகரம் குவித்து மன்றாடுவோம்.
மினோஷன்
Similar topics
» புனித மனிதன்.- ஜென் கதை
» கங்கையை விட புனித நதி காவிரி
» புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு
» மீண்டும் தொடங்கியது கேதர்நாத புனித பயணம்
» புனித நூல் - குரு பரம்பரை கதைகள்
» கங்கையை விட புனித நதி காவிரி
» புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு
» மீண்டும் தொடங்கியது கேதர்நாத புனித பயணம்
» புனித நூல் - குரு பரம்பரை கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum