Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
Page 1 of 1 • Share
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
கூடங்குளம் அணுமின்நிலையத்தின் பின்பகுதியை கடற்கரை வழியாக போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் இன்னமும் சில தினங்களில் யுரேனியம் எரிபொருள் நிரப்பப்பட உள்ளது. எதிர்ப்பாளர்கள் தொடர்ந்த, வழக்கில் சென்னை ஐகோர்ட், அணுமின்நிலைய பணிகளை தொடர அனுமதியளித்ததால் போராட்டக்காரர்கள் நிலைகுலைந்தனர். வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தால், நீண்டகாலம் பிடிக்கும் என்பதால், மீண்டும் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.கூடங்குளத்தை அடுத்துள்ள கடற்கரை கிராமம் இடிந்தகரையில், ஏற்கனவே இருந்த மக்களுடன் வெளியூர் மக்களையும் திரட்டி முற்றுகை போராட்டத்திற்கு திட்டமிட்டனர்.இதனால், நேற்று காலையில் இருந்தே கூடங்குளம், இடிந்தகரை, வைராவி கிணறு. விஜயாபதி என கடற்கரை கிராமங்கள் பதட்டமாயின. கூடங்குளம் வழியாக பஸ்கள், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டன.இடிந்தகரையில், இருந்து கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு வருவதற்கு தாமஸ் மண்டபம் வழியாகவோ, வைராவி கிணறு கிராமம் வழியாகவே வரலாம். இந்த இரண்டு வழிகளிலும், தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று, காலை 9.30 மணியளவில் இடிந்தகரை சர்ச் வளாகத்தில் கூடியவர்களிடம் போராட்டக்குழு உதயக்குமார் பேசினார். வன்முறையில் ஈடுபடக்கூடாது, ஏதாவது வன்முறை நடந்தால், நான்தான் பொறுப்பு என அரசு கூறியிருக்கிறது. எனவே, போலீசாரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும் என்றார். காலை 11 மணிக்கு முற்றுகை போராட்டத்திற்கு மக்கள் கிளம்பினர். போலீசார் எதிர்பார்த்திருந்த தாமஸ் மண்டபம் சாலை, வைராவிகிணறு சாலை ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தவிர்த்தனர். இடிந்தகரையில் இருந்து நேராக கடற்கரை வழியாக கூடங்குளத்திற்கு சென்றனர். கடற்கரை வழியாக முற்றுகை போராட்டத்திற்கு வருவார்கள் என சற்றும் எதிர்பாராத போலீசார், சிறப்பு போலீஸ், அதிவேக அதிரடிப்படை ஆகியவற்றை அணு உலையின் பின்புறம் செல்ல வைராவிக்கிணறு பாதை வழியாக அனுப்பினர்.
அணுஉலை அருகே..! :
அணுஉலைக்கு பின்புறம் சுமார் 500 மீட்டர் தூரத்தில் கடற்கரையில் போராட்டக்காரர்கள் நெருங்கினர். கடற்கரையில் பெண் போலீசார் உள்ளிட்ட அனைத்து படையினரும் குவிக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்திற்கு வந்த போராட்டக்காரர்களில் முதலில் பிரமுகர்கள், பின்னர் வெள்ளைக் கொடிகளுடன் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என நடந்துவருவோம் என கூறியபடி நடந்துவந்தனர். இதனால் போலீசாரும் ஒருவர் கையில் கூட லத்தியோ, துப்பாக்கியோ இல்லாமல் பாதுகாப்பு கவசத்தை மட்டுமே போலீசார் கொண்டு சன்றனர். இருதரப்பினருமே சொன்னபடி நடந்துகொண்டதால் வன்முறைக்கு வழியில்லாமல் போனது. இருப்பினும் கடற்கரையில் அணுஉலைக்கு எதிரான கோஷங்கள் தொடர்ந்தன.
பேச்சுவார்த்தை:
போராட்டகாரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை கலெக்டர் செல்வராஜ், தென்மண்டல ஐ.ஜி.,ராஜேஸ்தாஸ், டி.ஐ.ஜி.,வரதராஜூ, எஸ்.பி.,விஜயேந்திர பிதரி ஆகியோர் கடற்கரைக்கு வந்தனர். ஆனால் அதிகாரிகளுடன் உதயக்குமாரோ, புஷ்பராயனோ பேச்சுவார்த்தைக்கு வராமல் பெண்கள், இளைஞர்கள்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என முன்நின்றனர்.
கலெக்டர் கூறுகையில், ""மக்களின் அச்சத்தை போக்க அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. அணுஉலைக்கு சென்னை ஐகோர்ட் அனுமதியளித்ததையும், அரசின் நிலையையும் எடுத்துக்கூறிய கலெக்டர், போராட்டக்காரர்கள் சட்டப்படி நடந்துகொள்ளவேண்டும்,'' என கேட்டுக்கொண்டார். இருப்பினும், எதிர்தரப்பினர் அதனை கேட்பதாக இல்லை. எனவே கலெக்டர், எஸ்.பி.,ஆகியோர் அங்கிருந்து கிளம்பினர்.
தூண்டிவிட்டனர்..!:
இது குறித்து எஸ்.பி.,கூறுகையில், ""உதயக்குமார், புஷ்பராயன் ஆகியோர் மீது வழக்குகள் உள்ளன. ஆனால் இங்கே போராட்டத்திற்கு முன்வராமல் பின் நின்று தூண்டி விடுகிறார்கள். எனவே அவர்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுப்போம்,'' என்றார். தொடர்ந்து,போலீஸ் படை அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் கோஷங்களால் அங்கு தடியடி, கண்ணீர் புகை என்னும் நிலைக்கு சென்றது. இருப்பினும் இரு தரப்பினரும் தங்கள் எல்லைகளை மீறாததால் அங்கு அமைதி நீடித்தது.
தண்ணீர் தண்ணீர்..! :
போராட்டக்காரர்கள் கடற்கரைக்கு வந்த நேரம், மதிய வேளை என்பதால் வெயிலின் கோரம், கடுமையாக இருந்தது. கடலோர மக்களுக்கு அவை பழகிய இடமாகும். ஆனால் போலீசார், குறிப்பாக பெண் போலீசாரின் நிலை பரிதாபமாக இருந்தது. கடற்கரையோரம் ஒரு வாய் குடிநீருக்கு அல்லாடினர். பிற்பகலில், போலீஸ் வாகனங்களில் தண்ணீர், மதிய உணவு வந்த பின்னரே சமாளித்தனர். போராட்டக்காரர்களும் தண்ணீர், சாப்பாட்டினை அங்கு கொண்டு வந்தனர்.
இரவிலும் தொடர்ந்தது :
முற்றுகை போராட்டம்: கூடங்குளத்தில் போராட்டக்காரர்களின் முற்றுகை நேற்று இரவிலும் தொடர்ந்தது.சமரசம் பேச வந்த கலெக்டர், எஸ்.பி., உட்பட அதிகாரிகள் திரும்பிவிட்டனர். முதலில், 1000 போலீசார் இருந்த நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் சுமார் 400 போலீசார் மட்டுமே பாதுகாப்பில் ஈடுபட்டனர். அனால், போராட்டக்காரர்கள் 3000 பேர் கடற்கரையிலேயே அமர்ந்திருந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு வராத உதயக்குமார்:
இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், போராட்டத்திற்கு தலைமையேற்கும் உதயக்குமார் 5 மாதங்களுக்கும் மேலாக, இடிந்த கரையிலேயே தங்கியிருந்து போராட்டத்தை நடத்திவருகிறார்.
அவர் போராட்டத்தில் பேசுகையில், தாமோ, போராட்டக்காரர்களோ ஒரு போதும் அணுமின்நிலையத்தை முற்றுகையிட மாட்டோம் என தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று நடந்தது, தரைவழியல்லாமல், கடல்வழி முற்றுகை போராட்டமாகும்.போராட்டத்தின் போது உதயக்குமார், புஷ்பராயன் உள்ளிட்டோர் கடற்கரைக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியதால், இருவருமே அங்கே வராமல் "தலைமறைவாகி'விட்டனர் என்றார்.
முதல்வர் ஜெ., பதில் அளிக்கும் வரை போராட்டம் தொடரும்: உதயகுமார்:
""கூடங்குளம் அணுஉலை குறித்து முதல்வர் ஜெ.,யின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அவரது பதில் கிடைக்கும்வரை, கடற்கரையிலேயே போராட்டத்தை தொடர்வோம்'' என, உதயகுமார் தெரிவித்தார்.கூடங்குளத்தில் நேற்று, அணுஉலை எதிர்ப்பாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவிலும் போராட்டம் தொடர்ந்தது. இதில், அசம்பாவித சம்பவங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, போலீசார் குவிக்கப்பட்டனர்.போராட்டம் தொடர்வது குறித்து உதயகுமாரிடம் கேட்டபோது,"" முதல்வர் ஜெ., துவக்கத்தில் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். எங்களது உடனடி கோரிக்கை, இந்த அணுஉலையில் எரிபொருளான யுரேனியம் நிரப்புவதை நிறுத்தவேண்டும். ஒட்டுமொத்தமாக, அணுஉலையை மூட வேண்டும் என்பதுதான். எனவே, இறுதிக்கட்டமாக நாங்கள் மீண்டும் போராட்டத்தை துவக்கியுள்ளோம். இதுகுறித்து முதல்வரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அவரது பதில் கிடைக்கும்வரை, கடற்கரையிலேயே நாங்கள் போராட்டத்தை தொடர்வோம், என்றார்.
தினமலர்
Re: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
அப்ப மின்சார தட்டுபாடு விரைவில் தீராதா?
Re: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
இது ஓபன் ஆனாலும் மின்சார தட்டுப்பாடு தீராது அண்ணா.
Re: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
ஏதோ ஓரளவுக்கு குறைய வாய்ப்பிருக்கு ஜெயம்ஜெயம் wrote:இது ஓபன் ஆனாலும் மின்சார தட்டுப்பாடு தீராது அண்ணா.
Re: கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பின்புறம் கடற்கரை வழியாக முற்றுகை போராட்டம்
கண்டிப்பாக சிறிதளவேனும் பயன்படும்
Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையம் நோக்கி கடற்கரை வழியே ஆயிரக்கணக்கானோர் பேரணி
» பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
» கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி கடலுக்குள் இறங்கி 2வது நாளாக போராட்டம்
» முழுவுலக முற்றுகை !
» கூடங்குளம் அணு உலை பற்றிய கட்டுரை வேண்டும்
» பார்லி., முற்றுகை போராட்டம்: காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு
» கூடங்குளம் அணுஉலையை மூடக் கோரி கடலுக்குள் இறங்கி 2வது நாளாக போராட்டம்
» முழுவுலக முற்றுகை !
» கூடங்குளம் அணு உலை பற்றிய கட்டுரை வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum