Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மைக்ரோசாப்ட் தரும் இலவசங்கள்!!!
Page 1 of 1 • Share
மைக்ரோசாப்ட் தரும் இலவசங்கள்!!!
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கணிப்பொறி துறையில் மேலே நின்று கொண்டு இருக்கும் ஒரே நிறுவனம் மைக்ரோசாப்ட் தான்.
மேலும், இன்று டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னனியில் உள்ளது என்பது நாம் அறிந்ததே. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன்பாட்டு சாப்ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்துகிறது.
இதே போல இணைய பிரவுசர் வகையிலும் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பெரும்பங்கினைக் கொண்டுள்ளது. வேறு வழியின்றி, மக்களும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்குவதையே தங்கள் கம்ப்யூட்டர்களை இயக்க பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.[You must be registered and logged in to see this image.]
இதற்கு நேர் மாறாக, கூகுள் ஒரு ராபின்ஹூட் போல வேறு வர்த்தக வழிகளில் பணத்தைச் சம்பாதித்து, மக்களுக்குப் பல வசதிகளை இலவசமாகத் தந்து வருகிறது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனமும் பல சாப்ட்வேர் வசதிகளை இலவசமாகத் தந்து வருவது பலருக்குத் தெரியாமலேயே உள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணைய இமெயில் சேவை. இணையத்தில் முதல் முதலாக இமெயில் சேவையைப் பெரும் அளவில் இலவசமாக வழங்கிய நிறுவனம் ஹாட் மெயில். பின்னரே, இதனை மைக்ரோசாப்ட் விலைக்கு வாங்கி தன தாக்கிக் கொண்டது. தொடர்ந்து ஹாட் மெயில் சேவைகள் இலவசமாகவே கிடைத்து வருகின்றன.
விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரை, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பல டூல்களை இணைத்தே வழங்கி வந்தது. வாடிக்கையாளர்கள் பலர், இந்த இலவச டூல்கள் டிஸ்க் இடத்தைக் கபளீகரம் செய்கின்றன என்று குற்றம் சாட்டியதால், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இந்த இலவச டூல்களில் பல எடுக்கப்பட்டன.
இவை அழிக்கப்படாமல், மொத்தமாக விண்டோஸ் லைவ் எசன்சியல்ஸ் என்ற பெயரில் ஒரு தொகுப்பாக, இலவசமாக டவுண்லோட் செய்யும் வகையில், மைக்ரோசாப்ட் சர்வரில் வைக்கப் பட்டுள்ளது.
இந்த இலவச தொகுப்பில், விண்டோஸ் லைவ் மெயில் (Windows Live Mail), விண்டோஸ் லைவ் மெசஞ்சர் (Windows Live Messenger), விண்டோஸ் லைவ் மெஷ் (Windows Live Mesh), விண்டோஸ் லைவ் ரைட்டர் (Windows Live Writer), போட்டோ காலரி (Photo Gallery), விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் (Windows Live Movie Maker), விண்டோஸ் பேமிலி லைவ் சேப்டி (Windows Live Safety), ஆகியவை தரப்படுகின்றன.
விண்டோஸ் லைவ் மெயில், ஒரு டெஸ்க்டாப் இமெயில் கிளையண்ட் புரோகிராம். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட பல இமெயில் அக்கவுண்ட்களை இயக்கலாம்.
விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அடிப்படையில் இன்ஸ்டன்ட் மெசேஜ் டூல். இதன் மூலம் விண்டோஸ் லைவ் மெசஞ்சர் அக்கவுண்ட் ஏற்றுக் கொள்ளும் எந்த இன்ஸ்டண்ட் மெசஞ்சர் சேவையின் அக்கவுண்ட் கொண்டிருந் தாலும், அவர்களுடன் சேட் செய்திடலாம். இதனை இன்ஸ்டண்ட் மெசஞ்சர் என்று சொல்வதைக் காட்டிலும் ஆன்லைன் தொடர்பு வலை என்று விரிக்கலாம்.
விண்டோஸ் லைவ் மெஷ், உங்களின் பல கம்ப்யூட்டர்களின் டேட்டாவை ஒருங்கிணைக்க உதவுகிறது. லைவ் மெஷ் இயங்கும் மேக் மற்றும் விண்டோஸ் கம்ப்யூட்டர்களையும் இது இணைக்கிறது.
வேர்ட் ப்ரெஸ் மற்றும் ஷேர் பாய்ண்ட் போன்ற ப்ளாக்குகள் எனப்படும் வலைமனை களில் பதிவதற்கான டேட்டாவினை அமைப்பதற்கு விண்டோஸ் லைவ் ரைட்டர் பயன்படுகிறது. நாம் விரும்பும் வகையில் டெக்ஸ்ட் டைப் செய்த பின்னர், இணைப்பதற்கான படங்கள், வீடியோ கிளிப்கள் போன்றவற்றை இணைக்க இது பயன்படுகிறது.
வகை வகையான ஆல்பங்களில் நம் போட்டோவினை ஒட்டி, ஷெல்ப்களில் அடுக்கி வைக்கின்ற காலம் போய்விட்டது. நம் கம்ப்யூட்டர் அல்லது இணையத்தில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்தி, நம் போட்டோக்களை ஆல்பங்களாக வைத்து வருகிறோம். இதனாலேயே, போட்டோக்களை இணைய சர்வர்களில் வைத்திட பல நிறுவனங்கள் இலவச இடம் அளித்து வருகின்றன. அது மட்டுமின்றி, போட்டோக்களை நம் விருப்பத்திற்கேற்ப இணைக்கவும், மாற்றி அமைக்கவும் டூல்களையும் இந்த தளங்கள் தருகின்றன. மைக்ரோசாப்ட் தரும் போட்டோ காலரி இந்த வசதிகள் அனைத்தையும் கொண்டுள்ளது.
ஹை டெபனிஷன் வீடியோ காட்சிகள் ஸ்மார்ட் போன், லேப்டாப் மற்றும் டேப்ளட் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் அதிகமான அளவில் இடம் பெறத் தொடங்கிவிட்டன. இதனாலேயே இந்த சாதனங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒரு பட இயக்குநர் எனத் தங்களை எண்ணிக் கொண்டு, படங்களை உருவாக்கி மன நிறைவு கொள்கின்றனர். விண்டோஸ் லைவ் மூவி மேக்கர் இந்த எண்ணம் கொண்டவர் களுக்கு மிகவும் உதவுகிறது. டைட்டில் அமைப்பது, முன்னுரை தருவது, பின்னணி இசை சேர்ப்பது என்பது போன்ற அனைத்து வேலைகளுக்கும் உதவுகிறது விண்டோஸ் லைவ் மூவி மேக்கர்.
இணையத்தில் உலாவ விரும்பும் நம் குழந்தைகளைக் கண்காணிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு சாதனம் தேவைப்படுகிறது. அந்த வகையில் நமக்கு மிகவும் உதவுவது இந்த விண்டோஸ் லைவ் பேமிலி சேப்டி. இதன் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தை கள் பார்க்கும் இணைய தளங்கள் மட்டுமின்றி, இமெயில்களைக் கூடக் கட்டுப்படுத்தலாம்.
அனைவரும் மெதுவாக கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறைக்கு மாறி வருகின்றனர். அவரவர் கம்ப்யூட்டர்களில் சாப்ட்வேர் தொகுப்பு களை இன்ஸ்டால் செய்து பயன்படுத்து வதனைக் காட்டிலும், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், இணைய சர்வர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன் தொகுப்புகளைப் பயன்படுத்த முன்வரு கின்றனர். இவ்வாறு உருவாக்கும் பைல்களையும் இணையத்திலேயே சேவ் செய்து, தேவைப்படுகையில் எடுத்துப் பயன்படுத்த விண்டோஸ் லைவ் ஸ்கை உதவுகிறது. நம்முடைய முக்கிய டேட்டா பைல்களை இதில் பேக் அப் ஆக சேவ் செய்து வைக்கலாம்.
மைக்ரோசாப்ட் தரும் ஆபீஸ் அப்ளிகேஷன்களை இணையத்தில் இருந்தவாறே பெற்று பயன்படுத்த ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்ஸ் உதவு கிறது. உங்களுடைய கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் இன்ஸ்டால் செய்ய வில்லை என்றாலும், வேர்ட், எக்ஸெல், பவர்பாய்ண்ட் மற்றும் ஒன் நோட் பைல்களை, இதன் மூலம் உருவாக்கலாம். இவை எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்புகளில் கிடைக்கும் பார்மட்களிலேயே உருவாக்கப்படுவது இதன் சிறப்பாகும்.
ஒவ்வொரு விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டருக்கும் செக்யூரிட்டி சாப்ட்வேர் ஒன்று இப்போது அத்தியா வசியத் தேவையாக ஆகிவிட்டது. வைரஸ், வோர்ம், பிஷிங் அட்டாக், மால்வேர் என பலவகை ஆபத்துகள் நம் பெர்சனல் கம்ப்யூட்டரைச் சுற்றி வருகின்றன. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்க, விண்டோஸ் சிஸ்டத்திலேயே ஒரு பயர்வால் கிடைக்கிறது. இருப்பினும் முழுமையான ஒரு பாதுகாப்பு வளையம் வேண்டும் என விரும்புவோர், மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்சியல்ஸ் தொகுப்பைப் பயன்படுத்தலாம்.
நன்றி -இன்று ,டுடே இந்தியா

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum