Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
Page 1 of 1 • Share
அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
[You must be registered and logged in to see this image.]
அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
அழிந்து கொண்டிருக்கின்ற பல அரிய விலங்குகளைப்போல, பறவைகளைப்போல தவளைகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. இயற்கையைப் பாதுகாப்பதில் தவளைகளுக்கு முக்கியமான பங்கு உண்டு என்று நம் பாடப் புத்தகங்கள் சொல்கின்றன. அப்படிப்பட்ட தவளைகள்தான் பூமியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இரவுகளில் நாம் தாலாட்டுபோல தவளைச் சப்தம் கேட்டு உறங்கிய நாட்கள் உண்டுதானே! நம் மழைக்கால இரவுகளையும், தவளைகளின் கொண்டாட்டக் கூச்சல்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா! டெலிவிஷனும் ரேடியோவும் வந்தவுடன், அந்தத் தவளைக் குரல் அகன்றுபோகத் தொடங்கியது. ஆயினும், இன்றும் பகல் நேரங்களில் குளங்களிலும் வயல்களிலும் தென்படும் தவளைகள், எதிர்காலத்தில் இருக்குமா என்பது சந்தேகம்தான்.
புவி வெப்பமடைவதால் முதலில் பலியாகும் உயிரினம் தவளைதான் என்று விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகிறார்கள். "ஜெய்ஸôவேஜ்' எனும் அமெரிக்க ஆய்வாளர் கண்டுபிடித்த "தங்கத் தவளை' இன்றில்லை. இதன் அறிவியல் பெயர் "ப்யூபோ பெரிக்லெனஸ்' என்பது. அமெரிக்காவின் வடமேற்குப் பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்ட "தி வெஸ்டன் டோட்' எனும் அரிய வகைத் தவளைகளும் அழிந்துவிட்டன. 1972-ல் கண்டுபிடிக்கப்பட்ட "கேஸ்டிக் ப்ரூடிங்' எனும் தவளை இனமும் சந்ததி இன்றி அழிந்துபோனது. இது, அபூர்வமான தவளையாக அறிவியல் உலகத்தால் கருதப்பட்டது. மருத்துவ ஆராய்ச்சிக்குப் பெருமளவில் பயன்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட இத் தவளை இன்று முற்றிலும் அழிந்துவிட்டது.
தவளைகளின் அழிவிற்கு நிறையக் காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று, தவளையை உணவாகச் சாப்பிடும் பழக்கம்தான். வயல்களும், குளங்களும்தான் தவளைகளின் இருப்பிடங்கள். விவசாய வயல்கள் மெல்ல மெல்ல சமப்படுத்தப்பட்டு வருவதாலும், குளங்கள் தூர்க்கப்படுவதாலும் தவளைகள் போக்கிடமின்றி அழிகின்றன. தண்ணீர்ப் பஞ்சத்தின்போதும் தவளைகள் கூட்டம் கூட்டமாகச் சாகின்றன.
இந்தியாவில் தவளைகளின் அழிவு ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள், தவளைக் கால்களை உண்ணத் தொடங்கியதிலிருந்து, தவளைகளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது. அந்த நாடுகளில் தவளைக் கால்களை மிகவும் சுவையான உணவாக விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இதனால் இந்தியாவிலும், பங்களாதேஷிலும் உள்ள தவளைகளுக்கு வெளிநாட்டுச் சந்தையில் மதிப்பு அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, இந்தியாவும், பங்களாதேஷும் மிகப் பெரிய அளவில் தவளைக் கால்களை ஏற்றுமதி செய்தன.
1978-ல் இந்தியா, 3,500 டன் தவளைக் கால்களை ஏற்றுமதி செய்தது. இவ்வளவு தவளைக் கால்களைச் சேகரிக்க வேண்டும் என்றால் ஆறு கோடித் தவளைகளையாவது கொன்றிருக்க வேண்டும் என்று "தி ஸ்டேட்மென்' எனும் பத்திரிகை குறிப்பிட்டது. இது ஒரு வருடக் கணக்குதான். 1981-ல் 4,368 டன் தவளைக் கால்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன்மூலம், ஏறத்தாழ 95 லட்சம் டாலர்கள் வெளிநாட்டுப் பணம் நமக்குக் கிடைத்தது. எனவே, நாம் கோடிக்கணக்கான தவளைகளைக் கொன்றிருக்கிறோம் என்று தெளிவாகிறது.
வயல்களில் பெரும் எண்ணிக்கையிலிருந்த "ராணா டை கரீனா' பச்சை நிறமுள்ள " ராணா ஹெக்ஸôடக்டைலா' ஆகிய தவளை இனங்கள்தான் அன்று மிக அதிகமாகக் கொல்லப்பட்டன. இன்றாவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தீவிரமாகச் செயல்படுகின்றனர். ஆனால், அன்று இத்தகைய செயல்பாடுகள் அவ்வளவு தீவிரமாக இல்லாத நேரத்திலும்கூட தவளை ஏற்றுமதியின் ஆபத்துகளை பலரும் சுட்டிக்காட்டினர்.
அன்று பலரும் தவளைகளை, புழு பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு மிகச்சிறந்த வழியாகக் குறிப்பிட்டார்கள். ஒரு ஏக்கர் பரப்பளவில் ஐம்பது தவளைகளாவது இருந்தால்தான் பூச்சிகள் சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு பிரத்தியேக பணச் செலவு கிடையாது. கொஞ்சம் ஆர்வமும், கவனமும் இருந்தாலே போதும்.
கொசுக்களைக் கட்டுப்படுத்துவதில் தவளைகளும், தும்பிகளும் நமக்கு மிக அதிகமாக உதவி செய்கின்றன. கொசுக்களை லார்வா பருவத்திலேயே தின்றழிப்பதில் தவளைகளின் பங்கு மிகவும் அதிகம். மாதந்தோறும் கொசுக்களை அழிப்பதற்கும், கொசுக்களால் உருவாகும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் நாம் செலவு செய்கிற தொகை கோடிக்கணக்கில் வரும். வயல்களில் தெளிக்கப்படுகின்ற பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான செலவு வேறு.
தவளைகளை ஏற்றுமதி செய்த பிறகு வந்த வருடங்களில் இந்தியா, கோடிக்கணக்கான ரூபாய் விலை மதிப்புடைய பூச்சிக்கொல்லி மருந்துகளை இறக்குமதி செய்தது. தவளைகள் இருந்தபோது பூச்சிக்கொல்லிகளுக்காக செலவிட்ட தொகையைவிட இது அதிகம். தவளையை ஏற்றுமதி செய்ததன் மூலமாக நாம் பெற்ற வெளிநாட்டுப் பணத்தைவிட அதிகமான தொகையை, பூச்சிக்கொல்லி மருந்து இறக்குமதி செய்ததற்காக நாம் வெளிநாட்டிற்குக் கொடுத்தோம்.
இதைப் பற்றிப் புரிந்துகொண்ட பிறகுதான் அரசு, பிற்காலத்தில் தவளை ஏற்றுமதியைத் தடை செய்தது.
வன உயிர் பாதுகாப்புச் சட்டத்தின்படி, தவளைகளைப் பிடிப்பதும் கொல்வதும் குற்றம். ஆனாலும், இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. கொசுக்களைக் கொல்வதில் நாம் எந்த அளவு ஆர்வம் காட்டுகிறோமோ, அந்தளவு நாம் தவளைகளை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.
புவி வெப்பமடைதல், தவளைகளின் இனப்பெருக்கத்திற்குத் தீங்கு செய்யும் "அல்ட்ரா வயலெட் கதிர்கள்', "அக்வாட்டிக் ஃபங்கஸ்' எனும் தோல் நோய், வயல்களில் தெளிக்கப்படும் பூச்சி மருந்துகளின் வீர்யம் ஆகியவை தவளைகளின் அழிவிற்குக் காரணமாகின்றன. வெளிநாடுகளிலிருந்து வருகிற சிலவகை மீன்களாலும் தவளைகள் அழிகின்றன. "ஸ்போர்ட்ஸ் ஃபிஷ்' எனும் வெளிநாட்டு மீனின் விருப்பமான உணவு, குஞ்சுத் தவளைகள்தான்.
கியூபாவிலிருந்து வடக்கு அமெரிக்காவிற்கு வந்த, கியூபா மரத்தவளையும் சிறு தவளைகளை அழிக்கக்கூடியது. வடக்கு அமெரிக்காவின் மிகப் பெரிய தவளை இதுதான்.
தவளைகள் அமைதியான பிராணிகள். யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காத பரிதாபமான உயிர்கள். அவற்றை நாம் காப்பாற்றியே ஆகவேண்டும். தவளைகளை நாம் நம் பாதுகாப்பு வீரர்களாக எண்ண வேண்டும். அப்போதுதான் இந்தப் பாவப்பட்ட ஜீவன்கள் மீது நமக்கு அன்பும் மரியாதையும் ஏற்படும்.

செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
அதனாலதான் நான் எங்க வீடு பாத்ரூம்ல 3 ஜோடி தவளைகளை வளர்க்கிறேன்சூர்யா wrote:உன்மைதான் இப்பொழுதெல்லாம் தவளைகளை அதிகம் காணமுடியவில்லை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
செந்தில் wrote:அதனாலதான் நான் எங்க வீடு பாத்ரூம்ல 3 ஜோடி தவளைகளை வளர்க்கிறேன்சூர்யா wrote:உன்மைதான் இப்பொழுதெல்லாம் தவளைகளை அதிகம் காணமுடியவில்லை
சூரியா அண்ணா ரெம்ப கஷ்ட படுறங்க ஒரு தவளைய கொடுங்க
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
இப்பதான் தவளை ஏன் அழிந்துகொண்டிருக்குனு புரியுது ஜெயம் ;)ஜெயம் wrote:தவளை சூப் நல்லா இருக்குமாமே?
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
ஜெயம் wrote:தவளை சூப் நல்லா இருக்குமாமே?
அனுபவமா..............
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
நீங்க தானே வாங்கி கொடுத்திங்க..என் உயிர் நீயே wrote:ஜெயம் wrote:தவளை சூப் நல்லா இருக்குமாமே?
அனுபவமா..............
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
கபிலன் wrote: :fit:
என்ன நடந்தது உங்களுக்கு,....................
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
சூர்யா wrote:பயப்படாதிங்க நம்ம கபி கொஞ்சநாளா இப்படிதான் இருக்காரு
இப்படி ஆனதுக்கே நீங்க தான காரணம் தல
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
சசி என்னா கண்ணாடி போட்டும் கண்ணுல தூசி விழுந்துட்டா
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
கபிலன் wrote:சசி என்னா கண்ணாடி போட்டும் கண்ணுல தூசி விழுந்துட்டா
:005:
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
என் உயிர் நீயே wrote:கபிலன் wrote:சசி என்னா கண்ணாடி போட்டும் கண்ணுல தூசி விழுந்துட்டா
:005:
இதுக்கு என்ன அர்த்தம் சசி ரொம்ப நாளா நான் யோசிக்கிறேன் தெரியலை
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
கபிலன் wrote:என் உயிர் நீயே wrote:கபிலன் wrote:சசி என்னா கண்ணாடி போட்டும் கண்ணுல தூசி விழுந்துட்டா
:005:
இதுக்கு என்ன அர்த்தம் சசி ரொம்ப நாளா நான் யோசிக்கிறேன் தெரியலை
உங்களுக்கு இதுக்கு மட்டும் தான் அர்த்தம் தெரியல எனக்கு எதுக்கும் அர்த்தம் தெரியல............ :011:
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
எங்க வீட்ல தவளை பன்ற அட்டகாசம் இருக்கே தாங்கமுடியல
சுவிட்ச் போர்டு மேல லாம் தவளை ஏறி நின்னுக்குது சுவிட்ச் கூட போட முடியல கைல விழுந்துருமோனு பயமா இருக்க்கு
ஒரு நாள் என்னோட கடைக்குள்ள வந்துருச்சு அதை விரட்டுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
அது தேரையா இருக்கும்..Chellam wrote:எங்க வீட்ல தவளை பன்ற அட்டகாசம் இருக்கே தாங்கமுடியல
சுவிட்ச் போர்டு மேல லாம் தவளை ஏறி நின்னுக்குது சுவிட்ச் கூட போட முடியல கைல விழுந்துருமோனு பயமா இருக்க்கு
ஒரு நாள் என்னோட கடைக்குள்ள வந்துருச்சு அதை விரட்டுறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிருச்சு
Re: அழிந்து கொண்டிருக்கும் தவளைகள்
தவளைக்கும் தேரைக்கும் என்ன வித்தியாசம் ஜெயம்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» அழிந்து.. அழிந்து... மீண்டு வரும் பூமி
» மிரட்டும் தவளைகள்
» தவளைகள் எங்கே போயின?
» பூகம்பம் வருவதை முன்கூட்டியே அறியும் தவளைகள்
» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|