தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 15, 2013 8:26 am

நாகரிகத்தின் வளர்ச்சியைக் காட்ட மனிதன் ஆடை அணியத் துவங்கினான். ஆண் பெண்ணுக்கென்று தனித்தனியான ஆடை வடிவமைப்புகள் கொண்டு வந்து, இதுதான் அந்தந்த நாட்டின் பண்பாட்டை வெளிப்படுத்தும் ஆடை என்று ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆடையின் வடிவமைப்பு வைத்துக் கொள்ளப்பட்டது. ஒரு நாட்டினரின் ஆடையை மற்ற நாட்டினர் அணிந்து கொள்ள முனையும் போது பண்பாட்டுச் சிதைவாகவும், நாகரிகத்தின் கேடாகவும் பார்க்கப்படுகிறது.

ஆடை உடுத்துதலிலும் இரண்டு விதமான கண்ணோட்டம் காணப்படுகிறது. ஒன்று கிழிந்த ஆடைகள் அணிந்தால் வறுமை நிலையையும், கிழிந்த ஆடைகளை வாங்கி அணிந்தால் நாகரிகமாகவும் கருதும் நிலை உள்ளது.

பெண்ணியவாதிகள் இன்று ஆடைகள் பற்றிக் கேள்வி எழுப்பினால் ஆடைக்கும் பெண்ணியச் சிக்கலுக்கும் காரணமல்ல. ஆண்களின் தவறாக வக்கிரமான எண்ணமும் பார்வையுமே காரணம் என்று தங்கள் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.

தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரித்துப் பாலுணர்வை வேறுவகையில் தூண்டி சமுதாயப் பிரச்சினைகளுக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே, அந்தந்த நாட்டிற்கு உரிய பண்பாட்டு அடைகளை அணிந்தால் பாலியல் சிக்கல்கள் பெரும்பான்மையும் எழ வாய்ப்பு இல்லை எனலாம்.

சரி... பெண்களின் அரை குறை ஆடைகளால் என்ன சீர்கேடுகள் நடக்கிறது? பெண்கள் - ஆண்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? ரசிப்பு - சகிப்பு தன்மை குறித்து பேசுவோம்... விவாதிப்போம்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by mohaideen Sun Sep 15, 2013 11:23 am

நல்ல தலைப்பு அவசியமான தலைப்பு
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 15, 2013 11:40 am

பெண்கள் எமது பாரம்பரியத்தில் தெய்வமாக மதிக்கப்படுகிறார்கள் அதனால் தான்
நதி முதல் கடவுள் வரை பெண் முக்கியம் பெறுகிறாள் . மேலத்தேய காலாஸ்ஸாரம்
அப்படி பார்ப்பதில்லை எனவே நமது நாட்டில் பெண் கவர்ச்சி உடை சமூகத்தால்
வித்தியாசமாகதான் பார்க்கப்படும் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 15, 2013 1:19 pm

பெண்கள் பொதுவாக எல்லா நாட்டிலும் சிக்கலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்...

ஆடைகள் என்று எடுத்துக்கொண்டால் மேலை நாடுகளில் சிக்கலை ஏற்படுத்துவதில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது...

இந்தியாவில் தான் பிரச்சினையை உண்டாக்கி ஆபத்தை உண்டாக்கிவிடுகிறது.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by முரளிராஜா Sun Sep 15, 2013 1:28 pm

மேல்நாட்டில் பாதிப்பில்லை இந்தியாவில்தான் பாதிப்பு  என்பதற்கு  காரணம் நமக்கென சில பாரம்பர்யம் நடைமுறைகள் உண்டு  அது மேலை நாடுகளில் கிடையாது .அங்கு இது சம்பந்தமான தவறுகள்  பெரிதாக  கருதபடுவதில்லை   ஆனால் நாம் வாழும் சுழ்நிலை வேறு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by சரண் Sun Sep 15, 2013 2:40 pm

முரளிராஜா wrote:மேல்நாட்டில் பாதிப்பில்லை இந்தியாவில்தான் பாதிப்பு  என்பதற்கு  காரணம் நமக்கென சில பாரம்பர்யம் நடைமுறைகள் உண்டு  அது மேலை நாடுகளில் கிடையாது .அங்கு இது சம்பந்தமான தவறுகள்  பெரிதாக  கருதபடுவதில்லை   ஆனால் நாம் வாழும் சுழ்நிலை வேறு
சரியா சொன்னீங்க அண்ணா...
கலாசாரத்தை மீறும்போது தான் தவறு ஏற்படுகிறது.
சரண்
சரண்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1042

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 15, 2013 5:39 pm

சரண் wrote:
முரளிராஜா wrote:மேல்நாட்டில் பாதிப்பில்லை இந்தியாவில்தான் பாதிப்பு  என்பதற்கு  காரணம் நமக்கென சில பாரம்பர்யம் நடைமுறைகள் உண்டு  அது மேலை நாடுகளில் கிடையாது .அங்கு இது சம்பந்தமான தவறுகள்  பெரிதாக  கருதபடுவதில்லை   ஆனால் நாம் வாழும் சுழ்நிலை வேறு
சரியா சொன்னீங்க அண்ணா...
கலாசாரத்தை மீறும்போது தான் தவறு ஏற்படுகிறது.
கலாச்சாரத்தின் சிதைவை நாகரிகம் என்கிறோம்... அவ்வாறு மாறும் நாகரிகம் பண்பாட்டுச் சிதைவை கொண்டு வந்துவிடுகிறது.

அரைகுறை அடை அணியும் பெண்ணை ஒரு பெண்ணே அறுவெருப்பாகப் பார்க்கிறாள் என்பது உண்மைதானே?
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by Muthumohamed Sun Sep 15, 2013 9:04 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:
சரண் wrote:
முரளிராஜா wrote:மேல்நாட்டில் பாதிப்பில்லை இந்தியாவில்தான் பாதிப்பு  என்பதற்கு  காரணம் நமக்கென சில பாரம்பர்யம் நடைமுறைகள் உண்டு  அது மேலை நாடுகளில் கிடையாது .அங்கு இது சம்பந்தமான தவறுகள்  பெரிதாக  கருதபடுவதில்லை   ஆனால் நாம் வாழும் சுழ்நிலை வேறு
சரியா சொன்னீங்க அண்ணா...
கலாசாரத்தை மீறும்போது தான் தவறு ஏற்படுகிறது.
கலாச்சாரத்தின் சிதைவை நாகரிகம் என்கிறோம்... அவ்வாறு மாறும் நாகரிகம் பண்பாட்டுச் சிதைவை கொண்டு வந்துவிடுகிறது.

அரைகுறை அடை அணியும் பெண்ணை ஒரு பெண்ணே அறுவெருப்பாகப் பார்க்கிறாள் என்பது உண்மைதானே?
 
உண்மை தான் அருவெறுப்பாக பார்க்கும் பெண் அரைகுறையாக ஆடை உடுத்தாமல் இருந்தால் மட்டுமே
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 18, 2013 9:02 am

இன்று ஆடை என்பது உடுத்துதல் என்பதைத் தவிர்த்து கவர்ச்சிக்காகவும் பயன்படுத்தும் ஆயுதமாக மாறிவிட்டது.

பெண்களிடமும் - பெண்ணிய வாதிகளிடமும் இரண்டு வேறுபட்ட கருத்துகள் இருக்கவே செய்கின்றன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by muthuaiyer Wed Sep 18, 2013 11:47 am

ஆடை அணியும் முறையை ஒவ்வொரு நாட்டிலும் அவரவர்களது முன்னோர்கள் வழிவகுத்துவிட்டுப் போயுள்ளனர். அதை ஆங்கிலத்தில் சொன்னால்தான் நமக்கெல்லாம் எளிதில் புரியும், அதாவது Dress Code என்று சொல்கிறார்கள். நம் நாட்டுக் கோவில்களில் பல சிற்பங்கள் "சாமுத்ரிகா லக்ஷணம்" முறையில் மிக அழகாக, நேர்த்தியாக, துல்லியமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. அவைகளைக் காணும்போது, குறிப்பாக பெண்ணின் சிலைகளைக் காணும்போது பலரது மனதில் பாலியல் எண்ணங்கள் தோன்றுவதில்லை. காரணம் மனிதனின் மனக்கட்டுப்பாடு ஒன்றே. தமிழில் பாசம், அன்பு, பக்தி, காதல் என்று மனதில் தோன்றும் ஒரே உணர்ச்சியைப் பாகுபடுத்திப் பெயரிட்டு, அதை நடைமுறைப் படுத்தியும் வாழ்ந்து வருகிறோம். சகோதரியிடம் பாசத்தைக் காட்டுகிறோம், நண்பனின் மனைவியிடம் அன்பைப் பொழிகிறோம், அன்னை பராசக்தியிடம் பக்தி சொறிகிறோம், ஆனால் அழகிய ஒரு பெண் ஒருவனை விரும்பும்போது மட்டும் காதலிக்கிறான். இப்படி இருக்கும் சூழலில் ஆடை ஒன்றுமட்டும் ஆபாசத்தை ஏற்படுத்தும் என்று ஆடையைக் குறை கூற இயலாது. அதைக் காணும் மனிதனின் கட்டுப்பாடும், ஒழுக்கமும் மாறும்போதுதான் பாலியல் எண்ணம் தோன்றுகிறது என்பது என் தாழ்மையான கருத்து.........முத்து ஐயர்
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by Kingstar Wed Sep 18, 2013 11:57 am

ஆடை ஒன்றுமட்டும் ஆபாசத்தை ஏற்படுத்தும் என்று ஆடையைக் குறை கூற இயலாது.
ஆபாசத்தை ஏற்படுத்துவதில் ஆடையின் பங்கும் உண்டு என்பது உண்மைதானே நண்பரே
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by muthuaiyer Wed Sep 18, 2013 12:24 pm

"ஆபாசத்தை ஏற்படுத்துவதில் ஆடையின் பங்கும் உண்டு என்பது உண்மைதானே நண்பரே" பங்கு என்றுசொன்னால் ஆடையைமட்டும் ரசித்துவிட்டுப் போகலாமே? அந்தப் பெண்ணைப்பற்றி விரசமான எண்ணம் தோன்றுவதில் என்ன ஞாயம் இருக்கிறது?
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by muthuaiyer Wed Sep 18, 2013 2:06 pm

மனிதனின் மனம் மனிதருக்கு மனிதர், சூழ்நிலைக்கேற்ப மாறுபடும் என்பதை மேலும் ஓர் உதாரணம்கொண்டு விளக்க முற்படுகிறேன்.
ஒரு நந்தவனத்தில் ரோஜா தோட்டமிருக்கிறது. அங்கு ஒரு ரோஜாச் செடியிலிருந்து ஒரு பூ நந்தவன மதில்சுவருக்கு வெளியே நீட்டிக்கொண்டு வருவோர் போவோரையெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டு அங்கு வீசும் தென்றலில் அசைந்தாடிக்கொண்டிருக்கிறது. அப்போது அவ்வழியே சென்ற கோயில் அர்ச்சகர் கண்ணில் அந்த மலர் படுகிறது. அப்போது அவர் "ஆஹா, இந்தப் பூவை என் ஈசன் தலையில் சூடினால் எவ்வளவு புண்ணியம்" என்று அவர் மனம் எண்ணுகிறது. சிறிது நேரத்தில் ஒரு வாலிபன் அவ்வழியே செல்லும்போது அவன் கண்ணிலும் அந்த மலர் பட்டது. அப்போது அவன், "ஓ வாட் எ ப்யூட்டிஃபுல் ஃப்ளவர்! இதை என் காதலியின் தலையில் சூடினால் அவள் ஆனந்தப்படுவாளே" என்று மனதில் எண்ணுகிறான். சற்று நேரத்தில் மயானம் காக்கும் 'வெட்டியான்' அவ்வழியே செல்ல நேர்ந்தது. அந்தப் பூவைப் பார்த்துவிட்டு, "அடடா, இந்தப் பூ நேற்று நம் கண்ணில் பட்டிருந்தால், யாருமில்லாமல் கொண்டுபோட்ட அந்த அநாதைப் பிணத்திற்கு இதைச் சூட்டியிருக்கலாமே" என்று எண்ணியவாறு சென்றான். ஆகவே, அங்கு தெரிந்தது அதே ரோஜாப் பூ மட்டும்தான். ஆனால், அவ்வழியே வருவோர் போவோர் எண்ணத்தில் அதன் உபயோகம் மட்டும் மாறுபட்டது. அதுபோல், எந்தவொரு ஆடையும் பெண்ணின்மீது போர்த்தப்பட்டு அந்தப் பெண் அவளாகத்தான் இருப்பாள், ஆனால் அந்த ஆடையையும், பெண்ணையும் பார்ப்போர் மனதில்மட்டும் ரசிப்புத் தன்மை வேறுபட்டு, விரசமாகவோ, எழிலாகவோ தோன்றச் செய்கிறது. ஆகையால் ஆடைகளில் ஆபாச ஆடை, அந்த ஆடை, இந்த ஆடை என்று ஒன்றில்லை. ஆடை சரீரத்தை மறைத்து மானத்தைக் காக்கும் ஒன்றுதானேயன்றி, விரசத்தையோ, பக்தியையோ வளர்க்கும் ஒன்றல்ல. அது அவரவர் காணும் பார்வையிலும், அவரவர் மனதில் தோன்றும் எண்ணத்திலும்தான் வேறுபடும்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by sawmya Wed Sep 18, 2013 2:14 pm

"ஆபாசத்தை ஏற்படுத்துவதில் ஆடையின் பங்கும் உண்டு என்பது உண்மைதானே நண்பரே" பங்கு என்றுசொன்னால் ஆடையைமட்டும் ரசித்துவிட்டுப் போகலாமே? அந்தப் பெண்ணைப்பற்றி விரசமான எண்ணம் தோன்றுவதில் என்ன ஞாயம் இருக்கிறது?
அது அவரவர் காணும் பார்வையிலும், அவரவர் மனதில் தோன்றும் எண்ணத்திலும்தான் வேறுபடும்.




ஆள் பாதி! ஆடை பாதி! 
பெண்கள் தங்களது உடல், உணர்வு சுதந்திரம், அதற்கான தேவைகளை மற்றும் வரையரைகளை சிந்திக்கத் தவறும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிகின்றது. பெண்ணானவள் தனக்கான ஆடையை தேர்ந்து பகுத்தாராய்ந்து அணிவது அவசியம். உடலை மறைக்கவும், பாதுகாக்கவும், சுற்றுச்சூழலின் தாக்கத்திலிருந்து காக்கவுமே ஆடை அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
ஒவ்வொரு தனி நபருக்கும் உடுத்த யாரும் வந்து கற்றுக்கொடுப்பதில்லை. இன்றய கால கட்டத்தில் இச்செயலுக்கு முழுவதும் உறுதுணையாக இருப்பது ஊடகங்கள் (சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், காலாந்திர இதழ்கள், விளம்பரங்கள், இவர்கள் முன்னிறுத்தும் ஊடக மனிதர்கள்.
 
குதிகால் உயர செருப்பு, அரிதாரம் பூசிய முகம், நவ நாகரீக கைப்பை போன்றவை ஒரு அடையாளத் பெரும்பாலும் அழகு சாதனப் பொருட்கள், அவள் அந்த அழகுப் பொருட்களை பயன்படுத்தி அழகாய் மாறியவுடன் நடப்பது என்ன? நடிப்பதற்கான வாய்ப்பு அவளைத் தேடிக்கொண்டு வரும். அல்லது பல ஆண்கள் காதல் லீலை பாடிக்கொண்டு அவள் பின்னால் ஓடுவது போல சித்தரிக்கப்படுகிறது கொடுமையிலும் கொடுமை. ஆக  தங்கள் பொருளை வாங்குவது எதற்கு குறிப்பாக எதிர் பாலின் கவனத்தைப் பெறவே என்று சொல்லாமல் சொல்லி ஆண் / பெண் இரு பாலரையும் சந்தைப் படுத்தி... அவலம், அவலம். ஏற்றுக்கொள்ளமுடியாத அவலம்.  கூச செய்கிறது. 
 
மேலும் ஊடகங்கள் மற்றும் பாலியல் பற்றிய அறியாமை - எங்குப் பார்த்தாலும் பெண்ணின் அங்கங்களை அசிங்கப்படுதிக் காட்டும் சுவரொட்டிகள், பத்திரிகை அட்டைப்படங்கள், சினிமாக் காட்சிகள், தொலைக்காட்சி நிகழ்சிகள் என்று கவர்ச்சித் திணிப்பு. மறு பக்கம் கற்பு, ஒழுக்கம், ஆண் பெண் வேற்றுமை என்று கட்டுப்பாடுகள். எப்படி சாத்தியம் பெண்களின் விடுதலை.....எத்தனை பாரதி வந்தாலும் ம்ம்ம்...
பெண்ணின் ஆடை ஆணின் வக்கிரங்களுக்கு முன்னால் ரசனையாக அல்ல ஆயுதமாக இருக்க வேண்டும்.
 
பெண்கள் பகுத்தறிவு வளர்க்க வேண்டும், பகுத்தறிவுக்கு உரிமை கொண்டாடத் தகுதியற்றவராக கருதி வந்ததால் பெண்கள் பகுத்தாய்ந்து சிந்திக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விடும்; பெண்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழக்கூடாது.; தம்மைக் கட்டுப்படுத்தி தம்மைதாமே அடிமையாக்கும் விஷயங்களில் காதலுக்கும், இதர உணர்ச்சிகளுக்கும் பங்குண்டு என்பதைப் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும்; காதலைத் தூண்டும், உணர்ச்சி ததும்பும் அனுபவங்களையும் மோகத்தையும் பகுத்தறிவின் துணை கொண்டு கடந்துச் செல்ல பெண்கள் பழக வேண்டும்; உணர்ச்சிகள், உடலுறவு ஆகியவற்றைக் கடந்த தனிமனித உறவுகள்தான் அறிவான, முறையான குடும்பம், பகுத்தறிவுக்கு கட்டுப்பட்ட நெறியான, நீதியான சமுதாயம் ஆகியன உருவாக வழிவகுக்கும்.
 
ஆண் வக்கிரங்களிலிருந்து பெண் தன்னைக் காத்துக்கொள்ள மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுவது அழகுணர்சியிலிருந்து மீள்தல்.
 
நாகரிக மோகத்தில் இன்று சில பெண்கள் நாகரிக மயக்கம் கொண்டு நாளும் ஒரு நாடகத்திற்கு ஆளாகுவது உண்மைதான்....
அந்தோ பரிதாபம்...
ஆடை குறைப்பதில்,
அழகை கூட்டுவதாய் நினைத்து,
பேதமையில் நாகரீகப் பெண்!
ஆடை குறைப்பதால், அழகு கூடுமேன்னும்
அறியாமையில் அங்கங்களை காட்டி, அசிங்கங்களை கூட்டி...
அலங்கோலமாய் அலையும் அவதாரங்களின் முடிவு முற்றிலும்
அவலம்தான்.
ஆண்களும் சளைத்தவர்களில் இல்லை. அவளை ஒழுங்காக ஆடை அணிய சொல் என்பர் வெற்றுடம்புடன் சட்டையின்றி, அரை கால் சட்டை போட்டுக்கொண்டு.
இதுவும் அவலம் தான். முற்றிலும் அவலம்தான்.
 
கெடுக இப்பாழ் சிந்தை!
 
ஆறறிவு படைத்தவர்கள் சொல்கிறார்கள், “இந்தப் பெண்கள் போத்திக்கொண்டு போனால் பிரச்சினையே இருக்காது…”
ஐந்தறிவு படைத்த ஆடு, மாடு, கோழிகள்… நிம்மதி பெருமூச்சு விடுகின்றன அம்மணமாய்த் திரிகின்றோம், ஆண்டவா தப்பித்தோம் நம்மை ஒன்றும் சொல்லவில்லை/ செய்யவில்லை இந்த மக்கள்('மா'க்கள்)என்று...
 
உன் உள்ளாடை தெரிவதால் எனக்குள் தூண்டுகிறது என்கிறான்.
பறக்கும் பைக்கின் வெற்றுடம்பு தெரிகிறது,
எந்தப் பெண்ணும் பிராண்டியதாய், பிதற்றியதாய் தகவல் இல்லைதானே.
 
ஒன்றுக்கும் குனியமுடிவதில்லை பெண்களால், உற்றுப் பார்க்கிறார்கள் காமுகர்கள்.
என்னத்தைச் சொல்ல! நெஞ்சு பதைக்குது.
 
வெறித்துப் பார்ப்பதில் வேறெந்த மிருகமும் இப்படியில்லை… கருவே கலைந்திருக்கலாம் கயவனின் கண், இல்லமை போயிருக்கும் அவன் கண் புணர்ச்சி!
 
பக்கத்து வீட்டுத் தாத்தாவிடம், பள்ளிச்சிறுமியை விட பயம்.
பாப்பாவ பள்ளிக்கு அனுப்பணும், ஆட்டோகாரன் கூடவா? பயம், பயம்.
 
 
வயிற்றிலே உதைத்தப் போதும், வளர்த்துவிட்டு, உன்னை கருவிலேயே கலைக்காமல், இவ்வளவுக்கும் பிறகு சோற்றிலே விசம் வைக்காமல்
உன்னை விட்டு வைத்தாளே அவ கூட பெண்தான்.
 
கெடுக இப்பாழ் சிந்தை!
 
“அண்ணா” என அழைத்திருந்தால் அந்த மாணவியை விட்டிருப்பார்களாம், டெல்லி காமுகர்கள். ச்சீய்....
 
குற்றத்தை விட,
தீர்வு பயங்கரம்!
போலீசை வைத்து பெண்ண காப்பாற்ற போகிறார்களாம்!
ம்ம்ம்…
பதறித்துடித்த பர்தாவைக் கிழித்துக் குதறிய நாய்களை என் செய்வேனடா?
 
படுக்கவும், சுகிக்கவும் மட்டுமல்ல பெண்.
மனித இனத்தை படைத்தவள், காத்தவள் பெண்ணடா!
அவள் மட்டும் ஆண்வர்க்கம் வெறுத்திருந்தால்
நீ அடிவயிற்றிலேயே மண்ணோடு மண்ணடா!
 
 
மாமிசத் துண்டல்ல – பெண். மனமும், குணமும் - பெண்.
இறந்தபின்பு தன் கண்களை தானம்தரச் சொல்லி இருக்கிறாள்
ஆசிட் வீச்சில் பலியான வித்யா, அவள் கண்களில் விழிக்க
அருகதை உண்டா உனக்கு ஆராயடா!
 
பெரிய திரை குத்துப் பாடல்கள்…
சின்னத் திரை கள்ள உறவு சீரியல்கள்…
 
நிழல் உருவ ‘மெமரி’கார்டு வக்கிரங்கள்…
இலவசமாய் விரியும் பாலியல் வலைகள்…
 
என்ன கண்டுபிடித்தாலும்
பெண்ணை விற்று காசு பார்க்கும்
முதலாளித்துவ வியாபாரிகள்!
 
இனி
சமூகப்புரட்சி மட்டுமே
பெண்ணுக்கு பெருந்துணை!
 
நடப்பவை
சமூகக் குற்றங்கள் மட்டுமல்ல
இந்தச் சமூகமே குற்றமாய்! எங்கு போகிறது இந்த சமூகம்???
 
புதிய சமூகத்திற்கான புதிய ஜனநாயகப் போராட்டமே
நம் விடுதலையின் நோக்கு!
அனைத்தையும் சீரழிக்கும்
மனம்படைதவர்களை இந்த மண்ணை விட்டு நீக்கு!  நீக்கு!
 
கெடுக இப்பாழ் சிந்தை!

பெண்கள் பகுத்தறிவு வளர்க்க வேண்டும். பகுத்தறிவுக்கு கட்டுப்பட்ட நெறியான, நீதியான சமுதாயம் ஆகியன உருவாக வழிவகுக்க வேண்டும்.
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by muthuaiyer Wed Sep 18, 2013 2:31 pm

தலைப்பு: பெண்களின் ஆடை கவர்ச்சியா? பார்வை குறைபாடா?
விவாதமேடையில் கவர்ச்சியா? என்பதுபற்றி அதிகம் விவாதிக்கப்படவில்லை. பார்வை குறைபாடா? என்பதைப் பற்றித்தான் அதிகம் விவாதிக்கப்படுகிறது. ஆக கவர்ச்சியாக ஆடை அணிவதென்பது அவர்களின் உரிமைப்பிரச்சினை என்று ஒதுக்கிவிடுவதா? இல்லை சமூக நலன் கருதி அதைப்பற்றியும் விவாதிப்போமா?
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by muthuaiyer Wed Sep 18, 2013 3:28 pm

நாட்டாமை! தீர்ப்பைச் சொல்லுங்கைய்யா.........
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by மகா பிரபு Wed Sep 18, 2013 3:43 pm

நிச்சயம் பார்வை குறைபாடு இல்லை. அரைகுறை ஆடை அணிவது நம் நாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் உகந்தது அல்ல. இதை பெற்றோர்களே ஊக்குவிப்பது வருந்த தக்கது.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by muthuaiyer Wed Sep 18, 2013 6:05 pm

ஆள் பாதி, ஆடை பாதி. ஆடை அலங்காரங்களுடன் போனால்தான் சமூகத்தில் மதிப்பு. எளிமையான உடையில், அதுவும் வேட்டி, அரைக் கை சட்டை போட்டுச் சென்றால் சமூகத்தில் ஒருவர்கூட மதிக்கமாட்டான். ஏன்? பிச்சைக்காரர் கூட அதுபோல் உடை உடுத்தியிருப்பவரிடம் பிச்சை கேட்பதேயில்லை. அந்தக் காலக் கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் வித்தியாசமான ஆடைகள் அணிந்து சென்றால்தான் மதிப்பு என்ற காலக்கட்டாயத்துக்கு வந்துள்ளோம் நாம். அப்படியிருக்கும் நிலையில் "நீ அப்படி ஆடை அணியக்கூடாது, இப்படித்தான் ஆடை அணியவேண்டும். நம் பண்பாட்டைக் காக்க வேண்டும்" என்று கூறுவதெல்லாம் இக்கால இளைய சமுதாயத்தின் காதில், செவிடன் காதில் ஊதிய சங்குபோல்தான் ஆகும். "ஜெண்டில்மேன்" என்ற திரைப்படத்தில்கூட ஒரு பாடலுண்டு "பாக்காதே, பாக்காதே, பஞ்சாங்கத்தைப் பார்க்காதே.....கிள்ளாதே கிள்ளாதே இளமனசைக் கிள்ளாதே.....வாழ்க்கை வாழத்தானே" என்று வரும். ஆகையால், வெள்ளம் இப்போது கரையைத் தாண்டி உள்ளே வந்துவிட்டது. நம்முடைய கௌரவத்தை எப்படிக் காக்க வேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டுமேயன்றி, அதுபோல் ஆடை அணிபவர்களைக் கண்டித்து பிரயோஜனமில்லை. புராணத்தில் சிவன் பிக்ஷாடன ரூபமெடுத்து அரைகுறை ஆடையுடன் ரிஷி பத்தினிகளை மயக்கப் போனதாகவும், திருமால் மோஹினி அவதாரமெடுத்து அலங்கோலமாகப் பாலுணர்ச்சியைத் தூண்டும் வகையில் ரிஷிகளின் இருப்பிடம் சென்று ரிஷிகளை நிலை குலையச் செய்ததாகவும் புராணங்களில் வரையப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்ல கால்நடையாகத்தான் சென்றனர். அது எளிமையல்ல, அந்தக் காலத்தின் கட்டாயம். இப்போது பட்டித்தொட்டி களிலெல்லாம் கார்களின் ஆதிக்கம் தலைதூக்கி ஆடுகிறது. அவர்கள் அப்படி எளிமையான வாழ்க்கைவாழ காலம் கட்டாயப்படுத்தியது, காரணம் இக்காலத்தைப் போன்ற மிகையான ஊடகவசதிகளில்லை. இப்போது எல்லாசுகங்களையும் பெருக்கிக் கொண்டு "பாரம்பரியத்தோடு" வாழவேண்டுமென்றால், சற்று கடினமான செயல்தான். ஆகையால் காலத்திற்கேற்ப உடையில் மாற்றம் செய்து கொள்வது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி அது தவறல்ல. அதே சமயம் ஒன்றைமட்டும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் --அதாவது ஆடை என்பது ஒருவரின் மானத்தைக் காக்க அணியப்படும் ஒன்றாகும். அதற்குக் குந்தகம் விளைவிக்காமல் வித்தியாசமான ஆடைகளையும் உடுத்தலாம். தவறில்லை. அது ஆடவரிடையே பாலுணர்ச்சியைத் தூண்டுகிறதேயென்றால், அது அவரவர் பார்க்கும் பார்வையின் குறைபாடேயன்றி, ஆடையின் குறைபாடல்ல. கேரள மாநிலத்தில் அவர்களது பாரம்பரிய உடைகள் என்னவென்று நாம் எல்லோரும் நன்கு அறிவோம். அதுபோலத்தான், நாகாலந்து, திரிபுரா போன்ற பகுதிகள். நம் மலைவாழ் மக்களின் உடை ஓரளவுக்குத்தான் உடலை மறைத்திருக்கும். அதனால் அவையெல்லாம் பாலுணர்ச்சியைத் தூண்டவில்லையா என்றுவாதாடுவது முறையல்ல. ஆடைகள்மட்டும் பெண்களை ஆண்களின் பார்வைப் பாலுணர்ச்சியைத் தூண்டச்செய்கிறது என்பது ஒப்புக்கொள்ளவியலாத வாதமென்றே கருதுகிறேன்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Sep 18, 2013 9:35 pm

இப்போது எல்லாசுகங்களையும் பெருக்கிக் கொண்டு "பாரம்பரியத்தோடு" வாழவேண்டுமென்றால், சற்று கடினமான செயல்தான். ஆகையால் காலத்திற்கேற்ப உடையில் மாற்றம் செய்து கொள்வது ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி அது தவறல்ல. அதே சமயம் ஒன்றைமட்டும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் --அதாவது ஆடை என்பது ஒருவரின் மானத்தைக் காக்க அணியப்படும் ஒன்றாகும். அதற்குக் குந்தகம் விளைவிக்காமல் வித்தியாசமான ஆடைகளையும் உடுத்தலாம். தவறில்லை.
மானம் காக்க வேண்டிய ஆடை - பின்னர் அவமானத்தைத் அவர்களுக்குத் தராமல் இருந்தால் சரிதான். பின் வருந்தி பயனில்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by muthuaiyer Thu Sep 19, 2013 7:38 am

பெண்களின் ஆடை கவர்ச்சியா? பார்வை குறைபாடா? என்ற தலைப்பில் விவாதம் மிக அருமையாகப் போனது, அதில் நானும் பங்குபெற்றது என் அவாவின் தூண்டுதல். இதில் என் கருத்துக்களைச் சொல்லியபோது யார் மனதையாவது என்னை அறியாமல் புண் படுத்தியிருந்தால், தயவு செய்து அதை மறந்து மன்னித்துவிடவும், ஆனால், என் கருத்தை மட்டும் மனதில் இறுத்திக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது விவாதம்தான். மற்றபடி மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர். அவர்கள் ஒரு படத்தில் பாடினாரே, "திருடனாய்ப்பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்று. அதுபோல், மக்கள் மனம்மாறி நம்முள் நேர்மை வலுப்பட்டால்தான் இதுபோன்ற பல விடயங்களுக்குத் தீர்வுகாண இயலும் என்பதைக் கூறிக்கொண்டு இவ்விவாதத்திலிருந்து விடை பெறுகிறேன். இதுபோன்ற மிக அருமையான, உபயோகமுள்ள தலைப்பைத்தந்து சமூகத்திற்கு நல்லது செய்ய நினைத்த "அமர்க்களம்" நிறுவனத்தார் உண்மையிலேயே பாராட்டி மெச்சத்தகுந்தவர்கள்.......நன்றி......முத்து ஐயர்


Last edited by muthuaiyer on Thu Sep 19, 2013 7:42 am; edited 1 time in total (Reason for editing : சொற்கள் தவறவிடப்பட்டன)
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by muthuaiyer Thu Sep 19, 2013 7:40 am

"அந்தப்பாடல் ....திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது --- என்று இருக்கும்.
muthuaiyer
muthuaiyer
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by மகா பிரபு Thu Sep 19, 2013 7:45 am

அருமையான விவாதங்கள்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by naga Sun Sep 22, 2013 10:20 am

சுய மரியாதையை இழைந்தவன் கலாசாரத்தை izhanthaan; சுய ஒழுக்கத்தை இழந்தவன் வாழ்க்கையை இழந்தான், பொன்மொழி அல்ல நடைமுறை வழி!!!

கற்றலிலும் கேட்டலிலும் வரைமுறை இருந்தது, அதை கடக்கவோ பரணிமிக்க செய்யவோ முயல்பவர்கள் வரைமுறைகளை விஸ்தரிக்க இல்லாமல்/இயலாமல் பெயர்தேடுப்பதாலேயே தடுமாறி தள்ளாடுது உலகம். யார் முயற்சிப்பது? யென்ற கேள்வியுடன் முடிக்கலாம் அல்லது நான் யென்ற பாதிலுடன் முடிக்கலாம் நான், நாமாவதில் சிக்கல் இல்லையெண்ட்றால்!!!
naga
naga
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by naga Sun Sep 22, 2013 10:33 am

மேற்கண்ட யென் கருத்திலிருந்து "பார்வை குறைபாடுதான்" என்றும் முடிவுக்கு வரலாம் ஆனால் அந்தப்பார்வை கண்ணிலிருந்தல்ல அறிவிலுருந்து!!!
naga
naga
புதியவர்
புதியவர்

பதிவுகள் : 5

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by கவியருவி ம. ரமேஷ் Sun Sep 22, 2013 4:05 pm

குறிப்பாக பெண்ணின் சிலைகளைக் காணும்போது பலரது மனதில் பாலியல் எண்ணங்கள் தோன்றுவதில்லை. காரணம் மனிதனின் மனக்கட்டுப்பாடு ஒன்றே.
இக்கட்டுப்பாடு இன்று கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.

அன்று ஆடைகள் இன்றியும் வன்புணர்வு என்பது இல்லை. பரத்தமை ஒழுக்கத்தை கடைபிடித்து வந்தனர். பரத்தமை போற்றப்பட்டது.

இன்று நாகரிகம் என்று வந்துவிட்டப் பின்னர் வன்புணர்வு அதிகரித்துள்ளது.

ஒருவன் எல்லா பெண்களையும் வன்புணர்வுக்கு ஆளாக்க வேண்டும் என்று நினைப்பதில்லை - யாரும் காமப்பார்வையாகவும் பார்ப்பதில்லை. சில பெண்களைத்தான் பார்க்கிறார்கள். அதற்கு ஆடையோடு கூடிய வேறு செய்கைகள் அவனைக் கவர்ந்திப்பதாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம் Empty Re: பெண்களின் ஆடை - கவர்ச்சியா? பார்வை குறைபாடா? - விவாதிப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum