Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் ஹைபுன்கள்
Page 1 of 2 • Share
Page 1 of 2 • 1, 2
ம. ரமேஷ் ஹைபுன்கள்
ம. ரமேஷ் ஹைபுன் – 14
புகை பிடித்தல் தவறு. மது அருந்துதல் தவறு என்று தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் காட்டப்படுகிறது. அங்கு யாரும் புகையோ மதுவோ தொடுவதில்லை… ஆனால் அவர்கள் புகைப்பார்கள்; அருந்துவார்கள். வேறென்ன சொல்ல… கற்பழிப்புக்கு எதிராகப் பல கட்டப் போராட்டங்கள் நடக்கிறது. ஆனால், அவர்கள் கதற கதற கற்பை அழிக்கும் காட்சியை நடிகையின் அடுத்தப் படத்திற்கான மார்க்கெட்டுக்கும் சேர்த்து நிர்வாணமாகக் காட்டுகிறார்கள். எந்த நடிகையும் ஏன் இப்படி நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கேட்பதில்லை. நடிக்க முடியாது என்றும் சொல்வதில்லை… பணம் வேண்டும் இல்லையா? நீங்களும் நடிகையாகிப்போங்கள்…
விபச்சாரப் பிழைப்பு
பணம்தான் வாழ்க்கை
நாகரிகமாக பெயர் நடிகை
(இப்படியும் எழுதலாம்… புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:
நிர்வாணமாகிறது
எண்ணங்கள்
மேக்கப் சதை
முழு நீலப்படம்
பலகோடி ரூபாய்
விளம்பரம்
நடிகர்களின் மகள்கள்
தாத்தாக்களுக்கு ஜோடிகள்
இந்திய சினிமா

Re: ம. ரமேஷ் ஹைபுன்கள்
ம. ரமேஷ் ஹைபுன் – 13 (தண்டனையோடு புத்தாண்டு)
கற்காலம் அல்லது சங்ககாலம் அல்லது ஏதோ ஒரு காலம்… ஒருத்திக்கு ஒருவன்தான் என்பதை வரையறுத்துக் கட்டுப்பாட்டில் வைத்த காலம் முதல் 2012 வரை பெண்கள் கற்பை இழந்து இருக்கிறார்கள்… சட்டங்கள் இருக்கிறது… தண்டிக்க வில்லை… பெண்ணே கூட வெளியே சொல்ல வெட்கப்பட்டால் போல… இனி அந்த காலம் மலை ஏறிவிட்டது. பாதித்தால் வெளியே சொல்லுங்கள்… ஆண்களுக்குத் தண்டனை கிடைக்கும்… வழக்கம்போல் கொலை, கொள்ளை, கற்பு அழிப்பு, விபச்சாரம், விவாகரத்து வழக்குகள், அரசியல்வாதிகளின் ஊழல் என்று முடிந்தது கடந்த ஆண்டு. என்ன ஒரு மாற்றம் அந்த மருத்துவக்கல்லூரி மாணவியால் இனி கற்பை அழித்தால் ஆண்களுக்குத் தண்டனை என்பதை மட்டும் புதியதாக்கிவிட்டுச் சென்றது…
புதிய வருடம் பிறந்தது
மக்கள் விழித்தார்கள்
பழைய தவறுகளோடு
(இப்படியும் எழுதலாம்…
பிரச்சினையைச் சொன்னேன்
பெரிதாய்ப்போனது பிரச்சினை
பாதித்த பெண்ணின் புலம்பல்
குற்றத்தைச் சொல்
அதற்கு முன்னர்
உண்மையாய் இரு
பெண்ணுக்காகப்
பெண்களே போராடவில்லை
ஆண்களும் சேர்ந்துகொண்டார்கள்

ம. ரமேஷ் ஹைபுன் – 12
காலம் கெட்டுக் கெடக்கு. ஏன்டி இப்படி ட்ரஸ் பண்ணிக்கிட்டு வெளியே போற… என்னதான் பேசனா இருந்தாலும் பசங்க பாத்து சைட் அடிக்கத்தானே செய்வாங்க. என்னம்மா நீயும் இப்படிப் பேசற. நீயுதான் பொடவ கட்டிக்கிட்டு வெளியில் போற… அக்கா கூடதான் மேல இருந்து கீழ வரைக்கும் மூடுற சுடி போட்டுட்டுப் போற… தப்பா பாக்காமலா இருக்காங்க… அங்க ஒண்ணு… இங்க ஒண்ணுன்னு நடக்குற குத்தத்துக்காக நான்… பொறுடி… இது சினிமாவோ… சினிமா நடிகையோட பொண்ணோ கெடையாது. கல்யாணத்துக்கு முன்னயே பாதுகாப்பா உறவு வெச்சிக்கலாம்… டேட்டிங் போறது தப்பே இல்லைன்னு சொல்ல… அவங்க சொல்லுவாங்களே தவிர அவ பெத்த பொண்ண பாதுகாப்பா உறவு வெச்சிக்கவோ டேட்டிங்கிக்கி அனுப்பி வைக்கவோ மாட்டாங்க… பெண்ணியவாதிங்க கூட ட்ரஸ் பத்தி யாராவது ஒரு ஆம்பள வாய்த் தொறந்துட்டா ஒடனே ஆணாதிக்கம் சுதந்திரமுன்னு பேசி வீதிக்கு வந்துடறாங்க… அம்மா உனக்கு வயசு ஆயிடிச்சி நீ அப்படித்தான் பேசுவ… உங்க காலம் வேற… எங்கக் காலம் வேறமா… நீ பட்டாதான் திருந்துவ… திருந்துறத்துக்கு உனக்கு உயிர் முக்கியம்… மொத்தத்துல நீ எங்களுக்கு ரொம்ப முக்கியம்டீ… அவ என் பொண்ணு தப்பு செய்ய மாட்டா…! வீதியில் போய்க்கொண்டிருந்த காதல் ஜோடி முணுமுணுத்துக்கொண்டே போனது: இந்த மாதிரி நெனப்புதான் பொழப்பக் கெடுக்குது.
ஆடை சுதந்திரம்
சட்டத் திருத்தம்
ஆண்களுக்குத் தண்டனை
(இப்படியும் எழுதலாம்…
தவறு செய்யாத போதே
பிறர் தவறு என்பதை
திருத்திக் கொள்
கற்பு அழித்தால்
சட்டத்தால்
ஆணுறுப்பை அழிப்போம்
ஆடையை சுழற்றியபடி
ஆடை சுதந்திரம் முக்கியம்
பெண்ணியம் போர்க்கொடி
பெற்றோர்களின் நம்பிக்கை
தவறு செய்ய மாட்டார்கள்
தவறு செய்யும் பிள்ளைகள்)

ம. ரமேஷ் ஹைபுன் – 11
காலையில் சாலையில் போகும்போது நாய் ஒன்று இறந்துகிடந்தது. அலுவலகத்துக்கு விரையும்போதும்கூட எந்த வண்டிக்காரனோ கொன்னுட்டுப்போயிட்டான் என்று வருத்தப்பட்டுக்கொண்டு சென்றார். அலுவலகத்தில்கூட சரியாக வேலை செய்யவில்லை. மாலை… திரும்பும் வழியில் ஒரு டாஸ்மாக் கடைக்கு முன்னால் ஒருவன் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருந்தான். குடிக்கத்தான் அந்தப்பக்கமா அவசரமா போய் இருக்கனும்… குடிக்கத்தான் போறானே அப்புறம் என்னதான் அவசரமோ அவனுக்கு… இவனுங்களுக்கு எல்லாம் நல்லா வேணும்… இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கப்போனார்… கனவில் இறந்த அந்த நாயும் மனிதனும் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் சொர்க்கத்தில்!
நமக்கென்ன போகிறது
இறந்தவன் யாரோ
மறைந்த மனித நேயம்
(இப்படியும் எழுதலாம்… புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:
சொர்க்கமோ நரகமோ
இறப்பு துன்பம்தான்
இழந்தவர்களுக்கு
புதிய பேருந்து நிறுத்தங்கள்
மகிழ்ச்சியில் பயணிகள்
டாஸ்மாக் கடைகள்
அலுவல் வேலை
சரியாக நடக்கவில்லை
காலை கண்ட காட்சி
இறந்த பிறகு வருத்தப்பட
என்ன இருக்கிறது
இறந்தவன் திரும்பான்)
காலையில் சாலையில் போகும்போது நாய் ஒன்று இறந்துகிடந்தது. அலுவலகத்துக்கு விரையும்போதும்கூட எந்த வண்டிக்காரனோ கொன்னுட்டுப்போயிட்டான் என்று வருத்தப்பட்டுக்கொண்டு சென்றார். அலுவலகத்தில்கூட சரியாக வேலை செய்யவில்லை. மாலை… திரும்பும் வழியில் ஒரு டாஸ்மாக் கடைக்கு முன்னால் ஒருவன் விபத்தில் சிக்கி பரிதாபமாக இறந்திருந்தான். குடிக்கத்தான் அந்தப்பக்கமா அவசரமா போய் இருக்கனும்… குடிக்கத்தான் போறானே அப்புறம் என்னதான் அவசரமோ அவனுக்கு… இவனுங்களுக்கு எல்லாம் நல்லா வேணும்… இரவு நன்றாக சாப்பிட்டுவிட்டு உறங்கப்போனார்… கனவில் இறந்த அந்த நாயும் மனிதனும் ஓடி பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள் சொர்க்கத்தில்!
நமக்கென்ன போகிறது
இறந்தவன் யாரோ
மறைந்த மனித நேயம்
(இப்படியும் எழுதலாம்… புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:
சொர்க்கமோ நரகமோ
இறப்பு துன்பம்தான்
இழந்தவர்களுக்கு
புதிய பேருந்து நிறுத்தங்கள்
மகிழ்ச்சியில் பயணிகள்
டாஸ்மாக் கடைகள்
அலுவல் வேலை
சரியாக நடக்கவில்லை
காலை கண்ட காட்சி
இறந்த பிறகு வருத்தப்பட
என்ன இருக்கிறது
இறந்தவன் திரும்பான்)
Re: ம. ரமேஷ் ஹைபுன்கள்
விபச்சாரப் பிழைப்பு
பணம்தான் வாழ்க்கை
நாகரிகமாக பெயர் நடிகை
(இப்படியும் எழுதலாம்… புதியதாக எழுதுபவர்களுக்கான மாதிரி இது:
நிர்வாணமாகிறது
எண்ணங்கள்
மேக்கப் சதை
முழு நீலப்படம்
பலகோடி ரூபாய்
விளம்பரம்
நடிகர்களின் மகள்கள்
தாத்தாக்களுக்கு ஜோடிகள்
இந்திய சினிமா
மிக அருமையான உண்மையான வரிகள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ம. ரமேஷ் ஹைபுன்கள்
ம. ரமேஷ் ஹைபுன் – 12
சமதானப் புறாக்கள்கூட
முரண்டு பிடிக்கும்
திமீர்
பற்றிக் கொண்டது.
மனிதன் உணவிட்டதினால் இருக்கலாம்...
மனிதன் ஊட்டி வளர்க்கும்
பறவை விலங்குகளுக்கும்
மனித மனம் துளிர்விட்டுவிடுகிறது.
பெரிய அதிகாரி வந்தால்
சின்னவன் மரியாதை செலுத்துவதற்கு
முரணாக இன்று
நான் உள்ளே நுழைந்தால்
வாலாட்டாத நாய்
எலும்பு போடும் வேலைக்காரனுக்கு
வாலுட்டுவது அதிசயம்தான்.
மகாத்மாவுக்கும் மதிப்பில்லை
சிரித்துக்கொண்டிருக்கிறார்
கள்ள நோட்டு
சமதானப் புறாக்கள்கூட
முரண்டு பிடிக்கும்
திமீர்
பற்றிக் கொண்டது.
மனிதன் உணவிட்டதினால் இருக்கலாம்...
மனிதன் ஊட்டி வளர்க்கும்
பறவை விலங்குகளுக்கும்
மனித மனம் துளிர்விட்டுவிடுகிறது.
பெரிய அதிகாரி வந்தால்
சின்னவன் மரியாதை செலுத்துவதற்கு
முரணாக இன்று
நான் உள்ளே நுழைந்தால்
வாலாட்டாத நாய்
எலும்பு போடும் வேலைக்காரனுக்கு
வாலுட்டுவது அதிசயம்தான்.
மகாத்மாவுக்கும் மதிப்பில்லை
சிரித்துக்கொண்டிருக்கிறார்
கள்ள நோட்டு
Re: ம. ரமேஷ் ஹைபுன்கள்
புதிய வருடம் பிறந்தது
மக்கள் விழித்தார்கள்
பழைய தவறுகளோடு -
மகாத்மாவுக்கும் மதிப்பில்லை
சிரித்துக்கொண்டிருக்கிறார்
கள்ள நோட்டு -
பெற்றோர்களின் நம்பிக்கை
தவறு செய்ய மாட்டார்கள்
தவறு செய்யும் பிள்ளைகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ம. ரமேஷ் ஹைபுன்கள்
(அட இவ்ளோதான் காதலா!) ம. ரமேஷ் ஹைபுன் – 19
ஏன்டா நம்ம காதல ஊர் உலகம் ஏத்துக்குமா? அது இருக்கட்டும் டா… முதல்ல கல்யாணம் பண்ணிக்குவோம்… இந்த சாதி சனத்தைதான் நெனச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு… நம்மள சந்தோஷமா வாழ விடுவாங்களா? எதுக்குடா சந்தேகம்… அம்மா அப்பா சொந்த பந்தம் இந்த ஊரு உலகம் சாதி சனம் எல்லாம் எதுத்தா கூட நாம சந்தோஷமா இருக்கலான்டா… ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டா நம்மள யாராலும் பிரிக்க முடியாது!. திருமணம் நடந்தது. குடிசைகள் எரிந்தன… பெற்றோரின் இறப்பு… புகைப்படம் கண்ணீர் அஞ்சலியாக… அந்த ஆச 60 நாளும் மோகம் 30 நாளும்கூட முடியல… காதல் கசந்தது… கோர்ட் படியேறி நின்று கூவுகிறாள் நான் பெத்தவங்க கூட பொறேன்… போய்வி்ட்டாள். அவன் கண்ணீர் சொட்டுகிறான்… அட இதுதான் காதலா என்று செய்திகள் விமர்சிக்கின்றன… இப்ப எல்லாம் காதல் புனிதம் என்று யாரும் ஏமாறாமல் இருந்தால் சரிதான்!
புதிய தாலி
புதிய சுகம்
சந்தோஷம் திரும்புகிறது
மேலும் சில…
காதலர்களால்
கலங்கப்பட்டுப்போனது
இலக்கியங்களின் காதல் கதை
விபசாரம்
காதலர்களின் பிரிவு
பணம் பணம் பணம்
முத்தத்தின் சுவை
எச்சிலாகும் போது
காதல் தோற்கிறது
சாதி சனம்
ஊர் உலகம் தேவை
காதல் வாழ!
வாசல் தாண்டும் காதல்கள்
தடைகளைத் தாண்டுவதில்லை
கேவலத்தோடு வீடு திரும்புகிறது

உண்மை தான்
அத்துணை வரிகளும்
தடைகளைத் தாண்டுவதில்லை
கேவலத்தோடு வீடு திரும்புகிறது
உண்மை தான்
அத்துணை வரிகளும்
Re: ம. ரமேஷ் ஹைபுன்கள்
ஹைபுன் - 22
கடவுளும் அரசியல்வாதியும்
சொர்க்கத்தில் சந்தித்துக்கொண்டார்கள்.
மேடை முழக்கம்போல்
கடவுளைப் புகழ்ந்தும்
சாத்தானை இகழ்ந்தும்
பேசியதைக் கண்டு
கடவுளே சொக்கித்தான் போனார்.
பேச்சுக்கிடையில்
ஆளும் கட்சிதான் கடவுளே என்றான்.
கோபம் வந்துவிட்டது கடவுளுக்கு.
நாங்கள் நினைத்தால் ஆக்குவோம்.
எதிர்கட்சிகள் ஆக்கியதை அழிப்போம்.
மாற்றி அமைப்போம்.
ஏன்
நீதி மன்றமும்
கொள்கை முடிவுக்குக் கட்டுப்பட்டுப்போகும் என்றான்.
கொஞ்சம் திமிராகவே!
ஆக்கல் அழித்தல் காத்தல் செய்யும்
நானே உயர்ந்தவன் என்றான் கடவுள்.
அரசியல்வாதி
இதைச் சொன்னதும் வாயடைத்துப்போனார்:
நாங்கள் நினைத்தால்
கடவுளே இல்லை என்று
சட்டம் கொண்டுவந்து
சட்ட சபையிலும் நாடாளுமன்றத்திலும்
தீர்மானம் நிறைவேற்றி
அரசியல் செய்வோம். வெற்றியும் பெறுவோம்.
கடவுள்
நீதிமன்றம்
உயர்ந்தது அரசியல்

(கேர்ள் ப்ரண்டு) ம. ரமேஷ் ஹைபுன் – 18
ம்… நல்லா இருக்கியா? நான்தான் பேசறேன்… என்று தனக்கு உடல் நலை சரியின்றி 10 நாட்களாக மருத்துவமனையில் இருப்பதைச் சொல்லி முடித்தால் கல்லூரித் தோழி. நானும் பிரண்டுங்களும் பாக்க வரட்டுமா என்றேன். வேண்டாம் என்றாள். அன்று முதல் மனம் வருத்தத்துடனேயே இருந்தது. ஏதோ நல்ல நாளாம். மனைவி கோயிலுக்குக் கூப்பிட்டாள். குழந்தைகளோடு கோயிலுக்குச் சென்று சாமியைப் பார்த்து நறுக்குன்னு நாலு கேள்வி கேட்டுவிட்டு அமர்ந்தேன். சரி கிளம்பலாமா என்றேன் மனைவியைப் பார்த்து. அட அங்கப் பாருங்க உன் கேர்ள் ப்ரண்டு என்று சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்தான். அதியம்தான்… உடல் நிலை சரியில்லை என்ற தோழிதான் அவள். நலம் விசாரித்தேன். மருத்துவர்கள் சொன்னதைச் சொன்னாள். அதற்குப் பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றினாலும் ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட்டோமே என்பதில் மகிழ்ச்சி நிறைந்தது.
நட்பும் வாழ்க்கையும்
வேறுவேறுதான்
ஆண்களுக்கு மட்டும்
இப்படியும் எழுதலாம் என்பதற்காக சில முத்தாய்ப்பான ஹைக்கூக்கள்
தொலைத்த காதலியின்
நலம் விசாரிக்கிறேன்
தோழிகளிடம்
நட்புகள்
முறித்துக்கொள்ள வேண்டும்
திருமணத்திற்கு பின் பெண்கள்
நலம் விசாரித்தேன்
சந்தேகக் கண்
கணவன்
அன்றுபோல் இன்றும்
போடா வாடா என்கிறார்கள்
கல்லூரித் தோழிகள்

புதிதாக எழுத நினைப்பவர்களுக்கு உதவும் என்பதால்தான் இப்படி எழுதி வருகிறேன்...கவிஞர் கே இனியவன் wrote:அருமை பல ஹைகூ தந்து அசத்தியிருக்கிறீர்கள்
மகிழ்ச்சி நண்பரே...
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» ம. ரமேஷ் கவிதைகள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
» ம. ரமேஷ் லிமரைக்கூ
» ம. ரமேஷ் கவிதைகள்
» ம. ரமேஷ் கஸல் கவிதைகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|