தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு

View previous topic View next topic Go down

வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு Empty வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு

Post by முழுமுதலோன் Tue Oct 01, 2013 9:57 am

வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு

வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு ஆலயம் என்பது ஆண்டவன் திருவடியில் ஆன்மா லயிப்பதற்கும் உரிய இடம் என்று பொருள், மற்றும் 'ஆ' என்பது ஆணவ மலத்தையும், லயம் என்பது அடங்கியிருத்தலையும் குறிக்கும் .எனவே ஆணவ மலத்தையும் அடக்குமிடம் என்பதே ஆலயமாகும்.

இறைவனை கோவிலிலும் வழிபடலாம் ,வீட்டிலேயும் வழிபடலாம் . ஆனால் ஞானிகளால் நிறுவப்பட்ட ஆலயம் சென்று வழிபடும்போது பயன் அதிகமாகவும் , விரைவிலேயும் கிடைத்து விடும் .

பசுவின் உடம்பு முழுவதும் பால் வளம் நிரம்பி பரவி நிற்கிறது. பாலப் பெற விரும்புவோர், அதன் வாலையோ கொம்பையோ பிடித்து இழுத்தால், பால் கிடைப்பதில்லை. அதெற்கென படைக்கப்பட்ட பசு காம்பை வருடினால் மட்டுமே பால் கிடைக்கபெறும் .அதுபோலவே ஆலயங்களில் உள்ள தெய்வத்திரு உருவங்கள் பசுவின் மடியைப் போன்றவை .அங்கே போனதும் பக்தி உணர்வு சுரந்து விடும் .இறைவன்பால் மனம் ஒன்றிப் போக வழிபிறக்கும் .

கோயிலில் இறைவனை வழிப்பட்டால் வினைகள் வெந்து எரிந்து கருகி, நீராகி விடுவது போல் , மனம் நிம்மதி கொள்ள வாய்ப்புகள் உருவாகிவிடும் . கொடிய வெய்யிலில் ஒரு துணியைக் காய வைத்தால் , அத்துணி ஈரத்தையிழந்து காய்ந்து போகுமேயன்ரி எரிந்து விடாது .ஆனால் ஒரு குவியாடியை வெய்யிலில் வைத்து அதன் கீழ் குவிந்து வரும் சூரியக் கதிரில் துணியை வைத்தால் இப்போது துணியில் நெருப்பு தோன்றி முற்றிலுமாகக் கருகிச்
சாம்பலாகிவிடும் .நேர் சூட்டிற்கு இல்லாத சக்தி ,குவி ஆடியின் கீழேயுள்ள சூரிய வெயிலுக்கு உண்டு தானே.

பறந்து விரிந்து கிடைக்கின்ற கதிரவனுடைய கதிர்களின் வெப்பத்தை ஒருமுகபடுத்தி தன் கீழேயுள்ள இடத்திற்கு குவியாடி பாய்ச்சுகிறது .பிற இடங்களில் இறைவனை வழிபடுவதென்பது வெய்யிலில் துணியை உளற வைப்பது போன்றதாகும்.. ஆலயங்களில் ஆண்டவனை வழிபடுவதென்பது குவியாடி கொண்டு பாவங்களை பொசுக்குவது போலாகும். எனவே ,மற்ற எல்லா இடங்களிலும் இறைவனை வழிபட்டாலும் அலையை வழிபாடே மிக இன்றியமையாததாகும் .

விஞான ரீதியிலும் ஒரு கருத்து அழுத்தமாகவே தெரிவிக்கப்படுகின்றது .நன்றாக மின் சக்தியை ஏற்கக்கூடிய பொருட்கள் தான் பூஜை அறையில் பயன்படுத்தபடுகின்றது. வேப்பிலை, மாவிலை , துளசி, எழுமிச்சைபழம் போன்றவைகளுக்கு இந்த ஆற்றல் அதிகம். பிராண வாயு நமது ரத்தத்தில் ஹீமோக்ளோபின் பண்பாக கலப்பதற்கு இது உதவுகின்றது. கோயில்களில் -நகரங்களிலும் வெளியிலும் இருப்பதைவிட, பூஜை நடைபெறும் கர்ப்ப
கிரகத்தில் இந்த சக்தி அதிகமாகவே கிடைக்கிறது .

கடற்கரையிலும் ,மலை மீதும் உள்ள ஆலயங்களில் இந்த சக்தி இயற்கையாகவே நிரம்பக் கிடைக்கிறது . மலை அருவிகள் பொழியும் இடங்களிலும் இது நிறைந்துள்ளன .எனவே தான் பழனி,திருப்பரங்குன்றம், திருப்பதி ,பழனி,திருத்தணி போன்ற மலைகள் மீதும் , ராமேஸ்வரம் ,கன்யாகுமாரி ,திருச்செந்தூர் போன்ற கடற்கரையிலும் குற்றாலம் போன்ற அருவிகள் கொட்டும் இடங்களிலும் ஆலயங்கள் அமைக்கபட்டுள்ளன. இன்று நகரங்களில் உள்ள ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளில் இந்த சக்தி வாய்ந்த பண்பு கிடைப்பதில்லை .எனவே பக்தி பூர்வமாக சென்று வழிபடுவதுடன் ,உடல் நலம் பெறவும் இவ்வாலயங்கள் வாய்ப்பளிக்கின்றன .
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு Empty Re: வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு

Post by முழுமுதலோன் Tue Oct 01, 2013 9:58 am

ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்படும் எந்திரம் என்பது விஞான பூர்வமாக, அதிலிருந்து
மைண்டான், ஆல்பா போன்ற கதிர்கள் வெளி வருகின்றன என்ற செய்தி ,ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாகிறது. இதனால் அந்தத் தகட்டின் மேல் வைக்கப்பட்ட சிலையின் வழியாக , தகட்டிலிருந்து வரும் கதிர்கள் (நேர் மின்னோட்டம் உள்ள)நமது கண்களில் வழியாக சென்று உடலில் பாய்ந்து சங்கமமாகின்றது .

ஒலிக்கப்படும் மணியிலிருந்து வரும் அதிர்வு ,அணு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு அலைவரிசையைத் தோற்றுவிக்கும். நமது உடலும் உள்ளமும் ஆன்மாவும் அந்த அலைவரிசயினால் மீட்டப்பட்டு,மூளை ,இருதயம் ,செவிப்பறை ,முகுளம் போன்றவற்றிக்கு ஊட்டம் அளிக்கின்றது .பின்னர் எரியும் கற்பூரத்திலிருந்து வரும் வெளிச்சம் ,கண்ணின் ஆடிகளை அகல விரியச் செய்து அதனால் ஏற்படும் அதிர்வுகள் நரம்பு மண்டலத்தையே உறுதி செய்கின்றன.

எல்லாவற்றையும் விட,இன்றைய பரபரப்பான விஞான உலகில் ஆலய தரிசனம் என்பது அன்றாட நடவடிக்கை என்பது இல்லாது போயிற்று.ஆண்டவன் எங்கும் நிறைந்துள்ளான் என்பது உண்மை என்றாலும் , ஆலயத்தை அவனது இருப்பிடமாக கருதி வழிபடுவதில் ஒரு தனி சுகத்தையே நாம் காண்கின்றோம்.ஏனெனில் , அணைத்து இடங்களிலும், சூழ்நிலைகளிலும் மனதை ஒரு நிலைப்படுத்துவதென்பது இயலாத ஒன்றாகும்.ஆனால் ,ஆண்டவன் குடி கொண்டுள்ள இடம் ஆலயம் எனக் கருதி , அங்கே நுழையும் போதே மனம் ஒருவித நிலைப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. தவிர, ஆலயம் புனிதமான இடம் என்கிற
எண்ணம் நம்முடைய மனதில் உதயமாகி நிலைத்திருக்கின்ற போது , அங்கே நம் மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் தானாகவே உருவாகிவிடுகின்றன.
மேலாக ஆலயத்தின் மணியோசை அங்கு கமழும் தூப, தீப, நைவேத்யங்களின் வாசனை , இறைவன் மீதான பாமாலைகளின் ஒழி, அங்கு குழுமியுள்ள இதர மனிதர்களின் பக்திபரவச நிலை ஆகிய அனைத்தும் சேர்ந்து , நம்முடைய இதயங்களையும் வேறு திசைக்குத் திருப்பாமல்,பக்திப் பரவசத்தால் நிரப்பிவிடுகின்றன .இதனை நாம் அன்றாட வாழ்வில் நிச்சயமாக அனுபவிக்க இயலும் . உதாரணமாக ,ஒரு சில பக்தி விழாக்கள் ,பொதுமண்டபங்களில் நடைபெறும் போது , நம்மால் பரவசம் கொள்ளவியலாமல் தடுமாறி நிற்பதை நாம் நன்கு அறிவோம் .அதாவது ஆயுதபூஜை போன்ற விழாக்கள் அலுவலகங்களில் நடைபெறும் போது நம்மால் உள்ள பூர்வமாக அவற்றில் ஒன்றிபோய் ,பரவசம் கொள்வது கிடையாது.காரணம் ,அங்கே கொலுவீற்றிருப்பது அசல் ஆண்டவன் இல்லையென்ற நினைப்பு ஒருபுறம்,படையல் தானே என நினைவூட்டிகொண்டிருக்கின்றன .எனவே தான்,
வெளியில் பெறமுடியாத இறையுணர்வை ,பக்திப் பரவசத்தை ஆலயங்களில் பெற முடிவதால் , ஆலயதிற்குச் சென்று ஆண்டவனை வழிபடுவதே சாலச் சிறந்தது ஆகும் 

நன்றி ; என்ன இல்லை இந்து மதம்?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு Empty Re: வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு

Post by sawmya Tue Oct 01, 2013 12:14 pm

உண்மைதான். 
வாரம் ஒரு முறையாவது கோவிலுக்கு சென்று புத்துணர்ச்சி பெருவோம் என்ற வாரியாரின் வாக்கின்படி ஆலய தரிசனம் மேற்கொள்வோம்,
அன்றாடம் வீட்டிலும் தொழுவோம் இறைவன் அருளுடன் வாழ்வோம்!

தகவலுக்கு நன்றி!புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு Empty Re: வீட்டில் வழிபாடு செய்வதற்கும், ஆலய வழிபாட்டிற்கும் என்ன வேறுபாடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum