தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..! Empty ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!

Post by ஸ்ரீராம் Fri Oct 04, 2013 9:29 am

தகவல் தொழில்நுட்பம் அதிக வளர்ச்சிப்பெற்றபோதும் அதனுடைய பாதுகாப்பும் சில நேரங்களில் கேள்விக்குறியாகவே அமைந்துவிடுகிறது. பொதுவாக எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பாக இருந்தாலும், அதற்கு எதிர்மறைப் பலன்கள் உண்டு என்பதை மறுப்பதற்கு இயலாது.

பல்வேறு நிலைகளில் அதனுடைய பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. விலையுயர்ந்த கம்ப்யூட்டராக இருப்பினும் அதற்கு ஒரு ஆண்ட்டி வைரஸ் மென்பொருள் (Anti virus software)கட்டாயம் தேவைப்படுகிறது. இல்லையென்றால் என்ன விலை கொடுத்து வாங்கியிருந்தாலும் அதிலுள்ள கோப்புகளை நச்சு நிரல்கள் துவம்சம் செய்துவிடுகின்றன.

அதேபோன்றதொரு நிலைதான் தற்பொழுது பிரபலமாகிக்கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் நீடிக்கிறது என்பது கசப்பான உண்மை. விலையுயர்ந்த ஆண்ட்ராய்ட் மொபைல்களாக இருப்பினும் சரி.. விலையுயர்ந்த டேப்ளட் பி.சி. க்களாக இருப்பினும் சரி (Tablet pc, android tablet), எதுவாக இருப்பினும் வைரஸ் பாதிப்பு என்பது பொதுவானதே.

solutions-for-virus-affected-android-devices-like-tablet-pc-android-smartphone


ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் டேப்ளட் பி.சி. மற்றும் மொபைல் போன்களை பயன்படுத்துவோர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இந்த வைரஸ் ஆனது ஆண்ட்ராய்ட் 4.2.2 ஜெல்லிபீன் பதிப்பிற்கு முந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும் சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனை உறுதி செய்யும் முகமாக computer emergency response teamindia வின் அறிக்கை அமைந்துள்ளது. இந்தியாவில் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வைரசால் ஏற்படும் பாதிப்புகள்:
(Virus affections in android tablets, mobiles)
இந்த வைரசானது, தான் புகுந்த ஆண்ட்ராய்ட் சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ் மற்றும் தனி நபர் தகவல்களை திருடி அனுப்புகிறது. காரணம் Adroid System த்தில் உள்ள வழுக்கள் ஆகும். இந்த வழுக்களைப் பயன்படுத்தி வைரஸ் பரவுகிறது. ஆண்ட்ராய்ட் சாதனங்களில் உள்ள ஒவ்வொரு அப்ளிகேஷனிலும் இந்த வைரஸ் புகுந்து கெடுதல்களை விளைவிக்கின்றன. கெடுதல் விளைவிக்கும் பல குறியீடுகளை இந்த வைரசானது புகுத்துகிறது.

இதனால் அந்த அப்ளிகேஷன்களில் உள்ள ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை. ஒரிஜினல் அப்ளிகேஷன்கள் இயல்பாகவே இயங்கும். அப்ளிகேஷன்கள் அனைத்தும் இயல்பாக இயங்குவதால் இதிலுள்ள வைரசை பயனரால் கண்டறிய இயலாது.


மேலும் இவ்வைரசானது போனில் உள்ள அப்ளிகேஷனில் இருக்கும் கோப்பின் பெயரிலேயே டூப்ளிகேட் பைலை நிறுவுகிறது. இதனால் வேறேதேனும் சோதனையின்போதும் இத்தகைய கோப்புகள் கிடைப்பதில்லை.

இவ்வாறு தொடர்ந்து பயனாளர் வைரஸ் புகுந்த அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும்பொழுது அதில் குடியேறிய வைரசானது, அவரைப்பற்றிய தகவல்களை திருடி அனுப்பிவிடுகிறது.

வைரஸ் புரோகிராம் என்னென்ன தகவல்களைத் திருடும்?

(what kind of data theft virus from android device)
நீங்கள் பர்சனலாக அனுப்பும் SMS கள், மொபைல் எண்கள், தனிப்பட்ட அடையாள எண்கள், உங்கள் வங்கி கணக்கு விபரங்கள்...மேலும் நீங்கள் பெற்ற SMS தகவல்கள் (உங்களுக்கு பிறரால் அனுப்பபட்ட தகவல்கள்) இதுபோன்று முக்கியமான தகவல்களையும் திருடி விடும்.

தகவல் திருட்டுடன் மற்றொரு வேலையையும் இது சத்தமில்லாமல் செய்கிறது. போன் பயன்படுத்துபவர்களுக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளை மேற்கொள்கிறது. தனிப்பட்ட தகவல்களையும் அனுப்புகிறது.

இந்த வைரஸ் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
(Remedy for virus problem in android devices)
எந்த பிரச்னைக்கும் கட்டாயம் ஒரு தீர்வு இருக்கும். முதலில் வருமுன் காப்பது. இந்த பார்முலாவைப் பயன்படுத்தி முடிந்த அளவிற்கு உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனங்களில் வைரஸ் புகுவதை பெருமளவு தடுத்துவிடலாம்.

இலவசமாக கிடைக்கிறது என்பதற்காகவும், ஆசையின் காரணமாகவும் பாதுகாப்பில்லாத தளங்களிலிருந்து கிடைக்கும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்களை தரவிறக்கம் செய்வதை நிறுத்த வேண்டும்.

ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கென்றே நல்ல தரமுள்ள பாதுகாப்பான அப்ளிகேஷன்களை வழங்கும் தளங்கள் உள்ளன.

உதாரணமாக சொல்வதெனில் கூகிள் பிளே ஸ்டோர். இதுபோன்ற தளங்கள் அந்த அப்ளிகேஷன்களை வெளியிடுவதற்கு முன்பே அது தரமானதுதானா? வழுக்கள் ஏதும் இருக்கிறதா? வைரஸ் பாதிப்பு இதனால் ஏற்படுமா? என்றெல்லாம் சோதனைச் செய்தபிறகே தளத்தில் தரவிறக்கம் செய்யும் வசதியைக் கொடுக்கிறது.

இதுபோன்று வேறு சில தளங்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம்.

வைரஸ் வந்த பிறகு என்ன செய்யலாம்?

அந்த வகையில் ஆண்ட்ராய்ட் சாதனங்களைப் பாதிக்கும் இந்த வைரஸ்களை நீக்க தரமான ஆண்ட்ராய்ட் சாதனங்களுக்கான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்களை பயன்படுத்தலாம். இந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பயன்படுத்து உங்களுடைய ஆண்ட்ராய்ட் சாதனத்தை முழுமையாக ஸ்கேன் செய்யவும். வைரஸ் பாதிப்பு ஏதேனும் இருப்பின் அவற்றை கண்டறிந்து அழித்துவிடும்.

முக்கியமாக எந்தவொரு தளத்திலிருந்து நீங்கள் டவுன்லோட் செய்யும் அப்ளிகேஷனின் நம்பகத்தன்மையை, பாதுகாப்பை நன்றாக படித்துணர்ந்து அதற்குப் பிறகு டவுன்லோட் செய்து பயன்படுத்துவதே புத்திசாலித்தனம்.

ஆண்ட்ராய்ட் போன்களுக்கென இலவசமாகவும் ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்கள் கிடைக்கின்றன. இலவச மென்பொருளை விடவும் கட்டண மென்பொருளே சிறந்தது. கூகிள் Anti virus for Android Device என தேடுங்கள். கிடைக்கும் முடிவுகளில் உங்களுக்குத் தேவையான, சரியான ஆண்ட்டி வைரஸைக் கண்டறிந்து அவற்றை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆண்ட்ராய் சாதனங்களுக்கான மிகச்சிறந்த ஆண்ட்டி வைரஸ் மென்பொருள்களைப் பற்றி அடுத்த பதிவில் தெரிந்துகொள்வோம்.

நன்றி: தங்கம்பழனி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..! Empty Re: ஆண்ட்ராய்ட் போனில் வைரஸ் - எச்சரிக்கை..!

Post by mohaideen Fri Oct 04, 2013 1:17 pm

அவசியமான தகவல்

பதிவிற்கு நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum