Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம் : - ஜீனியர் விகடன்
Page 1 of 1 • Share
மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம் : - ஜீனியர் விகடன்
மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம் : - ஜீனியர் விகடன்
இந்தியாவை நோக்கி இலங்கை அதிபர் ராஜ பக்ஷே ஓடிவருவது, ஐ.நா-வில் மீண்டும் வரப்போகும் விவகாரத்தால்தான் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது!
கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.நா-வின் 20-வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஜெனீவாவில் வெற்றி அடைந்தது. இதை அடுத்து இந்தத் தீர்மானத்தின்படி, இலங்கை அரசு மனித உரிமைகள் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது, ஐ.நா-வின் 22-வது ஜெனீவா கூட்டத் தொடரின்போது ஆராயப்படும். அதற்கு முன், 21-வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 28 வரை நடக்கவுள்ளது.
இதே நாட்களில், அதாவது செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை மட்டக்களப்பில் 'நீர்க்காகம் 3, 2012� என்ற இலங்கை ராணுவத்தின் போர்ப்பயிற்சி, வெளி நாட்டுப் படைகளுடன் நடக்கவுள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு போன்ற நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இது மறைமுகமாக ஐ.நா-வுக்கு இலங்கை கொடுக்கும் நெருக்கடி என்கிறார்கள். செப்டம்பர் 22-ம் தேதி ஜெனீவாவில் இலங்கை பற்றிய மனித உரிமை விவகாரங்கள் விவாதிக்கப்பட இருக்கும் நிலையில், செப்டம்பர் 21-ம் தேதி ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதற்கான மறைமுகக் காரணமே இதுதானோ என்று சந்தேகிக்க வைக்கிறது.
ஏனென்றால் இந்தக் கூட்டத் தொடரில், மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கும் சில நாடுகளின் உள்நாட்டு மனித உரிமைப் பிரச்னைகள், மேம்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப் படும். இந்தமுறை ஆய்வுக்கான நாடுகளில் இலங்கையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வு தொடர்பாக ஏற்கெனவே 400 பக்க அறிக்கையை இலங்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்து தேவையான முடிவு எடுக்கும் பொறுப்பை, இந்தியா (ஆசியா), ஸ்பெயின் (ஐரோப்பியா), பெனின் (ஆப்பிரிக்கா) ஆகிய மூன்று நாடுகளிடம் ஒப்படைத்துள்ளது ஐ.நா. சபை. இந்த மூன்று நாடுகளுமே கடந்த முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்.
இதுதொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடகத்துறை அமைச்சர் சிவ குருநாதன் சுதர்சனிடம் பேசியபோது, "இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மனிதஉரிமை மீறல் குற்றங்கள் நடக்கின்றன என்ற நிலைப் பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். இதை, ஐ.நா சபையில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். தெற்காசியப் பிராந்திய விவகாரங்களில் இந்தியாகொண்டுள்ள முக்கியப் பாத்திரம் என்பதற்கு அப்பால், இலங்கைத் தீவுக்கு மிகநெருக்கமாக உள்ள நாடு என்ற அடிப்படையிலும், அங்கு காலம், காலமாக சிங்கள அரசுகளால் தமிழர்கள் சந்தித்துவரும் அவலங்கள் குறித்து அக்கறைகொள்ள வேண்டியதும் இந்தியாவின் கடமை" என்றார்.
முடிவு எடுக்கும் நாடுகளாக ஸ்பெயின், பெனின் போன்றவை இருந்தாலும் இந்தியாவின் நிலையைக் கொண்டே இலங்கை மீதான இந்த நாடுகளின் தீர்ப்பு அமையும் என்கிறார்கள் மனித உரிமை நோக்கர்கள். இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு வந்து அதன் ஆட்சியாளர்களைச் சந்திப்பது நல்லது என்று ராஜபக்ஷே முடிவுசெய்தார். அதற்காகவே சில விழாக்கள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மாமன்னர் அசோகரின் மகள் சங்கமித்திரை புத்த மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கை சென்றதை நினைவுகூரும் ஓவியத்தை டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்துப் பேசிய போது, 'செப்டம்பர் 21-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு ராஜபக்ஷே வருகிறார்� என்ற தகவலைத் தெரிவித்தார். புத்தர் ஞானம் பெற்றதன் 2600-வது ஆண்டு விழாவை முன்னிட்டு புத்தமதம் தொடர்பான கல்வி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக ராஜபக்ஷே வருவதாகக் கூறினார்.
இது, தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 'சாஞ்சிக்கு வரும் ராஜபக்ஷேவை அங்கேயே வந்து மறிப்போம்� என்று, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். செப்டம்பர் 17-ம் தேதி அண்ணா நினைவிடத்தில் இருந்து இவர்கள் பேருந்தில் கிளம்புகிறார்கள். ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜை எதிர்த்து, தொல். திருமாவளவன் பேனர் பிடித்தபடி நின்றார். இந்தக் காட்சிகள் பி.ஜே.பி.க்கு சிக்கலை ஏற்படுத்தியது. 'மத்தியப் பிரதேச அரசாங்கம்தான் ராஜபக்ஷேவை அழைத்து வருகிறது� என்று சமாதானம் சொன்னார் சுஷ்மா. ஆனாலும், கொந்தளிப்பு அடங்கவில்லை. வைகோவிடம் பேச சுஷ்மா முயற்சிக்க, வைகோ அவரிடம் பேச விரும்பவில்லை.
இதுகுறித்துப் பேசிய தமிழக பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ''ராஜபக்ஷேவை இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் அழைக்கக் கூடாது என்பதுதான் தமிழக பி.ஜே.பி-யின் கருத்து. நான் சுஷ்மா ஸ்வராஜிடம் இதுகுறித்துப் பேசியபோது, 'ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருகை தருவது மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்தான். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், எப்படி ஒரு நாட்டின் அதிபரை அழைத்து வர முடியும்� என்று கேள்வி எழுப்புகிறார். அதனால் இது காங்கிரஸ் கட்சியின் அழைப்புதான். இதை எதிர்த்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதையும் கண்டனம் தெரிவிப்பதையும் விட்டுவிட்டு, தி.மு.க. தன் ஆதரவைத் திரும்பப் பெறலாமே?" என்றார்.
இந்தியாவை சமாதானப்படுத்துவதற்காக ராஜபக்ஷே வருவதே, இந்தியாவில் பிரச்னை ஆகி விட்டது!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம் : - ஜீனியர் விகடன்
பகிர்விற்கு நன்றி அண்ணா
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம் : - ஜீனியர் விகடன்
பகிர்வுக்கு நன்றி செந்தில்
Re: மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம் : - ஜீனியர் விகடன்
இவரை சொற்ப லண்டன் தமிழர்கள் ஓட ஓட விரட்டினார்கள், நாம் இவ்வளவு பேர்கள் இருந்து என்ன செய்ய முடியுது.?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம் : - ஜீனியர் விகடன்
இவரைப்போன்ற பில்லுருவிகள் தழைக்க நம்மிடையே ஒற்றுமை இல்லாதது தான் காரணம் சங்கர்கௌரிசங்கர் wrote:இவரை சொற்ப லண்டன் தமிழர்கள் ஓட ஓட விரட்டினார்கள், நாம் இவ்வளவு பேர்கள் இருந்து என்ன செய்ய முடியுது.?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» ஆழ்வார்குறிச்சி : இந்தியாவிற்கு ராஜபக்ஷே வருகை தந்ததை கண்டித்து
» நன்றி இறைவா இந்த நாளை இனிமையக்கியதற்கு ... சந்திப்போம் மீண்டும் வரும் பொழுதில்
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» இந்திய- இலங்கை ஒத்துழைப்புக்கு 'சிறிய பிரதேசம்' (தமிழகம்) சவால் விட முடியாது: இலங்கை
» உணவு நல்லது வேண்டும் - டாக்டர் விகடன்
» நன்றி இறைவா இந்த நாளை இனிமையக்கியதற்கு ... சந்திப்போம் மீண்டும் வரும் பொழுதில்
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
» இந்திய- இலங்கை ஒத்துழைப்புக்கு 'சிறிய பிரதேசம்' (தமிழகம்) சவால் விட முடியாது: இலங்கை
» உணவு நல்லது வேண்டும் - டாக்டர் விகடன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum