தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

View previous topic View next topic Go down

ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள் Empty ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

Post by முரளிராஜா Mon Oct 07, 2013 7:07 am

முகப்பு » உடல்நலம்உணவுபொது
ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

ஆர்.கோபால் 


ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள் Readymadefoods-300x300முடிந்தவரையில் எப்போதும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படாத உணவுகளை சாப்பிடுவதே உடலுக்கு நலமானது. ஆயினும், நேரம் கிடைக்காதபோது அவசரத்துக்கு பாக்கெட்டுகளில் விற்கும் உணவுகளை சாப்பிடவேண்டிய நிலைக்கு வருகிறோம். உதாரணமாக, இரண்டு நிமிட நூடூல்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், சோடா, பழரச பானங்கள், சாக்கலேட் போன்று தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உண்பதற்கு தயாராக விற்பனை செய்யப்படும் உணவுவகைகளை கூறலாம்.
அதிகரித்து வரும் தொழில்மயத்தில் இவ்வாறு உணவுவகைகளும் தொழில்மயப்பட்டு நமது ஒவ்வொரு வேளை உணவிலும் இப்படிப்பட்ட தயார் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது என்பது சிரமமாகவே ஆகிவருகிறது. இப்படி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இப்படிப்பட்ட உணவு வகைகளில் சில பயங்கரமானவை, அதி ஆபத்தானவை. இப்படிப் பட்ட ஆபத்தான உணவுகளை குறைப்பது அல்ல, முற்றிலுமாகவே தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்த தொழிற்சாலை உணவுகளில் என்ன இருக்கிறது எனப்தும், அவற்றில் என்ன சேர்த்தாலும் அவற்றை பிரசுரிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு முழுக்க முழுக்க அனைத்து பொருட்களையும் அட்டையில் போடுவதில்லை என்பதே உண்மை.
இதில் சேர்த்திருக்கப்படும் பொருட்களை உங்களது பாட்டி அடையாளம் கண்டுகொள்வாரா என்று கேட்டுப்பாருங்கள். அப்படி உங்களது பாட்டியால் அடையாளம் காணமுடியவில்லை என்றால், அது ஒரு செயற்கையான உணவு, அல்லது மனிதன் உருவாக்கிய வேதிப்பொருள் என்று கண்டுகொள்ளலாம். அதில் இருக்கும் பொருட்களை அடையாளம் கண்டுகொள்ள உங்களுக்கு ஒரு பிஹெச்டி படிப்பு
வேண்டுமெனில், அந்த பொருளைத் தவிர்ப்பதே சிறந்த வழி.
கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பொருட்கள் பல்வேறு ரெடி உணவு வகைகளில் சேர்க்கப் படுகின்றன. அவை கெட்டுப் போகாமலிருப்பதற்காகவும், அவற்றிற்கு கவர்ச்சிகரமான வண்ணம் கொடுக்கவும், அவற்றிற்கு சுவையை அதிகரிக்கவும், அவற்றிற்கு மணம் கொடுக்கவும் சேர்க்கப்படும் இப்படிப்பட்ட செயற்கைப் பொருட்கள் உடலுக்கு தீங்கிழைக்கின்றன.
கீழே இருக்கும் பொருட்கள் முற்று முடிவானவை அல்ல. அவை ஒரு சாம்பிள் மட்டுமே.
சேர்க்கப்படும் பொருள்: செயற்கை வண்ணங்கள், இவை நிலக்கரி கழிவிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
எதற்காக சேர்க்கப்படுகிறது: உணவுப்பொருட்களுக்கு ஆழ்ந்த கவர்ச்சிகரமான வண்ணம் கொடுப்பதற்காக உபயோகப் படுத்தப் படுகின்றன.
ஏன் தீமை?: இவை மனித உடலில் பல ஒவ்வாமை (allergy)களை தோற்றுவிக்கின்றன. ஆஸ்த்மா, களைப்பு, தோல் வியாதிகள், தலைவலி, hyperactivity என்னும் அமைதியற்ற தன்மை.
மேலதிக தகவல்கள்: yellow#2, red#1 என்றுதான் இந்த வண்ணங்கள் அழைக்கபப்டும். இவற்றில் என்ன இருக்கிறது என்பதை உணவு தொழிற்சாலைகளில் உழைப்பவர்கள் கூட அறியமாட்டார்கள். இவைகள் என்னனென்ன, அவற்றின் மூலம் வரும் தீங்குகள் என்ன என்பதை பற்றிய கோப்பு இங்கே காணலாம்.

சேர்க்கப்படும் பொருள்:
 செயற்கை மணங்கள்
எதற்காக சேர்க்கப்படுகிறது: உணவுப்பொருட்களுக்கு மூக்கை துளைக்கும் சாப்பாட்டு மணத்தை கொடுக்க
ஏன் தீமை?: இவையும் மனித உடலில் பல ஒவ்வாமைகளை (அலர்ஜி) தோற்றுவிக்கின்றன. தோல்சொறி, எக்ஸீமா, hyperactivity என்னும் அமைதியற்ற தன்மை உருவாகிறது. இவை உடலில் இருக்கும் என்சைம்களையும் ஆர்.என்.ஏ(RNA), தைராய்டு சுரப்பி ஆகியவற்றையும் பாதிக்கின்றன
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.


ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள் Readymade-food_ingredients-300x89
[color][font]

சேர்க்கப்படும் பொருள்: செயற்கை இனிப்பு, அதாவது செயற்கை சர்க்கரை (Acesulfame-K, Aspartame, Equal®, NutraSweet®,  Saccharin, Sweet’n Low®, Sucralose, Splenda® & Sorbitol), இவை செயற்கையாக உருவாக்கப்பட்ட, கலோரி தராத இனிப்புகள்.
எதற்காக சேர்க்கப்படுகிறது: டயட் (diet) உணவு வகைகளில் இனிப்பும் குறையக்கூடாது, அதே நேரம் கலோரியும் குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக இவை சேர்க்கப்படுகின்றன.
ஏன் தீமை?: இவற்றில் பல செயற்கை சர்க்கரைகள், புற்றுநோய், தலைசுற்றல், மனப்பிராந்தி, தலைவலி கொடுப்பதாக ஆராய்ச்சிகளில் தெரியவருகிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.

சேர்க்கப்படும் பொருள்:
 பென்சோயேட் தடுப்பான்கள் – Benzoate Preservatives (BHT, BHA, TBHQ)
எதற்காக சேர்க்கப்படுகிறது: கொழுப்புகள், எண்ணெய்கள், ஆகியவை கெட்டுப்போகாமல் இருக்க (அல்லது பழைய எண்ணெய் வாடை வீசாமல் இருக்க) இவை சேர்க்கப்படுகின்றன.
ஏன் தீமை?: ஆஸ்த்மா, rhinitis, dermatitis, கட்டிகள்,urticaria ஆகியவை தோன்றலாம். இதுவும் ஹைப்பர் ஆக்டிவிடி என்னும் அமைதியற்ற தன்மையை உருவாக்குகிறது. இது மனித உடலில் உள்ள எஸ்ட்ரோஜன் சமன்பாட்டை குலைக்கிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.

சேர்க்கப்படும் பொருள்: 
புரோமினேட்டட் தாவர எண்ணெய் – Brominated Vegetable Oil – BVO.
எதற்காக சேர்க்கப்படுகிறது: ஆரஞ்சுச் சாறு, சோடா, குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது அவற்றின் ருசியை அதிகரிக்கிறது.
ஏன் தீமை?: இது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகள், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது ஈரல், விதைப்பைகள், தைராய்டு சுரப்பி, இதயம், கிட்னி ஆகியவற்றை பாதிக்கிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.

சேர்க்கப்படும் பொருள்:
 ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் – High Fructose Corn Syrup
எதற்காக சேர்க்கப்படுகிறது: கரும்பு சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப் படுகிறது. இது எளிதில்
குளிர்பானங்களுடன் கலந்து இனிப்பு சுவையை அதிகரிக்கிறது.
ஏன் தீமை?: இது உடலில் உள்ள ப்ரக்டோஸ் fructose கொழுப்பாக ஆவதை அதிகரிக்கிறது. இது நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் அதிகரிக்க காரணமாகிறது. இது எளிதில் ஈரலால் செரிக்கப் படுவதில்லை.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.

சேர்க்கப்படும் பொருள்:
 அஜினோமோடோ – Monosodium Glutamate எனப்படும் MSG
எதற்காக சேர்க்கப்படுகிறது: உருளைக்கிழங்கு சிப்ஸ், ரெஸ்டாரண்ட் சாப்பாடு, சூப்கள் மற்றும் ஏராளமான உணவுகளில் இது ருசியை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது
ஏன் தீமை?: பசியை அதிகரிக்கிறது. தலைவலி, நெஞ்செரிச்சல், தலைசுற்று, பலவீனம், மூச்சு வாங்குதல், வீக்கம், இதயத்துடிப்பில் மாற்றம், மூச்சுவிட கஷ்டம் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
சேர்க்கப்படும் பொருள்: ஓலெஸ்ட்ரா – Olestra. இது செரிக்கமுடியாத செயற்கை கொழுப்பு.
எதற்காக சேர்க்கப்படுகிறது: இது உருளைக்கிழங்கு சிப்ஸ், போன்றவற்றை வறுக்கவும், கொழுப்புக்கு பதிலாக பேக்கிங்கில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் கொழுப்பு சத்தே இல்லை என்பதால், கொழுப்பு சத்து குறைவாக உள்ளதாக உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை விளம்பரம் செய்யமுடிகிறது
ஏன் தீமை?: இது பல உணவுச்சத்துக்களை நம்மால் செரிக்க முடியாமல் ஆக்குகிறது. இது
வயிற்றுக்குழாய் வியாதிகள், வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, ரத்தம் போகுதல் ஆகியவற்றை கொடுப்பதாக அறியப்படுகிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள் Maggi-masala_1_1thumbnailசேர்க்கப்படும் பொருள்: டால்டா, மார்கரைன்
எதற்காக சேர்க்கப்படுகிறது: வெண்ணெய்க்கு பதிலாக இது விலைகுறைந்த மாற்றாக உபயோகப் படுத்தப் படுகிறது.இது தொழிற்சாலைகளில் தாவர எண்ணெய்களை மிக அதிகமான வெப்பத்தில் நீராவியோடு கலந்து வேதிவினையின் பின்னர் உருவாக்கப்படுகிறது.
ஏன் தீமை?:இவை transfat என்று அழைக்கப்படுகின்றன.இவை மனித உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும், இதய நோய் அதிகரிப்பதற்கும், மாரடைப்புக்கும் முக்கியமான ஒரு காரணியாக சொல்லப்படுகிறது.
மேலதிக தகவல்கள்: இங்கே காணலாம்.
நீங்கள் சாப்பிடும் பொருட்களை பரிசோதித்து பாருங்கள். அவற்றில் மேற்கண்ட பொருட்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். 

நன்றி தமிழ் ஹிந்து 
மற்றும்  - ஆர்.கோபால் [/font][/color]
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள் Empty Re: ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

Post by நண்பன் Thu Oct 10, 2013 11:07 am

ஆபத்துன்னு தெரிந்தும் சில சமயம் சாப்பிடத்தானே வேண்டியிருக்கு
நண்பன்
நண்பன்
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 567

Back to top Go down

ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள் Empty Re: ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

Post by sawmya Thu Oct 10, 2013 11:21 am

ம்.ம்.ம்.பயமா இருக்கு 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள் Empty Re: ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

Post by kanmani singh Thu Oct 10, 2013 11:47 am

முழித்தல் முழித்தல் முழித்தல் 

kanmani sing
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள் Empty Re: ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum