Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சின்ன சிரிப்பு கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
சின்ன சிரிப்பு கதைகள்
வயதான மனிதன் ஒருவன்,காலையிலிருந்து மாலை வரை கஷ்டப்பட்டு விறகு வெட்டி அதைக் கட்டித் தூக்க முயலும் போது,முடியவில்லை.நொந்து போய்,''இந்த நிலையிலும் நான் உயிரோடிருக்க வேண்டுமா?எமதர்மனே!இப்போதே என் உயிரைக் கொண்டு போகக் கூடாதா?எமதர்மா!எமதர்மா,''என்று கத்தினான்.
உடனே அவன் முன் எமதர்மன் தோன்றி,' அப்பனே,என்னை நீ அழைத்த காரணம் என்ன?'என்று கேட்டான் .
திடுக்கிட்ட வயதான அந்த விறகு வெட்டி,''ஒன்றுமில்லை,இந்த விறகுக் கட்டைத் தூக்கிவிட இங்கு யாரும் இல்லை.அதனால் தான் உன்னை அழைத்தேன்,''என்றாராம்
நன்றி முகநூல்

Re: சின்ன சிரிப்பு கதைகள்
ஒரு முறை சிவனும் பார்வதியும் வானத்தில் உலா வந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு குளக்கரையில் ஒரு கொக்கு ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.
உடனே பார்வதி சிவனிடம்,''இந்தக் கொக்கு ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?''என்று கேட்டார்.
சிவன்,''கொக்கே,உனக்கு என்ன வேண்டும்?சொர்க்கத்திற்கு வருகிறாயா?''என்று கொக்கிடம் கேட்டார்.
'சொர்க்கத்தில் அயிரை மீன் கிடைக்குமா?'என்று கேட்டது கொக்கு.கிடைக்காது என்றார் சிவன்.'
அப்போ,சொர்க்கத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.
எங்கே அயிரை மீன் கிடைக்கிறதோ,அதுவே எனக்கு சொர்க்கம்.'என்றது கொக்கு.
எங்கே நமக்கு நிம்மதி கிடைக்கிறதோ,அதுவே நமக்கு சொர்க்கம்.

காட்டுவழி சென்ற ஆசிரியர் ஒருவரை பிடித்துக் கொண்டனர் கொள்ளைக் கூட்டத்தினர்.அவர் கணித ஆசிரியர் என்று தெரிந்து கொண்டஅக்கூட்டத்தின் தலைவன் ஆசிரியருக்கு ஒரு சோதனைவைத்தான்.
தன கையில் இருக்கும் பூசணிக்காயின் எடையை அவர் சரியாகக் கூறினால் விடுதலை என்றும்,சரி பார்க்கையில் தவறாக இருந்தால் தலையை எடுத்து விடுவதாகவும் கூறினான்.
ஆசிரியர் சொன்னார்,''பூசணிக்காய் உன் தலையின் எடையளவு இருக்கும்'' என்று கூறினார்.
எப்படி சரி பார்ப்பது?'நீங்கள் சொன்ன விடை சரிதான்,'என்று கூறி விடுதலை செய்தான்.
நன்றி ;முகநூல்

ஒரு நாள் காலை ஒருவன் மிகப் பதற்றத்துடன் ஒரு டாக்டரிடம் வந்தான்.''டாக்டர்,இன்று காலை தெரியாமல் ஒரு குதிரையை விழுங்கி விட்டேன்.''டாக்டர் கேட்டார்,''என்னப்பா இது,யாராவது குதிரையை விழுங்கு வார்களா ?ஈயை வேண்டுமானால் விழுங்கி இருப்பாய்.''
''என்ன டாக்டர்,குதிரைக்கும் ஈக்கும் வித்தியாசம் தெரியாதவனா நான் குதிரை வயிற்றில் இருந்து கொண்டுஉதைக்குது. ஏதாவது உடனே செய்யுங்கள்.'' என்றான் வந்தவன்.
மனோதத்துவ ரீதியில் தான் இவரைக் குணப்படுத்த வேண்டும் என முடிவு செய்த டாக்டர் ,உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று மயக்க மருந்து கொடுத்தார்.
தன உதவியாளரைக் கூப்பிட்டு,பக்கத்திலுள்ள குதிரை பயிற்சி நிலையத்திலிருந்து ஒரு குதிரையை வாடகைக்கு எடுத்து வந்து நோயாளி இருந்த அறை ஜன்னலுக்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் கட்ட ஏற்பாடு செய்தார்.மயக்கம் தெளிந்து அவன் எழுந்த போது, டாக்டர்,''இதோ, இந்த குதிரை தான் உன் வயிற்றில் இருந்தது. அதை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்து விட்டேன்.இப்போது உனக்கு திருப்தியா?''என்று கேட்டார்.
''ஐயையோ டாகடர்.இக்குதிரை பழுப்பு நிறத்தில் அல்லவா இருக்கிறது?நான் விழுங்கிய குதிரை வெள்ளை நிறம்.''என்றான்.டாக்டர் மயங்கி விழுந்தார்.

சிஷ்யா…ஆசிரமத்துக்கு வர்ற பக்தர்கள்கிட்ட அவங்க பர்ஸையெல்லாம்
என் கண்ணுக்கு மறைவா வைக்கச் சொல்லு…!
ஏன் குருவே?
பழைய தொழில் ஞாபகத்துல கை தன்னால போகுது…!
நன்றி முக நூல்
என் கண்ணுக்கு மறைவா வைக்கச் சொல்லு…!
ஏன் குருவே?
பழைய தொழில் ஞாபகத்துல கை தன்னால போகுது…!
நன்றி முக நூல்
Re: சின்ன சிரிப்பு கதைகள்
ஒரு விமானம் ஏதோ கோளாறினால் பக்க வாட்டில் அசைந்து பறந்து கொண்டிருந்தது. அதன் விமானி பணிப் பெண்ணிடம் பயணிகள் படப் படுவார்கள். அதனால் ஏதாவது ஹாட் ட்ரிங்க்ஸ் எல்லோருக்கும் கொடு என்றார்.
பணிப் பெண் பயணிகளிடம் உங்களுக்கு என்ன ட்ரிங்க்ஸ் வேண்டும் என்று கேட்டாள்.
பயணிகள் : நீங்க எதைக் குடித்து விட்டு இப்படி பக்க வாட்டில் ஆடுகிறீர்களோ அதையே கொடுங்கள்.
நன்றி முகநூல்
பணிப் பெண் பயணிகளிடம் உங்களுக்கு என்ன ட்ரிங்க்ஸ் வேண்டும் என்று கேட்டாள்.
பயணிகள் : நீங்க எதைக் குடித்து விட்டு இப்படி பக்க வாட்டில் ஆடுகிறீர்களோ அதையே கொடுங்கள்.
நன்றி முகநூல்
Re: சின்ன சிரிப்பு கதைகள்
இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான்.
அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான்.
இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன??
யமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும்.
இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்??
யமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவன்: அப்படியானால் எங்கள் நாட்டு அரசியல்வாதிகளின் கடிகாரங்கள் எங்கே தொங்கவிடப்பட்டுள்ளன??
யமன்: ஓ அவையா..!! அவை எங்கள் அலுவலகங்களில் மின்விசிறிகளுக்கு பதிலாக தொங்கவிடப்பட்டுள்ளன.
நன்றி -முகநூல்

பயம்.. எப்பொழுது வரும்..? (குட்டிப் பேய் கதை)
ஓர் ஊரில் ஒரு குடியானவன் தன் மனைவி மகனுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் தன் மனைவியின் மேல் கொள்ளைப் பிரியம். அவளை அதிகமாக நேசித்தான்.
இப்படி சந்தோஷமாக இருக்கும் பொழுது அவன் மனைவியை ஒரு பாம்பு கடிக்க அவள் இறந்துவிட்டாள்.
இந்த நிகழ்ச்சியை அந்த மனிதனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அளவிற்கு அதிகமாக உருண்டு பிரண்டு அழுதான். ஊர் மக்கள், தன் மனைவியைச் சுடுகாட்டிற்கு கொண்டு சென்று எரிக்க வேண்டும் என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மேலும் அழுதான்.
அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
ஆனால் வேறு வழியில்லாமல் அவனைச் சமாதானப்படுத்திச் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று அந்தப் பிணத்தை எரித்தார்கள். அவனால் தாள முடியாமல் அங்கேயே உருண்டு பிரண்டும் கத்தி அழுதான். சரி இவன் அழுது அழுது தன்னைத் தானே சமாதானமாக்கிக் கொள்ளட்டும் என்று அவனை அங்கேயே விட்டுவிட்டு ஊர் மக்கள் சென்று விட்டார்கள்.
மனிதன் தன்னைத் தானே சமாதானம் செய்துக் கொண்டால் தான் முழு ஆறுதல் அடைந்த திருப்தி பெறுவான்.
அவனும் அன்று இரவெல்லாம் அந்தச் சுடுகாட்டில் கத்தி அழுது கொண்டிருந்தான். அவன் அழுது கொண்டிருந்த இடத்தில் ஒரு மரம் இருந்தது. அதில் ஓர் அம்மா பேயும் ஒரு குட்டிப் பேயும் இருந்தது. இந்த மனிதன் கத்தி அழுதுக்கொண்டே இருந்ததால் அந்தக் குட்டிப் பேயிற்கு தூக்கம் வரவில்லை.
அதனால் அது கோபமாகத் தன் தாயிடம் “அம்மா... அந்த ஆள் அழுவதால் எனக்குத் தூக்கம் வரவில்லை. நீ போய் அவனை பயமுறுத்தி துரத்திவிட்டு வா....“ என்று சொன்னது.
அதற்கு அம்மா பேய்.... “வேண்டாம். அந்த மனிதன் இப்பொழுது அதிக கவலையில் இருக்கிறான். இந்த நேரத்தில் அவன் கவலை மட்டும் தான் அவனுக்குப் பெரியதாகத் தெரியும். இந்த நேரத்தில் நாம் போய் பயமுறுத்தினாலும் அவன் பயப்பட மாட்டான்“ என்றது.
இந்தக் கூற்றை குட்டிப்பேய் ஏற்க வில்லை. “எவ்வளவு பெரிய மனிதனானாலும் நிச்சயம் ஒரு பேயிக்கு பயந்து தான் போவான். நான் போய் அவனைத் துரத்துகிறேன் “ என்று சொல்லிவிட்டு அவன் எதிரில் வந்து நின்று அவனைப் பயமுறுத்தியது. பலவித பயங்கர சத்தங்களைக் கொடுத்தது. அங்கிருந்த மண் மற்றும் மர இலைகளை அவன் மேல் விழுமாறு செய்தது. மரத்தைப் பயங்கரமாக உலுக்கி அவனைப் பயமுறுத்தப் பார்த்தது.
உம்ம்ம்... ஒன்றிர்க்கும் அவன் பயப்படவில்லை. அவன் தன் கவலையை நினைத்தே அழுது கொண்டிருந்தான். குட்டி பேயிக்கே சலிப்பு வந்து அவனை விட்டுவிட்டு திரும்பி வந்து பேசாமல் இருந்து விட்டது.
இப்பொழுது கொஞ்ச காலம் ஓடிவிட்டது. இந்தக் குடியானவன் தன் ஊர் மக்கள் சொன்னார்கள் என்று தன் மகனைக் காரணம் காட்டி இன்னொறு பெண்ணை மணந்து கொண்டு புதுப் பெண்ணுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தான்.
ஒரு நாள் வியாபாரத்திற்காக அந்தச் சுடுகாடு தாண்டிப் போக வேண்டியிருந்ததால் அப்பக்கமாகப் போய் கொண்டு இருந்தான். அவனை அந்தக் குட்டி பேய் பார்த்துவிட்டு தன் அம்மாவிடம்... “தன் வாழ்நாளிலேயே தான் பார்த்தத் தைரியசாளி இவன் தான்“ என்றது.
அதற்கு அம்மா பேய்... “அவன் தைரியசாளி கிடையாது. வேண்டுமானால் இப்பொழுது அவன் எதிரில் நீ போய் சும்மா நின்று பார்“ என்றது.
குட்டிப்பேயும் உடனே அந்தக் குடியானவன் முன் சும்மா வந்து நின்று சிரித்தது. அந்தக் குட்டிப்பேயைப் பார்த்தது தான் தாமதம். அந்தக் குடியானவன் பயந்து வாய் உலறி நடுங்கிப் போய் தலைதெரிக்க ஓடி போனான்.
குட்டிப் பேய் அம்மாவிடம் வந்து... “அன்றைக்கு தான் முழ பலங்கொண்டு பயமுறுத்தியும் பயப்படாதவன் இன்று நான் சாதாரணமாக எதிரில் போய் நின்றதும் பயந்து ஓடியது ஏன்..?“ என்று கேட்டது.
இதற்கு அம்மா பேய், “மனிதன் சந்தோஷமாக இருக்கும் பொழுது தனக்கு ஏதாவது துன்பம் வந்து விடுமோ என்ற பயத்திலேயே வாழ்கிறான். அந்த நேரத்தில் ஒரு சிறிய பயத்தைக் கொடுத்தாலும் அவன் அதிகமாக பயந்து விடுகிறான். இதே கவலையான நேரத்தில் அந்தக் கவலையை விட தனக்கு வேறு துன்பம் இல்லை என்று அரட்டுகிறான்.
அதனால் மனிதன் அதிக சந்தோஷமாக இருக்கும் பொழுது தான் அவனை மிகச் சாதாரணமாக பயங்கொள்ள வைத்துவிட முடியும்“ என்றதாம்.
(உண்மை தானா...?)
(Thanks:Dinesh Kumar Aslan)

Similar topics
» ஒரு சின்ன சிரிப்பு கதை
» ஒரு சின்ன சிரிப்பு கதை-2
» சின்ன கதைகள் -சிறுவர்களுக்கு
» சின்னச் சின்ன கதைகள்
» சிரிப்பு கதைகள்
» ஒரு சின்ன சிரிப்பு கதை-2
» சின்ன கதைகள் -சிறுவர்களுக்கு
» சின்னச் சின்ன கதைகள்
» சிரிப்பு கதைகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum