Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கணுக்கால் பிறழ்வா? நீவி விடாதீர்கள்
Page 1 of 1 • Share
கணுக்கால் பிறழ்வா? நீவி விடாதீர்கள்
கணுக்கால் பிரச்னைகள் மற்றும் சிகிச்சைமுறை பற்றி கோவை மனு மருத்துவமனையின் நிர்வாகி மற்றும் பிரபல ஆர்த்ரோஸ்கோபி, விளையாட்டுக்காயங்கள் மற்றும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பாரி செல்வராஜ் விழிப்புணர்வளிக்கிறார்.
விளையாட்டின்போதோ, வழுக்கி விழுவதாலோ அல்லது நாம் உபயோகிக்கும் காலணி பெரிதாக இருப்பதா லோ சில சமயங்களில் கணுக்கால் பிறழ நேரிடுகிறது. அவ்வாறு பிறழ நேரிடும்போது கணுக்காலில் வீக்கம் காணப்படும். நடக்கமுடியாமல் வலி ஏற்படும். நாம் காலில், சுளுக்கு விழுந்துவிட்டது என்று எண்ணி எண்ணெய் தேய்த்து நீவி விடுவோம். ஆனால் அது தவறான வழிமுறை. ஏனென்றால் கணுக்கால் பிறழும்போது காலில் உள்ள தசைநார்கள் அல்லது சதைபகுதி கிழிய நேரிடும்.
அதனால் காலில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும். அவ்வாறு கிழியும்போது நாம் நீவி விட்டோமானால் தசைநாரில் அல்லது சதைப்பகுதியில் கிழிசல் அதிகமாகி ஆபத்தை விளைவிக்கக் கூடும். எனவே எண்ணெய் தேய்த்து நீவி விடுவதைத் தவிர்த்து உடனே முதலுதவியாக ஐஸ் ஒத்தடம் கொடுத்து பின் அருகிலுள்ள எலும்பு மூட்டு மருத்துவரை அணுகுவது நல்லது. இதைப்பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியம்.
மேலும் சில காரணங்களான கணுக்கால் மூட்டு ஆர்த்ரைட்டீஸ், கணுக்கால் மூட்டு பிடித்தம், நிலையற்ற கணுக்கால் மூட்டு, கணுக்கால் மூட்டு தசைநார் கிழிதல், எலும்பு முறிவால் ஏற்படும் கணுக்கால் மூட்டுவலி மற்றும் பொதுவாக கணுக்காலில் ஏற்படும் வலி போன்றவற்றால் ஏற்படும் கணுக்கால் பிரச்சனைகளும் உள்ளன. இந்த பிரச்னைகளுக்கு ஓய்வு மற்றும் பயிற்சி போன்றவற்றால் சரி செய்யலாம். தசைநாரில் கிழிசல் அதிகமாக இருந்தால் நவீன ஆர்த்ரோஸ் கோபி சிகிச்சையின் மூலம் சரிசெய்யலாம்.
இது தவிர ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ், ரொமட்டாய்டு ஆர்த்ரைட்டீஸ் போன்ற பாதிப்புகளால் கணுக்கால் மூட்டில் தேய்மானம் ஏற்படலாம். இதற்கும் ஆர்த்ரோஸ்கோபி மூலம் சரிசெய்யலாம். சில சமயங்களில் நமது உடலில் யூரிக் அமிலம் அளவு அதிகரிப்பதால் குதிகால் பகுதியில் வலி ஏற்படும். அதற்கு மருத்துவர் ஆலோசனையின்பேரில் மாத்திரைகள் மற்றும் உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றை கடைபிடித்து யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தினால் வலியைக் குறைக்கலாம்.
சில சமயம் கணுக்காலின் பின்பகுதியிலுள்ள டென்டன் என்றழைக்கப்படும் தசைநாரில் கிழிதல் அல்லது கிருமித் தொற்று ஏற்படுவதுண்டு. இது போன்ற பிரச்சனைகளுக்கு மருந்து, பயிற்சி போன்றவற்றால் சரிசெய்யலாம். கிழிசல் அதிகமாகும்போது அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். மேலும் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதால் சில சமயம் கெண்டைக்கால் தசை இறுக்கமாகி டென்டன் தசைநார் பாதிக்கப்பட்டு கணுக்கால் பிரச்னை ஏற்படலாம்.
எனவே ஹை ஹீல்ஸ் அணிபவர்கள் தொடர்ந்து அணியாமலிருப்பது நல்லது. கணுக்காலில் வலி ஏற்பட்டால் அணிவதைத் தவிர்க்க வேண்டும். அவர்கள் கணுக்கால் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மேலும் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
நன்றி தினகரன்
Re: கணுக்கால் பிறழ்வா? நீவி விடாதீர்கள்
நல்ல பதிவு... நன்றி முரளி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» கணுக்கால் வலி
» உறவுகளை தொலைத்து விடாதீர்கள்
» வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!
» கணுக்கால் நீர்க்கட்டி
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற....
» உறவுகளை தொலைத்து விடாதீர்கள்
» வெற்றியில் ஏமாந்து விடாதீர்கள்!
» கணுக்கால் நீர்க்கட்டி
» கணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum