Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நமது குழந்தைகள் நன்றாக இருக்க தூக்கி எறியுங்கள் ரெடி டு ஈட் உணவுகளை. நமது பார்ம்பரிய உணவை பழக்குங்கள்.
Page 1 of 1 • Share

'பாமர, நடுத்தர மக்களின் குழந்தைகளில் சரிபாதியினர் சாப்பாட்டை மறுக்கும் அதே சமயத்தில், நொறுக்குத் தீனிகளை சந்தோஷமாக சுவைப்பவராகவும் இருக்கிறார்கள். அதிலும் 18 முதல் 30 வயது வரை உள்ள இந்திய இளைஞர் பட்டாளத்திடம் மொறுமொறுவென உள்ள நொறுவலுக்கு ஏக வரவேற்பு’ என்கிறது உணவியலின் உளவியல் முடிவுகள்.
'கொஞ்சமே கொஞ்சம் எண்ணெய். ரொம்பக் கொஞ்சமாக உப்பு. அப்புறம் உருளைக்கிழங்கு... அவ்வளவுதான்!’ என வீட்டில் பாட்டி வடை சுடும் பதத்தில் தாங்கள் நொறுக்குத் தீனிகளைத் தயாரிப்பதாக இணையதளங்களில் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், தங்கள் நொறுவைகளின் உண்மையான தயாரிப்பு முறைகளை எந்த நிறுவனமும் வெளியில் சொல்வது இல்லை.
பெரும்பாலான தின்பண்டங்கள் தயாரிக்கப்படும் ‘Extrusion Technology’ பற்றி உங்களுக்குத் தெரியுமா? அதிக சூட்டில் தானியங்களைப் பொரித்தெடுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தில்தான், பிரபல தின்பண்டங்களின் தயாரிப்பு தொடங்குகிறது. உணவை வேகவைத்துப் பொரித்து எடுக்க Extruder எந்திரத்தின் சிறு துளை ஒன்றின் மூலம் செலுத்தப்படும் தானியங்களின் மாவு, 200 டிகிரிக்கு மேலான சூட்டில் பொரித்துத் தள்ளப்படுகிறது. பொரித்த பண்டத்தில் விதவிதமான மசாலாக்கள், உப்புகள், சுவையூட்டிகள், மணமூட்டிகள், நீர்ச் சத்து ஏறிவிடாமல் காக்கும் ரசாயனங்கள், உணவைக் கெட்டுவிடாமல் காக்கும் வேதி உப்புகள் ஆகியவை தெளிக்கப்படுகின்றன. ஆனால், இந்த Excipients சமாசாரங்கள், தின்பண்ட பாக்கெட் உறையில், ‘Approved Food Chemical Ingredients’ என்ற பெயரில் ஒளிந்திருக்கும்.
இப்படி அதிக சூட்டில் Extrude செய்யப்படும் உணவுகளின் புரதங்களில் ஏற்படும் மாற்றங்கள்குறித்து உணவியலாளர்கள் இடையே அதிக அளவில் விவாதங்கள் நடப்பது உண்டு. ஒரு தானியத்தில் பொதிந்திருக்கும் கார்போஹைட்ரேட், புரதத் துணுக்குகள், சில நேரங்களில் கொஞ்சம் கொழுப்பு ஆகியவற்றோடு தாவரங்கள் தன் வாழ்நாளெல்லாம் தவமாய் தவமிருந்து சேகரித்துவைத்திருக்கும் கனிமங்களும் தாவர மருத்துவக்கூறுகளும், அப்படி ஒரு சூட்டில் என்ன ஆகும் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
மேலோட்டமான ஆய்வுகள், அதிலும் குறிப்பாக சந்தைக் காப்புரிமைச் சார்ந்த ஆய்வுகள், 'அதிக சூடு தயாரிப்பு முறைகள் எந்த ஆபத்தையும் ஏற்படுத்துவது இல்லை’ எனச் சொல்வது இப்போதைய உணவுச் சட்டங்களுக்குப் போதுமானது. ஆனால், அவை உடல் இயக்கத்தில், உறுப்புகள் வளர்ச்சியில் உண்டாக்கும் அபாயங்களுக்கு அளவே இல்லை!
'சிற்றுண்டி’ என்பது, இன்று நேற்று நம்மிடையே வந்தவை அல்ல; உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழர் உணவு நூலில் தீம்புழல் தாரம், அடை, தீஞ்சேறு, அரிசி மாவில் தேனும் வெல்லமும் சேர்த்துச் செய்யப்படும் உக்களி மற்றும் உக்காரி, குழைவாக வேகவைத்த பாசிப் பயறு, வெல்லம் சேர்த்து செய்யப்படும் கும்மாயம், மோதகம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் சொல்லிய சீடைகுறித்த செய்திகளைப் படிக்கும்போது, 'அப்பவே நாம அப்படி’ என்று பெருமிதம்கொள்ளவைக்கிறது.
மாதம் ஒரு நாள் ஷாப்பிங் செல்வதுபோல, சிகையலங்காரம் செய்ய பார்லர் செல்வது போல, சுவை ப்ளஸ் ஆரோக்கியமான தின்பண்டங்கள் செய்ய ஓரிரு மணி நேரம் ஒதுக்குங் கள். நீங்கள் வாணலியைப் பிடிக்க, உங்கள் கணவர் அரிசி மாவைப் பிசைய, உங்கள் வீட்டுச் செல்லம், 'ம்மா... வாழை இலைக்குள்ள நான்தான் மாவை வைப்பேன்’ என 'இலைக் கொழுக்கட்டை’ செய்யும் திருவிழா உங்கள் வீட்டு அடுப்பங்கறையில் அடிக்கடி நிகழட்டும். சுவையான தின்பண்டத்துடன் நிறையப் பக்கபலன்களும் விளையும்!
சரி... அது என்ன 'இலைக் கொழுக்கட்டை?’
பாரம்பர்ய பச்சரிசியின் மாவோடு, வெல்லம், வறுத்த பாசிப் பயறு, துண்டுத் தேங்காய், ஏலப் பொடி சேர்த்துப் பிசைந்து கொழுக்கட்டை செய்தால், அது 'இனிப்புக் கொழுக்கட்டை.’ அதே மாவை, பனை ஓலை அல்லது வாழை இலையில் உள்ளே வைத்து வேகவிட்டால் அது 'இலைக் கொழுக்கட்டை.’ பச்சரிசி, துருவிய தேங்காய், பலாச்சுளை சேர்த்து அரைத்து அதே இலையில் சுருட்டி வேகவைத்தால், 'பலாப்பழ இலைக் கொழுக்கட்டை.’ சிவப்பு பச்சரிசி மாவில் கொழுக்கட்டை செய்து கொதிக்கும் நீரில் வேகவைத்து எடுத்தால், சத்தான 'நீர்க் கொழுக்கட்டை’ தயார்.
'பிள்ளைக்கு என்ன கொடுத்தாலும் உடம்பு பிடிக்க மாட்டேங்குதே!’ என்று கவலைப்படும் தாய்மார்களே, உங்கள் குழந்தை கொழு கொழுஎன புஷ்டி பூச, இலைக் கொழுக்கட்டைக்கு இணையான இனிப்பு மருந்து கிடையாது.
சரி, தினமும் இலைக் கொழுக்கட்டையாகக் கொடுத்தாலும் குழந்தைக்குப் போரடிக்குமே! அதையே பால் கொழுக்கட்டையாக மாற்றிக்கொடுங்கள். இட்லி அரிசியை ஊறவைத்து மொறுமொறுவென அரைத்து, நல்லெண்ணெய்யில் வதக்கி, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொதிக்கும் தண்ணீரில் கொட்டி வேகவைக்க வேண்டும். வெந்ததும் அளவாக வெல்லம், ஏலப் பொடி, தேங்காய்ப் பால் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும். இந்தப் 'பால் கொழுக்கட்டை’யைப் பிடிக்காதோர் இன்னும் இந்தப் புவியில் பிறக்கவில்லை.
இலைக் கொழுக்கட்டையோ, பால் கொழுக்கட்டையோ பல நாட்களுக்கு இருக்காதுதான். ஆனால், அதைச் சாப்பிடும் நாம், பல்லாண்டுகள் ஆரோக்கியமாக இருப்போம். ரெடி-டு-ஈட் மார்க்கெட் உணவுகள் ரொம்ப நாள் கெட்டுப் போகாதுதான். ஆனால், அதற்கு அடிமைப்பட்டால், எந்த நேரம், எந்த உறுப்பு கோளாறு செய்யும் என்று யாருக்கும் தெரியாது.
எதைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம், நாம்?
https://www.facebook.com/Unavu?fref=ts

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: நமது குழந்தைகள் நன்றாக இருக்க தூக்கி எறியுங்கள் ரெடி டு ஈட் உணவுகளை. நமது பார்ம்பரிய உணவை பழக்குங்கள்.
மிகவும் பயனுள்ள பதிவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: நமது குழந்தைகள் நன்றாக இருக்க தூக்கி எறியுங்கள் ரெடி டு ஈட் உணவுகளை. நமது பார்ம்பரிய உணவை பழக்குங்கள்.
பழக்குவோம்...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நமது குழந்தைகள் நன்றாக இருக்க தூக்கி எறியுங்கள் ரெடி டு ஈட் உணவுகளை. நமது பார்ம்பரிய உணவை பழக்குங்கள்.
நல்ல பதிவு ஆனால் இந்த காலத்தில் இதை கடைபிடிப்பது கடினம் தான்
Similar topics
» ஆண்களுக்கு தலைமுடி நன்றாக இருக்க-
» ஆரோக்கியமா இருக்க -இந்த உணவுகளை பச்சையா சாப்பிடுங்க..
» குழந்தைகள் அழகாக இருக்க
» குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்.
» ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம்.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum