Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிரபலங்களின் தினசரி வழக்கங்கள்
Page 1 of 1 • Share
பிரபலங்களின் தினசரி வழக்கங்கள்
பிரபலங்களின் தினசரி வழக்கங்கள்:
[You must be registered and logged in to see this image.]
நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் டி.எஸ்.எலியட் பிரபல வங்கியான லாயிட்ஸ் வங்கியில் பல வருடங்கள் பணியாற்றிவந்தார். வளரும் எழுத்தாளர்களுக்கு அவருடைய அறிவுரை: எழுத்தாளர்கள் ஏதாவது வேலை பார்த்துவந்தால் தயவுசெய்து அதை விட்டுவிடாதீர்கள்.
**
அமெரிக்க குடியரசின் சிற்பிகளுள் ஒருவரும் எழுத்தாளரும் சிந்தனையாளருமான பெஞ்சமின் ஃபிராங்ளின் தனது ஒரு நாள் பொழுதைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:
5 முதல் 8 மணி வரை: காலைக் கடன்கள், எல்லாம் வல்ல நன்மையை வணங்குவது, காலை நேரக் கேள்வி: இன்றைய பொழுதில் செய்ய வேண்டிய நன்மை என்ன, காலை உணவு. 8-12 வேலை. 12-2 படிப்பு, கணக்குப் பார்த்தல், மதிய உணவு. 2-6 வேலை. 6-10 பொருட்களை சரிபார்த்தல், உணவு, இசை அல்லது பொழுதுபோக்கு, உரையாடல். இன்றைய நாள் செய்தவற்றைக் குறித்த ஆராய்ச்சி. மாலை நேரக் கேள்வி: இன்றைக்கு என்ன நன்மை செய்தேன்? 10-5 உறக்கம்.
**
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், எல்லா நாட்களிலும் காலை 6.45 மணிக்கு தனது அலுவல்களைத் தொடங்கிவிடுவார். முதலில் பாதுகாப்புத் துறை சம்பந்தமாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். பின்னர் சில முக்கிய நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசுவார். மதியங்களில் உடற்பயிற்சி செய்வார். இவர் அதிபராக இருந்த காலம் முழுவதும் இந்த வழக்கத்தைப் பின்பற்றினார்.
**
**
பிரபல ஆங்கில நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜாய்ஸ் சிறு வயதிலிருந்தே பார்வைக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். ஐம்பது வயதுக்குள் 25 முறை கண்களில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். ஃபின்னிகன்ஸ் வேக் என்கிற அவரது நாவலை பெரும்பாலும் கிரேயான்களைப் பயன்படுத்தி அட்டைகளில் எழுதி முடித்தார். எழுதும்போது கூடுதல் வெளிச்சத்துக்காக வெள்ளை கோட் அணிந்துகொண்டார்.
**
**
விற்பனையில் சாதனை ஏற்படுத்திய டாவின்சி கோட் உள்ளிட்ட ஆங்கில மர்ம நாவல்களை எழுதிய டான் பிரெüன் தொடர்ந்து ஒரு மணி எழுதிய பிறகு உடற்பயிற்சி செய்வார். வழக்கமான உடற்பயிற்சிகளுக்கு இடையில் அவ்வப்போது தலைகீழாகத் தொங்குவதையும் ஒரு பழக்கமாக வைத்திருக்கிறார்.
**
தினசரி காலை ஏழரை மணிக்கு எழுவதை வழக்கமாக கொண்டிருந்தார் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். படுக்கையில் இருந்தபடியே காலை உணவு உட்கொள்வார். கடிதங்கள், உத்தரவுகள் ஆகியவற்றை அவரது பல்வேறு உதவியாளர்களுக்கு டிக்டேட் செய்வார். 11 மணி வரை படுக்கையில் இருந்தபடியே அனைத்து செய்தித்தாள்களையும் வாசித்து முடிப்பார்.
**
விஞ்ஞானக் கதைகளில் தன்னிகரில்லாத மன்னனாக இருந்த ஐசக் அஸிமாவ் நானூறுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியவர். இவை தவிர நூற்றுக்கணக்கான தொகுப்பு நூல்கள் தவிர பைபிள், ஷேக்ஸ்பியர் குறித்து கலைக்களஞ்சியம் வெளியிட்டவர்.
கட்டாயமாக வெளியில் செல்ல வேண்டிய நேரம் போக, காலையில் 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடாமல் எழுதுவார். ஒரு முறை எழுதுவதை திருத்த மாட்டார். திருத்தம் தேவைப்படாது எழுதி முடித்தவுடன் தபாலில் சேர்த்துவிடுவார்.
தினமணி
Re: பிரபலங்களின் தினசரி வழக்கங்கள்
கட்டாயமாக வெளியில் செல்ல வேண்டிய நேரம் போக, காலையில் 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடாமல் எழுதுவார். ஒரு முறை எழுதுவதை திருத்த மாட்டார். திருத்தம் தேவைப்படாது எழுதி முடித்தவுடன் தபாலில் சேர்த்துவிடுவார்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Similar topics
» மூளையைப் பாதிக்கும் 10 பழக்க வழக்கங்கள்
» குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !
» பிரபலங்களின் பழக்கவழக்கங்கள்!
» பிரபலங்களின் இருண்ட ரகசியங்கள்!
» பிரபலங்களின் இருண்ட ரகசியங்கள்!
» குழந்தை வளர்ப்பதில் சில தவறான பழக்க வழக்கங்கள் !
» பிரபலங்களின் பழக்கவழக்கங்கள்!
» பிரபலங்களின் இருண்ட ரகசியங்கள்!
» பிரபலங்களின் இருண்ட ரகசியங்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|