Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
Page 1 of 1 • Share
மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
இந்தியாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. தேசிய அளவில் 2 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றால் கேரளாவில் 5.86 சதவீதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கேரளாவில் 3 அரசு மனநல மருத்துவமனைகளும், 3 அரசு மருத்துவ கல்லூரிகளில் உளவியல் துறைகளும், அவற்றில் 1,800 உளவியல் நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் இருக்கின்றன. இது தவிர 143 தனியார் மனநல மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மனநல மருத்துவமனைகள் போதிய அளவில் இருந்தும் பிரச்சினைகளும் ஏராளமாகவே இருக்கின்றன.
மாநில மனநல ஆணையத்தின் புள்ளி விவரத்தின் படி கேரள மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்கு உளவியல் பிரச்சினைகள் இருக்கிறது. இதில் 2 சதவீதம் பேருக்கு மனச்சிதைவு மற்றும் மனச்சோர்வு பிரச்சினைகள் உள்ளன. 2-3 சதவீதம் பேருக்கு உடல் பிரச்சினையால் ஏற்படும் கடும் உளவியல் குறைபாடுகள் உள்ளன. 6 வயதுக்குட்பட்டவர்களில் நூற்றில் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டதாக உள்ளது.
மனநல பாதிப்புகள் அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் சுகாதார நிதி முழுமையாக பயன்படுத்தப்படாதது.
மாநில அரசு மனநல பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தாதது, கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஊழியர் பற்றாக்குறை தீர்க்கப்படாதது போன்றவை முக்கிய காரணங்களாகும். தனியார் மனநல மருத்துவமனைகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதும் பாதிப்புகள் கட்டுப்படுத்தப்படாததற்கு காரணமாக இருக்கின்றன.
இந்திய அளவில் தனிநபர் மது அருந்தும் அளவு 0.75 லிட்டர் ஆகும். ஆனால் கேரளாவில் தனிநபர் ஒருவர் சராசரியாக 8.3 லிட்டர் மது அருந்துகிறாராம். அதேபோல கேரளாவில் லட்சம் பேருக்கு 25.3 பேர் தற்கொலை செய்கிறார்கள். இது இந்திய அளவில் 10.5 பேராக உள்ளது.
இந்திய அளவில் விவாகரத்து அளவு 1.1 சதவீதமாக இருக்கும்போது கேரளாவில் இந்த அளவு 3.3. சதவீதமாக உள்ளது. கேரளாவில் மொத்தம் பதிவாகும் குற்றங்களில் 11.8 சதவீதம் குடும்ப வன்முறை வழக்குகளாக உள்ளன. ஆனால் இந்திய அளவில் 5.3 சதவீதம் வழக்குகள்தான் குடும்ப வன்முறை வழக்காகும்.
மேற்கண்ட புள்ளி விவரங்கள் மனநல பிரச்சினைகளோடு நேரடியாக சம்பந்தப்பட்டவை என்பது நிபுணர்களின் கருத்து. ‘மது, தற்கொலை, விவாகரத்துகள், குடும்ப வன்முறை போன்றவற்றில் மாநிலம் முன்னிலை வகிப்பது நிலைமை மோசமடைவதற்கான காரணங்கள். இது முன்னேறிய சமூகத்தை பாதிக்கும் பிரச்சினை’ என்கிறார்கள் நிபுணர்கள்.
கேரளாவில் ஆண்களைவிட 1.5 முதல் 2 சதவீத பெண்கள் கூடுதலாக மனநல பாதிப்புக்கு உள்ளாகிறார்களாம். அங்கு பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதும் அவர்கள் தங்களின் பாதிப்பை வெளியில் காட்டிக் கொள்ளாததும் அதிகமாக மனநலம் பாதிக்க காரணமாகிறது.
வளைகுடா நாடுகளில் இருக்கும் 25 லட்சம் கேரளவாசிகளில் 90 சதவீதம் பேர் ஆண்கள். அவர்களின் பணி குடும்பத்திற்கு அதிக வருவாயைத் தந்திருந்தாலும் வேறுவகையில் பிரச்சினைகளையும் தருகிறது. வளைகுடா நாடுகளில் இருப்பவர்களின் மனைவிகளை வளைகுடா விதவை என்று அழைக்கிறார்கள். இவர்கள் உணர்வு ரீதியான பிரச்சினைகளுக்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. கேரளாவில் நடக்கும் தற்கொலைகளில் 19 சதவீதத்திற்கு மனநல பாதிப்புதான் காரணம் என்ற மாநில குற்ற ஆவணங்கள் பிரிவு அறிக்கைகள் சொல்கிறது.
நன்றி (செய்தி ) :- தூது ஆன்லைன்
பகவதி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 500
Re: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
படித்தவர்கள் அதிகமா இருந்தாலே இந்த பிரச்சனை தான்.. இவர்களே அதிகமாக தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி கபி.
Re: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
நானும் தான்..சூர்யா wrote:இதுக்குதான் நான் படிக்கல ஜெயம்
படித்தவர்களுக்கு பக்குவ பட தெரியவில்லை. அதனால் தான் இப்படி ஆகிறது..
Re: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
என் மன நலம் பாதிக்கும் வரை விட மாட்டிங்க போல தெரியுதே..
Re: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
இன்னுமா பாதிக்கலனு நினைச்சுகிட்டு இருக்கீங்கஜெயம் wrote:என் மன நலம் பாதிக்கும் வரை விட மாட்டிங்க போல தெரியுதே..
Re: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
முற்றிலும் உண்மையா கருத்து ஜெயம் , படிப்பு அதிகமாகும் போது குழப்பங்களும் சுயநலங்களும் அதிகரிக்கிறது என்பது வருத்தப்படவேண்டிய ஒன்றுஜெயம் wrote:படித்தவர்கள் அதிகமா இருந்தாலே இந்த பிரச்சனை தான்.. இவர்களே அதிகமாக தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி கபி.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
படிப்பு அறிவு தேவை . அதை விட பட்டறிவு தேவை..செந்தில் wrote:முற்றிலும் உண்மையா கருத்து ஜெயம் , படிப்பு அதிகமாகும் போது குழப்பங்களும் சுயநலங்களும் அதிகரிக்கிறது என்பது வருத்தப்படவேண்டிய ஒன்றுஜெயம் wrote:படித்தவர்கள் அதிகமா இருந்தாலே இந்த பிரச்சனை தான்.. இவர்களே அதிகமாக தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். பகிர்வுக்கு நன்றி கபி.
Re: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
பட்டறிவுனா?
அடிபட்ட, மிதிபட்ட, உதைபட்ட அறிவா ஜெயம்?
அடிபட்ட, மிதிபட்ட, உதைபட்ட அறிவா ஜெயம்?
Re: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
அதே தான்..சூர்யா wrote:பட்டறிவுனா?
அடிபட்ட, மிதிபட்ட, உதைபட்ட அறிவா ஜெயம்?
Similar topics
» எழுத்துக்கள் அதிகமுள்ள மொழி
» உடலினை உறுதி செய்
» கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி
» சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்
» போதை மாநிலம்
» உடலினை உறுதி செய்
» கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பயங்கர தீ விபத்து: 75 பேர் பலி
» சகாயம்: என்னை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்கிறார்கள்
» போதை மாநிலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum