தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?

View previous topic View next topic Go down

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி? Empty முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?

Post by முரளிராஜா Mon Nov 25, 2013 11:00 am

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி? E59e6b39-1af4-417b-8dc7-fad8353ad930_S_secvpf
வெறுமையான கூடுகள் போல் காணப்படுகின்றன, சில வீடுகள்! அங்கு பிள்ளைகளும் இல்லை. பேரக்குழந்தைகளும் இல்லை. விளையாட்டும் இல்லை. சிரிப்பும் இல்லை. ஜாலியும், சந்தோஷமும் நிரம்பி வழிந்த அப்படிப்பட்ட பல வீடுகளில் இப்போது ஒரு சில முதியோர்கள் மட்டும் வசிக்கிறார்கள். 

முதியோர்கள் குடும்பத்திற்கு பாரமாக, ஆரோக்கியமும், மன நிம்மதியும் இன்றி, ‘கண்ணும் தெரியவில்லை. காதுகளும் கேட்கவில்லை. யாரும் தன்னை மதிப்பதில்லை’ என்ற விரக்தியோடுதான் மீதி காலத்தை கழிக்கவேண்டுமா? - இல்லை. அவர்கள் முதுமையிலும் இனிமையாக வாழ்க்கையை அனுபவிக்கலாம். 

எப்படி? இதோ சொல்கிறேன்.. 1960-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள் 42 வயது. தற்போது பெண்களுக்கு 67-ம், ஆண்களுக்கு 64-ம் சராசரி வயதாக இருக்கிறது. அதனால் நாமெல்லாம் எதிர்காலத்தில் 80, 90-வது பிறந்த நாளைக்கூட கொண்டாடலாம்!

அப்படி கொண்டாட வேண்டும் என்றால் முதுமையை வரவேற்று அதனோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும். நம்மை படைக்கும்போதே கடவுள் நமது உடலில் எந்த பிரச்சினை எதிர்காலத்தில் வந்தாலும் தாக்குப்பிடித்து வாழ வசதியாக முக்கியமான ஒவ்வொரு உறுப்பிலும் இலவச இணைப்புபோல் அதிகப்படியான அளவை, அதிகப்படியான சக்தியை கொடுத்திருக்கிறார். 

கிட்னியில் இன்னொன்று, ஈரலில் 80 சதவீதம் தேவைக்கு அதிகமாக, கல்லீரலில் 60 சதவீதம் கூடுதலாக..! இப்படி ஒவ்வொன்றிலும் கடவுளின் கருணை தெரிகிறது. அதனால்தான் இளமையில் ஆடாத ஆட்டம் ஆடினாலும் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் தப்பித்துவிடுகிறோம். ஆனால் முதுமை அப்படி அல்ல. 

‘மார்ஜின் ஆப் எர்ரர்’ என்று குறிப்பிடும் அந்த சக்தி இயல்பாகவே முதுமையில் குறைந்துவிடுகிறது. உடலின் எல்லா பகுதிக்கும் முதுமையில் ரத்த ஓட்டம் குறையும்.  மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும்போது ‘மைனர் ஸ்ட்ரோக்’ எனப்படும், வெளிக்கு தெரியாத பக்கவாத பாதிப்புகள் தோன்றும். 

அதனால்தான் சிலர் ஐந்தாறு தடவை அழைத்த பின்பு தான் சுதாரித்துக்கொண்டு ‘என்னையா அழைத்தீர்கள்?’ என்று கேட்பார்கள். ஆஸ்டியோபோராசிஸ் என்ற எலும்பு அடர்த்திக்குறைபாட்டு நோய் முதுமையில் தென்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்று ‘மனோபாஸ்’ ஆகும் காலகட்டத்திலே இந்த தொந்தரவு தோன்றி விடும். 

இதில் குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால், கீழே இனிமையாக வாழ்வது எப்படி? வெறுமையான கூடுகள் போல் காணப்படுகின் அவர்கள் விழுந்தால் எளிதாக எலும்பு முறியும். சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் விரைவாக பலன் கிடைக்காது. 

மூட்டுத் தேய்மானமும் முதுமையில் உருவாகி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிலருக்கு தேவைப்படும். அறுபது வயதுக்கு பிறகு முதியவர்கள் உடலில் ஒவ்வொரு நோயாக வந்து ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். சர்க்கரை நோய் தாக்கி இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது? என்பதைவிட, அவரது உடலில் சர்க்கரை நோய் எவ்வளவு காலமாக இருக்கிறது என்பது கவனிக்கத் தகுந்தது. 

ஏன்என்றால் நீண்ட காலமாக அந்த நோய் தாக்கி இருந்தால் கண், கிட்னி, இதயம் போன்றவை பாதிக்கப்படக்கூடும். ஈரல், கிட்னி ஆகிய இரண்டு உறுப்புகளும் நாம் இளைஞராக இருக்கும்போது, சாப்பிடும் மாத்திரையில் இருக்கும் தேவையற்ற வைகளை அப்படியே பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்கவிடாமல் வெளியேற்றிவிடும். 

முதுமையில் அந்த இரண்டு உறுப்புகளின் செயல்பாடும் மந்தமடைவதால் நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் தேவையற்றவைகளும் பிரித்தெடுக்கப்படாமல் அப்படியே ரத்தத்தில் கலந்துவிடும். அதனால்தான் முதுமையில் நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகளால் அதிக பக்கவிளைவுகள் சிலருக்கு தோன்றுகின்றன. 

நோயாளிக்கு டாக்டர்கள் மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது, ‘மிகக் குறைந்த அளவு’, ‘அதிகபட்ச அளவு’ என்ற இரு எல்லைகளை கையாண்டு அதற்கு தக்கபடி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அளவை நிர்ணயிப்பார்கள். இதை ‘தெரபூயிட்டிக் வின்டோ’ என்போம். 

அந்த இடைவெளியை முதுமையில் மிக கவனமாக கண்காணித்து மாத்திரைகள் வழங்கவேண்டும். தேவைக்கு அதிகமான ‘டோஸ்’ கொடுத்துவிட்டால், பக்க விளைவுகள் அதிகரித்துவிடும். எல்லா வியாதிகளுக்கும் அறிகுறிகள் உண்டு. 

இளமையில் உடலில் அதிக சக்தி இருக்கும்போது அறிகுறிகளை எளிதாக கண்டு சிகிச்சையை உடனே தொடங்கிவிடலாம். முதியவர்களுக்கு உடலில் சக்தி குறைவதால் உள்ளே நோயின் பாதிப்பு அதிகம் இருந்தாலும், அறிகுறிகளை அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது. சிறுநீர் பாதை அருகில் ‘ப்ரோஸ்டேட் சுரப்பி‘ உள்ளது. 

முதுமையில் அந்த சுரப்பி வீங்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். முழுமையாக வெளியேறவும் செய்யாது. திடீரென்று சிறுநீர் வெளியேறாமல் தொந்தரவு செய்வதும் உண்டு. உடல் இயக்கம் குறைவதால் தூக்கமின்மையும் முதியோர்களை அதிகம் தொந்தரவு செய்கிறது. 

பற்கள் விழுந்துவிடுவதால் மென்று அவர்களால் சாப்பிட முடியாது. அதனால் உணவு உண்பதில் பிரச்சினையும், ஜீரணக்கோளாறும் தோன்றுகிறது. புற்றுநோயும் முதியோர்களை அதிக அளவில் தாக்கி நிலைகுலையச் செய்கிறது. 

கட்டி, ஆறாத புண்கள் தோன்றினாலோ இருமலில், வாந்தியில், சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளிப்பட்டாலோ டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். பெண்களைப் பொறுத்தவரையில் அதிக ரத்தப் போக்கு உடனடியாக கவனிக்கத் தகுந்தது. இதுபோன்ற ஏராளமான உடல்பிரச்சினைகள் மட்டுமின்றி, மனப் பிரச்சினைகளாலும் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 

கட்டுரை: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, 
Dsc.,F.R.C.S. தலைவர்: தமிழ்நாடு மருத்துவர் சங்கம், 
சென்னை. 

நன்றி மாலை மலர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி? Empty Re: முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?

Post by ரானுஜா Mon Nov 25, 2013 11:54 am

பகிர்வுக்கு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி? Empty Re: முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?

Post by ஸ்ரீராம் Mon Nov 25, 2013 4:36 pm

நல்லதொரு கட்டுரை நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி? Empty Re: முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum