தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


" முப்பது நாளும் மூதுரை "

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Sun Oct 27, 2013 10:11 am

கடவுள் வாழ்த்து

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.


(பதவுரை) துப்பு ஆர் - பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி - திருமேனியையும், தும்பிக்கையான் - துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம் - திருவடிகளை, பூக்கொண்டு - (அருச்சிக்க) மலர் எடுத்துக்கொண்டு,தப்பாமல் - நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு - அடைந்துபூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம் - சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம் - நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் - பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம் - அருட்பார்வை உண்டாகும்; மேனி - அவர் உடம்பு, நுடங்காது -(பிணிகளால்) வாட்டமுறாது.

விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Mon Oct 28, 2013 9:41 am

பயன் கருதாது அறஞ்செய்க

1 நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்.


(பதவுரை) நின்று - நிலைபெற்று, தளரா - சோராமல், வளர் - வளர்கின்ற, தெங்கு - தென்னையானது, தாள் உண்ட நீரை - தன் அடியால் உண்ட தண்ணீரை, தலையாலே - தன் முடியாலே, தான் தருதலால் - (சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால், ஒருவற்கு -(நற்குணமுடைய) ஒருவனுக்கு, நன்றி செய்தக்கால் - உதவி செய்தால், அந்நன்றி - அவ்வுதவியை, என்று தருங்கொல் - அவன் எப்பொழுது செய்வானோ, என வேண்டா - என்று ஐயுற வேண்டுவதில்லை.

நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Tue Oct 29, 2013 8:17 am

நல்லவர்க்குச் செய்த உதவி

2 நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே-அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர்.


(பதவுரை) நல்லார் ஒருவர்க்கு - நற்குணமுடைய ஒருவர்க்கு, செய்த உபகாரம் - செய்த உதவியானது, கல்மேல் எழுத்துபபோல் - கருங்கல்லின்மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல, காணும் - அழியாது விளங்கும்; அல்லாத - நல்ல வரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு - அன்பில்லாத மனமுடையார்க்கு, ஈந்த உபகாரம் - செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு - நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு, நேர் - ஒப்பாக (அழிந்துவிடும்).

நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Wed Oct 30, 2013 9:31 am

இளமையில் வறுமை

3. இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவி லினியவும்-இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு.

(பதவுரை) இளமை - (இன்பத்தைத் தரும்) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால் - வறுமை வந்து அடைந்தால், இன்னா - அது துன்பத்தைத் தருவதாகும், இன்னா அளவில் - துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில், இனியவும் - இனியனவாகிய பொருள்களும், இன்னாத - துன்பத்தைத் தருவனவாம்; (அவை) நாள் அல்லா நாள் (சூடுதற்குரிய) காலமல்லாத காலத்தில், பூத்த நல்மலரும் - மலர்ந்த நல்ல மலரையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும் - (அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத மங்கையின் அழகையும், போலும் - ஒக்கும்.

வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Thu Oct 31, 2013 9:39 am

மேன்மக்கள் இயல்பு

4. அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.

(பதவுரை) பால் - பாலினை, அட்டாலும் - காய்ச்சினாலும், சுவையிற் குன்றாது - அஃது இனிய சுவையிற் குறையாது; சங்கு - சங்கினை, சுட்டாலும் - சுட்டு நீறாக்கினாலும், வெண்மை தரும் - அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல), மேன் மக்கள் - மேலோர், கெட்டாலும் - வறுமையுற்றாலும், மேன் மக்களே - மேலோராகவே விளங்குவர்; நண்பு அல்லார் - நட்பின் குணமில்லாத கீழோர், அளவளாய் நட்டாலும் - கலந்து நட்புச் செய்தாலும், நண்பு அல்லர் - நண்பராகார்.

பால் சங்கு என்னும் இரண்டும் மேன்மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவரென்பது உவமைகளாற் புலனாகின்றது. ஏ: தேற்றப் பொருட்டு.

மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர் கலந்து பழகினாலும் நண்பராகார்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Fri Nov 01, 2013 10:55 am


காலமறிந்து நடத்தல்

5. அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி
எடுத்த கருமங்க ளாகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தா லன்றிப் பழா.

(பதவுரை) தொடுத்த - கிளைத்த, உருவத்தால் நீண்ட - வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள் எல்லாம் - உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி - பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா - பழுக்கமாட்டவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும் - அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், ஆகுநாள் அன்றி - முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த கருமங்கள் - மேற்கொண்ட காரியங்கள்; ஆகா - முடியாவாம்.

எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான் முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும்

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Sun Nov 03, 2013 5:06 pm

மானம் இழந்து வாழாமை

6 உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ-கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான்.

(பதவுரை) கல் தூண் - கருங்கற் கம்பமானது, பெரும்பாரம் தாங்கின் - பெரிய பாரத்தைச் சுமந்தால், பிளந்து இறுவது அல்லால் - பிளந்து முரிவதல்லாமல், தான் தளர்ந்து வளையுமோ - தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது; அது போல), உற்ற இடத்தில் - மானக்கேடு உண்டானவிடத்தில், உயிர் வழங்கும் தன்மையோர் - தம் உயிரைவிடும் குணமுடையோர், பற்றலரை - பகைவரை, கண்டால் - பார்த்தால், பணிவரோ - வணங்குவரோ? (வணங்கார்).ஓ இரண்டும் எதிர்மறை.

மானமுடையவர் ஆபத்து வந்தபோது உயிரை விடினும் விடுவரேயன்றி மானத்தை விடார்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Mon Nov 04, 2013 9:43 am


அறிவு செல்வம் குணம்

7 நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம்.

(பதவுரை) நீர் ஆம்பல் - நீரிலுள்ள அல்லியானது, நீர் அளவே ஆகும் - நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும்; (அதுபோல) நுண் அறிவு - கூரிய அறிவானது, தான் கற்ற - தான் படித்த, நூல் அளவே ஆகும் - நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம் - தான் அடைந்த செல்வமானது, மேலை-முற்பிறப்பிற் செய்த, தவத்து அளவே ஆகும்-தவத்தின் அளவாகவே இருக்கும்; குணம் - குணமானது, குலத்து அளவே ஆகும் - (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும்.
ஆம் மூன்றும் அசை நிலை.

ஒருவருக்கு அறிவு நூலினளவாகவும், செல்வம் தவத்தினளவாகவும், குணம் குலத்தினளவாகவும் இருக்கும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Tue Nov 05, 2013 9:18 am

நல்லார் தொடர்பின் நலம்

8. நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று.

(பதவுரை) நல்லாரை - நற்குணமுடையோரை, காண்பதுவும் - பார்ப்பதும், நன்றே - நல்லதே; நல்லார் - நல்லவருடைய, நலம் மிக்க - பயன் நிறைந்த, சொல் - சொல்லை, கேட்பதுவும் - கேட்டலும், நன்றே - நல்லதே; நல்லார் - நல்லவருடைய, குணங்கள் - நற்குணங்களை, உரைப்பதுவும் - பேசுதலும், நன்றே - நல்லதே, அவரோடு - அந் நல்லவருடன், இணங்கி இருப்பதுவும் - கூடியிருத்தலும், நன்று - நல்லதே.
ஏ மூன்றும் தேற்றம்.

நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Wed Nov 06, 2013 9:10 am

தீயார் தொடர்பின் தீமை

9. தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது.

(பதவுரை) தீயாரை - தீக்குணம் உடையவரை, காண்பதுவும் - பார்ப்பதும், தீதே - தீயதே; தீயார் - தீயவருடைய, திருஅற்ற - பயன் இல்லாத, சொல் - சொல்லை, கேட்பதுவும் - கேட்டலும், தீதே - தீயதே; தீயார் - தீயவருடைய, குணங்கள் - தீய குணங்களை, உரைப்பதுவும் - பேசுதலும், தீதே - தீயதே; அவரோடு - அத் தீயவருடன், இணங்கி இருப்பதுவும் - கூடியிருத்தலும், தீதே - தீயதே.
ஏ மூன்றும் தேற்றம்.

தீயாரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமும் உண்டாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by sawmya Wed Nov 06, 2013 12:16 pm

விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும்.
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
அருமையா இருக்கே அனைத்தும்...பகிர்வுக்கு மிக்க நன்றி! அண்ணா...புன்முறுவல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Thu Nov 07, 2013 9:24 am

நல்லாரால் எல்லார்க்கும் நலம்

10. நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை.

(பதவுரை) நெல்லுக்கு - நெற்பயிருக்கு, இறைத்த நீர் - இறைக்கப்பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழி ஓடி - கால்வாய் வழியாகச் சென்று, ஆங்கு - அவ்விடத்திலுள்ள புல்லுக்கும் பொசியும் - புல்லுகளுக்கும் கசிந்தூறும்; (அதுபோல), தொல் உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்தில், நல்லார் ஒருவர் உளரேல் - நல்லவர் ஒருவர் இருப்பாராயின், அவர் பொருட்டு - அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் - அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும்.

.நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by sawmya Thu Nov 07, 2013 10:32 am

எற்றுக்கொள்கிறேன்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Fri Nov 08, 2013 10:13 am

துணை வலிமை வேண்டும்

11. பண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் முளையாதாம்-கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகா தளவின்றி
ஏற்ற கருமஞ் செயல்.

(பதவுரை) பண்டு முளைப்பது - (உமி நீங்குதற்கு) முன்னே முளைப்பது, அரிசியே ஆனாலும் - அரிசியே யாயினும், உமி விண்டு போனால் - உமி நீங்கிப்போனால், முளையாது - (அவ்வரிசி) முளையாது; (அதுபோல) கொண்ட - பெற்ற, பேர் ஆற்றல் உடையார்க்கும் - பெரிய வல்லமையை உடையவர்க்கும், அளவு இன்றி - துணைவலி யில்லாமல், ஏற்ற கருமம் - எடுத்துக்கொண்ட செயலை, செயல் ஆகாது - செய்து முடித்தல் இயலாது.

மிக்க வல்லமை யுடையவர்க்கும் ஒரு செயலைச் செய்து முடிக்கத் துணைவலி வேண்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Sat Nov 09, 2013 10:02 am

உருவமும் குணமும்

12. மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்
உண்ணீரு மாகி விடும்.

(பதவுரை) 1தாழை மடல் பெரிது - தாழம்பூ இதழ்களினாலே பெரிதாயிருக்கின்றது, மகிழ் கந்தம் இனிது - மகிழம்பூ (இதழ்களினாலே சிறிதாயினும்) மணத்திலே (தாழம்பூவினும்) இனிதாயிருக்கின்றது, கடல் பெரிது - சமுத்திரம் பெரிதாயிருக்கிறது, மண் நீரும் ஆகாது - ஆயினும் அதிலுள்ள நீர் (உடம்பழுக்கைக்) கழுவுவதற்குத் தக்க நீருமாகாது; அதன் அருகு சிற்றூறல் - அதன் பக்கத்தே சிறிய மணற்குழியிற் சுரக்கும் ஊற்றுநீர், உண் நீரும் ஆகும் - குடிக்கத்தக்க நீருமாகும்; (ஆதலினால்) உடல் சிறியர் என்று இருக்கவேண்டா - (ஒருவரை) உருவத்தினாலே சிறியவரென்று (மதியாமல்) இருக்கவேண்டா.
மண்ணுதல் - கழுவுதல், ஏ: அசை.

உருவத்தாற் பெரியவர் குணத்தாற் சிறியவராதலும் உருவத்தாற் சிறியவர் குணத்தாற் பெரியவராதலும் உண்டு
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by sawmya Sat Nov 09, 2013 11:55 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by ஸ்ரீராம் Sat Nov 09, 2013 3:09 pm

சூப்பர் 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Sun Nov 10, 2013 8:50 am


அறிவற்றவனின் இழிவு

13. கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம்.

(பதவுரை) கவை ஆகி - கிளைகளை உடையனவாகியும், கொம்பு ஆகி-கொம்புகளை உடையனவாகியும், காட்டு அகத்து நிற்கும் - காட்டினுள்ளே நிற்கின்ற, அவை - அந்த மரங்கள், நல்ல மரங்கள் அல்ல - நல்ல மரங்கள் ஆகா; சவை நடுவே - கற்றோர் சபையின் நடுவே, நீட்டு ஓலை - (ஒருவர்) நீட்டிய ஓலையை, வாசியா நின்றான் - படிக்கமாட்டாமல் நின்றவனும், குறிப்பு அறியமாட்டாதவன் - பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே, நல்மரம் - நல்ல மரங்களாம்.


கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராய்ப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரத்தினுங் கடையாவர்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by sawmya Sun Nov 10, 2013 10:49 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Mon Nov 11, 2013 10:02 am

போலி அறிவின் புன்மை

14. கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

(பதவுரை) கல்லாதான் - கற்கவேண்டியவற்றை (முறைப்படக்) கல்லாதவன், கற்ற கவி - (கற்றோர் கூறுவதைக் கேட்டு) ஒரு கவியைக் கற்றுக்கொண்டு சொல்லுதல், கானம் மயில் ஆட - காட்டிலுள்ள மயில் (தன் அழகிய தோகையை விரித்து) ஆட, கண்டு இருந்த வான் கோழி - அதைப் பார்த்துக்கொண்டிருந்த வான்கோழியானது, தானும் அதுவாகப் பாவித்து - தன்னையும் அம் மயிலாகவே நினைத்துக்கொண்டு, தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினாற் போலும் - தானும் தனது அழகில்லாத சிறகை விரித்து ஆடினாற் போலும்.



கல்லாதவன் கற்றவனைப்போல் நடித்தாலும் கற்றவனாகான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by sawmya Mon Nov 11, 2013 11:30 am

கைதட்டல் கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Tue Nov 12, 2013 9:36 am

தீயோர்க்கு உதவுதல் கேடு தரும்

15. வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல்-பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரங்
கல்லின்மே லிட்ட கலம்.

(பதவுரை) வேங்கை வரிப்புலிநோய்-வரிகளையுடைய வேங்கைப் புலியின் விடநோயை, தீர்த்த-போக்கிய, விடகாரி-விட வைத்தியன், ஆங்கு - அப்பொழுதே, அதனுக்கு - அப்புலிக்கு, ஆகாரம் ஆனால்போல் - இரையானாற்போல, பாங்கு அறியா - நன்றியறிவில்லாத, புல் அறிவாளர்க்கு - அற்ப அறிவினருக்கு, செய்த உபகாரம் - செய்யப்பட்ட உதவி, கல்லின் மேல் இட்ட கலம்-கல்லின்மேலே போடப்பட்ட மட்கலம்போல (அழிந்து, செய்தவனுக்கே துன்பத்தை விளைக்கும்.)

தீயோர்க்கு உதவி செய்தால் துன்பமே உண்டாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by sawmya Tue Nov 12, 2013 10:44 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by முழுமுதலோன் Wed Nov 13, 2013 11:17 am


அடக்கத்தின் சிறப்பு

16. அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன் வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு.

(பதவுரை) கொக்கு - கொக்கானது, மடைத்தலையில்-நீர் மடையினிடத்து, ஓடும் மீன் ஓட - ஓடுகிற சிறு மீன்கள் ஓடிக்கொண்டிருக்க, உறு மீன் - (இரையாதற்கேற்ற) பெரிய மீன், வரும் அளவும் - வரும் வரையும், வாடி இருக்கும் - அடங்கியிருக்கும்; (அதுபோல) அடக்கம் உடையார் - தக்க பகைவர் வரும் வரையும் அடங்கியிருப்பவரை, அறிவு இலர் என்று எண்ணி - அறிவில்லாதவரென்று கருதி, கடக்க - அவரை வெல்லுவதற்கு, கருதவும் வேண்டா - நினைக்கவும் வேண்டுவதில்லை.

அடக்கமுடையவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்குத் தப்பாது கேடுவரும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by sawmya Wed Nov 13, 2013 11:38 am

சூப்பர்
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

" முப்பது நாளும் மூதுரை " Empty Re: " முப்பது நாளும் மூதுரை "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum