தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘சின்னக் குற்றாலம்’ – கும்பக்கரை

View previous topic View next topic Go down

‘சின்னக் குற்றாலம்’ – கும்பக்கரை Empty ‘சின்னக் குற்றாலம்’ – கும்பக்கரை

Post by நாஞ்சில் குமார் Tue May 13, 2014 8:51 pm

[You must be registered and logged in to see this image.]


தேனி மாவட்டத்தின் குற்றாலமாகத் திகழ்கிறது, கும்பக்கரை. இங்கு கொட்டும் நீர்வீழ்ச்சி, தென் மாவட்டப் பகுதி மக்களை பெருமளவில் ஈர்த்து வருகிறது.
கும்பல்கரையே கும்பக்கரை என்று மருவியதாகக் கூறப்படுகிறது.

வன தெய்வங்களான மாட்சிநாயக்கன், வீரபுத்திரன், வைரவன், பூதநாட்சி, செழும்புநாட்சி, சோத்துமாயன், சின்ன அண்ணன், கருப்பணசாமி ஆகிய தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாகக் கூடுமாம். அதனால் இது கும்பல்கரை என்று முன்னர் அழைக்கப்பட்டதாம்.

இங்கு விழும் நீர்வீழ்ச்சி, கொடைக்கானல் அருகில் உள்ள பாம்பாறு பகுதியில் தோன்றி பாறைகளிடையே பாய்ந்து வந்து கொட்டுகிறது. குளிப்பதற்கும் கண்டுகளிப்பதற்கும் திகட்டாத நீர்வீழ்ச்சி இது.

இந்நீர்வீழ்ச்சிக்கு முன்னாலும், சாலையின் இருபுறங்களிலும் மா, தென்னந்தோப்புகள், பல்வேறு வகை மரங்கள் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டுகின்றன. மலைப் பகுதியில் நீண்ட தூரம் பயணித்து வருவதால் கும்பக்கரை அருவி நீர், மூலிகை மற்றும் தாதுப் பொருள்களின் நற்குணங்களை அள்ளிக் கொணர்ந்து சேர்க்கிறது.

இந்நீர்வீழ்ச்சியில் தண்ணீர் செல்லும் தடம், வழுக்குப் பாறை, யானைக் கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படுகிறது. யானைக் கெஜம், உரல் கெஜம் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீராடி மகிழ்கின்றனர்.
மழைக் காலத்தில் நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் அதிகமாகவும், கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கும். நீரின் வேகம் அதிகமாகும்போது அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் கொடைக்கானல் அடிவாரத்தில் பள்ளத்தாக்குப் பகுதியில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. மதுரையிலிருந்து 89 கி.மீ. தொலைவில் உள்ளது. விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.

அருகில் உள்ள மக்கள், ஓர் உள்ளூர் சுற்றுலா போலச் சென்று ஒரு நாளை உல்லாசமாகக் கழிக்க ஏற்ற இடம் கும்பக்கரை.

“உள்ளூர் ‘பிருந்தாவனம் வைகை அணை:

ஆண்டிபட்டியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் பெரியகுளம் சாலையில் அமைந்துள்ளது வைகை அணை. வைகை ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 111 அடி உயரமுள்ள இந்த அணையில் 71 அடி வரை நீர் தேக்கிவைக்கப்படுகிறது. இந்த அணையைச் சுற்றி அழகான பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. “உள்ளூர் பிருந்தாவனம்’ என்று இது அழைக்கப்படுகிறது.

சோத்துப்பாறை அணை: பெரியகுளத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள இந்த அணை, வராக நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது. இதுவும் ஓர் அழகான சுற்றுலா மையம்.

சுருளி நீர்வீழ்ச்சி: கம்பத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்நீர்வீழ்ச்சி, மாநிலத்தின் அனைத்து இடங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இங்கு நீர்வீழ்ச்சி இரண்டு கட்டமாக விழுகிறது. காட்டுக்குள் இருக்கும் இந்நீர்வீழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் தனித்தனியே நீராடுவதற்கு வசதி உள்ளது.

மாவூத்து வேலப்பர் கோயில்: இயற்கை எழில்கொஞ்சும் வருசநாடு மலைத் தொடரில் இக்கோயில் அமைந்துள்ளது. மழைக் காலத்தில் மாமர வேர்களில் நீர் தேங்கி பின்னர் ஊற்றாக பிரவகிப்பதால் இது மாவூத்து என்று பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது

இந்த ஊற்று நீரில் சமைத்துச் சாப்பிட்டால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை.

மேகமலை நீர்வீழ்ச்சி: தேனியிலிருந்து 54 கி.மீ. தொலைவில் கோம்பைத் தொழு கிராமத்துக்கு அருகில் மேகமலை நீர்வீழ்ச்சி உள்ளது. மேகமலைப் பகுதியில் உற்பத்தியாகும் இந்நீர்வீழ்ச்சி, “சின்னச் சுருளி’ என்று அழைக்கப்படுகிறது.


நன்றி: தினமணி - வலைப்பூ
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

‘சின்னக் குற்றாலம்’ – கும்பக்கரை Empty Re: ‘சின்னக் குற்றாலம்’ – கும்பக்கரை

Post by ஸ்ரீராம் Wed May 14, 2014 12:23 am

அருமை அருமை
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum