தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

View previous topic View next topic Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 2:03 pm

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Food1


மளிகை & நாட்டு மருந்துக் கடைச் சரக்குகள்:


சுக்கு :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றுஞ் செய்கையும், பசித்தீயை தூண்டும் செய்கையும் உண்டு. இதனால் வயிற்று வலி, வயிற்றுப்பொருமல், அசீரணம், பேதி, குன்மம், சூலை, வாய்வ முதலியன குணமாகும். சுக்குத்தூளில் திரிகடிப்பிரமாணம் எடுத்து சமன் கற்கண்டு சேர்த்து பாலில் அருந்திவர வாய்வு நீங்கும். சுக்கிற்க்கு உப்பை அரைத்து கவசஞ் செய்து நெருப்பணலில் வாட்டவும். இப்படி 10முறை செய்து இடித்து சூரணித்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 1/4முதல் 1/2 வராகனெடை வீதம் அருந்தி வர, வயிற்றுவலி, வயிற்றுப்பிசம், அசீரணம், உஷ்ணபேதி, குன்மம், சூலை முதலியன குணமாகும்.


மிளகு :- இதற்கு முறைசுர மகற்றி, வாதமகற்றி செய்கையும் உண்டு. இதனால் குளிர்சுரம், வாய்வு, சுரம், அசீரணம், முதலியன குணமாகும். மிளகை இளம் வறுப்பாக வறுத்தி டித்துச் சூரணத்தில் நாலைந்து குன்றினெடை வீதம் சமன் கற்கண்டு தூள் கூட்டிப் பாலில் கொடுத்துவர இருமல், தொண்டை, ரணம், வாய்வு, வயிற்றுவலி, முதலியன குணமாகும். மிளகைத் தனியாகவாவது அல்லது தும்பைப்பூவுடன் சேர்த்தாவது முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வர குளிர்சுரம், முறைச்சுரம் முதலியன குணமாகும்.



திப்பிலி :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றல், கபத்தை சமணப்படுத்துதல் சீரணசக்தியை உண்டாக்கல் முதலிய செய்கையு முண்டு. இதனால் இருமல், தொண்டை, கபக்கட்டு, இரைப்பு நோய், அசீரணம், பேதி, முதலியன குணமாகும். திப்பிலி யை இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்தில் திரிகடிப்பிரமாணம்தேனுடன் சேர்த்து அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு, கபம் முதலியன குணமாகும். திப்பிலியுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்து இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்து தேனில் கொடுத்து வர விக்கல், வாந்தி, அரோசகம், அசீரணபேதி, பசியின்மை முதலியன குணமாகும்.




கடுக்காய் :- இது துவர்ப்புச்சுவை யுடையதாக இருப்பினும் மலத்தைப் போக்கும் செய்கையுடையது.இதனால் வாதகப நோய்கள் காமாலை, பெருவயிறு, குன்மம், விரணம் முதலியன குணமாகும். கடுக்காய்த்தோலை குடிநீரிட்டு விரணம், இரத்தமூலம், பெரும்பாடு, வாய், ரணம் முதலிய நோய்களில் அவ்வவ்விடங்களைக் கழுவிவர நல்ல பலனைத் தரும். கடுக்காய்ச் சூரணம் 1/2 வராகனெடை அருந்த மலங்கழியும். கடுக்காய் சூரணத்தில் வேளைக்கு 5முதல் 10 குன்றி வீதம் காலைதோறும் தினம் 1 வேளை சாப்பிட்டு வர உந்திரணம், வயிற்று வலி, மூலம், குன்மம், வாதகப நோய்கள் முதலியன குணமாகும். கற்பமாகவும் பயன் படும்.



நெல்லிக்காய் :- பச்சை நெல்லிக் காய்க்கு குளீச்சி யுண்டாக் கும் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். பச்சை நெல்லிக்காய்ச்சாறுடன் சமன் சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து 2முதல் 4 தேக்கரண்டி வீதம் அருந்தி வர வாந்தி, அரோசகம், இரத்தபித்தம், நீர்சுருக்கு முதலியன குணமாகும். ஒரு தோலா நெல்லிவற்
றலை ஒர் இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர பித்தாதிக்கம், உட்சூடு, முதலியன குணமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty Re: நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 2:05 pm

தான்றிக்காய் :- இதற்கு துவர்ப்புச்செய்கையும், கோழைஅகற்றுஞ் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். இதனால் சுவாசம், காசம், இரத்தபித்தம், கீழ்மேகம், முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோல் 1/4 பலம் எடுத்து சூரணித்துச் சமன் சர்க்கரை சேர்த்து நீரிலாவது அல்லது தேனுடனாவது அருந்தி வர உஷ்ண இருமல்,கபக்கட்டு, ரணம், தொண்டை, நீர்சுருக்குபிரமேகம் முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோலைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்துவர வாய் ரணம், பல் வலி முதலியன குணமாகும். விரணங்களை கழுவிவர விரைவில் ஆறும்.



சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்
தீயைத்தூண்டல், சீரண சக்தியை உண்டாக்கல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கையும்உண்டு. இதனால் அசீரணம், அதிசாரம் கிரகணி, பித்தாதிக்கம், முதலியன குணமாகும். சீரகத்தைதனியாக வாவது, அல்லது சிறிது மிளகு சேர்த்தாவது வறுத்து இடித்துச் சூரணித்து1/4 அல்லது1/2 வராகனெடைவீதம் நெய்யில்கொள்ள
மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும். சீரகத்தை இஞ்சிச் சாற்றிலும், பழச் சாற்றிலும், ஊறவைத்து உலர்த்தி இடித்துச்சூரணித்து சமன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக கொண்டு வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடைவீதம் தினம் இரு வேளையாக அருந்திவர பித்தாதிக்கம்,வாந்தி, அரோசகம், அசீணம் முதலியன குணமாகும். சீரகத்தை எண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி வடித்து தலைமுழுகி வர பித்தமயக்கம், நேத்திரரோகம்
தலைபாரம் முதலியன குணமாகும்.



கருஞ்சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், சூதகச் சிக்கலை அகற்றல், கிருமிகளை நாசம் செய்தல் முதலிய செய்கையும்உண்டு. இதனால் கரப்பான், விரணம், வயிற்றுப் பொருமல், கிருமிநோய், குன்மம், சூதகச் சிக்கல் முதலியன குணமாகும். இதனுடன் சமன் சுக்கு சேர்த்து இடித்துச் சூரணித்து 1/4 விராகனெடை வீதம் நீரில் கொடுத்துவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, மார்புவலி, குன்மசூலை முதலியன குணமாகும். இதை காடிவிட்டரைத்து கரப்பான், சொறி, சிரங்கு, சர்மபடைகள் முதலியவற்றிற்குப் பூச குணமாகும்.



பெருஞ்சீரகம் :- இதுவே சோம்பு எனப்படும். இதனால்வெட்டை, நீர்சுருக்கு, அசீரணம், வயிற்றுப் பூசம், குன்மம், இருமல் சுவாசம் முதலியன குணமாகும். இதனை இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து 1/4 வராகனெடைவீதம் சமன்சர்க்கரை சேர்த்து அருந்திவரலாம். இதனை குடிநீர் அல்லது தீநிர் செய்தும்
வழங்குவதுண்டு.



இலவங்கம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத்தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, வாந்தி, கண்ணோய், பல்வலி முதலியன குணமாகும். இதை நீர்விட்டரைத்து நெற்றியில் தடவ சலதோஷம், நீரேற்றம் தலைபாரம் முதலியன குணமாகும். இதன் ஊறல் குடிநீர் வாந்தி
பேதி முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு. இதன் தைலம் பல்வலிக்குத் தடவ குணத்தைத் தரும். இன்னும் இதனை இருமல், இரைப்பு முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty Re: நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 2:06 pm

இலவங்கப்பட்டை :- இதற்கு துவர்ப்புச்செய்கை உண்டு.இதனால் பேதி, சீதபேதி, தாதுநட்டம் முதலியன குணமாகும். இதனைத் தனியாகவாவது அல்லது காய்ச்சுக்கட்டியுடன் சேர்த்தாவது சூரணஞ் செய்து கொடுத்துவர பேதி, சீதபேதி, கிரகணி முதலியன குணமாகும்.



ஏலக்காய் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல்,பசித்தீயைத்தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு.இதனால் வாந்தி தாகம், பித்தாதிக்கம், உஷ்ணபேதி முதலியன குணமாகும். ஏலக் காயை சதைத்து நீரிட்டு காய்ச்சி அருந்த தாகம், பித்தம், வாந்தி முதலியன குணமாகும்.



சிறுநாகப்பூ :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல்,பசித்தீயைத்தூண்டல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, சீதபேதி, வாய்வு, இருமல், விரணம் முதலியன குணமாகும். இதனை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து வைத்துக் கொண்டு வேளைக்கு 1/4, 1/2 வராகனெடைவீதம் அருந்திவர அசீரணம், பேதி, சீதபேதி, இரத்தமூலம்,பெரும்பாடு, கபத்தோடு கூடிய இருமல் முதலியன குணமாகும்.




வெந்தயம் :- இதற்கு மலத்தைக்கட்டல் , உள் அழலை ஆற்றல், உடலை உரமாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, சீதபேதி, இரத்தபித்தம், பிரமேகம், கணச்சூடு, அஸ்திசுரம் தாது நட்டம் முதலியன குணமாகும். வெந்தயத்தை நீரிலிட்டு வேகவைத்து, தேன் விட்டு கடைந்து அருந்தி வரலாம். இதனால்
மேற்கூறப்பட்ட பலன்கள் உண்டாகும்.



கடுகு :- இதற்கு மேலுக்கு வெப்பமுண்டாக்கி, தடிப்புண்டாக்கி செய்கைகளும்; உள்ளுக்குள் வாந்தி யுண்டாக்கல், சீரணத்தை யுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பசிமந்தம், வாததோஷம், விக்கல் முதலியன குணமாகும். 1 முதல் 4 வராகனெடைக் கடுகை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வாந்தியாகும். இது வமன சிகிச்சைக்கு பயன்படும். கடுகுத்தூள் 1-2 வராகனெடை ஆழாக்கு வெநீரில் ஊறல் குடிநீராகச் செய்து வடித்துக் கொடுக்க விக்கல் குணமாகும். வாதரோகங்கட்கு
கடுகை அரைத்து பற்றிடுவதுமுண்டு.



ஓமம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவைஅகற்றல், பசித்தீயைத்தூண்டல், மலத்தைக் கட்டல்முதலியசெய்கைகள் உண்டு. இதனால் மந்தம், அசீரணபேதி, வயிற்றுப் பொருமல் முதலியன குணமாகும். ஓமத்துடன் சமன் மிளகு சேர்த்து இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து திரிகடிப் பிரமாணம் வெல்லத்துடன்சேர்த்து அருந்திவர மந்தம், அசீரணபேதி, வயிற்றுவலி முதலியன குணமாகும். ஓமத்துடன் பொடுதலை சேர்த்துக் குடிநீர்செய்து குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சலுக்கு வழங்குவதுண்டு. ஓமத் தீநீர் செய்தும் வழங்குவதுண்டு.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty Re: நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 2:07 pm

பெருங்காயம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றல், இசிவை யகற்றல், ரிதுவை யுண்டாக்கல் முதலியச் செய்கைக ளுண்டு. இதனால் வயிற்றுப்புசம், அசீரணம், குன்மம், வாதாதிக்கம், சூதகச்சிக்கல், செவிநோய் முதலியன குணமாகும். பெருங்காயத்தை நீர் விட்டரைத்து சீதள சைத்திய வீக்கங்களுக்கு மேலுக்கு பற்றிட குணமாகும். காயத்தை நல்லெண்ணெயிலிட்டுக்காய்ச்சி காதில்விட காதுவலி குணமாகும். காயத்தைச் சிறிது நெய்விட்டு பொரித்துப் பொடித்து 2-3 குன்றிஎடைவீதம் வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம், அசீரணம் முதலியன குணமாகும். பொரித்த காயத்துடன் வெள்ளைப் பூண்டும் வெல்லமும் சேர்த்து அரைத்துக் கொடுத்துவர மாதர்களுக்கு பிரசவத்திற்குப்பின்காணும் உதிரச்சிக்கலை ந்ன்கு வெளிப்படுத்தும்.




கடுகுரோகணி :- இதற்கு மலத்தைப் போக்கல், முறைசுரமகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதைத் தனியாகவாவது அல்லது இதர சரக்குகளுடன் சேர்த்தாவது மலக்கட்டுடன் கூடிய சுரத்திற்குக் குடிநீரிட்டு வழங்குவதுண்டு.



சாதிக்காய் :- இதற்கு முக்கியமாக வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. மற்றும் காமத்தைப் பெருக்கல், உடலுக்கு உரம்தரல் முதலிய செய்கைகளும், அதிக அள்வில் மயக்கத்தை உண்டாக்கும் செய்கையும் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். ஒரு பங்கு சாதிக்காயுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்திடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடிபிரமாணம் சமன் சர்க்கரை சேர்த்து அருந்திவர முற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும். சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலுக்கு சாதிபத்திரி யென்று பெயர். இதற்கும் சாதிக்காயின் செய்கையே உண்டு. இதையும் சாதிக்காயைப்போலவே பேதி கிரகணி முதலியவைகட்கு வழங்கும் மருந்துகளிலும், தாது விருத்திக்குரிய லேகியங்களிலும் சேர்ப்பதுண்டு.



தாளிசபத்திரி :- இதற்கு கோழையகற்றல், பசித்தீயைத் தூண்டல், மலத்தை கட்டல், உடலுக்கு உரம்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அசீரணபேதி, நாட்பட்ட அதிசாரம், கிரகணி, துர்பலம், நாட்பட்ட இருமல், இரைப்பு, அஸ்திசுரம் முதலியன குணமாகும். இதன் சூரணத்தில் 1/4, 1/2 வராகனெடை வீதம் ஆடாதோடை சுரசத்துடன் சேர்த்து தேன் கூட்டிக் கொடுத்துவரஇருமல், இரைப்பு, கபக்கட்டு முதலியன குணமாகும். தாளிசபத் திரி சூரணத்துடன் சமன் திரிகடுகு சூரணம் சேர்த்து அருந்திவர பசி மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும்.




மாசிக்காய் :- இதற்கு மலத்தைக் கட்டச்செய்தல், விரணத்தை ஆற்றல், உதிரப்போக்கைத்தடுத்தல், உடலுக்கு உரந்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அக்கரம், விரணம், அதிசாரம், உட் சூடு, கணச்சூடு, சீதபேதி முதலியன குணமாகும். உடலுக்கு பலந்தரும். இதனை நீர் விட்டிழைத்து வாய் ரணம், நாசி விரணம், ஆசனவெடிப்பு, மூலவிரணம், தீச்சுட்ட புண் முதலியவைகட்கு மேலுக்குத் தடவிவர விரைவில் குணமாகும். இதன் சூரணத்தில்5-முதல் 10-குன்றி வீதம் தினம் இருவேளையாகக் கொடுத்துவர இரத்தகாசம், இரத்த வாந்தி இரத்தமூத்திரம், பேதி, சீதரத்த பேதி, பெரும்பாடு முதலியன குணமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty Re: நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 2:09 pm

அரத்தை :- இதில் சிற்றரத்தை பேரரத்தை என இருவகைஉண்டு. இவைகளின் குணம் ஏறத்தாழ ஒன்றேயாகும். இதற்கு முக்கியமாக கோழையை அகற்றுஞ் செய்கையும், வெப்பத்தைத் தணிக்குஞ் செய்கையும் உண்டு. இதனால் இருமல், ஈளை, கபக்கட்டு, சுரம், வாயு முதலியன குணமாகும். இதன் தனி சூரணம் 1/4- வராகனெடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து நெய் அல்லது தேனில் அருந்திவர இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும்.வாதகப சுரக் குடிநீர்களிலும் இதனைச் சேர்த்து வழங்குவதுண்டு.



அதிமதுரம் :- இதற்கு கோழையகற்றல், உள் அழலைத் தனித்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் இருமல், தாகம் தொண்டைரணம், உடல் காங்கை முதலியன குணமாகும். தனி அதிமதுரச் சூரணம் 5-முதல் 10-குன்றி எடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து சிறிது காய்ச்சிய பாலில் அருந்திவர உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல், தொண்டைரணம், கபக்கட்டு முதலியன குணமாகும்.



அக்கராகாரம் :- இதற்கு உமிழ் நீரைப் பெருக்கல், வெப்பமுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் நாவரட்சி, தாகசுரம், ஜன்னிதோஷம் முதலியன குணமாகும். இதில் ஓர் துண்டை வாயிலிட்டு மென்று சுவைத்து வரலாம். அல்லது ஊறல் குடிநீரிட்டும் வழங்கலாம். இதனால் மேற்கண்ட குணங்கள்
ஏற்படும்.



கோஷ்டம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல்வியர்வையைப் பெருக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் வாதம், சுரம், இருமல், ஈளை, தோஷசுரம், வீக்கம் முதலியன குணமாகும். இதனைப் பெரும்பாலும் சுரக் குடிநீர்களில் சேர்த்து வழங்குவதுண்டு.



வசம்பு :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், பசித்தீயைத் தூண்டல், முறை சுரத்தை தடுத்தல், கிருமிகளை நாசஞ் செய்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சர்பகீட தாவர விஷங்கள், சுர சன்னிதோஷம், மாந்தக் க்ழிச்சல், மலக்கிருமி முதலியன குணமாகும். வசம்பை ஊறல் குடிநீரிட்டுக் கொடுக்க குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சல், முறை சுரம் முதலியன குணமாகும். இதைச் சுட்டுக் கரியாக்கி ஆமணக்கு நெய்யில் குழைத்து குழந்தைகளின் அடிவயிற்றில் பூச வயிற்றுப் பொருமல்,வயிற்றுவலி முதலியன குணமாகும். வசம்பிற்கு மஞ்சளை அரைத் துக் கவசமிட்டு கருகும்படி சுட்டுக் கரியாக்கித் தேனில் கொடுத்து வர நேர்வாளத்தினால் ஏற்பட்ட நிற்காதபேதி, வாந்தி, வயிற்று வலி முதலியன குணமாகும்.



அதிவிடயம் :- இதற்கு மலத்தைக் கட்டல், முறைசுரமகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சுரம், முறைசுரம், பேதி முதலியன குணமாகும். இதன் தனிச்சூரணம் 1/4-1/2 வராகனெடை வீதம் தேனில் வழங்கலாம். அல்லது இதனைத் தனியாகவாவது அல்லதுமற்றச் சரக்குகளுடன் சேர்த்தாவது குடிநீரிட்டு வழங்குவதுண்டு. இது பேதியுடன் கூடிய சுரத்திற்குச் சிறந்தது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty Re: நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 2:12 pm

இன்னும் இத்துடன் சுக்கு, மிளகு, ஓமம் வாய்விளங்கம், இந்துப்பு இவைகளைச் சமனெடையாகச் சேர்த்திடித்துச் சூரணித்து வேளைக்கு 1-2 வராக னெடை வீதம் கொடுத்துவரலாம். அல்லது 1 பலம் நிலாவாரை யுடன், 1 வராகனெடை சுக்குத்தூள் சேர்த்து ஆழாக்கு வெந்நீரில் ஊறல் குடிநீராகச் செய்து 1/4,1/2 ஆழாக்கு வீதம் சிறிது இந்துப்புச் சேர்த்து வழங்கி வரலாம். இதனால் வயிற்றுப்புசம், வயிற்றுவலி, மலபந்தம், வாய்வு, கைகால் கீல்களின் பிடிப்பு முதலியன குணமாகும்.




சிவதைவேர் :- இதற்கு பேதியை உண்டாக்குஞ் செய்கையுண்டு. இதனால் பழையமலம், மேல்நோக்கும் வாய்வு, பித்தவாத தொந்தம், பாலகிரக தோஷம் முதலியன குணமாகும். இதை வழங்குவதற்கு முன்பு சுத்தி செய்துக்கொள்ளவேண்டும். அதாவது இதன் நடுநரம்பை நீக்கிப் பாலில் பிட்டவியலாகச் செய்தெடுத்துக்கொள்வதாம். இது பாலர்கட்குக் காணும் மாந்தம், தோஷம், மலச்சிக்கல் முதலிய பிணிகட்கு வழங்கச் சிறந்த சரக்காகும்.



இதன் தனிச் சூரணம் 1/4 1/2 வராகனெடை வீதம் தனியாகவாவது அல்லது அத்துடன் சமன் இந்துப்பு சேர்த்தாவது வழங்க நன்கு பேதியாகும். அல்லது சுத்தி செய்த சிவதைவேர்ச் சூரணம் 4-தோலாவுடன் திப்பிலிச்சூரணம் 1-தோலா சேர்த்து, இவைகட்குச் சமனெடை சர்க்கரை கலந்து வைத்துக்கொண்டு, இதில் வேளைக்கு 10-20 குன்றி எடை வீதம் கொடுத்துவர மலசிக்கல் நீங்கும். வயிற்றுவலி, மலாசயக் கிருமி முதலியவைகளும் குண
மாகும்.



கரியபோளம் :- இதனை மூசாம்பரம் எனவுங் கூறுவர். இதற்கு பேதியை உண்டாக்கல், ருதுவை யுண்டாக்கல், பசித்தீயைத் தூண்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் மேகசூலை, வீக்கம், வயிற்றுவலி, குன்மம், சூதகச்சிக்கல் முதலியன குணமாகும். இதில் 1-முதல் 3-குன்றி எடை கொடுக்க மலத்தைப்போக்கும் இத்துடன் சமன் காயம் சேர்த்து தேன் விட்டுஅரைத்து வேளைக்கு 2 குன்றி வீதம் தினம் இரு வேளையாக கொடுத்துவர சூதகச்சிக்கல் சூதக வயிற்றுவலி முதலியன குணமாகும். இதை முட்டை வெண்கரு விட்டுஅரைத்து, கீல்வாயு, விரதவீக்கம், மேகக்கட்டி முதலியவை
கட்கு பற்றிட்டு வர குணமாகும்.



கழற்ச்சி :- இதன் விதை, வேர்பட்டை இவைகட்கு இசிவையகற்றல், முறை சுரத்தை தடுத்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் அண்டவாதம், வயிற்றுவலி, சூலை, சுரம் முதலியன குணமாகும். இதன் வேர்பட்டையை சூரம் 5-7 1/2 குன்றி எடை வீதம் கொடுத்து வர முறை சுரம் முதலியன குணமாகும். இதில் வேளைக்கு 10-15 குன்றி வீதம் தினம் இரு வேளையாக கொடுத்துவர அண்டவாய்வு, வயிற்றுவலி, சுரம் முதலியன குணமாகும். கழற்ச்சிப் பருப்பை முட்டை வெண்கரு விட்டுஅரைத்து, அண்ட வீக்கத்திற்க்கு மேலுக்குப் பற்றிட்டு வர அண்ட வீக்கம் குணமாகும்.



சடமாஞ்சி :- இதற்கு இசிவையகற்றல், கோழயை அகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் காசம், இரைப்பு, இரத்த பித்தம், சுரம் முதலியன குணமாகும். இதன் சூரணம் 2 வராகனெடை எடுத்து ஆழாக்கு வெந்நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து 2அல்லது3 வேளையாக கொடுத்து வர சூதகச்சன்னி, வலிமூர்ச்சை, சுரம் முதலியன குணமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty Re: நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by முழுமுதலோன் Sat Dec 14, 2013 2:13 pm

சேராங்கொட்டை :- இதற்கு மேகநோய்களை போக்குஞ்செய்கையும், உடலைத்தேற்றும் செய்கையும் உண்டு. இதனால் சொறி சிரங்கு, மேகவிரணம், கிரந்தி, குட்டம், காணாக்கடிவிஷம், வாத ரோகம், குன்மம் முதலியன குணமாகும். இதனைத் தனியாக வழங்குவதில்லை. பெரும்பாலும் இதரச்சரக்குகளுடன் சேர்த்து,வல்ல்லாததி லேகியம், முதலியன செய்து வழங்குவதுண்டு, இதனால்
மேற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும். ஆனால் இதனை முறைப் படி நன்கு சுத்தி செய்து மருந்துகளில் சேர்க்க வேண்டும்.


பறங்கிச்சக்கை :- இதற்கு மேகநோய்களை போக்குஞ் செய்கையும்,உடலைத்தேற்றும் செய்கையும் உண்டு. இதனால் சொறி சிரங்கு சர்மவியாதிகள், மேக விரணம்,குட்டம், கடி விஷம், வாதப்பிணிகள், நீரிழிவு, தகம் முதலியன குணமாகும். பறங்கிச்சக்கைகளின் மேல் தோலை நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி ஓர் கோப்பையிலிட்டு மூழ்க வல்லாரைச்சாறு விட்டு 10 நாள் இரவியில் வைத்து, முற்றுலர்ந்த பின்பு இடித்துச் சூரணித்து வேளைக்குத் திரிகடிப் பிரமாணம் தினம் இரு வேளையாக அருந்திவர மேற்கூறப்பட்ட நோய்கள் குணமாகும்.


நன்னாரிவேர் :- இதற்கு சிறுநீரை பெருக்கல், உள் அழலை ஆற்றல், உடலைத்தேற்றல், இரத்தத்தை சுத்திசெய்தல், முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பித்தாதிக்கம், உட்சூடு, மதுமேகம் தாகம், சொறி சிரங்கு, கிரந்திமுதலிய மேகப்பிணிகள், நீர்ச்சுருக்கு முதலியன குணமாகும். நன்னாரி வேர்ப்பட்டையை உலர்த்தி இடித்துச் சூரணித்து வேளைக்கு 1/2-1 விராகனெடை வீதம் சமன் சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பசும்பாலில் அருந்திவர மேற்கூறிய பிணிகள்குணமாகும். இன்னும் இதனைக் குடிநீராய்ச்செய்து பால் சேர்த்து அருந்தி வரலாம். மணப்பாகு செய்தும் வழங்குவதுண்டு.

http://iruvarullam.blogspot.in/
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty Re: நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by kanmani singh Sat Dec 14, 2013 2:26 pm

சூப்பர் 
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள் Empty Re: நம் அன்றாட உணவு பொருட்களின் பயன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum