தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


"படித்ததில் பிடித்தது"

View previous topic View next topic Go down

"படித்ததில் பிடித்தது" Empty "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:50 am

ஒரு மனிதனின் மிகப் பெரிய இரண்டு ஆயுதங்கள்:

1. மௌனம்: நமக்கு பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

2. புன்னகை: அதையும் மீறி பிரச்சனைகள் வந்து விட்டால் புன்னகையால் வென்று விடலாம் ..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:52 am

கண்ணதாசன் வரிகள்

அழும் போது தனிமையில் அழு,

சிரிக்கும்போது நண்பர்களோடு சிரி!,

கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்,

தனிமையில் சிரித்தால்

பைத்தியம் என்பார்கள்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:53 am

மிகப்பெரிய லட்சியத்துக்காக விசுவாசத்தோடும் நம்பிக்கையோடும் கடமையைச் செய்தால் - உடனடியாக அங்கிகரிக்கப்படாவிட்டாலும் - காலப்போக்கில் சமுதாயத்துக்கு நீடித்த நல்ல பலன்கள் அதனால் உறுதியாக ஏற்ப்படும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:54 am

நமது முன்னேற்றத்தை தடுக்கும் ஏழு தடைகள்:

வெட்கம் :- ( Shyness )

ஒரு தொழிலை செய்யும்பொழு
செய்யும்பொழுதோ அதனை நம்ம
செய்ய முடியுமா ,
அதற்கு நமக்கு தகுதி இருக்கா ,அல்லது
தொல்விடைந்தால்
மற்றவர்கள்
கேலி செய்வார்களே என்று வெட்பட்டால்
முன்னேறமுடியாது.

பயம் :- Fear

இதனை நம்மால் செய்ய
முடியுமா ,அதாவது இந்த
செயலை
நம்மால் செய்ய முடியுமா என
பயப்படுவது.

தாழ்வுமனப்பான்மை Poorself-
image )
என்று,
அவங்களுக்கு தைரியம்
இருக்கு எனக்கு இல்லை ,அவர்கள
அதற்கான
தகுதி இருக்கு நமக்கு இல்லை என்று
நம்மை நாமே
தாழ்த்திக்கொள்ளல்

நாளையவாதி :-(Procrastination )
எந்த செயலையும்
நாளை நாளை என
தள்ளிப்போட்டுக்கொண்டே
செல்லுதல் .

சோம்பல் :- ( Lazyness )

சோம்பல் பட்டுக்கொண்டு எந்த
செயலையும் செய்யாமல்
இருப்பது

பிற்போக்கு பழக்க வழக்கம் :-
( Negative Habits )

பிற்போக்கான எண்ணங்கள்
பிற்போக்கு செயல்கள்
ஆகியவற்றால் பிற்போக்கு பழக்க
வழக்கங்கள்

மூடநம்பிக்கை :- (Superstition)

கை ரேகை பார்த்து வாழ்வதை விட
கைரேகை தேய
உழைப்பவனே சிறந்தவன்
நமது வெற்றிக்கு தடையாக
இருக்கும் மூட
நம்பிக்கை ,சம்பிரதாயங்கள் ,பழக்க
வழக்கங்கள்
ஆகியவற்றை தூக்கி எறிய
வேண்டும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:55 am

கோபத்தின் உச்சியிலும் ஒரு பெண்ணிடம் தகாத வார்த்தை பேசாததிலும்,

ஒரு பெண்ணை ரசிக்கிறேன் என்ற பெயரில் அவள் கூனிக் குறும்படி அவள் அங்கங்களை வர்ணிக்காததிலும்,

எந்த சூழ்நிலையிலும் ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாகாமல் இருத்தலிலும் தான்,

ஆண்மையின் வீரம் இருக்கிறது. உடலில் இருப்பதல்ல வீரம். செய்யும் செயலிலும்,பேசும் வார்த்தைகளிலும், மனதில் இருக்கும் எண்ணங்களிலும் இருப்பதே வீரம். அத்தகைய வீரத்தை உடையவனே உண்மையான ஆணழகன்..
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:56 am

தோல்வி அடையும் போதெல்லாம்
இது தண்டனை அல்ல எச்சரிக்கை மட்டுமே
என்று நினைத்துக்கொள்ளுங்கள்...

ஜெயிக்கும் போதெல்லாம்
முடிவு அல்ல... துவக்கம் மட்டுமே
என்று நினைத்துக்கொள்ளுங்கள் ...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 10:57 am

ஒரு அறிவாளி தன்னைச் சூழ
அமர்ந்திருந்தவர்களுக்கு ஒரு நகைச்சுவை கூறினான்.
அனைவரும் நீண்டநேரம் கைதட்டிச் சிரித்தனர்.

பின்னர் மீண்டும் அவன் அதே நகைச்சுவையை கூறினான். அப்போதும் பலர் கைதட்டிச்சிரித்தனர்.

மீண்டும் அதே நகைச்சுவையை அவன் சொன்னான். அப்போது சிலர் மட்டும் சிரித்தனர்.

மீண்டும் அவன் அதே நகைச்சுவையைச் சொன்னபோது எவரும் சிரிக்கவில்லை.

அப்போது அந்த அறிவாளி சொன்னான் ஒரு நகைச்சுவையை மீண்டும் மீண்டும் சொல்லும்போது தொடர்ந்து உங்களால் சிரித்து மகிழமுடியவில்லை
அல்லவா? ஆனால் எதற்காக நாம் எல்லோரும்
வாழ்வில் நடந்த ஒரு சில துன்பங்களை மட்டும் மீண்டும் மீண்டும் நினைத்து கவலைப்படுகிறோம்?
இதேபோல ஒரு துன்பதிற்காக வாழ்நாள் முழுவதும் எதற்காக கவலைகொள்ளவேண்டும் ??
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:03 am

நாட்டில் போர் நடந்து கொண்டிருந்தது.

அரசாங்கம் "குடிமக்கள் அனைவரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்" என்று ஒரு உத்தரவு போட்டது.

ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.

உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..

"அய்யா.. தாங்கள் இதுவரை நிதி தரவில்லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்துள்ளது.. எனவே..."

"நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??"

" வருந்துகிறேன் அய்யா.. ஆனால்..."

" என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?"

" மன்னிக்கவும் அய்யா.. இது...."

"நான் இன்னும் முடிக்கவில்லை..என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே.. அது தெரியுமா உங்களுக்கு..?"

" தெரியாது அய்யா.."

" அவ்வளவு அவஸ்தைப்பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசாக் கொடுக்கவில்லை.. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..!

இவனைக் களமுனைக்கு அனுப்ப அரசாணை பிறப்பிக்கப்பட்டது. வாயால் கெட்டான் கஞ்சன்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:04 am

வள்ளலாரின் அறிவுரைகள்

1. நல்லோர் மனதை நடுங்க வைக்காதே.
2. ஏழைகள் வயிறை எரியச் செய்யாதே.
3.வலிய தலையிட்டு மானம்
கெடுக்காதே.
4. தானம் கொடுப்போரைத் தடுக்காதே.
5. மனம் ஒத்த நட்புக்கு வஞ்சகம் இழைக்காதே.
6. பசித்தோர் முகத்தைப்
பாராதிருக்காதே.
7. குருவை வணங்கக் கூசி நிற்காதே.
8. கோள் சொல்லி குடும்பம்
கலைக்காதே.
9. தந்தை தாய் பேச்சைத் தட்டி
நடக்காதே.
10. தவம் செய்தோரைத் தாழ்த்திப் பேசாதே.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:08 am

ஒருவர் போதையில்
தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து
அடியில நின்னுகிட்டு, கம்பத்த
தட்டி,.........
ஏய், கதவ தொறடி, உன் புருஷன்
வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன்
வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன்
வந்திருக்கேன்!
பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :-
ஏம்பா, வீட்டுல
யாரும் இல்ல போல இருக்கு!
இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா....
மாடில லைட்
எரியுது பாருங்க!
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:10 am

இன்றைய இளைஞர்களுக்கு தேவையான 5 வாழ்க்கை தத்துவங்கள்:

1) எமன் சிரிச்ச 80இல் மரணம் உமன்(woman) சிரிச்ச 20இல் மரணம்

2) தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி பொண்ணு சிரித்த முஞ்சுல வளரும் தாடி

3) ஹோட்டெல இருக்கும் மசால் வடை திரும்பி பார்க்க வைக்கும் ரெட்டை ஜடை

4) ஆடிக்கு பின்னால் ஆவணி பசங்க தடிக்கு பின்னால தாவணி

5) பல்லவன் பஸ் கலர் பச்சை ஒரு பொண்ணு பின்னாடி போன நீ எடுப்ப பிச்ச.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:11 am

ஒரு ஆணிடம் மற்றொரு ஆணைப் பற்றி பெருமையாகப் பேசிவிடலாம். ஆனால் ஒரு பெண்ணிடம் மற்றொரு பெண்ணைப் பற்றி பெருமையாகப் பேசுவதை அவர்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள இயலாது.

இது அவர்களின் பொறாமை குணமல்ல. மாறாக, தன்னைப்போல் தான் மட்டுமே அன்புசெலுத்த முடியும் என்ற அழகான சுயநலவாதம். புரிந்துகொள்வோர் இந்த சுயநல வாதத்திலும் சுகம் காணலாம்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:13 am

இதுதான் சுதந்திரம்

* எல்லா கொடியேற்றங்களிலும் மயங்கி விழுகின்றது காலை உணவு கிட்டாத ஏதேனும் ஒரு குழந்தை
- இதுதான் சுதந்திரம்

* கம்பி வேலி கண்ணுக்கு எட்டவில்லை அவ்வளவு தான் - இதுதான் சுதந்திரம்

* பிரிச்சுக் குடுத்துட்டு அடிச்சுக்கிட்டு சாவுங்கடானு விட்டுட்டுப்போன பிரிட்டிஷ்காரங்களுக்கும் சொல்லலாம் 'தந்திர தின வாழ்த்துக்கள்'!
- இதுதான் சுதந்திரம்

* சுதந்திரம் வாங்கி தந்த பல சுதந்திர தியாகிகளில் ஒருவரைக்கூட சுதந்திர விழாவில் பார்க்க முடிவதில்லை. (அழைக்கப்படுவதில்லை என்பதே சரியானது) - இதுதான் சுதந்திரம்

* இன்னும், சுதந்திரத்தை அர்ஜூனும், விஜயகாந்தும் வாங்கித்தந்ததா நினைத்துக்கொண்டிருக்கின்றன சில சிறுசுகள் - இதுதான் சுதந்திரம்

* குண்டு துளைக்காத கூண்டில் சுதந்திரமாக கொண்டாடுகிறோம் சுதந்திரத்தை ( 'அச்சம் அச்சம் இல்லை' பாடல் நாபகம் வருகிறது )
- இதுதான் சுதந்திரம்

* மற்ற பண்டிகை போல சுதந்திர தினமும் வருஷா வருஷம் டேட் மாறி வந்தா நல்லா இருக்கும், 16 வந்துருக்கலாம் தொடர்ந்தாற்போல் 3 நாள் விடுமுறை கிடைத்திருக்கும் ( IT company employees ) - இதுதான் சுதந்திரம்

* என்று டிவியோடு கொண்டாடினோமோ அன்றோடு காணாமல் போனது சுதந்திர தினத்தின் பரவசமும்,கொடியேற்றத்தின் மேல் இருந்த ஈர்ப்பும் - இதுதான் சுதந்திரம்

* சில நேரங்களில் சுதந்திரம் பெண்களுக்கு பிறப்புரிமை இல்லை, அபார்ஷன் என்றே சொல்லலாம் - இதுதான் சுதந்திரம்

* 68 வது தடவையா கொடியேற்றும் இந்த நேரத்திலும், எங்கோ ஒரு மனிதன் மனிதக்கழிவை அள்ளிக் கொண்டுதான் இருக்கிறான் !
- இதுதான் சுதந்திரம்

* இரவில் வாங்கினோம், இன்னும் விடியவில்லை - இதுதான் சுதந்திரம்

கடைசியாய் என் கருத்து :

சுதந்திரத்தை கேட்காதே, எடுத்துக்கொள், அடுத்தவர்களிடம் கேட்கப்படும் சுதந்திரம் உனதாய் இருக்க முடியாது...!

- ஜெய்ஹிந்த் -
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:14 am

மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டை இடுகின்றன உடலில்....
60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றுகின்றன...
3 நாட்களில் நகங்கள் கழன்று விடுகின்றன...
4 நாட்களில் ஈறுகள் தொலைகின்றன...
5 நாட்களில் திரவமாய் உருகுகிறது மூளை...
6 நாட்களில் வாயுக்களால் வெடிக்கிறது வயிறு...
2 மாதங்களில் உடல் உருகி திரவமாகின்றது...
எத்தனை ஆணவம் ! எத்தனை பேராசை !
எத்தனை கோபம் ! எத்தனை கெடுமதி ?
அறுபது நாட்களில் அடையாளமற்றுப் போகும் உடலில்

மனிதா...நீ ஆட்டம் போடுறா...தேவையா...இவையெல்லாம்....?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:15 am

உழைக்கும் வயதில் உறங்க நேரிட்டால்,
உறங்கும் வயதில் உழைக்க நேரிடும். . ! !

நீ முடங்கி கிடந்தால்,
சில்ந்தியும் உன்னை சிறை பிடிக்கும். . ! !

உயரும் வரை அமைதியாய் இரு,
உயர்ந்த பின் அடக்கமாய் இரு. . ! !
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:16 am

உலகமே ஒரு கண்ணாடி -அதை
ஊன்றிப் பார்த்தவன் தள்ளாடி
ஏகுறானே மலைநாடி - நீ
சாகுராயே புகழ் தேடி

இன்பம் துன்பம் அறிவாகும்
இதை அறிந்து கொள்வதே நெறியாகும்
உள்ளம் என்பது ஒளிவாகும் அதை
உணர்ந்து கொள்வதே வாழ்வாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:18 am

சாதனையாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே ஒரு வேறுபாடுதான்.
சாதனையாளர்கள் தம் வேலையை
மணிக்கணக்காக,
நாள்கணக்காக,
மாதக்கணக்காகத் தளராமல் செய்யக்கூடியவர்கள்.

அவ்வளவுதான் !
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:19 am

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..

அந்த சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது அவனோ பிரசார உக்தியை கையாண்டான் அதாவது,

ஒரு விளம்பரம் செய்தான் சிகரட் குடித்தால்..!

1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்

2 உங்களுக்கு முதுமையே வராது

3 பெண் குழந்தை பிறக்காது

இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் வழக்காடினார் நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜராகி
நீதி பதியிடம் விளக்கம் அளித்தார் .
இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய் அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே என்று கேட்டார்

அதற்க்கு அவன் சொன்னான் முதலில் நான் என்ன சொன்னேன்
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
ஆமாம் வரமாட்டான்
காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும் இருமி கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம் வராது .முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்

2 வது என்ன சொன்னேன்

முதுமையே வராது எப்படி வரும்
சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான் எப்படி முதுமை வரும்

3 வது என்னசொன்னேன்

பெண் குழந்தை பிறக்காது
எப்படி பிறக்கும் சிகரட்டில் நிக்கோடின் எனும் நட்ச்சு தன்மை
இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேரே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது

அவன் சொன்னது சரிதான் நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் இப்படி தந்திரமணா பேச்சை நம்பாமல் இருப்போம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:20 am

சித்தர் பழமொழிகள்.

1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.
5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.
6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்ததல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.

விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:24 am

மூன்றாம் வகுப்பு மாணவன் :- "
டீச்சர் இந்த உலகத்தின் எடை என்ன ?

ஆசிரியை : ( பதில் தெரியாததால் ) மிக
அருமையான கேள்வி .நாளை வகுப்பிற்கு வரும்பொழுது இதற்க்கு யார் சரியான பதிலை
கண்டுபிடிக்கிறார்கள் பார்ப்போம் .

அன்று மாலையே ஆசிரியை நூலகத்திற்கு சென்று பல நூல்களை புரட்டி
பதில் கண்டுபிடித்தார் .

ஆசிரியை :- (மறுநாள் ) உலகத்தின் எடை
என்ன என்ற கேள்விக்கு யாரேனும் விடை கண்டுபிடித்தீர்களா ?

யாருமே பதில் பேசவில்லை .

ஆசிரியை :- (பெருமையாக ) தான் கண்டுபிடித்த
விடையை சொல்ல

மாணவன் : - டீச்சர் நீங்க சொன்ன எடை
உலகிலுள்ள மனிதர்களை சேர்த்தா சேர்க்காமலா

ஆசிரியை :- ?????????????????

# நாங்கெல்லாம் விண்வெளில இருக்க வேண்டியவய்ங்க...
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:25 am

இரவு 11 மணி. சாலையில் ஓர் வாடகை டாக்ஸி வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, டாக்ஸி என கையசைத்து நிறுத்தினார். தம்பி ஆஸ்பத்திரி போகனும்.

நான் சாப்பிட்டுட்டு, படுக்கப் போற நேரம்.

என் மகளுக்கு பிரசவ நேரம்பா, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா’ என்றார் அப்பெண்மணி.

நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும் என்றான் அந்த டாக்ஸி ஓட்டும் இளைஞன்.

அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, டாக்ஸி அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.

டாக்ஸி ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது.

அக்கர்ப்பினியின் முனகல் சற்று அலறலாக மாறியது. நல்ல வேளை அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லை.

இரண்டு ரயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.

இப்போது டாக்ஸி இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது.

நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில்நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.

அந்த டாக்ஸி இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.

சற்று நேரத்தில் சுகப் பிரசவம்.

தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்’ என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.

வேனம்மா எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப் பட்டிருபாங்கன்னு கடவுள் எனக்குப் புரிய வைச்சிருச்சு. பணத்தை நீங்களே வையிங்க. என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.

எதோ யோசிக்க மொபைலை எடுத்துஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பன்னினான்.
ஹலோ முதியோர் இல்லமா?

ஆமா என்ன இந்த நேரத்துல போன் பன்னுறீங்கே?

மன்னிக்கவும் நாளு நாளைக்கி முன்னாடி அனதைன்னு சொல்லிட்டு ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன் இல்லையா? அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக.முதியோர் இல்ல பொறுப்பளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பன்னிவிட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தான்.

#ஆம் நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by முழுமுதலோன் Wed Dec 18, 2013 11:27 am

எதுவுமே நிரந்தரமிள்ளா இவுலகில். . .
உன் கஷ்டம் மட்டும் எப்படி நிரந்தரமாகும். . .


குறை இல்லாத மனிதன் இல்லை. . . .

அதை குறைக்கத் தெரியாதவன்
மனிதனே இல்லை. . . .

-------புத்தர்.


பல பெண்கள் தன்னுடைய கணவரை கண்கள் எனும் ரிமோட்டால்தான் இயக்குகிறார்கள்..

https://www.facebook.com/padithadilpidithathu?ref=ts&fref=ts
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

"படித்ததில் பிடித்தது" Empty Re: "படித்ததில் பிடித்தது"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum