Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வேகவைக்கும் வெயில்...
Page 1 of 1 • Share
வேகவைக்கும் வெயில்...
பகுதி-1
ஆரம்பித்துவிட்டது கோடை வெயில்!
வாட்டியெடுக்கும் இந்த வெம்மையின் தாக்கம் அக்னி நட்சத்திரத்தில் உச்சம்
தொட்டு, நம்மை சுட்டெரித்தபின்தான் மலையேறும். அதுவரை குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை ‘கசகச… நசநச’தான்.
இந்தக் கோடை உஷ்ணத்தின் தாக்கத்தைத் தவிர்க்க முடியாது. என்றாலும்,
இயன்றவரை நம்மை வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
சருமப் பாதுகாப்பு,
உணவு முறை,
கோடை நோய்கள்,
குளுகுளு தோட்டம்,
வீட்டின் அமைப்பில் மாற்றம்
என உங்களுக்கு கோடையிடமிருந்து தப்பிக்க நூறு கோடை துணுக்குகள் இங்கே அணிவகுக்கின்றன..
வெயில் தரும் சரும பிரச்னைகள் என்ன?
வியர்வை,
வேர்க்குரு,
கறுத்துப் போவது,
கண்கள் சோர்வது என இந்த கோடை நமக்காக வைத்திருக்கும் சருமப் பிரச்னைகள் ஏராளம். அவற்றிலிருந்து விடுபட
இதோ முதல் பத்து துணுக்குகள்…
1. வெயிலின் தாக்கத்தை மட்டுப்படுத்த சன் ஸ்க்ரீன் லோஷன் பயன்படுத்தலாம். அது தரமான லோஷனாக இருக்கவேண்டியது அவசியம்.
2. சன் ஸ்கிரீன் லோஷன் போட்டவுடன் வெயிலில் வெளியேறாமல், பத்து முதல்
பதினைந்து நிமிடங்கள் கழித்து, சருமத்தில் லோஷன் செட் ஆனவுடன் வெளியே
கிளம்பினால்தால் அது முழுமையாகவும் எஃபெக்டிவ்வாகவும் வேலை செய்யும்.
3. உதடு வெடித்து உலர்ந்து போய் கிடக்கிறதா..? வாஸ்லின் அல்லது ‘லிப்
பாம்’ உபயோகிக்கலாம். தயிர், வெண்ணெய் போன்றவற்றை உதட்டில் தடவுவதும் நல்ல
பலன் தரும்.
4. வெம்மையால் முகம் கறுத்து, எண்ணெய் வழிந்து,
அழுக்கு சேர்ந்து பொலிவிழக்கும். வெயிலில் வெளியில் சென்று வந்ததும்
காய்ச்சாத பாலை பஞ்சில் தோய்த்து, முகத்தில் சற்று அழுத்தி தேய்த்தெடுக்க,
வியர்வையால் சேர்ந்த அழுக்குகள் நீங்கும். கடைகளில் கிடைக்கும் ‘க்ளென்சிங்
மில்க்’ என்பதையும் பயன்படுத்த லாம்.
5. கோடைக் காலத்தில் அதிக
வியர்வையால் தலையில் பிசுபிசுவென்றாகி அழுக்கு சேர, முடி கொத்துக் கொத்தாக
கொட்டும். இதற்கு, அடிக்கடி தலைக்குக் குளித்து கேசத்தை சுத்தமாக வைத்துக்
கொள்வதுடன் தினமும் இரண்டு டீ ஸ்பூன் நெல்லிச்சாறு குடிப்பது பிரச்னைக்குத்
தீர்வைத் தரும்.
6. வெயிலில் கேசம் அதிகம் வறண்டு போகாமல்
இருக்க, தினமும் இரவு தலைக்கு எண்ணெய் வைத்து, காலையில் அலசலாம். இதனால்
பொடுகும் அண்டாது.
7. வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, உடலின் உஷ்ணம் இறங்கும். குழந்தைகளுக்கும்கூட!
8. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும்
விஷயம்… வேர்க்குரு. வியர்வை வெளியேறும் சருமத் துளைகள், அழுக்கினால்
அடைபடுவதால் உண்டாவதுதான் இந்த வேர்க்குரு.
9. கொழுப்புச்
சுரப்பிகளின் நுண்துளை வாய்ப்பகுதி வியர்வை, அழுக்கினால் அடைபடுவதால்,
அதிகமாக பருக்களும் தோன்றும். குறிப்பாக, கோடையில் இளம் பெண்களுக்கு இந்தப்
பிரச்னை அதிகமாக இருக்கும்.
10. ‘ஒரு நாளைக்கு ஒரு முறைதான்
குளிப்பேன்’ என்று கொள்கைப் பிடிப்போடு இருக்காமல், தினமும் காலை, இரவு என
இரண்டு முறை குளிப்பதுடன், அடிக்கடி முகம், கை, கால் கழுவிக் கொள்ளலாம்.
கோடை முழுக்க இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும்
காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணியலாம்.
தொடரும்...

பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வேகவைக்கும் வெயில்...
உயிர் நீங்க ரொம்ப அட்வான்சா பதிவிடுறீங்க ,கோடை வர இன்னும் மாதங்கள் பல உள்ளது :!:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வேகவைக்கும் வெயில்...
இருபினும் பரவாயில்லை செந்தில்..! முன்கூட்டியே பகிர்ந்தது சரியே... இப்பவே வெயில் கொளுத்துதே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வேகவைக்கும் வெயில்...
கௌரிசங்கர் wrote:இருபினும் பரவாயில்லை செந்தில்..! முன்கூட்டியே பகிர்ந்தது சரியே... இப்பவே வெயில் கொளுத்துதே.
உண்மை தான் அண்ணா வெயில் அதிகமாக உள்ளது
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: வேகவைக்கும் வெயில்...
பகுதி- 2
11. பருத்தி துணி ஒன்றில்
ஐஸ் கட்டிகளைப் போட்டு, வேர்க்குரு படர்ந்த இடங்களில் ஒத்தடம் போல்
கொடுத்தால், ‘டாடா பைபை’ சொல்லும் வேர்க்குரு! அதேபோல பனை நுங்கின்
மீதிருக்கும் வெண்மையான தோலின் உள்பகுதியை, வேர்க்குரு
மீது தேய்த்தாலும் மட்டுப்படும்.
12. மற்றவர்களையும் நம்மையும் தர்மசங்கடத்தில் நெளிய வைக்கும் விஷயம்…
நம் வியர்வை நாற்றம். குளிக்கும்போது இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறை
கடைசியில் தண்ணீரில் கலந்து ஒரு முழுக்குப் போட, வியர்வைப் பிரச்னை
மட்டுப்படும்.
13. எண்ணெய்ப் பசையான தோல் (ஆயிலி ஸ்கின்) வாகு
உள்ளவர்களை, இன்னும் அழுதுவடிய வைத்துவிடும் இந்த வெயில். வெட்டிவேரை
அரைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், முகம்
பளபளப்பாகும்.
கோடைக் காலத்தில் ‘இதைச் சாப்பிடு… குளிர்ச்சி
தரும்’ என்றும், ‘அதைச் சாப்பிடாதே… சூடு பிடிக்கும்’ என்று ஆயிரம்
ஆலோசனைகள் நம்மைச் சுற்றும். ஆம்… வெயில் காலத்தில் தண்ணீர், பழச்சாறு,
நீர்க்காய்கறிகள் என உண்ணும் உணவிலும் கொஞ்சம் அக்கறை எடுப்பது, உஷ்ணத்தில்
இருந்து நம்மை கரை சேர்க்கும். அதற்கு…
14. வெயிலில் அலைந்து
திரிந்துவிட்டு வீட்டுக்குள் வந்ததும் உடனடியாக ஃப்ரிட்ஜை திறந்து கடகடவென
கூல் வாட்டர் குடிக்க, ஏதோ அமிர்தமே வயிற்றுக்குள் இறங்குவது போல
இருக்கும். ஆனால், அது தவறு. நம் உடல் அதிக சூட்டோடு இருக்கும்போது, அதிக
குளிரான நீர் உள்ளே சென்றால், உடல் உறுப்புகளால் அதை பேலன்ஸ் செய்ய
முடியாது. எனவே, கொஞ்சம் ஆசுவாசப்படுத்திவிட்டு தண்ணீர் பருகுங்கள்.
15. குழந்தைகள், கோடையைக் கொண்டாடி விளையாடும்போது, அவர்கள் உடலிலிருந்து
நீர்ச்சத்து அதிகம் வெளியேறும் (டிஹைட்ரேஷன்). தாகம் எடுத்தாலும்,
விளையாட்டு மூடில் அதை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே, ஒரு மணி
நேரத்துக்கு ஒருமுறை அவர்களை தண்ணீர் குடிக்க வைப்பது அவசியம்.
பெரியவர்களும் வாய் உலரும்வரை வெயிட் பண்ணாமல், அதிக அளவில் தண்ணீர்
குடித்துக் கொள்ள வேண்டும்.
16. ஃப்ரிட்ஜ் வாட்டர் குடிப்பதற்கு
கூலாக இருக்கும். ஆனால், அதன் பக்கவிளைவாக ஜலதோஷம் உள்ளிட்ட பிரச்னைகள்
வரலாம். அதைவிட, மண்பானையில் சேமித்து வைத்துக் குடிக்கலாம். இயல்பாகவே
அந்த நீர் குளிர்ச்சி அடைவதால், கெடுதல் எதுவும் இருக்காது.
17.
தண்ணீரில் சீரகத்தைப் போட்டுக் கொதிக்க வைத்து, ஆற வைத்து, வடிகட்டிக்
குடிக்கலாம். வெட்டிவேரைப் போட்டு வடிகட்டி குடிப்பதும் குளிர்ச்சி தரும்.
18. இளநீர், மோர், பழச்சாறு அதிக அளவில் எடுத்துக் கொள்ளலாம். பாட்டிலில்
அடைக்கப்பட்டு வரும் பானங்களையும், ஐஸையும் தவிர்ப்பது நல்லது.
19. சீப் அண்ட் பெஸ்ட்… எலுமிச்சைப் பழ ஜூஸ். ஒரு பழத்துக்கு அரை லிட்டர்
நீர் விட்டு, உப்பு, ஏலக்காய், நாட்டுச் சர்க்கரை (ஜீனி பலனைக் குறைக்கும்)
கலந்து ஜூஸ் தயாரித்து வைத்துக் கொண்டு, அவ்வப்போது பருகுங்கள்.
20. கேரட், பீட்ரூட் போன்றவற்றையும் ஜூஸ் போடலாம். இவற்றிலும் நாட்டுச்
சர்க்கரை, ஏலக்காய் போடவும். தேங்காய்ப் பால் சேர்ப்பது சிறந்தது.
தொடரும்....

பகுதி-3
21. அளவில் சிறியதாக
இருந்தாலும் நெல்லிக்கனி வெயிலுக்கு அவ்வளவு உகந்தது. விட்டமின்-சி அதிகமாக
உள்ள இந்தக் கனி, வெயிலில் நாம் இழக்கும் எனர்ஜியைத் திரும்பத் தரவல்லது.
22. ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, வாழை, திராட
்சை, வெள்ளரி என பழக்கலவை (ஃப்ரூட் சாலட்) செய்து, காலை அல்லது இரவில் உண்ணலாம்.
23. வெள்ளரிப்பழம், முலாம்பழம், தர்பூசணி போன்றவை நீர்ச்சத்து நிறைந்த,
வெயிலுக்கு ஏற்ற பழங்கள். அதற்காகவேதான் வெயில் காலங்களில் இவை விளைகின்றன.
உடலில் உள்ள நீர்த்தன்மையை சமநிலையில் வைத்துக் கொள்ள இந்தப் பழங்கள்
உதவும். இவற்றை நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஜூஸ் போட்டும் சாப்பிடலாம்.
24. சுரைக்காய் வெயிலுக்கு மிகவும் நல்லது. ஒரு சுரைக்காய், ஒரு குடம்
நீருக்குச் சமம். இதனை சாம்பார் அல்லது கூட்டாகச் சமைத்து உண்ணலாம். சௌசௌ,
பூசணி, முள்ளங்கி போன்றவையும் அப்படியே!
25. இது மாம்பழம்,
பலாப்பழம் போன்றவற்றுக்கான சீஸன். விலை குறைவாகக் கிடைக்கிறதே என்று
அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் ஆபத்துதான். வயிற்றுப்போக்கு உள்ளிட்ட
பிரச்னைகள் ஏற்படும். எனவே, அளவாக சாப்பிடுவது முக்கியம் – குறிப்பாக,
குழந்தைகளும் வயதானவர்களும்!
26. மதிய நேரத்தில் கொஞ்சம் ஹெவியாக சாப்பிட்டாலும், இரவில் லைட்டாக சாப்பிடுவது வயிற்றுப் பிரச்னைகளில் இருந்து தள்ளி வைக்கும்.
27. எண்ணெயில் பொரித்த வடை, பஜ்ஜி, சமோசா போன்ற அயிட்டங்களுக்கு ‘நோ..நோ…
இந்தப் பழம் புளிக்கும்’ என்று சொல்லி தூரம் நிற்பது வயிறு, மனது, பர்ஸ் என
அனைத்துக்கும் நல்லது.

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum