தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam

Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net

Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user

பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 11:59 am

ஒளவையார் அருளிய  

                  கொன்றைவேந்தன் 

        ந.மு. வேங்கடசமி நாட்டாரவர்களின்  உரை   

 கடவுள் வாழ்த்து 

      கொன்றை வேந்தன் செல்வ னடியிணை
      என்று மேத்தித் தொழுவோ மியாமே.

(பதவுரை) கொன்றை - கொன்றைப் பூமாலையைச் சூடிய,வேந்தன் - சிவபெருமானுக்கு, செல்வன் - குமாரராகிய விநாயகக்கடவுளுடைய, அடி இணை - பாதங்களிரண்டையும், யாம் - நாம்,என்றும் - எந்நாளும், ஏத்தி - துதிசெய்து, தொழுவோம் -வணங்குவோம்.

(பொழிப்புரை) சிவபெருமானுக்குத் திருக்குமாரராகிய விநாயகக் கடவுளின் இரண்டு திருவடிகளையும் நாம் எப்பொழுதும் துதித்து வணங்குவோம். (ஏ - ஈற்றசை)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:00 pm

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 

(பதவுரை) அன்னையும் - தாயும், பிதாவும் - தகப்பனும், முன் - முன்னே, அறி - காணப்பட்ட, தெய்வம் - தெய்வங்களாவார்.

(பொழிப்புரை) தாயும் தந்தையும் முன்பு காணப்பட்ட தெய்வங்களாவார்.
 
         ----------------------------------------------------------------------------------------------------

2. ஆலயம் தொழுவது சாலவு நன்று 

(பதவுரை) ஆலயம் - கோயிலுக்குப்போய், தொழுவது -கடவுளை வணங்குவது, சாலவும் - மிகவும், நன்று - நல்லது.

(பொழிப்புரை) கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்குவது மிகவும் நல்லது
 
 ---------------------------------------------------------------------------------------------------------
         
3. இல்லற மல்லது நல்லற மன்று 

(பதவுரை) இல்லறம் - (மனையாளோடு கூடிச் செய்யும்) இல்லறமானது, நல் அறம் - நல்ல அறமாகும்; அல்லது - இல்லற மல்லாத துறவறமானது, அன்று - நல்ல அறமன்றாகும்.

(பொழிப்புரை) வீட்டிலிருந்து மனைவியுடன் கூடிச் செய்யும் இல்லறமே நல்லறமாகும்; துறவறம் நல்லறமன்று. (இல்லறம் எளிதிற் செய்யத் தகுந்தது. துறவறம் எளிதிற் செய்யக் கூடாதது.).
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:01 pm

4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் 

(பதவுரை) ஈயார் - கொடாதவருடைய, தேட்டை - சம்பாத்தியத்தை, தீயார் - (கள்வர் முதலிய) தீயவர், கொள்வர் - அபகரிப்பர

(பொழிப்புரை) வறியவர்க்குக் கொடாத உலோபிகள் தேடிய பொருளைத் தீயோர் அபகரித்துச் செல்வர்.
 
 ---------------------------------------------------------------------------------------------------------
         
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு 

(பதவுரை) உண்டி - உணவு, சுருங்குதல் - குறைதல், பெண்டிர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) மிதமாக உண்பது மாதர்களுக்குச் சிறப்பாகும்.
 
 ---------------------------------------------------------------------------------------------------------
         
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 

(பதவுரை) ஊருடன் - ஊராருடன், பகைக்கின் - (ஒருவன்)விரோதித்தால், வேருடன் - (தன்) வமிசத்துடன், கெடும் - (அவன்) கெடுவான்.

(பொழிப்புரை) ஒருவன் தன் ஊராருடன் பகைத்துக்கொண்டால் அடியுடன் அழிந்துவிடுவான்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:02 pm

- 7. எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகும் 

(பதவுரை) எண்ணும் - கணிதநூலும், எழுத்தும் - இலக்கணநூலும், கண் எனத் தகும் - (மனிதருக்கு) இரண்டு கண்களென்று சொல்லப்படும்.

(பொழிப்புரை) கணிதமும் இலக்கணமும் மனிதர்க்கு இரண்டு கண்கள் என்று சொல்லத்தகும்.
 
 -----------------------------------------------------------------------------------------------------------
         
8. ஏவா மக்கண் மூவா மருந்து 

(பதவுரை) ஏவா - (பெற்றவர் இதைச் செய் என்று) ஏவுதற்குமுன் குறிப்பறிந்து செய்கிற, மக்கள் - பிள்ளைகள், மூவாமருந்து - (அப்பெற்றவருக்கு) தேவாமிர்தம் போல்வார்.

(பொழிப்புரை) பெற்றோர்கள் கட்டளை யிடுவதற்குமுன் குறிப்பறிந்து செய்யும் பிள்ளைகள் அவர்களுக்குத் தேவாமிர்தத்தை யொப்பார்கள்.
 
------------------------------------------------------------------------------------------------------------ 
         
9. ஐயம் புகினுஞ் செய்வன செய் 

(பதவுரை) ஐயம் புகினும் - பிச்சை எடுத்தாலும், செய்வன -செய்யத்தக்கவைகளை, செய் - (விடாது) செய்

(பொழிப்புரை) பிச்சையெடுத்துச் சீவித்தாலும் செய்யத்தக்க காரியங்களைச் செய்.
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:03 pm

10. ஒருவனைப் பற்றி யோரகத் திரு 

(பதவுரை) ஒருவனை - (நற்குணமுடைய) ஒருவனை, பற்றி - (துணையாகப்) பற்றிக்கொண்டு, ஓரகத்து - ஓரிடத்தில், இரு - வாசம் பண்ணு.

(பொழிப்புரை) தக்கான் ஒருவனைத் துணையாகப் பற்றிக்கொண்டு ஓரிடத்தில் வாசஞ்செய்
 
 11. ஓதலி னன்றே வேதியர்க் கொழுக்கம் 

(பதவுரை) வேதியர்க்கு - பிராமணருக்கு, ஒழுக்கம் -ஆசாரமானது, ஓதலின் - (வேதம்) ஓதலினும், நன்றே- நல்லது.

(பொழிப்புரை) பிராமணருக்கு வேதம் ஓதுவதைக் காட்டிலும் நல்லொழுக்கம் சிறந்தது.
 
 -----------------------------------------------------------------------------------------------------------
         
12. ஒளவியம் பேசுத லாக்கத்திற் கழிவு 

(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை, பேசுதல்- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு - (அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும்.

(பொழிப்புரை) ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது அவன்செல்வத்திற்கு அழிவைத் தரும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:04 pm

13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத் தேடு 

(பதவுரை) அஃகமும் - தானியத்தையும், காசும் - திரவியத்தையும், சிக்கெனத் தேடு - வீண்செலவு செய்யாமற் சம்பாதி.

(பொழிப்புரை) தானியத்தையும் திரவியத்தையும் வீண் செலவு செய்யாமல் தேடிக்கொள்.
 
 ------------------------------------------------------------------------------------------------------------
         
14. கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை 

(பதவுரை) கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்) கற்பென்று சொல்லப்படுவது, சொல் - (கணவர்) சொல்லுக்கு, திறம்பாமை - தப்பி நடவாமையாம்.

(பொழிப்புரை) மகளிர்க்குக் கற்பு என்று சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறுபட்டு நடவாமையாம்.
 
 ---------------------------------------------------------------------------------------------------------
         
15. காவ றானே பாவையர்க் கழகு 

(பதவுரை) காவல்தானே - (கற்புக்கு அழிவு வராமல் தம்மைக்) காத்துக்கொள்வதுதானே, பாவையர்க்கு - பெண்களுக்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) கற்பினின்று வழுவாமல் தம்மைக் காத்துக் கொள்வதே மாதர்களுக்கு அழகாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:05 pm

16. கிட்டா தாயின் வெட்டென மற 

(பதவுரை) கிட்டாதாயின் - (இச்சித்த ஒரு பொருள்) கிடையாதானால், வெட்டென - சீக்கிரத்தில்தானே, மற - (அப்பொருளை) மறந்துவிடு.

(பொழிப்புரை) நீ விரும்பிய பொருள் கிடைக்காவிட்டால், சீக்கிரத்தில் அதனை மறந்துவிடு.
 
 ---------------------------------------------------------------------------------------------------------
         
17. கீழோ ராயினுந் தாழ வுரை 

(பதவுரை) கீழோர் ஆயினும் - (கேட்பவர் உனக்குக்) கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், தாழ - (உன் சொல்) வணக்கமுடையதாய் இருக்கும்படி, உரை - (அவருடன்) பேசு.

(பொழிப்புரை) தாழ்ந்தோரிடத்திலும் தாழ்மையாகப் பேசு. 
 
   ------------------------------------------------------------------------------------------------------
      
18. குற்றம் பார்க்கிற் சுற்ற மில்லை 

(பதவுரை) ககுற்றம் - குற்றங்களை, பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால், சுற்றம் - உறவாவோர், இல்லை - (ஒருவரும்) இல்லை.

(பொழிப்புரை) தகுற்றத்தையே ஆராய்ந்து பார்த்தால் சுற்றமாவார் ஒருவருமில்லை. (குற்றமே யில்லாதவர் ஒருவருமில்லை யாகையால் சுற்றத்தார் அகப்படார் என்பதாம்.)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:06 pm

19. கூரம் பாயினும் வீரியம் பேசேல் 

(பதவுரை) கூர் அம்பு ஆயினும் - (உன் கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் - வீரத்தன்மையை, பேசேல் - (வீணாகப்) பேசாதே.

(பொழிப்புரை) உன் கையிலே கூரிய அம்பு இருந்தாலும், உன் வீரத்தை வியந்து பேசாதே.
 
 -----------------------------------------------------------------------------------------------------------
         
20. கெடுவது செய்யின் விடுவது கருமம் 

(பதவுரை) கெடுவது - தீமையை, செய்யின் - (தன் சிநேகன்)செய்தால், விடுவது - (அவன் சிநேகத்தை) விடுவதே, கருமம் - நற்செய்கையாம்.

(பொழிப்புரை) தன் நண்பன் தீமையைச் செய்தால், அவனது நட்பை விட்டுவிடுவது நற்செய்கையாம்.

21. கேட்டி லுறுதி கூட்டு முடைமை 

(பதவுரை) கேட்டில் - (கைப்பொருள்) இழந்த காலத்தில், உறுதி - மனந்தளராமை, உடைமை - செல்வத்தை, கூட்டும் - சேர்க்கும்.

(பொழிப்புரை) பொருளை இழந்த காலத்தில் மனந்தளராமல் உறுதியுடனிருப்பது மீட்டும் செல்வத்தை யுண்டாக்கும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:07 pm

22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி 

(பதவுரை) கைப்பொருள் தன்னின் - கையிலிருக்கிற பொருளைப் பார்க்கிலும், மெய்ப்பொருள் - மெய்ப்பொருளாவது, கல்வி - கல்வியேயாம்.

(பொழிப்புரை) கையிலிருக்கிற திரவியத்தைப் பார்க்கிலும் கல்வியே உண்மைப் பொருளாகும
 
 -----------------------------------------------------------------------------------------------------------
         
23. கொற்றவ னறித லுற்றிடத் துதவி 

(பதவுரை) கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை) அறிந்திருத்தல், உற்ற இடத்து - (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி - உதவியாகும்.

(பொழிப்புரை) ஒருவனுக்கு அரசன் அறிமுகமாயிருப்பது அவனுக்கு ஆபத்தில் உதவியாகும். (உற்றவிடத்து என்பது உற்றிடத்து என விகாரப்பட்டது.)
 
 -----------------------------------------------------------------------------------------------------------
         
24. கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு 

(பதவுரை) கோட்செவி - கோள் கேட்குங் குணமுடையவனது காதிலே, குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது, காற்றுடன் - காற்றுடன் சேர்ந்த, நெருப்பு - நெருப்பைப் போல மூளும்.

(பொழிப்புரை) கோள் கேட்கும் இயல்புள்ளவன் காதில் ஒருவன் சொன்ன கோள்வார்த்தை காற்றுடன் சேர்ந்த நெருப்புப்போல மூளும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:07 pm

25. கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை 

(பதவுரை) கௌவை - (பிறர்மேலே) பழிச்சொற்களை, சொல்லின் - (ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் - எல்லாருக்கும், பகை - (அவன்) பகையாவான்.

(பொழிப்புரை) ஒருவன் பிறர் பழிகளைச் சொல்லிக்கொண்டிந்தால் அவன் யாருக்கும் பகையாவான் (எவருக்கும் என்பது எவ்வருக்கும் என விகாரப்பட்டது.)

 -------------------------------------------------------------------------------------------------------
 
26. சந்ததிக் கழகு வந்திசெய் யாமை 

(பதவுரை) சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுதற்கு, அழகு - அழகாவது, வந்தி - மலடியாக, செய்யாமை - செய்யாமல் (தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம்.

(பொழிப்புரை) வமிசத்திற்கு அழகாவது மக்கட்பேறு உண்டாகும்படி மனைவியுடன் கூடி வாழ்தலாம்.
 
  -----------------------------------------------------------------------------------------------------------
       
27. சான்றோ ரென்கை யீன்றோட் கழகு 

(பதவுரை) சான்றோர் என்கை - (தன் புத்திரரைக் கல்வியறிவால்) நிறைந்தோர் என்று (பிறர்) சொல்லுகிறது, ஈன்றோட்கு - பெற்றவளுக்கு, அழகு - அழகாகும

(பொழிப்புரை) தன் புதல்வரை, அறிவுடையோர் என்று பிறர் சொல்லக் கேட்பது பெற்ற தாய்க்கு மகிழ்ச்சியாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:08 pm

28. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு 

(பதவுரை) சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும்.
 
--------------------------------------------------------------------------------------------------------- 
         
29. சீரைத் தேடி னேரைத் தேடு 

(பதவுரை) சீரை - சௌக்கியத்தை, தேடின் - (உனக்குத்) தேடுவாயானால், ஏரை - பயிரிடுந்தொழிலை, தேடு - தேடிக்கொள்ளு.

(பொழிப்புரை) சுகமாக வாழ விரும்பினால் உழுது பயிரிடுந் தொழிலைத் தேடிக்கொள்.
 
 ----------------------------------------------------------------------------------------------------------
         
30. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல 

(பதவுரை) சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு - அழகாவது, சூழ இருத்தல் - சுற்றிலும் வந்திருத்தலாகும்.

(பொழிப்புரை) சுற்றத்தார்க்கு அழகாவது நலந்தீங்குகளில் சூழ வந்திருப்பதாகும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:09 pm

31. சூதும் வாதும் வேதனை செய்யும் 

(பதவுரை) சூதும் - சூதாடுதலும், வாதும் - குதர்க்கம்பேசுதலும், வேதனை - வருத்தத்தை, செய்யும் - உண்டாக்கும்.

(பொழிப்புரை) சூதாடுதலும் விதண்டாவாதம் பேசலும் துன்பத்தை உண்டாக்கும்.
 
 -------------------------------------------------------------------------------------------------------
         
32. செய்தவ மறந்தாற் கைதவ மாளும் 

(பதவுரை) செய்தவம் - செய்யுந் தவத்தை, மறந்தால் - (ஒருவன்) மறந்தால், கைதவம் - பொய்யாகிய அஞ்ஞானமானது, ஆளும் - (அவனை அடிமை கொண்டு) ஆளும்.

(பொழிப்புரை) ஒருவன் செய்யுந் தவத்தை மறந்துவிட்டால் அவனை அஞ்ஞானம் அடிமைகொள்ளும்.
 
 -------------------------------------------------------------------------------------------------------
         
- 33. சேமம் புகினும் யாமத் துறங்கு 

(பதவுரை) சேமம் - காவற்கூடத்திலே; புகினும் - போய்இருந்தாலும், யாமத்து - ஏழரை நாழிகைக்குப்பின்; உறங்கு - நித்திரை பண்ணு.

(பொழிப்புரை) காவற்கூடத்திலே போய் இருந்தாலும் இரவுஏழரை நாழிகைக்குப்பின் நித்திரை செய். (காவல் வேலைசெய்தாலும் நள்ளிரவில் உறங்கவேண்டும். 'சாமத்துறங்கு' எ
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:11 pm

34. சையொத் திருந்தா லைய மிட்டுண் 

(பதவுரை) சை ஒத்து இருந்தால் - பொருள் ஒத்திருந்தால்,ஐயம் இட்டு - பிச்சை இட்டு, உண் - உண்டு வாழு.

(பொழிப்புரை) பொருள் ஒத்திருந்தால் பிச்சையிட்டு உண்டு வாழ். (சை - பொருள்.)
 
 ---------------------------------------------------------------------------------------------------------
         
35. சொக்க ரென்பவ ரத்தம் பெறுவர் 

(பதவுரை) சொக்கர் என்பவர் - பொன்னுடையவர் என்றுசொல்லப்படுவோர், அத்தம் - (அறமும் இன்பமுமாகியமற்றைப்) புருடார்த்தங்களையும், பெறுவர் - பெறுவர். வாழு.

(பொழிப்புரை) பொருளுடையவர் அறமும் இன்பமும் ஆகிய மற்றைப் புருடார்த்தங்களையும் பெறுவர். (முயற்சியுடையவர் பொருள் பெறுவர் என்றும், களங்கமற்றவர் நல்வழியை அடைவர் என்றும் இதற்குப் பொருள் சொல்வதும் உண்டு.)
 
 ------------------------------------------------------------------------------------------------------------
         
36. சோம்ப ரென்பவர் தேம்பித் திரிவர் 

(பதவுரை) சோம்பர் என்பவர் - சோம்பலுடையவர் என்று சொல்லப்படுவோர், தேம்பி - (வறுமையினால்) வருந்தி, திரிவர் - (இரந்து) திரிவர்.

(பொழிப்புரை) சோம்பலுடையோர் வறுமையால் வருந்தி அலைவார்கள்.
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:14 pm

37. தந்தைசொன் மிக்க மந்திர மில்லை 

(பதவுரை) தந்தை - பிதாவினுடைய; சொல் - சொல்லுக்கு,மிக்க - மேற்பட்ட, மந்திரம் - (பலனைத் தரும்) மந்திரமானது, இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) பிதாவின் சொல்லுக்கு மேற்பட்ட மந்திரம் இல்லை. (மந்திரம் என்பதற்கு ஆலோசனை என்றும் பொருள் கூறலாம்.). 
 
 ------------------------------------------------------------------------------------------------------
         
38. தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை 

(பதவுரை) தாயின் - மாதாவைப் பார்க்கிலும், சிறந்த - சிறப்புப் பொருந்திய, ஒரு கோயிலும் - ஓர் ஆலயமும்,இல்லை - இல்லையாம்.

(பொழிப்புரை) அன்னையைப் பார்க்கிலும் சிறந்த கோயில் இல்லை. (தாயைப் பூசித்தால் ஆலயத்திற்கடவுளைப் பூசிக்கும் பலனை அடையலாம் என்பதுகருத்து. சிறந்த என்பது சிறந்து என விகாரப்பட்டது. 'தாய்சொற் றுறந்தால் வாசக மில்லை' என்றும் பாடம். 
இதற்கு, தாயின் வார்த்தையைத் தப்பினால் உறுதி பயக்கும்வேறு வாசகமில்லை என்பது பொருளாகும்.)

 --------------------------------------------------------------------------------------------------------
         
39. திரைகட லோடியுந் திரவியந் தேடு 

(பதவுரை) திரை கடல் - அலைவீசுகின்ற கடலிலே,ஓடியும் - (கப்பலேறி, தூரதேசங்களிற்) போயானாலும்,திரவியம் - திரவியத்தை, தேடு - சம்பாதி.

(பொழிப்புரை) கடல் வழியாகத் தேசாந்தரஞ் சென்றும் பொருளைத் தேடு..)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:15 pm

40. தீராக் கோபம் போரா முடியும் 

(பதவுரை) தீரா - நீங்காத, கோபம் - கோபமானது, போரா - (பின்பு) சண்டையாக, முடியும் - முடிந்துவிடும்.

(பொழிப்புரை) தணியாத கோபமானது கலகமாக முடியும் 
 
41. துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு 

(பதவுரை) துடியா - (தங் கணவனுக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு - நெருப்பாவர்.

(பொழிப்புரை) கணவர்க்குத் துன்பம் வந்தபோது மனம் பதையாத மகளிர், அவர் வயிற்றில் நெருப்பாவர். (மடியில்நெருப்பு என்பதற்கு உடையிற் கட்டிய நெருப்பை யொப்பர்என்றும் பொருள் கூறலாம்.)
 
   ------------------------------------------------------------------------------------------------------
      
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும் 

(பதவுரை) தூற்றும் - (தங் கணவர்மேற் குற்றஞ்சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத்தகும் - (அவருக்கு) இயமன் என்று எண்ணத்தகும்.

(பொழிப்புரை) கணவர்மேல் அவதூறு சொல்லும் பெண்டிரை அவருக்கு இயமன் என்று சொல்லத்தகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:16 pm

43. தெய்வஞ் சீறிற் கைதவ மாளும். 

(பதவுரை) தெய்வம் - தெய்வமானது, சீறின் - (ஒருவனைக்)கோபித்தால், கைதவம் - (அவனுக்குக்) கைகூடியிருந்ததவமும், மாளும் - (பயன் கொடாமல்) அழியும்.

(பொழிப்புரை) ஒருவன் கடவுளின் சினத்துக்கு ஆளானால்அவனுக்குக் கைகூடிய தவமும் அழிந்துவிடும். (கைத்தவம் என்பது கைதவம் என விகாரப்பட்டது.)
 
      -----------------------------------------------------------------------------------------------------
   
44. தேடா தழிக்கிற் பாடா முடியும் 

(பதவுரை) தேடாது - (ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல்,அழிக்கின் - (இருக்கிற பொருளைச்) செலவழித்தால், பாடாமுடியும் - (அவனுக்குப் பின்) வருத்தமாக முடியும்.

(பொழிப்புரை) பொருளைச் சம்பாதியாமல் செலவழித்துக்கொண்டிருந்தால் பின்பு துன்பமாக முடியும்.
 
 ---------------------------------------------------------------------------------------------------------
         
45. தையும் மாசியும் வையகத் துறங்கு 

(பதவுரை) தையும் - தை மாதத்திலும், மாசியும் - மாசி மாதத்திலும், வை அகத்து - (பனிவருத்தந் தராத) வைக்கோல் வீட்டிலே, உறங்கு - நித்திரைபண்ணு.

(பொழிப்புரை) தை, மாசி மாதங்களாகிற பனிக்காலத்தில் வைக்கோலால் வேய்ந்த கூரைவீட்டில் நித்திரை செய்.(வை - வைக்கோல்.)
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:17 pm

46. தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது 

(பதவுரை) தொழுது - (ஒருவரைச்) சேவித்து, ஊண் - உண்ணும் உணவினது, சுவையின் - சுவையைப்பார்க்கிலும், உழுது - உழுது பயிர்செய்து, ஊண் - உண்ணும் உணவின் சுவை, இனிது - இன்பந்தருவதாகும்.

(பொழிப்புரை) சேவகஞ்செய்து உண்ணும் உணவைப் பார்க்கிலும் உழுது பயிர்செய்து உண்ணும் உணவு இன்பந் தருவதாகும்.
 
 ------------------------------------------------------------------------------------------------------
         
47. தோழ னோடு மேழைமை பேசேல் 

(பதவுரை) தோழனோடும் - (உன்) சிநேகிதனோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கிற) சிறுமையை, பேசேல் - பேசாதே.

(பொழிப்புரை) உன் வறுமை முதலிய எளிமையை நண்பனிடத்திலும் சொல்லாதே.
 
 --------------------------------------------------------------------------------------------------------
         
48. நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும் 

(பதவுரை) நேல் இணக்கம் அல்லது - நல்ல சகவாசம்அல்லாதது, அல்லல் - துன்பத்தையே, படுத்தும் - உண்டாக்கும்.

(பொழிப்புரை) நற்சேர்க்கையல்லாத கெட்ட சகவாசம் துன்பத்தை உண்டாக்கும்.
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:18 pm

49. நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை 

(பதவுரை) நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ - செழித்திருக்குமாயின், கேடு ஒன்றும் - ஒரு கெடுதியும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) தேசமெங்கும் செழித்திருந்தால் யாருக்கும் ஒரு குறைவுமில்லை.
 
 -----------------------------------------------------------------------------------------------------------
         
50. நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை 

(பதவுரை) நிற்க - நிலைபெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - (தான் சொல்லும்) சொற்கள், திறம்பாமை - தப்பிப்போகாமையாம்.

(பொழிப்புரை) நிலைபெறக் கற்றலாவது சொல்லுஞ் சொல் தவறாமையாம். கற்றவர்கள் பயனின்றி யொழியாது நிலைபெறும் சொற்களைச் சொல்லுதல் வேண்டும். (சொல் திறம்பாமை என்பதற்கு வாக்குறுதியிற் பிறழாதிருத்தல் என்றும் பொருள் சொல்லலாம்.)

51.நீரகம் பொருந்திய வூரகத் திரு 

(பதவுரை) நீர் - நீர்வளமானது, அகம் - தனக்குள்ளேயே, பொருந்திய - அமைந்த, ஊரகத்து - ஊரினிடத்திலே, இரு - குடியிரு.

(பொழிப்புரை) நீர்வளம் பொருந்திய ஊரிலே குடியிரு.
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:18 pm

52. நுண்ணிய கருமமு மெண்ணித் துணி 

(பதவுரை) நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும், எண்ணி - (நன்றாக) ஆலோசித்து, துணி - (பின்பு அதைச்) செய்யத்துணி.

(பொழிப்புரை) சிறிய காரியத்தையும் நன்கு ஆலோசனை செய்து செய்யத்துணி.

 ------------------------------------------------------------------------------------------------------
 
53. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு 

(பதவுரை) நூல் - தருமநூலிலே சொல்லப்பட்ட, முறை - (விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து, சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு - நட.

(பொழிப்புரை) நீதிநூலிற் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து நல்லொழுக்க வழியில் நட.
 
 ----------------------------------------------------------------------------------------------------------
         
54. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை 

(பதவுரை) நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த - மறைக்கப்பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) மனத்திற்குத் தெரியாத வஞ்சகம் ஒன்றுமில்லை.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:19 pm

55. நேரா நோன்பு சீரா காது 

(பதவுரை) நேரா - (மனசினால்) உடன்படாத, நோன்பு - தவமானது, சீர் ஆகாது - சீராக முடியாது.

(பொழிப்புரை) மனம்பொருந்திச் செய்யாத தவமானது செம்மையாக முடியாது
 
 ------------------------------------------------------------------------------------------------------
         
56. நைபவ ரெனினு நொய்ய வுரையேல 

(பதவுரை) நைபவர் எனினும் - (கேட்போர் எதிர்பேசாமல்)வருந்துவோராயினும், நொய்ய - அற்பவார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) கேட்பவர் எதிர்பேசாமல் வருந்து வோராயினும் அற்பவார்த்தைகளைப் பேசாதே.
 
 ------------------------------------------------------------------------------------------------------------
         
57. நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்

(பதவுரை) நொய்யவர் என்பவர் - (உருவத்தினாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர் - (செய்காரியத்தால் யாவரும்) விரும்பும் குணத்தை யுடையவராவர்.

(பொழிப்புரை) உருவம் முதலியவற்றால் சிறியவரென்று இகழப்படுவோருஞ் செய்யுங் காரியத்தால் யாவரும் விரும்புந்தன்மையினர் ஆவர்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:20 pm

58. நோன்பென் பதுவே கொன்று தின்னாமை 

(பதவுரை) நோன்பு என்பது - தவமென்று சொல்லப்படுவது, கொன்று - (ஒரு சீவனைக்) கொலை செய்து, தின்னாமையே - (அதன் மாமிசத்தைத்) தின்னாமையேயாம்.

(பொழிப்புரை) விரதம் என்று சொல்லப்படுவது ஓருயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னாமையாம்.
 
   ------------------------------------------------------------------------------------------------------
      
59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும் 

(பதவுரை) பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரின் - பயிரின் விளைவினாலும் விளைவில்லாமையினாலும், புண்ணியம் - (அவனிடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும்.

(பொழிப்புரை) ஒருவன் செய்த பயிர் விளைவதிலிருந்து அவன் முன்பு செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும்.
 
         ------------------------------------------------------------------------------------------------------

60. பாலோ டாயினுங் கால மறிந்துண் 

(பதவுரை) பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து - (உண்ணத்தகுங்) காலத்தை அறிந்து, உண் - (அதை) உண்ணு.

(பொழிப்புரை) பாலுடன் கூடிய அன்னமாயினும் உண்ணத்தகும் காலமறிந்து உண்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:21 pm

61. பிறன்மனை புகாமை யறமெனத் தகும் 

(பதவுரை) பிறன் - பிறனுடைய, மனை - மனையாளிடத்தில், புகாமை - (இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - (எல்லாத் தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும்.

(பொழிப்புரை) பிறன்மனைவியை விரும்பாமையே உயர்ந்த தருமம் என்று சொல்லத்தகும்.
 
 ---------------------------------------------------------------------------------------------------------
         
62. பீரம் பேணி பாரந் தாங்கும் 

(பதவுரை) பீரம்பேணி - தாய்ப்பால் குறைவற உண்டு வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை, தாங்கும் - சுமப்பான்.

(பொழிப்புரை) தாய்ப்பாலைக்குறைவற உண்டு வளர்ந்தவன் பெரும் பாரத்தைச் சுமக்க வல்லவனாவான். (காரணத்தைக் குறைவறக் கொண்டவன் காரியத்தை எளிதில் முடிப்பான்.) (பீரம் என்பதில் அம் சாரியை.)
 
 ----------------------------------------------------------------------------------------------------------
         
63. புலையுங் கொலையும் களவுந் தவிர் 

(பதவுரை) புலையுயம் - புலாலுண்ணுதலையும், கொலையும் - சீவ வதை செய்வதையும், களவும் - பிறர்பொருளைத் திருடுதலையும்., தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு.

(பொழிப்புரை) புலால் உண்ணுதலும், பிறவுயிரைக்கொல்லுதலும், பிறர்பொருளைத் திருடுதலும், செய்யாதே.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:22 pm

64. பூரியோர்க் கில்லை சீரிய வொழுக்கம் 

(பதவுரை) பூரியோர்க்கு - கீழ்மக்களுக்கு, சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம் - நடையானது, இல்லை - இல்லை.

(பொழிப்புரை) கீழ்மக்களிடத்தில் சிறந்த நடை காணப்படுவதில்லை.
 
 -----------------------------------------------------------------------------------------------------------
         
65. பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ் சினமும் 

(பதவுரை) பெற்றோர்க்கு - (மெய்ஞ்ஞானத்தைப்) பெற்றவர்க்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும், சினமும் - (மற்றவர்மேல்) வெறுப்பும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) கடவுளருளைப் பெற்றோர்க்கு உறவுமில்லை கோபமும் இல்லை.
 ----------------------------------------------------------------------------------------------------------
 
66. பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்
 
(பதவுரை) பேதைமை என்பது - அறியாமை யென்று சொல்லப்படுங் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு, அணிகலம் - ஆபரணமாகும்.

(பொழிப்புரை) அறிந்தும் அறியாதவர்போல அடங்கியிருக்கும் குணம் மாதர்களுக்கு ஆபரணமாகும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:23 pm

67. பையச் சென்றால் வையந் தாங்கும் 

(பதவுரை) பைய - மெள்ள, சென்றால் - (ஒருவன்தகுதியான வழியிலே) நடந்தால், வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் - (அவனை) மேலாகக் கொள்வர்.

(பொழிப்புரை) ஒருவன் தகுதியான வழியில் நடந்தால் உலகத்தார் அவனை மேலாகக் கொள்வர்.
 
 --------------------------------------------------------------------------------------------------------
         
68. பொல்லாங் கென்பவை யெல்லாந் தவிர் 

(பதவுரை) பொல்லாங்கு என்பவை - தீங்குகளென்று சொல்லப்பட்டவை, எல்லாம் - எல்லாவற்றையும், தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு.

(பொழிப்புரை) தீங்குகள் என்று சொல்லப்பட்ட யாவற்றையும் செய்யாதொழி.
 
 -----------------------------------------------------------------------------------------------------------
         
69. போனக மென்பது தானுழந் துண்டல் 

(பதவுரை) போனகம் என்பது - போசனமென்று சொல்லப்படுவது, தான் உழந்து - தான் பிரயாசைப்பட்டுச் சம்பாதித்து, உண்டல் - உண்ணுதலாம்.

(பொழிப்புரை) உணவென்று சிறப்பித்துச் சொல்லப்படுவது தான் வருந்திச் சம்பாதித்து உண்பதாம்.
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by முழுமுதலோன் Sun Jan 05, 2014 12:24 pm

70. மருந்தே யாயினும் விருந்தோ டுண் 

(பதவுரை) மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமேயானாலும், விருந்தோடு - வந்த விருந்தாளிகளோடு கூடி, உண் - உண்ணு.

(பொழிப்புரை) கிடைத்தற்கரிய தேவாமிர்தமே யானாலும் விருந்தினரோடு புசி.
 
71. மாரி யல்லது காரிய மில்லை 

(பதவுரை) மாரி அல்லது - மழையினால் அல்லாமல், காரியம் - யாதொரு காரியமும், இல்லை - (யாருக்கும்நடப்பது) இல்லை.

(பொழிப்புரை) மழை யிருந்தாலல்லாமல் உலகத்தில் எக்காரியமும் நடப்பதில்லை.
 
 ----------------------------------------------------------------------------------------------------------
         
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை 

(பதவுரை) மின்னுக்கு எல்லாம் - (வானத்திலே காணப்பட்ட) மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - பின்னே மழை உண்டாகும்.

(பொழிப்புரை) மின்னுவதெல்லாம் பின்னே மழை பெய்தற்கு அடையாளம். (ஒருவனுடைய ஊக்கம் முதலியவெல்லாம் அவனுக்குப் பின்னே வரும் நன்மைக்கு அடையாளம்.)
 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ... Empty Re: நல்வழி காட்டும் ஒளவையாரின் கொன்றைவேந்தன் ...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum