Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது
Page 1 of 1 • Share
இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது
இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது
அலுவகலத்தில் நீங்கள் பதவி உயர்வை எதிர்ப்பார்த்து காத்து இருகிறீர்கள். உங்கள் மேலதிகாரி சொல்லிவிட்டார் இந்த வருடம் உங்களுக்கு பதவி
உயர்வு கட்டாயம் உண்டு என்று.
உங்கள் மனைவியடம் சொல்லிவிட்டு போகிறீர்கள் ...இன்னைக்கு சாயங்காலம் வரும் போது பதவி உயர்வு (promotion ) கடிதத்தோடு வருவேன்...சினிமாவுக்கு போயிட்டு அப்படியே ஹோட்டலுக்கு போயிட்டு வரலாம் என்று சொல்லிவிட்டு சந்தோஷமா அலுவகலம் போகிறீர்கள்...பதவி உயர்வு கடிதத்திற்கு பதில் உங்களை வேலையை விட்டு தூக்கி விட்டோம் என்று சொல்லி ஒரு கடிதம் கொடுத்தால் எப்படி இருக்கும் ?
இராமனுக்கு அப்படி தான் இருந்தது....
சக்கரவர்த்தி ஆக போகிறோம் என்று நினைத்து போனவனிடம், சகரவர்த்தி எல்லாம் ஒண்ணும் கிடையாது நீ ஊருக்குள்ளேயே இருக்கக் கூடாது, காட்டுக்குப் போ , அதுவும் பதினாலு வருஷம் என்று சொன்னால் எப்படி இருக்கும் ....
சரி இப்ப கதைக்கு வருவோம்...பதினாலு வருடம் கானகம் போ அன்று சொன்ன அந்தத் தருணத்தில் யார் யார் இருந்தார்கள் அந்த இடத்தில் ?
இராமனும், கைகேயியும் மட்டும் இருந்தார்கள். வேறு யாரும் இல்லை. வேண்டுமானால் கடவுள் இருந்தார், அவருக்குத் தெரியும் என்று சொல்லலாம்.
இராமன் முகம் எப்படி மாறியது என்று யாருக்குத் தெரியும் ?
கம்பன் கூறுகிறான் .... அவன் முகம் எப்படி மாறியது என்று எம்மை போன்ற கவிஞர்களால் சொல்லுவது எளிது அல்ல. யாராலும் சொல்ல முடியாத அருமையான குணங்கள் கொண்ட இராமனின் முகம் அந்த வாசகத்தை கேட்பதற்கு முன்னால், கேட்க்கும் அந்த தருணம், அந்த நொடி, கேட்ட பின் இந்த மூன்று சமயத்திலும் அப்பொழுது மலர்ந்த செந்தாமரை போல இருந்தது என்றார்
ஒரு கணம் கூட முகம் வாடவில்லை. ஏன் இப்படி என்ற சந்தேகம் குறி கூட இல்லை முகத்தில்.
இடுக்கண் வருங்கால் நகுக என்றான் வள்ளுவன். செய்து காண்பித்தான் இராமன்.
எவ்வளவு பெரிய அதிர்ச்சி...எவ்வளவு பெரிய ஏமாற்றம்..சிரித்த முகத்தோடு ஒரு சின்ன மாற்றம் கூட இல்லாமல் ஏற்றுக் கொண்டான்...
அதை விடவா நமக்கு பெரிய இழப்பும், நட்டமும் வந்து விடும்.....
வாழ்வில் எதையும் sportive ஆக எடுத்துக் கொள்ள பழக வேண்டும்...
பாடல்
இப்பொழுது, எம்மனோரால் இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன் திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு; அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா!
பொருள்
இப்பொழுது = அது நடந்த எத்தனையோ காலத்திருக்குப் பின், இப்போது
எம்மனோரால் = எம் போன்ற கவிஞர்களால்
இயம்புதற்கு எளிதே? = சொல்லுவது எளிமையான காரியமா (இல்லை என்பது பொருள்)
யாரும் = யாராலும்
செப்ப = சொல்ல முடியாத
அருங் குணத்து = அருமையான குணங்களின்
இராமன் = இராமனின்
திருமுகச் செவ்வி நோக்கின் = திருமுகத்தின் செம்மையை பார்த்தால்
ஒப்பதே = ஒப்பிடும் படி இருந்தது
முன்பு பின்பு = முன்பும் பின்பும்
அவ் வாசகம் = கானகம் போ என்று சொன்ன அந்த வாசகம்
உணரக் கேட்ட = உணரும் படி கேட்ட. அதாவது, எங்க சரியா கேட்க்காம, ஒரு வேலை கைகேயி ஏதோ கிண்டலுக்கு சொல்லுகிறான் என்று நினைக்காமல், அவள் சொல்வதை உணர்ந்த
அப் பொழுது = அந்த ஒரு கணத்தில்
அலர்ந்த செந்தாமரையினை வென்றது அம்மா! = அப்போதுதான் மலர்ந்த செந்தாமரையை வென்றது அவன் முகம்.
அப்பொழுது என்ற வார்த்தையை இரண்டு இடத்திருக்கும் போட்டுக் கொள்ளுங்கள்
உணரக் கேட்ட அப்பொழுது
அப்பொழுதுதான் மலர்ந்த செந்தாமரை
நாம் நினைத்தது, எதிர் பார்த்தது நடக்காவிட்டால் உடைந்து போய் விடக்கூடாது. அதை விட ஏதோ பெரியது கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்....
http://interestingtamilpoems.blogspot.in/

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது
நாம் நினைத்தது, எதிர் பார்த்தது நடக்காவிட்டால் உடைந்து போய் விடக்கூடாது. அதை விட ஏதோ பெரியது கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்....
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: இராமாயணம் - தோல்வியை எப்படி எதிர் கொள்வது
நான் இப்படிதான் பலமுறை மனதை தேற்றி இருக்கிறேன்,பெரும்பாலான நேரங்களில் நன்மையாகவே முடிந்துள்ளது.kanmani singh wrote:நாம் நினைத்தது, எதிர் பார்த்தது நடக்காவிட்டால் உடைந்து போய் விடக்கூடாது. அதை விட ஏதோ பெரியது கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்....
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கவலையை எதிர் கொள்வது எப்படி?
» கவலையை எதிர் கொள்வது எப்படி???
» அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
» வாழ்க்கையை இன்பமாக்கிக் கொள்வது எப்படி?
» நிஜ பிரசவவலியைத் தெரிந்து கொள்வது எப்படி?

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum